Thursday, March 03, 2011

ஆனந்தவிகடனின் அதர்ம யுத்தம்.!

பத்திரிக்கைகள் நடுநிலையாக இருக்க வேண்டும்.......அல்லது கலைஞர் தொலைக்காட்சி அல்லது செயா  தொலைக்காட்சி அல்லது நமது எம்.ஜி.ஆர் என்ற பெயரில் நாம் இந்தக்கட்சி சார்பானவர்கள் என்று சொல்லிக்கொள்ள  வேண்டும்...

அந்த விடயத்தில் "தினமலர் மற்றும் துக்ளக்" எப்போதும் தெளிவாகவே இருக்கும்.....நாம் அன்றும் , இன்றும்  என்றும் அவாளுக்கு ஆதரவு என்று வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டவை அவை...

ஆனால், நடுநிலைமை என்ற பெயரில் இன்று விகடன் குருப் "திமுக"  எதிர்ப்பு நிலை எடுத்திருக்கிறது    என்று சொல்கிறார்கள்....அதை      நம் பதிவர்கள் சுட்டியும் காட்டுகிறார்கள்!!! 

தி.மு.க வை எதிர்த்து ஆனந்த விகடன் தர்ம யுத்தம்..? 

 

ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....

தோழர் ரஸீம் கஸாலியின் ஆனந்த விகடனின் அடிப்படைக்கணக்கே தவறு என்கிறார்...

உண்மைதானே? 130 தொகுதிகளில் நிற்கும் ஒரு கட்சி  வாங்கும் வாக்குச்சதவீதத்தையும்  , 182 தொகுதிகளில் நிற்கும் ஒரு கட்சி வாங்கும் வாக்கு சதவீதத்தையும் எப்படி  ஒப்பிட முடியும்? இந்த அடிப்படை கூட தெரியாமல் ஒரு பெரிய பத்திர்க்கை தவறான தகவல்களை சொல்வது தவறல்லவா?

 

இதுபற்றி நண்பர் கொக்கரக்கோவின் பின்னூட்டம் இந்தப்பதிவில்


வணக்கம் சதீஷ்குமார், ஆ.வி, ஜூவி, வகையறாக்கள் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இம்முறை ஜெ. ஆதரவு நிலையை எடுத்திருக்கின்றன. ஜூனியர் போஸ்ட் காலத்திலிருந்தே இவைகளைப் படித்துவரும் என் போன்றவர்களுக்கு இது நன்றாகப் புரியும். அவர்கள் போட்டிருக்கும் இந்த கணக்கு அடிப்படையிலேயே தவறு என்பது அவர்களுக்கும் நன்றாகப் புரிந்து தான் இருக்கும். ஆனாலும் தங்கள் நிலைப்பாட்டை அப்பாவி வாசகர்களிடம் நடுநிலை போர்வையோடு திணிக்கும் செயலை வெற்றிகரமாக செய்து கொண்டுமிருக்கிறார்கள். அந்தக் கணக்கை கீழ் வருவது போல் தான் போட வேண்டும். எல்லா கட்சிகளுமே கூட்டணி அமைத்து போட்டியிடும் பொழுது, ஒரு கட்சி வாங்கிய ஓட்டு சதவிகிதத்தை மொத்த தொகுதிகளான 234 வுடன் பெருக்கி, அதை அக்கட்சி நின்ற தொகுதியால் வகுக்கும் பொழுது வருமே ஒரு விடை அது தான் ஒருவேளை அக்கட்சி 234 தொகுதிகளில் நின்றிருந்தால் அக் கட்சி பெறும் மொத்த வாக்கு சதவிகிதம் ஆகும். உதாரணத்திற்கு தி.மு.க நின்ற தொகுதிகள் = 132 மொத்த தொகுதிகள் = 234 132 இல் வாக்கு சதவீதம் = 26.46% ஆகவே 26.46 x 234 / 132 = 46.90% அ.தி.மு.க நின்ற தொகுதிகள் = 188 மொத்த தொகுதிகள் = 234 188 இல் சதவீதம் = 32.64% ஆகவே 32.64 x 234 / 188 = 40.62% எனவே 2006 தேர்தலில் தி.மு.க வாங்கிய வாக்கு சதவிகிதம் = 46.9% அ.தி.மு.க வாங்கிய வாக்கு சதவீதம் = 40.62% இப்பொழுது புரிகிறதா? விகடன் சொல்வது போல் பயப்படுகின்ற தி.மு.க தலைமையா மூன்று சுற்றுகளாக காங்கிரஸை அலைக்கழித்துக் கொண்டிருக்க முடியும்?! ஒவ்வொரு சுற்று பேச்சு வார்த்தையின் முடிவிலும் ஒவ்வொரு கூட்டனி கட்சியாக அழைத்து தன்னிச்சையாக கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முடியும்?

