Friday, July 16, 2010

நாம் "காய்ந்த சருகுகள்" அல்லர்...மனிதர்கள்..!

இந்திய , தமிழக அரசாங்கத்தின் "துக்ளக்" கோட்பாட்டு அரசியலானது சீமானின் இருப்பையும் , தேவையையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி உண்டு..

Necessity is the mother of innovation.  
தமிழில் சொல்வதாயிருந்தால் ,தேவைகளே கண்டுபிடிப்புக்களுக்கு காரணமாகின்றன. 

காங்கிரஸ் பேரியக்கத்தின் " தமிழ் - தமிழர் " விரோத செயல்பாடு தான் திமுக என்னும் அரசியல் பேரியக்கத்தை உருவாக்கியது...கடந்த ஒரீரு வருடங்களுக்கு முன்பு வரை நாமும் கூட அதே திமுக என்னும் கட்சிக்குக் கொடி பிடித்து நடை நடந்தவர்கள் தான். 

அன்று எங்கள் நெஞ்சில் அண்ணா மூட்டிய தீயை அணைத்து ,  எங்களையெல்லாம் தமிழர் விரோதப்போக்கை கடைபிடிக்கத் தூண்டும்  தமிழர் விரோத சக்தியாக இன்று அதே கருணாநிதி அவர்களின் , தமிழ்நாட்டு அரசின் "துக்ளக்" தனமான செயல்பாடுகள் எள்ளி நகையாடும் வண்ணம் இருக்கின்றன.

ஜாமீனில் விட இயலாத அளவுக்கு "சீமான்" என்ன குற்றஞ் செய்தார்?

உணர்ச்சி கெட்ட ஜென்மங்களாய் , சேற்றினில் விழுந்த எருமை மாடுகளைப் போல் - எங்கு எது நடப்பினும் கவலையற்றுக் கிடக்கும் "தமிழா...கொஞ்சம் எழடா" என்று உரத்துக் கூவினார்....

அது குற்றமா?

அப்படியெனில் "தேசிய" மொழியாம் இந்தி மொழியை ( சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அதுவே அரியணையில் நிற்கும் மொழி...) திமுக எதிர்த்த போது இந்திய  இறையாண்மை எங்கே போனது?

அந்த இறையாண்மைக்கு பங்கம் வகிக்கும் செயலுக்கு மூல காரணமே இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் "திமுக" தானே? 

அந்தச் செயலுக்கு தண்டனை கொடுப்பது யார். ?

தண்ணிரில் பந்தைப் போட்டால் மிதக்கும். அதே பந்தை நீருக்குள் அமுக்கி அமுக்கி விட அது மேலும் எகிறும்...எகிறிக்குதிக்கும்...அதன் ஆட்டத்தை சுலபமாக அடக்கி விட முடியாது.

இது இயற்கையின் விதி....

அது போலத்தான் "சீமானும்", அவர் பின்னால் அணி வகுத்து நிற்கும் இளைஞர் பட்டாளத்தின் எழுச்சியும்... பந்து அமைதியாகவே மிதக்கிறது. மிதந்தது....ஆனால் "துக்ளக்" தனமான திமுக அரசின் செயல்பாடுகள் அந்த இளைஞர்களை அமைதி குன்றச் செய்கின்றன. அதன்மூலம் அவர்களை மேலும் எழுச்சியுறச் செய்கின்றன.

இவையெல்லாம் திமு கழகத்திற்குத் தெரியாதவை அல்ல.........60 களில் உணர்ச்சிப் பெருக்காய் கொந்தளித்த தமிழ் இளைஞர்களால் "காங்கிரஸ்" காணாமல் போனது. அப்போதைய எழுச்சி , அதற்கு முன்னர் "விடுதலை உணர்வாளர்கள் அல்லது இந்தியர் என்ற பேச்சில் கட்டுண்ட இளைஞர்களால் நிறைவேறி இருந்தது. சுருக்கமாகச் சொல்லப்போனால் இன்றைவிட அன்று இந்திய தேசியத்தின் மீதான நம்பிக்கை அதிகமாக இருந்தது. அந்தச் சூழலிலேயே இளைஞர்களின் எழுச்சியை ஏற்படுத்திட "அண்ணா" வால் முடிந்தது.

