திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் "ராகுல்" பார்முலாவால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது...
தமது தகுதிக்கு மீறி ஆசைப்படுபவர்கள் எப்போதும் வென்றதாக சரித்திரமில்லை....மாவட்டத்திற்கு ஒரு கோஷ்டியாக , ஊருக்கு ஒரு பிரிவாக பிரிந்து கிடக்கும் காங்கிரஸ் தொண்டர் பலம் மிக்க கட்சியா என்று கேட்டால் இல்லை என்பதே வெகுபலரின் பதிலாக இருக்கலாம்...
இருப்பினும் குறிப்பிட்ட சத வாக்குவங்கியை எப்போதும் தன்னகத்தே வைத்திருக்கும் கட்சி என்று வேண்டுமானால் சொல்லலாம்! ஆனால், அந்த வாக்குவங்கியும் கூட ஈழத்தில் காங்கிரஸ் செய்த துரோகத்தால் குறைந்திருக்கலாம் என்பதே உண்மை! அதுதான் கடந்த நாடாளுமன்றத்தேர்தல் சொல்லும் சேதி…பெருந்தலைகளே தோல்வி கண்டன என்பது வரலாறு!
இந்த முறை ஒருவேளை திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் கூட திமுக நிற்கும் தொகுதிகளில் காங்கிரஸ் வாக்குகள் விழுமா என்பது சந்தேகம்தான்...அதேதான் திமுகவினரின் நிலையும்! யாரும் மனசளவில் காங்கிரஸுக்கு பல்லக்குத்தூக்க தயாரில்லை.
களநிலைமை இப்படியிருக்க காங்கிரஸ் கட்சியோ கனவு காண்கிறது….90 தொகுதிகள் என்ற அபத்தமான கோரிக்கையை வைக்கிறது….ஆட்சியில் பங்கு என்பதை வேண்டுமானால் நியாயமான கோரிக்கை என்ற அளவில் ஏற்றுக்கொள்ளலாம்…அதைக்கூட தேர்தலுக்குப்பின்பு முடிவு செய்வதே சரியாக இருக்கமுடியும்?
காங்கிரசுக்கு கொடுக்கும் அதிக தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் வெல்லும் என்பதையே கடந்த நாடாளுமன்றத்தேர்தல் காட்டுகிறது…..காரணம் என்ன? அர்பணிப்பு ஏதுமற்ற அதன் கட்சிப்பணியாளர்களும் , எப்போது யாரை வாரிவிடலாம் என்று காத்துக்கிடக்கும் அதன் கோஷ்டிச்சண்டைகளும்தான்.! ஆக, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அதிக தொகுதி கொடுப்பதென்பது திமுகவைப் பொறுத்தவரை அரசியல் தற்கொலை.!!
அப்படி ராகுல் பார்முலா தான் என்ன? அது இதுவரை சாதித்தது தான் என்ன?
காங்கிரஸ் வீழ்ந்துகிடக்கும் மாநிலங்களில் வெற்றிக்கொடி கட்டுவது!!! பீகாரில் லல்லுவைக் கழட்டிவிட்டு தனியே நின்று ஆட்சிக்கெதிரான வாக்குகளைப் பிரித்ததன் மூலம் நிதிஷ்குமாரை மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற்றியதுதான் “ராகுல் பார்முலா” சாதித்த பாரிய சாதனை!! அதைத்தான் தமிழகத்திலும் செய்துகாட்டப்பார்க்கிறார் அவர்…….
களநிலை வேறாக இருக்கும் , காங்கிரஸ் மீது தனிப்பட்ட வெறுப்பேதுமற்ற பீகாரிலே அதுதான் நிலையென்றால் காங்கிரஸ் மீத் ஈழநிலையின்பால் இயல்பாகவே வெறுப்புற்றிருக்கும் தமிழகத்தில் என்ன நடக்கும்?
நமது கருத்தின் படி , கடந்த தேர்தலைக்காட்டிலும் ஒருதொகுதி கூட காங்கிரசுக்கு அதிகம் கொடுக்கக்கூடாது!! அறிவாலயம் வரை சிபிஐ வந்ததைக்க்காட்டிலும் வேறென்ன பெரிய அவமானத்தை காங்கிரஸ் தரக்கூடும்??