நேர்மையில்லாத இவர்கள், தமது மறைமுக அஜண்டாவிற்காக உழைக்கும் இவர்களை பத்திரிக்கையாளர்கள் என்றழைப்பது தகுமோ?

 ****

அடுத்த அதர்ம யுத்தம் , காங்கிரஸின் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் வட இந்திய ரெடிப்.காம் வெளியிட்டிருக்கும் ஜோக்...தமிழ்நாட்டில் 70  இடங்கள் தான் திமுக கூட்டணிக்காம்...அதை ஒட்டிய திரு.சுரேஷ்குமார் பதிவில் படித்த  சில பின்னூட்டங்கள் .....!!!

மாதவன் said...

கோவை, ஈரோடு , திருப்பூர்,சேலம் , தர்ம்புரி, நாமக்கல் ,கரூர் ,திண்டுக்கல்,நீலகிரி மாவட்டங்களில் புதிதாக திமுகவில் இணைந்திருக்கும் கொமுக அத்துணை கணக்குகளையும் மாற்றி எழுதப்போகிறது...காரணம் அது கடந்த தேர்தலில் வாங்கியிருக்கும் வாக்குகள்!!!

உதாரணத்திற்கு கோவையை எடுத்துக்கொள்வோம்! கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸுக்குமுள்ள ஓட்டுவித்தியாசம் 40000 மட்டுமே...ஆனால், கொமுக பெற்ற ஓட்டுக்கள் 130000 , தேமுதிக பெற்ற 70000 ஓட்டுக்களைக் கழித்தாலும் கூட 20000 ஓட்டுக்கள் அதிகமிருக்கிறது....இதேபோலத்தான் கொங்குமண்டலத்தின் அனைத்து தொகுதிகளிலும் கணக்கு மாறுகிறது..டெல்லியில் உக்கார்ந்து ஆராய்ச்சி செய்யும் கம்பெனிகளுக்கு கொமுக என்ற கட்சீயைப்பத்தியே தெரியாது, ஹிஹிஹிஹிஹிஹி.!!

1 RAMASUBRAMANIAN. K BSP 2937
2 SELVAKUMAR.G.K.S BJP 37909
3 NATARAJAN.P.R. CPM 293165
4 PRABHU.R INC 254501
5 ESWARAN.E.R KNMK 128070

அதனால் தான் 2 சீட்டு , 3 சீட்டு என்று பத்திரிக்கைகள் சொல்லும்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வண்ணம் கொமுகவிற்கு 7 சீட்டுக்கள் கொடுத்திருக்கிறார் கலைஞர்......

பொறுத்திருந்து பாருங்கள்.....கூடவே கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் தனிப்பெரும் செல்வாக்குள்ள மு.கண்ணப்பன்,திருப்பூர் மாவட்டத்தில் கோவிந்தசாமி , ஈரோடு மாவட்டத்தில் முத்துச்சாமி, சேலத்தில் செல்வகணபதி , கரூரில் சின்னச்சாமி என்ற பெருந்தலைகள் கட்சியில் இணைந்திருக்கிறார்கள்..