அதற்காக அவர் வெறும் ஒற்றைச் சொல்லையே ஆயுதமாக்கினார் ...

அது "தமிழ்" என்ற சொல்....

அதே "தமிழ்" என்ற ஆயுதம் தான் இந்த "துக்ளக்" ஆட்சியாளர்களை எதிர்த்துப் புறப்பட்டிருக்கின்றது. அன்றைக்கு அண்ணாவிற்கும் , கருணாநிதிக்கும் இருந்த காரணங்களை விட பலமடங்கு போராட வேண்டிய தேவை தமிழ் இளைஞர்களுக்கு இன்றைக்கு இருக்கிறது...

அந்தத் தேவையே "நாம் தமிழர்" இயக்கத்திற்கும் , சீமானின் எழுச்சிக்கும் அடிப்படை.

உணமையாகவே தமிழர் மீது இந்த துக்ளக் அரசுக்கு அக்கறை இருக்குமானால் எம்மைத் தமிழராக மதியுங்கள்.....தமிழராக மதித்து போராட விளைகின்ற காரணங்களுக்கு தீர்வு காண முயற்சியுங்கள்...!!

அதை விடுத்து "உமது" அரசியல் இருப்புக்கு பங்கம் வருகிறதென தவறாக நினைத்து "நாம் தமிழர்" மீது அடக்குமுறையினை ஏவாதீர்கள்.....

ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு முறை சீமானைக் கைது செய்யும் போதும் ஒரு சில ஆயிரம் இளைஞர்கள் " நாம் தமிழராய் " இணைத்துக் கொள்கிறார்கள்...எம்மைப் போல.

கைதுகளின் மூலம் , அந்த இளைஞர்களை பயப்படுத்த முனைவதாய் எண்ணிக்கொண்டு ஆத்திரமூட்டச் செய்யாதீர்கள்...அந்த ஆத்திரம் உம்மை அழித்துவிடும்..

உதாரணம் கேட்கிறீர்களா???

கண் முன்னே இருக்கிறது......

தமிழகத்தில் காங்கிரஸ் அழிந்ததும் , திமுக வென்றதுமான வரலாறே  உதாரணம்...

நிறைகுடமாக நீங்கள் இருப்பீர்கள் எனில் குடத்தை நிரப்ப வேண்டிய தேவை யாருக்கும் இருக்காது. ஆனால் குறைகுடமாக குற்றத்தை உங்களிடம் வைத்துக்கொண்டு யாரும் நீர் நிரப்பக் கூடாது என்று சொல்வீர்களானால் , இப்போது போலவே "தமிழ்" உணர்வாளர்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விடுவீர்களானால்................ குறித்துக்கொள்ளுங்கள்...

உங்கள் அழிவு நிச்சயிக்கப்பட்டு விட்டது..திமுக , அதிமுக , தேமுதிக என்று நீளும் தமிழ் விரோத , தமிழர் விரோத சக்திகளே உங்களின் அழிவு நிச்சயிக்கப்பட்டு விட்டது.

காரணம் , நாம் "காய்ந்த சருகுகள்" அல்லர்....காலடி பட்டதும் தூள் தூளாய்ச் சிதறி காணாமல் போவதற்கு...

நாம் மனிதர்கள் ....

ரத்தமும் , சதையுமாக உணர்வால் உந்தப் பட்டு கொதிக்கும் "நாம் தமிழர்கள்"..

Wednesday, July 14, 2010

பாவிகள்.!

தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு சும்மா அறிக்கை விடக்கூடாது என்று பொங்கி எழுந்திருக்கிறார் சினிமாக்காரி "அசின்."