காங்கிரஸ் ஒத்துழைக்க மறுத்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை…ஏனென்றால் அந்தக்கட்சியையும் தூக்கிச்சுமக்கப்போவது எப்போதும் போல திமுக தொண்டர்கள்தான்..
ஒருவேளை காங்கிரஸ் தனியே வேறுசில சின்னக்கட்சிகளைச் சேர்த்து தனியே நின்றால் கிடைக்கப்போவது திமுகவிற்கு நிச்சய வெற்றியே…!!
ஏன்?
1. திமுக அதிக தொகுதிகளில் போட்டியிடும். தனது சாதனைகளை பட்டி தொட்டி எங்கும் பரப்பிட வழி பிறக்கும்!!!!
2. முறையற்ற,நேர்மையற்ற மீடியாக்களின் ஆட்சிக்கெதிரான பிரச்சாரங்களால் எழுந்திருக்கின்ற ஆட்சிக்கெதிரான வாக்குகள் இரண்டாகப்பிரியும்……..!!!1
3. சுருக்கமாகச் சொன்னால் கடந்த தேர்தலில் தேமுதிக செய்த வேலையை இம்முறை “காங்கிரஸ்’ செய்யும்!!
4. ஒருவேளை , காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் இணையுமானால்..வைகோ+கம்யூனிஸ்டுகள் வெளியேறும் சூழல் உருவாகும்……திமுகவுடன் இணைய வாய்ப்பேதுமற்ற நிலையில் இவர்கள் தனியே நிற்பது அதிமுகவுக்குத்தான் பாதகமாகும்..
ஒருவேளை தோற்றாலும் தவறேதுமில்லை…
வெற்றியைவிட தோல்வியால் கிடைக்கும் லாபங்கள் அதைவிடப்பெரிது!!
1. சுயமரியாதையற்ற காங்கிரசுக்கூட்டணியில் இருப்பதால் சோர்ந்துகிடக்கும் திமுக தொண்டர்கள் புத்தெழுச்சி பெற வழிவகுக்கும்!!!
2. ஈழத்தில் இதுகாறும் கூட்டணிதர்மத்துக்காக சுமந்துவந்த பழியைப் போக்கிக்கொள்ள ஒரு வழிபிறக்கும்!
3. காங்கிரஸ் என்ற தமிழர்களுக்கெதிரான கட்சி முகவரி ஏதுமற்று முடங்கிப்போகும்!!
ஆக, திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறுவது என்பது திமுகவிற்கு எவ்வகையில் பார்த்தாலும் நிச்சய வெற்றியையே அளிக்கப்போகிறது….
இனிமேலும் திமுகவின் முதுகிலேறி காங்கிரஸ் என்னும் நொண்டிக்குதிரை கரையைக்கடக்காமல் பார்த்துக்கொள்வதில் தான் கலைஞரின் இராஜதந்திரத்தின் வெற்றி இம்முறை இருக்கிறது!!!
வெல்வாரா? பார்ப்போம்!
17 comments:
ஏனுங்க திமுக தனிச்சு நின்னா இதுவரை ஈழ நிலைக்கு காரணமாக இருந்த பழி தானாக போய்விடுமா?
காங்கிரஸ் ஈழத்தின் எதிரி.. ஆனால் திமுக ஈழத்தின் துரோகி... எதிரிகளை மன்னிக்கலாம். துரோகிகளை மன்னிக்க முடியாது என்பதே உணர்வுள்ள தமிழ் மக்களின் எண்ணம். உங்கள் கருத்தில் சில நடைமுறை சாத்தியமற்ற விஷயங்கள் உள்ளன என்பது முகமூடியின் தாழ்மையான கருத்து.
சபாஷ்,முகமூடி!சரியா சொன்னீங்க!யாரு யாரோட கூட்டு வச்சாலும் இந்தத் தடவை "தொங்கு" நிலை தான்!போட்டியில் இரண்டு கூட்டணி தான்!மூன்றாவது அணியென்ற பேச்சுக்கே இடமில்லை!அவ்வாறு யாராவது எங்கிருந்தாவது வெளியேறி மூன்றாவது அணி அமைப்பதை விட போட்டியிடாமலே விலகியிருப்பது "இருப்புக்கு"(அதாங்க,பணம்)நல்லது!!!!!!!!!!!!