சும்மா வீட்டில் உட்கார்ந்து திமுக கனவு காணவில்லை...கடந்த மூன்றாண்டுகளாகவே அறிவியற்பூர்வ கணக்கின்மூலம் சட்டசபைத்தேர்தலுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டது அது..பற்றாக்குறைக்குச் செம்மொழி மாநாடு...கோவை நகரெங்கும் பளபளக்கும் சாலைகள்....திருப்பூருக்கு தனிமாவட்ட அந்தஸ்து , திருப்பூர், ஈரோடு இவைகள் மாநகராட்சிகளாக விரிவாக்கம் என்று பணிகள்...

சும்மா கொடநாட்டில் தூங்கிவிட்டு வந்து தேர்தலின் போது மட்டும் பிரச்சாரம் செய்யும் கட்சி திமுக அல்ல நண்பரே.

ஆக, கொங்குநாட்டில் சமன் செய்கிறது......வடமாவட்டங்களில் பாமக , வி.சி ஆதரவுடன் முந்துகிறது....இதுதான் நிலைமை....!!!

நினைவிருக்கட்டும், போனமுறை அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இந்தமுறை திமுக கூட்டணியில்!!!
பத்திரிக்கைகள் ஆகட்டும், தொலைக்காட்சிகளாகட்டும் கட்சிகள் மக்களை முட்டாள்களாக்குகின்றன என்று சொல்லிக்கொண்டு , தமது மறைமுக அஜண்டாவை மக்கள் மீது  திணிக்கின்றன....


கடந்தமுறையை விட இம்முறை தேர்தல் களம் வித்தியாசமாகவே  இருக்கிறது.....பலம் வாய்ந்த இரு   அணிகள்  மோதுகின்றன...கூட்டணி பலம் இங்கே சமநிலையில் இருக்கும்போது , ஆளுங்கட்சிக்கெதிரான எதிர்ப்பு மற்றும் ஆளுங்கட்சியின் பணிகள் இவைகளே முக்கிய பங்கு வகிக்கப்போகின்றன...அதில் அடித்தட்டு மக்களின் தேவைகளைத் தேடித்தேடி பூர்த்தி செய்திருக்கும் திமுகவே முந்தப்போகிறது...

எந்தக் கருத்துக்கணிப்புகளும் இங்கே செல்லுபடியாகப் போவதில்லை........!!

26 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

என் பதிவிற்கு இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி நண்பரே...

எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு
ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....

Anonymous said...

I think you had stopped reading newspapers for the past 1 year. If you had read the newspapers you would have known about the SPECTRUM scam case which caused India a loss of 1.76Lakhs crores all because of DMK minister Raja.

Anonymous said...

பொதுவாக மக்களின் மன நிலை எப்படி இருக்கிறது என்றால்,,, நடுத்தர மற்றும் மேல் தட்டு மக்கள் திமுக எதிர்ப்பு நிலை. கீழ்த்தர மக்கள் எப்படி வேண்டுமானாலும் சாயலாம்.

http://mugamuddi.blogspot.com

முகமூடி said...

நிஜமா இது யுத்தம் இல்லை. சொல்லபோனால் இது வியாபாரம். அதிக பணம் கொடுத்து எந்த வியாபாரி அதிக மக்களை வாங்க போகிறார் என்பதில் உள்ளது.

ramalingam said...

ஆமாம், ஐந்து வருடமாக திமுக எந்தத் தப்புமே இல்லாமல்தான் ஆட்சி நடத்தி வருகிறது. அடப் போங்க.

South-Side said...

பிளாகர் ரஹீம் கஸாலி கூறியது...

என் பதிவிற்கு இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி நண்பரே...
//

நன்றி.

South-Side said...

பெயரில்லா கூறியது...

I think you had stopped reading newspapers for the past 1 year. If you had read the newspapers you would have known about the SPECTRUM scam case which caused India a loss of 1.76Lakhs crores all because of DMK minister Raja.//

I think you are suffering by Hallucination...
I can list 100s of activities ,if you have time. but its a boring list.

A Raja's case? read my earlier posts about that.

South-Side said...

பெயரில்லா கூறியது...