அது சரி , யாழில் நீங்கள் யாருடன் சென்று தமிழர்களைப் பார்த்தீர்கள்? மகிந்தாவின் மனைவி ஷிராந்தி இராஜபக்சேவுடன்....யார் அவர் , அனுதினமும் நூற்றுக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்த கூட்டத்துக் காரர்.

உண்மையானதும் , நேர்மையானதுமான அக்கறை தமிழர்கள் மேலிருந்தால் நீங்கள் கண்டித்திருக்க வேண்டியது தமிழர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய இராஜபக்சேவைத்தான் . அதைச் செய்தீர்களா? இல்லையே ? ஊருக்கு நாங்கள் தமிழர்களுக்கு எல்லாம் செய்கிறோம் என்று சொல்லிக்கொள்ள உங்களை உபயோகப்படுத்துகிறார்கள் அவர்கள். 

உங்கள் பிழைப்புக்காக தமிழ்த்திரையுலகத்தை இரண்டுபடுத்தப் பார்க்கிறீர்கள்.......உங்களைச் சொல்லி குற்றமில்லை....வந்தேறிகளையும் , வேற்றினத்தார்களையும் அன்றாடம் தம் ஆதர்ஷ புருஷனாக்கி மகிழும் தமிழர்கள் செய்த தவறு அது....நீங்கள் அயலவர்கள்...உங்களுக்கு எங்கள் கஷ்டமும் , வேதனையும் புரியாது. 

அப்பாவியல்ல அசின் , படுபாவி........முள்ளிவாய்க்காலில் உலாவும் ஆயிரக்கணக்கான தமிழ் ஆத்மாக்கள் உம்மை மன்னிக்காது.....

***

இலங்கைக்கு போய் தமிழர்களைச் சந்திப்பது பற்றி பரிசீலிப்போம் என்று அறிவித்திருக்கிறார் சினிமாக்காரர் திரு. சரத்குமார்.

சந்தியுங்கள்.....நிச்சயம் செய்ய வேண்டியதே........வேதனையில் உழலும் அவர்களுக்கான மருந்தாக இது கட்டாயம் செய்யப்பட வேண்டியது......அன்றாடம் கொத்துக்குண்டுகளுக்கிடையில் வாழ்ந்த நம் சனத்துக்கு ஆறுதல் தேவைதான்.

ஆனால் எப்போது இப்படிச் சொல்கிறீர்கள்? சினிமாக்காரர் திரு.கருணாநிதியைச் சந்தித்து வந்த பிறகு....கூடவே இன்னொன்றையும் சொல்கிறீர்கள் "இன்று என் பிறந்த நாள்...வாழ்த்துக்கள் வாங்கவே வந்தேன்...அதனால் அரசியல் பேச முடியாது என்று.." 

இலங்கைக்கு போய் தமிழர்களைச் சந்திப்போம் என்று இன்று சொல்வது அரசியல் இல்லையா? அதுவும் யாரைச் சந்தித்து விட்டு வந்த பிற்கு ? கலைஞரைச் சந்தித்து விட்டு வந்தபோது....அடக்குமுறையின் மூலம் இராஜபக்சேவை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் கருணாநிதியைச் சந்தித்து விட்டு வந்த பிறகு...ஆக , உங்களின் இந்த அறிவிப்பிற்கு பின்னணி என்னவென்று மக்களுக்குப் புரியாதா என்ன?

இராஜதந்திரி , இனவுணர்வாளர்களின் குரலை நசுக்கவே உங்களைப் பயன்படுத்துகிறார்....ஏற்கனவே , எம்.பிக்களின் குழுவை அனுப்பினார் அவர்...அதற்கு "யாழ்ப்பாணத்தில் சனீஸ்வரன் " என்று தலையகம் தீட்டியது வலம்புரி நாளிதழ்...என்ன பதில் ? பதிலேதும் இல்லை...