நண்பர் முகமூடி....பழி தானாகப் போய்விடாது.ஆனால், போக்கிக்கொள்ள ஒரு வாய்ப்புக்கிடைக்கும்..
//
ஈழத்தில் இதுகாறும் கூட்டணிதர்மத்துக்காக சுமந்துவந்த பழியைப் போக்கிக்கொள்ள ஒரு வழிபிறக்கும்!
//
நீக்கு
பிளாகர் Yoga.s.FR கூறியது...
சபாஷ்,முகமூடி!சரியா சொன்னீங்க!யாரு யாரோட கூட்டு வச்சாலும் இந்தத் தடவை "தொங்கு" நிலை தான்!போட்டியில் இரண்டு கூட்டணி தான்!மூன்றாவது அணியென்ற பேச்சுக்கே இடமில்லை!அவ்வாறு யாராவது எங்கிருந்தாவது வெளியேறி மூன்றாவது அணி அமைப்பதை விட போட்டியிடாமலே விலகியிருப்பது "இருப்புக்கு"(அதாங்க,பணம்)நல்லது!!!!!!!!!!!!/
நன்றி திரு.யோகா.இதுகாறும் தமிழக மக்கள் தொங்குநிலையில் வாக்களித்ததில்லை....இம்முறையும் இரு அணிகளாக போட்டியிடும் சூழலில் ஒரு அணியை பெரும்பாலானவர்கள் ஆதரிக்கும் நிலையே இருக்கும் !
சபாஷ். அற்புதமான கருத்து.
காங்கிரஸ் ஒழியவேண்டும் தமிழ் மண்ணிலிருந்து
பயணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்
http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html
//ஒருவேளை தோற்றாலும் தவறேதுமில்லை…//
இது உங்கள் நிலை ஆனால் கலைஞர் செய்துள்ள தில்லுமுல்லுகளால் குடல் கலங்கி இருக்கிறார். தோற்றால் நீங்காளா? லுங்கியுடன் தெருவில் குந்தியிருக்கவோ; ஐயோ கொல்லுறாங்க...எனக் கத்தவோ போவது.
தோற்றால் வெல்லப்போவது காங்கிரசா? இல்லவே ...;அம்மா!
அம்மா...ஐயாவைச் சும்மாவிடுவாவா????
ஐயா...பாவம்...வினையை விதைத்துவிட்டார். அறுவடை செய்தே ஆகவேண்டும்.
அதனால் ஐயாவை எப்படியோ வெல்ல வையுங்கள்....மிஞ்சியதையும் மனைவி; துணைவி; பிள்ளை குட்டிக்கு தேடிவைத்து விடட்டும்.
கருணாநிதியை குடும்பத்துடன் திஹார் ஜெயிலில் அடைக்க வழி அது ஒன்றே.
காங்கிரசுடன் கூட்டணி சேரக்கூடாது.
திரும்பவும் சொல்கிறேன்!(ரஜனி ஸ்டைலில்:கண்ணா,இந்த நாள உன்னோட டைரில குறிச்சு வச்சுக்கோ!)தொங்கு நிலை வரும்,பின்னர் ஏதோ ஒரு கட்சி பல்டியடித்து மெஜாரிட்டி வரும்!அம்புட்டுத்தேன்!
சாகப்போகிறவனிடம் அதை-இதைத் தின்றால் நல்லது என சொல்வதுபோலல்லவா உமது இடுகை.
//ஈழத்தில் இதுகாறும் கூட்டணிதர்மத்துக்காக சுமந்துவந்த பழியைப் போக்கிக்கொள்ள ஒரு வழிபிறக்கும்!//
மடத்தனம்! ஒரு கொலைகாரன் இன்னொரு கொலைகாரனுடன் கூட்டணியை முறித்துக்கொண்டால் அவன் கொலைகாரன் இல்லையென்று ஆகுமா, அவனைத் தண்டிக்காமல் விட்டுவிடலாமா? இன அழிப்பு என்ற பாவத்தையும், பழியையும் அரசியல் கூட்டணியை மாற்றிக்கொண்டால் போக்கிக்கொள்ளலாம் என்று உங்களுக்குத் தோன்றிய மனோநிலையே இத்தகைய அரசியல்வாதிகள் மக்களை முட்டாள்களாகவே வைத்திருந்து அவர்கள் முதுகில் சவாரி செய்கிறார்கள் என்பதற்கு அடையாளம்.