பொதுவாக மக்களின் மன நிலை எப்படி இருக்கிறது என்றால்,,, நடுத்தர மற்றும் மேல் தட்டு மக்கள் திமுக எதிர்ப்பு நிலை. கீழ்த்தர மக்கள் எப்படி வேண்டுமானாலும் சாய
லாம்.//


யார் ஓட்டுப்போடுகிறார்களோ அவர்களைப் பற்றி பேசுமய்யா அனானி!!

South-Side said...

முகமூடி கூறியது...

நிஜமா இது யுத்தம் இல்லை. சொல்லபோனால் இது வியாபாரம். அதிக பணம் கொடுத்து எந்த வியாபாரி அதிக மக்களை வாங்க போகிறார் என்பதில் உள்ளது.

//

அது கட்சிகளின் தவறல்ல...மக்களின் தவறு....!!

South-Side said...

ramalingam கூறியது...

ஆமாம், ஐந்து வருடமாக திமுக எந்தத் தப்புமே இல்லாமல்தான் ஆட்சி நடத்தி வருகிறது. அடப் போங்க.//

தவறுகள் இல்லாத மனிதனையே பார்க்கமுடியாததொரு சூழலில் , தவறில்லா ஆட்சியைப் பார்ப்பது கடினமே...ஆனாலும் , தவறுகளையும் தாண்டி யார் பெரிய நன்மை செய்திருக்கிறார்கள் என்று பாருங்களேன்...!!

Anonymous said...

தமிழ்நாடு - முட்டாள்களின் தேசம்

Anonymous said...

கோவை, ஈரோடு , திருப்பூர்,சேலம் , தர்ம்புரி, நாமக்கல் ,கரூர் ,திண்டுக்கல்,நீலகிரி மாவட்டங்களில் புதிதாக திமுகவில் இணைந்திருக்கும் கொமுக அத்துணை கணக்குகளையும் மாற்றி எழுதப்போகிறது.//
இது தப்பாகும் என நினைக்கிறேன்..பெரும்பாலான கொங்கு முண்ணனியினர் அ.தி.மு.க வில் இணைவதையே விரும்பினர்..செங்கோட்டையன் செய்த அவமய்திப்பால் கடைசி ஒரு மணி நேர முடிவில் கலைஞரை சந்தித்தார்களாம்...வாக்கு சதவீதம் குறையலாம்..மேலும் தி.மு.க வெறுப்பு ஓட்டுகளால் கொங்கு முண்ணனி வாக்கு சதம் குறையாதா?

Anonymous said...

"குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்"

இது வள்ளுவர் வாக்கு.

ஒலி பெருக்கி கிடைத்து விட்டால் ஊளையிடும் நாலாந்தர அரசியல்வாதி போல எங்கோ இருட்டறையில் இருந்து கொண்டு கையில் கணிணியும், விசைப்பலகையும் இருக்கிறது என்பதற்காக நுனிப்புல் மேயும் இணைய புரட்சிகர சுள்ளாண்களுக்கும், கலைஞரை வசை பாடியே இணையத்தில் தமிழ் கற்றுக்கொள்ளும் நடுநிலை வியாதிகளுக்கும் , அமெரிக்காவில் ஒளக்காந்துக்கிட்டு தமிழ்நாட்டுக்கு மாற்றம் தேவைன்னு சொல்ற கணிணி வழி கலகக்கார எணைய பொரட்சியாளய்ங்களுக்கும், சூத்துல சுடு வைக்கிற மாதிரி தேர்தல் முடிவுகள் அமையும்.

Hai said...

Do you agree that cong and PMK both each have around 40 to 50% vote bank in tamilnadu coz both got around the same percent votes in their contested assemblies in the last assembly election.

ழகரம் said...

மேலும் தி.மு.க வெறுப்பு ஓட்டுகளால்//

அட நீங்க வேற...வலையில எழுதற முக்காவாசிப் பேருக்கு ஓட்டே இல்லை..இவுங்க எதிர்ப்பையெல்லாம் இன்னாத்துக்கு கணக்கு எடுக்கறீங்கோ? இதவிட அதிகமா கூவுனாங்க பார்லிமெண்ட் எலக்சன் அப்போ....