ஆனால் , நான்கே நாளில் ஈழத்தமிழர்களூக்கு விடுதலை பெற்றுத்தந்ததாக போஸ்டர் ஒட்டி மகிழ்ந்தார்கள் உடன்பிறப்புகள்........இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முகாம்களில் வாடுகிறார்கள்...கண்டித்து ஏதேனும் அறிக்கை விட்டாரா உங்கள் தற்போதைய "அப்பா?" . இல்லை போஸ்டர்தான் ஒட்டினார்களா உடன்பிறப்புக்கள்...?

***

உத்தபுரத்தில் எல்லோரும் அமைதியாகத்தான் இருக்கிறார்களாம்....மார்க்சிஸ்டுகள் தான் அமைதியைக் கெடுக்கிறார்களாம்....கருணாநிதி சொல்கிறார்.

கலைஞர் கருணாநிதி எவ்வழி வந்தவர்? 

பெரியாரின் வழி

கலைஞரின் இயக்கம் திமுக எவ்வழி வந்தது?  

சுயமரியாதையை, பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு


தீண்டாமைக் கொடுமையினை அனுதினமும் எதிர்த்த பெரியாரின் வழித்தோன்றல்கள் தான் "உத்தபுரத்தில்" அமைதி கூத்தாடுகிறது என்கிறார்கள்..

வைக்கத்திலும் அமைதி கூத்தாடிக்கொண்டிருந்தது. பிறகேன் வைக்கம் வீரர் என்று பெரியாரைப் புகழ்கிறீர்கள்???

கோயில்கள் அனைத்தும் பார்ப்பனர்களின் சேவையில் அமைதியாகத்தான் இருக்கிறது..பிறகேன் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றுகிறீர்கள்?

போலிஸை வைத்து அடக்குமுறையைக் கையாண்ட சர்வாதிகாரிகள் ஒருவனாவது புகழப்படுகிறானா என்று பாருங்கள் கலைஞரே...

ஸ்டாலினில் , ஹிட்லரில் ஆரம்பித்து இந்திராகாந்தி வரை வரலாற்றில் தூற்றப்படுகிறார்கள்....

தமது ஆட்சிக்காக எவ்வளவு தூரம் கீழிறங்கிப் போயிற்று இந்த திமு கழகம் என்ற வேதனை தொண்டையை அடைக்கிறது.

மொழியை வைத்து வயிறு வளர்த்த கூட்டமொன்று , எமக்கு இனவுணர்வை ஊட்டி வளர்த்த கூட்டமொன்று , இன்று ஊரைக் கொள்ளையடிக்க ஊமையனாய் நீ இருந்துகொள் என்று சொன்னால் நாம் சும்மா இருந்துவிடுவோம் என்று கனவு கண்டது.. காண்கிறது....அது பகல் கனவு....பலிக்காது பாவிகளே..!

Tuesday, July 13, 2010

சினிமாக்காரர் சீமான்..!

சினிமாக்காரர் சீமான் ஓட்டம் என்று முதலில் சொன்ன தினமலர் பின்பு சினிமாக்காரர் சீமான் கைது என்று மாற்றிப்போட்ட செய்தியை இங்கே சிலர் படித்திருப்பீர்கள். இருப்பினும் படிக்காதவர்களுக்காக இதோ இணைப்பு.

முதலில் ஓட்டம் என்று செய்தி வெளியிட்ட தினமலர் , பின்பு காரில் வந்த சீமானை காத்திருந்த போலிசார் லபக் என்று பிடித்தததாக சொல்கிறது.
பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டியது தான் ...ஆனால் தான் தோன்றித் தனமாக தனக்குத்தோன்றியவற்றை எல்லாம் மனம் போன போக்கில் எழுதித் தள்ளுவது தவறு...

அதே நிகழ்வில் பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள்...சினிமாக்காரர் கலைஞர் கருணாநிதி அவர்களின் போலீசார் அராஜகம் என்று தினமலர் எழுதத்துணியுமா? 

துணியாது..