பயணம் - பொதுபுத்தியிலுள்ள முசுலீம் மீதான வன்மம்
http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_27.html
/
நேரம் கிடைப்பின் படித்து கருத்திடுகிறேன் தோழரே.
இது உங்கள் நிலை ஆனால் கலைஞர் செய்துள்ள தில்லுமுல்லுகளால் குடல் கலங்கி இருக்கிறார். தோற்றால் நீங்காளா? லுங்கியுடன் தெருவில் குந்தியிருக்கவோ; ஐயோ கொல்லுறாங்க...எனக் கத்தவோ போவது.
தோற்றால் வெல்லப்போவது காங்கிரசா? இல்லவே ...;அம்மா!
அம்மா...ஐயாவைச் சும்மாவிடுவாவா????
ஐயா...பாவம்...வினையை விதைத்துவிட்டார். அறுவடை செய்தே ஆகவேண்டும//
அடடா,,,,அடடா....உங்களுக்குத்தான் அவர்பால் எத்துணை அக்கறை???
அதனால் ஐயாவை எப்படியோ வெல்ல வையுங்கள்....மிஞ்சியதையும் மனைவி; துணைவி; பிள்ளை குட்டிக்கு தேடிவைத்து விடட்டும்.//
உங்க வீட்டில் எல்லாம் பிள்ளைகுட்டிக்கு எதுவும் சேர்த்து வைக்காமல் அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடுவீர்களா என்ன நண்பரே...
எல்லோரும் தன்னமலமற்றவர்கள் போலப்பேசும் பொதுபுத்தியை ( நன்றீ:நிலா) விட்டொழித்து நிலைமையை எதார்த்தமாக அணுகுங்கள்!
//ஒருவேளை தோற்றாலும் தவறேதுமில்லை…//
இது உங்கள் நிலை ஆனால் கலைஞர் செய்துள்ள தில்லுமுல்லுகளால் குடல் கலங்கி இருக்கிறார். தோற்றால் நீங்காளா? லுங்கியுடன் தெருவில் குந்தியிருக்கவோ; ஐயோ கொல்லுறாங்க...எனக் கத்தவோ போவது.
தோற்றால் வெல்லப்போவது காங்கிரசா? இல்லவே ...;அம்மா!
அம்மா...ஐயாவைச் சும்மாவிடுவாவா????
ஐயா...பாவம்...வினையை விதைத்துவிட்டார். அறுவடை செய்தே ஆகவேண்டும்.
அதனால் ஐயாவை எப்படியோ வெல்ல வையுங்கள்....மிஞ்சியதையும் மனைவி; துணைவி; பிள்ளை குட்டிக்கு தேடிவைத்து விடட்டும்.
28 பிப்ரவரி, 2011 6:51 am
நீக்கு
பிளாகர் ராவணன் கூறியது...
கருணாநிதியை குடும்பத்துடன் திஹார் ஜெயிலில் அடைக்க வழி அது ஒன்றே.
காங்கிரசுடன் கூட்டணி சேரக்கூடாது.
28 பிப்ரவரி, 2011 7:00 am..//
ஆமாம்...ஆமாம்...அதற்காகத் தானே அலைகிறதுகள் பலதும்....
எது நடக்கிறது என்பதைக் காலம் சொல்லத்தான் போகிறது...திமுக தடைகளைத்தவிர்த்து வெல்லத்தான் போகிறது...
அன்றிலிருந்து குன்றாமல் குறையாமல் இருந்துவரும் தொண்டர்பலம் தன்னலமற்றது...!!திமுக ஆட்சியே தமிழகத்தை முன்னேற்றும்...உம் குடும்பங்களில் ஒளியேற்றும்....
திரும்பவும் சொல்கிறேன்!(ரஜனி ஸ்டைலில்:கண்ணா,இந்த நாள உன்னோட டைரில குறிச்சு வச்சுக்கோ!)தொங்கு நிலை வரும்,பின்னர் ஏதோ ஒரு கட்சி பல்டியடித்து மெஜாரிட்டி வரும்!அம்புட்டுத்தேன்!