ழகரம் said...

"குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்"

இது வள்ளுவர் வாக்கு.

ஒலி பெருக்கி கிடைத்து விட்டால் ஊளையிடும் நாலாந்தர அரசியல்வாதி போல எங்கோ இருட்டறையில் இருந்து கொண்டு கையில் கணிணியும், விசைப்பலகையும் இருக்கிறது என்பதற்காக நுனிப்புல் மேயும் இணைய புரட்சிகர சுள்ளாண்களுக்கும், கலைஞரை வசை பாடியே இணையத்தில் தமிழ் கற்றுக்கொள்ளும் நடுநிலை வியாதிகளுக்கும் , அமெரிக்காவில் ஒளக்காந்துக்கிட்டு தமிழ்நாட்டுக்கு மாற்றம் தேவைன்னு சொல்ற கணிணி வழி கலகக்கார எணைய பொரட்சியாளய்ங்களுக்கும், சூத்துல சுடு வைக்கிற மாதிரி தேர்தல் முடிவுகள் அமையும்./

யெப்பா...எம்புட்டுப் பெரிய வாக்கியம்ம்ம்ம்ம்?? அதையே கொஞ்சம் டீசன்ட்டா சொல்லி இருக்கலாமே? முதல் முறை ஓக்கே..பிரிதொருமுறை நோ பர்மிஷன் திரு.அருள்...நன்றி வருகைக்கும் , கருத்துக்கும்!

ழகரம் said...

அரைகிறுக்கன் கூறியது...

Do you agree that cong and PMK both each have around 40 to 50% vote bank in tamilnadu coz both got around the same percent votes in their contested assemblies in the last assembly election.//

நண்பர் அதிரடி அடிதடி ஸூப்பரா விளக்கி இருக்காரு ...பாருங்க பாஸூ@@@

http://adiradiadithadi.blogspot.com/2011/03/blog-post.html

vijayan said...

உடன்பிறப்பே ,எதற்கும் கவலைபடாதே .நம்மிடம் டாஸ்மாக் துட்டு இருக்கிறது,தம்பி ?ராசா வின் spectrum துட்டு இருக்கிறது.திருமங்கலம் தேர்தல் பாதை இருக்கிறது.எல்லாவற்றிற்கும் மேலே சிவகங்கை வழி இருக்கிறது.எப்படியும் ஜெயம் நம்முதுதான்.

ராஜ நடராஜன் said...

//அது கட்சிகளின் தவறல்ல...மக்களின் தவறு....!! //

வழி நடத்த தெரியாத மனிதர்களுக்கு வக்காலத்து வாங்கி மக்கள் பேர்ல பழி போடுறீங்க பாருங்க அங்க நிக்குது உங்க லகரம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைப்பாட்டின் அடிப்படையிலேதான் பதிவு போடுவதும் அதுவும் எதிர்பதிவு போடுவதும் அவரவர் முகத்திரையை நன்றாகவே வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

அதிரடி அடிதடி said...

//Do you agree that cong and PMK both each have around 40 to 50% vote bank in tamilnadu coz both got around the same percent votes in their contested assemblies in the last assembly election.//

தவறு. இந்த இடுகையை பாருங்கள்

http://adiradiadithadi.blogspot.com/2011/01/blog-post_5973.html

# இந்திய தேசிய காங்கிரசின் வின் உண்மை பலம் என்பது அது மொத்தமாக பெற்ற வாக்குகளின் சதமான 8.38% க்கும், அக்கட்சி போட்டியிட்ட இடங்களில் பெற்ற வாக்கு சதமான 43.50% க்கும் இடைப்பட்டது

பாட்டாளி மக்கள் கட்சியின் உண்மை பலம் என்பது அது மொத்தமாக பெற்ற வாக்குகளின் சதமான 5.65% க்கும், அக்கட்சி போட்டியிட்ட இடங்களில் பெற்ற வாக்கு சதமான 43.43% க்கும் இடைப்பட்டது

இதில் 50 சதம் எங்கிருந்து வந்தது

Anonymous said...