காரணம் இன்று கருணாநிதி அவர்கள் பக்கம்....!!

அந்தச் செய்தியிலேயே தினமலரின் இந்த பொல்லாப் புத்தியை பலர் இடித்துரைத்திருக்கிறார்கள்...

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு. மற்ற முழுமையான பின்னூட்டங்களை மேற்கண்ட செய்தியின் இணைப்பை அழுத்தினால் முழுமையாகப் படிக்கலாம்.!

pavendhan - sydney,ஆஸ்திரேலியா 
தனக்கு பிடிக்காதவர்களை பற்றி நல்ல செய்திகளை தவிர்த்து,மற்ற செய்திகளை கிண்டலாக எழுதுவதாக நினைத்து தினமலர் தன்னைத்தானே தாழ்த்தி கொள்கிறது. முன்பு சீமான் முகத்தில் கரி என்று செய்தி. இப்பொழுது சினிமாகாரர்..உயிரை பணயம் வைத்து ஈழத்திற்கு சென்றவரை,சண்டையின்போது ஈழத்தின் கோரத்தை பதிவுசெய்யாத தினமலர்,கிண்டலடிப்பது துரதிர்ஷ்டவசமானது....
ஜெகதீஸ்வரன்.இரா - Dubai,யூ.எஸ்.ஏ 
சரியான செய்திகளை திரித்து கூறுவதில் தினமலரை மிஞ்ச ஆளில்லை என மீண்டும் நிருப்பித்து விட்டீர்கள். இந்த செய்தித்தாளை படித்தால் சரியான நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள முடியாது..!!... 

சாமீ - Sharjah,யூ.எஸ்.ஏ 
அது என்ன சினிமாகாரர் சீமான் ! அப்படி என்றால் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் இவர்கள் எல்லாம் யார். சூரிய குடும்பம் அத்தனையும் சினிமா தானே எடுக்குது. மீனவன் செத்தால் நீங்களும் கேட்க மாடீங்க. கேட்குரவனையும் கேவலமா எழுத வேண்டியது... கருத்தை விமர்சனம் செய்வதை விட்டு விட்டு அரசியல் வியாதியைப் போல ஆளை விமர்சனம் செய்ய கூடாது... 

poda - NewYork,உஸ்பெகிஸ்தான் 
 
இது வரை 400 க்கு மேலான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.இதுவரை மத்திய அரசும் மாநில அரசும் எந்த ஒரு சிறு நடவடிக்கையும் எடுத்ததில்லை.இனியும் எடுக்க போவதும் இல்லை. சீமானின் பேச்சுக்கு கோபப்படும் அன்பர்கள், சற்று சிந்திக்க வேண்டும்.மௌனமாக இருந்தால் எதுவும் நடக்காது....

சாமி - bangkok,டோகோ

வர வர தினமலர் செய்திகளின் தலைப்பு ஒரு மாதிரியாக தான் இருக்கிறது. தமிழ் மாநாடு ஆரம்பிப்பதற்கு சில காலம் முன்பிருந்து தலைப்புகளை நன்றாக கவனித்து பார்த்தால் தெரியும். இன்றைக்கு வந்த சேதியும் அப்படி தான் இருக்கு. சீமானின் கோபம் நியாயமானது. அந்த கோபம் ஒவ்வொரு தமிழனுக்கு இருக்க வேண்டும். அவன் உப்பு போட்டு சாப்பிடுபவனாக இருந்தால். ஆனால் அவர் பேசிய அனைத்து வார்த்தைகளையும் ஒப்பு கொள்ள முடியாது. படிக்கும் மாணவர்களை கொல்வதாக கூறுவதை ஏற்க முடியாது. வேண்டுமானால் சிங்கள ராணுவத்தை கொல்வோம் என்று கூறலாம். நாளையிலிருந்து சினிமாகாரர் விஜயகாந்த் பேசினார். சினிமாகாரர் கருணாநிதி பேசினார். சினிமாகாரி ஜெயலலிதா பேசினார் என்று செய்தியை வெளி இடவும். நன்றி வணக்கம்....
 
k.senthilkumar - singapore,இந்தியா 
ஏங்க தினமலர் ஆசிரியர் அவர்களே ... நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் என்று சொன்னால் உங்கள் செய்தித்தாள் விற்பனை குறைந்து விடுமா ?... 