//
குறிச்சி வச்சிட்டேன் தலைவரே!!
okyes கூறியது...
சாகப்போகிறவனிடம் அதை-இதைத் தின்றால் நல்லது என சொல்வதுபோலல்லவா உமது இடுகை./
நான் ஜெயலலிதாவிடமோ , விசயகாந்திடமோ எதையும் தின்னவோ, செய்யவோ சொல்லவில்லையே ஓக்கேயெஸ்.!
மடத்தனம்! ஒரு கொலைகாரன் இன்னொரு கொலைகாரனுடன் கூட்டணியை முறித்துக்கொண்டால் அவன் கொலைகாரன் இல்லையென்று ஆகுமா, அவனைத் தண்டிக்காமல் விட்டுவிடலாமா? இன அழிப்பு என்ற பாவத்தையும், பழியையும் அரசியல் கூட்டணியை மாற்றிக்கொண்டால் போக்கிக்கொள்ளலாம் என்று உங்களுக்குத் தோன்றிய மனோநிலையே இத்தகைய அரசியல்வாதிகள் மக்களை முட்டாள்களாகவே வைத்திருந்து அவர்கள் முதுகில் சவாரி செய்கிறார்கள் என்பதற்கு அடையாளம்./
அரசியல் கூட்டணியை மாற்றுவதில் அல்ல....அரசியல் முடிவுகளை மாற்றுவதில்தான் பிராயச்சித்தம் தேடமுடியும்...அதற்கான முதற்படி காங்கிரஸைக் கை கழுவுவதே.!!!
பிறகு , தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே மகிந்தாவிடம் பேச ஆரம்பித்தாயிற்று....டக்ளஸ் இன்னமும் வடக்கில் ஜெயிக்கிறார்.....ப்ளாட், சிவாஜிலிங்கம், புலிகளை அன்றாடம் நிந்தித்த ஆனந்தசங்கரி இவர்களே கூட்டமைப்புடன் பேசுகிறார்கள்...
கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரன் பொன்னம்பலம் போன்ற கடும்போக்காளர்கள் வெளியேறியிருக்கிறார்கள்...புலிகளின் முன்னாள் தலைவர் கேபி அரசுடன் இணைந்திருக்கிறார்..
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மென்போக்காளர்களால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றது.....
உருத்திரகுமாரனும் கூட அறிக்கையோடு மட்டுமே சங்கமிக்கிறார்...நார்வே செயச்சந்திரனும் , இன்னமும் புலிகளின் ஒரே உண்மையான செயற்பாட்டாளரான நெடியவன் முடக்கப்பட்டிருக்கிறார்கள்....!
அனைத்துலக தொடர்பகம் என்றும் , தலைமைச்செயலகம் என்றும் புலிகளே இருபிரிவாயினர். சிறிலங்காவில் அவர்களது செயற்பாடுகள் உறைவு நிலைக்கு வந்திருக்கின்றன.!!
பதிவு, தமிழ்க்கதிர் , ஈழம் ஈ நியூஸ் ஒருபுறமும் , தமிழ்வின், அதிர்வு என்று நீளும் ஊடகங்கள் இன்னொரு புறமும், புதினப்பலகை போன்றவை தனித்தும் இயங்குகின்றன.
யாழ் உதயன் பத்திரிக்கை இராணுவத்தை அழைத்து ஊடகவியலாளர்களை போற்றச்சொல்கிறது....
இப்படி ஈழத்தமிழர்களே பிரிந்து, இயலாமையில் உழல்கிறார்கள்.!!
ஆக, அவசர சிகிச்சைகூடத்தில் வைத்து சரிசெய்ய வேண்டியது முதலில் ஈழத்தமிழர் தம் அரசியலே...பிறகு அதைத் தமிழகம் முன்னெடுக்கும்!
அதைவிடுத்து உள்ளூர்த்தமிழக அரசியலில் ஈழம் பேசுவது மடத்தனம் என்பதை நானுணர்ந்து கொண்டேன்..
அப்ப நீங்க அனானி?
Post a Comment