வேதனை வெறுப்பாகிவிட்டது. மண்ணிக்கவும்.

ழகரம் said...

அரைகிறுக்கன் கூறியது...

Do you agree that cong and PMK both each have around 40 to 50% vote bank in tamilnadu coz both got around the same percent votes in their contested assemblies in the last assembly election.//

நண்பர் அதிரடி அடிதடி ஸூப்பரா விளக்கி இருக்காரு ...பாருங்க பாஸூ@@@

http://adiradiadithadi.blogspot.com/2011/03/blog-post.html

4 மார்ச், 2011 7:48 am
பிளாகர் vijayan கூறியது...

உடன்பிறப்பே ,எதற்கும் கவலைபடாதே .நம்மிடம் டாஸ்மாக் துட்டு இருக்கிறது,தம்பி ?ராசா வின் spectrum துட்டு இருக்கிறது.திருமங்கலம் தேர்தல் பாதை இருக்கிறது.எல்லாவற்றிற்கும் மேலே சிவகங்கை வழி இருக்கிறது.எப்படியும் ஜெயம் நம்முதுதான்.

4 மார்ச், 2011 8:53 am

இப்ப உங்களுக்கு இன்னா சார் பிரச்சினை?

டாஸ்மாக்கா? ஆரம்பிச்ச அம்மாவக்கேளுங்கோ!

திருமங்கலம் தேர்தல் பாதையா? சாத்தான்குளத்துல ஆரம்பிச்சி வச்ச அம்மாவக் கேளுங்கோ!

சிவசங்கை வழியா? அனேகமாக உங்களுக்கு ஏதோ ப்ரச்சினைன்னு நினைக்கிறேன்...சீக்கிரமா டாக்டரப் பாருங்கோ!

ழகரம் said...

வழி நடத்த தெரியாத மனிதர்களுக்கு வக்காலத்து வாங்கி மக்கள் பேர்ல பழி போடுறீங்க பாருங்க அங்க நிக்குது உங்க லகரம்.///

சரியான மனிதர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எப்போதும் மக்களிடம் உண்டு. அல்லது தேர்ந்தெடுப்பவர்கள் சரியில்லையென்றால் , தெருவில் இறங்கக்கூடிய திறனும் உள்ளவர்கள் மக்கள்...ஆனால் , நான் எதுவும் செய்யமாட்டேன்...வீட்டில் உக்கார்ந்து கொண்டே காசு கொடுத்து கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்கி விடுவேன் என்று சொல்லிவிட்டு ஊழல் ஊழல் என்று டீக்கடையில் உக்கார்ந்து பேசிப்பொழுது போக்குவதால் என்ன கிழிக்கப்போகிறார்கள் இந்த மாக்கள்.....ஆக , இருப்பதில் எது சரி என்ற வாதத்திலேயே முடிகிறது நமது எண்ணம்!

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைப்பாட்டின் அடிப்படையிலேதான் பதிவு போடுவதும் அதுவும் எதிர்பதிவு போடுவதும் அவரவர் முகத்திரையை நன்றாகவே வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

4 மார்ச், 2011 10:51 am

ழகரம் said...

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலைப்பாட்டின் அடிப்படையிலேதான் பதிவு போடுவதும் அதுவும் எதிர்பதிவு போடுவதும் அவரவர் முகத்திரையை நன்றாகவே வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
//

ஒருவேளை சில மாதங்களுக்கு முன்னர் எமது பதிவுகளைப் படித்திருந்தீர்களானால் நீங்கள் பின்னூட்டத்தில் அடிக்கடி சொல்லும் அரசியல் நிலைப்பாட்டிலேயே இருந்தேன் நானும்....சீமான் தான் அடுத்த தலைவர் என்னும் ரேஞ்ச்சில்...என்றைக்கு அவர் செயலலிதாவை ஆதரித்தாரோ அன்றே எம் மனதிலிருந்து நீங்க ஆரம்பித்துவிட்டார்....ஆக , அவரே அப்படியெனும் போது , பழைய நிலைக்கு திரும்புவதில் தவறொன்றுமில்லை என்பதே எம் நிலைப்பாடு!