மதன்ராஜ் - Pune,இந்தியா 
அவ்வாறு பேசியது தவறுதான். சீமானை கைதுசெய்ய துடிக்கும் அரசு மீனவர்களை காக்க நடவடிக்கை எடுப்பதில் ஏன் அக்கறை காட்டுவது இல்லை. சீமான் என்ன செய்வார் பாவம். தமிழ் ரத்தம் துடிக்கத்தான் செய்யும். இந்த கடலோர காவல் படையும் கடற்படையும் எங்கள் வரி பணத்தில் வாழ்ந்துகொண்டு எங்கள் மீனவரை காப்பாற்றாமல் இருப்பது ஏன்? இலங்கை கடற்படையுடன் கூட்டு ரோந்து மட்டும் செய்ய முடிகிறதோ? ஆஸ்திரேலியாவில் அடிவாங்கும் வடஇந்தியனுக்கும் பிரான்சில் சீக்கியர் முண்டாசு அணிய தடை செய்வதற்கு மட்டும் மன்மோகன் singh குரல் கொடுப்பாரா?... 

gansesh - chennai,இந்தியா 
இங்கே சீமான், என்னா தப்பு செய்தார்? இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக என்ன கருத்துகள் முன் வைக்க படுகின்றன என்று உங்களில் யாருக்கு தெரியும். இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ் நாட்டு மீனவன் துடிக்க துடிக்க சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டான்- இப்போது புலிகள் அழிக்கப்பட்ட நிலையிலும் இந்த நிலைமை தொடர்வது ஏன்? இந்திய நாட்டு கடற்படை கூட இலங்கை மீனவர்களை கைது செய்து இருக்கிறது, ஆனால் கொல்லவில்லை. நண்பர்களே உண்மையை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பன் யார் என்று....

நண்பர்கள் பலரும் தினமலரை "தினமலம்" என்று விளிப்பதுண்டு. அப்போதெல்லாம் அவர்களுடன் ஒரு வெகுஜனப் பத்திரிக்கையை இப்படி அவதூறாகப் பேசலாமா என்று விவாதித்தது உண்டு. இப்போது தான் அதன் முழுமையான அர்த்தம் புரிகிறது.

இனிமேலாவது , வெகுஜன , நியாயமான , நடுநிலையான செய்தித்தாள்கள் என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் பத்திரிக்கைகள் எவ்வளவு கீழ்த்தரமான நோக்கங்களைக் கொண்டிருக்கின்றன என்று அம்பலப்படுத்தவே இப்பதிவு.  !

Monday, July 12, 2010

கே.பி, தந்த சேதி



கடந்த சில வாரம் சுயநலமிகளின் சேதிகளால் நிரம்பி இருந்தது. செம்மொழி மாநாடு என்னும் துரோகத்தின் கொண்டாட்டமானது நடைபெறுகிற வேளையில் , கே.பி அவர்கள் அரசாங்கத்துடன் இணக்கப்பாடான அரசியலை மேற்கொள்ளப் போவதான ஒரு செய்தியும் வெளி வந்திருந்தது. 

ஒரு புறம் , கலைஞர் மு கருணாநிதி என்னும் முதியவர் தமிழர்கள் எல்லோரும் செல்வச்செழிப்பினில் மிதந்து கொண்டிருப்பதைப் போலொரு தோற்றஞ் செய்ய செம்மொழிக் கூத்தை நிகழ்த்திக்கொண்டிருந்த வேளையில் திருவாளர் கே.பி அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படப் போகிறார்.