Unknown said...

மேற்கு மண்டலத்தில், தி.மு.க எதிர்ப்பு அலை பலமாக அடிக்கிறது! தி.மு.க கூட்டணியில் கொ.மு.க வரவினால்,ஏற்படும் ஆதாயம், அருந்ததியினரின் எதிர்ப்பு ஓட்டுகளாக மாறி, அ.தி.மு.க கூட்டணிக்கு சாதகம்!
வடக்கில் பா.ம.க/வி.சி/தி.மு.க - அவரவர் தொகுதிகளில் மட்டுமே வேலை செய்யும் சூழல்! இதுவும் எதிரணியினருக்கு சாதகம்!
தெற்கிலும், கிழக்கிலும் தி.மு.கவினால் பலனடைந்தோர் அதிகம்! அம்மையார் ஆட்சி அவர்களின் அனுபவிப்புக்கு ஆப்பு வைத்துவிடும், என்பதை தெளிவாக உணர்ந்துள்ளனர்!

அலைக்கற்றையின் பாதிப்பு, அடிமட்டத்தில் பெரிதாக இல்லை!எவன் சம்பாரித்தால் என்ன!? நமக்கு இலவசங்கள் தொடர்ந்தால் போதும் என்ற நிலை!அவர்களில் இளவட்டங்கள், இலவசங்களை வாங்கிக் கொண்டு, கறுப்பு எம்.ஜி.ஆரின் பின்னால்!

முன்று வருடங்களாக தொடரும், எப்போது சரியாகும் எனத் தெரியாத, மின்சாரம், தொழில் நகரங்களில்/மாவட்டங்களில், பல சம்சாரங்களை முடக்கி விட்டது, தி.மு.க வின் மைனஸ்!
மத்தியில் ஜவுளி துறை மந்திரி, தயவானநிதி, கொங்குச் சீமைக்கு வரும் போதெல்லாம், பல வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டு, டெல்லி சென்றதும், சரத் பவாரைப் பார்த்து, பம்மி விடுவதால், தமிழகத்தின் முதுகெலும்பான ஜவுளித் தொழில்,சீக்கு வந்து பாயில் படுத்து விட்டது! தி.மு.க வின் அரசு ஊழியர்களின் ஆதரவு, ஜவுளி துறையினரின் எதிர்ப்புக்கு சரியாகி விடும்!
விலைவாசி உயர்வு, நடுத்தட்டு மக்களை, ஆளும் கட்சிக்கு எதிராக்கும்!
பார்லி. தேர்தலுக்கு காஙிற்கு கிடைக்கும் ஓட்டு, சட்டசபைக்கு முழுவதும் கிடைக்காது!காஙிற்கு தொடர்ந்து ஓட்டுப் போடும் முதுவட்டங்கள் பல மண்டையை போட்டுவிட்டன! ராகுலால் கிடைப்பவை, விஜெய் சென்று, புலம்பினால் மாறிவிடும்!
தி.மு.க , காங் எனும் பொதி சுமக்கும் பொறுமையான பிராணியே!

பொதுவாக தேர்தல் என்றாலே, பெரும்பான்மையோர், எந்த அணிக்கு வாக்கு அளிப்பது என்பதை தேர்தல் தேதி அறிவிக்கும்போதே, முடிவு செய்து விடுவர்! சுமார் 10 - 15 சத மக்களே, சாவடிக்கு செல்லும்வரை, முடிவில்லாமல் இருப்பர்! அவர்களைக் கவரவே, பிரச்சாரங்களும், கையூட்டுகளும்!

என்னதான் அ.தி.மு.க அணி கனவு கண்டாலும், தி.மு.க வின் தேருதல் அறிக்கையில் எதிர்வரும் இலவசங்களும், அழகிரி & கோவின் திருவிளையாடல்களும், தி.மு.க வை அரியணை, ஏற்றியே தீரும்!

South-Side said...

நன்றி திரு.ரம்மி...தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்...உங்கள் அலசல் சிந்திக்க வைக்கிறது!~