வருத்தமான ஒரு சேதிதான்......அனேகமாக வெளிவரும் சேதிகளைப் பார்க்கையில் அது உண்மையானதாய் இருக்கவே வாய்ப்புக்கள் அதிகம். 

தேசியத்தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்றும் , புலிகளின் வழங்கல்களை முழுதாக மேற்கொண்டவர் என்ற வகையிலும் , இறுதிக்கட்டப் போரின் நிகழ்வுகளை முற்று முழுதாக அறிந்தவர்களில் ஒருவர் என்ற வகையிலும் , விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவர் தாம்தான் என அறிவித்துக்கொண்டவர் என்ற வகையிலும் இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைத்த அரிய சொத்து திரு.கே.பி. என்பது முற்றிலும் உண்மை.

உலகெங்கும் படர்ந்திருக்கும் புலிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அறிந்தவர் என்ற வகையிலும் , புலனாய்வுப் போராளிகளனைவரையும் அவர்தம் செயல்பாடுகளை அறிந்து தெளிந்தவர் என்ற வகையிலும் அவரது தாவல் அடுத்த கட்ட தமிழீழப் போருக்கு பாரிய பின்னடைவு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கே.பியின் இணக்க அரசியல் இப்போது ஆரம்பித்ததா  , அவர் காலத்தின் கைதி ஆகிவிட்டாரா இல்லை இறுதிக்கட்டப் போருக்கு முன்னரே அவர் அரசாங்கத்தின் வலையில் விழுந்து விட்டாரா? 

நமக்குப் பிரேதப் பரிசோதனை செய்வதில் விருப்பமிருக்காவிடினும் , அத்தகைய சுய சோதனையே செய்த தவறுகளை சரி செய்ய உதவும் என்பதில் மாற்றுக்கருத்திருக்காது.

முதலில் , சில கருத்துக்கள் வெளிப்படையாக.

எப்போது இறுதிக்கட்டப் போரில் கே.பி வெளிப்படையாக உள் நுழைகிறார்?

*விடுதலைப்புலிகள் வன்னியில் கிளிநொச்சியை இழந்த பிறகு தேசியத்தலைவரால் உலகளாவிய தொடர்புகளுக்காக நியமிக்கப்படுகிறார்.

*இறுதிக்கட்டப் போரின் அனைத்து விடயங்களிலும் , தேசியத்தலைவருடன் தொடர்பில் இருக்கிறார்.

*முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்து போனபிறகு தலைவர் இருப்பதாகவும் , பின்பு வீரமரணமடைந்தார்  எனவும் அறிவிக்கிறார்.

*பின்பு புலிகளின் தலைமைச் செயலாளர் என தம்மை பிரகடனப்படுத்திக்கொள்கிறார். எழுந்த எதிர்ப்புகளை அனைத்தையும் வெல்கிறார். 

*2009 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மலேசியாவில் கைது செய்யப்பட்டு பின்பு இலங்கைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.

* 2010 ல் அரசாங்கத்துடன் இணக்கப்பாடாக செயல்படப் போவதாக தகவல்கள் வெளி வருகின்றன.

ஜனவரி 2009 ல் புலிகளின் தலைவர் திரு.செல்வராசா பத்மநாதனை அனைத்துலகப் பொறுப்பாளராக நியமிக்கிறார் என்னும் போது கனகாலமாவது தேசியத்தலைவர் தொடர்ச்சியாக அவருடன் தொடர்பில் இருந்திருப்பார். அதாவது கிளிநொச்சி வீழ்வதற்கு முன்னரே. அதைத்தான் நாம் இங்கு தெளிவுபடுத்த விளைகிறோம்.

இனி , கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பிறகான புலிகளின் செயல்பாடு எப்படி இருந்தது?

- மக்களையும் தம்மோடு அழைத்துக்கொண்டு புலிகள் படிப்படியாக பின்வாங்குகிறார்கள்....ஒவ்வோர் நாளிலும் மக்களின் இழப்புடன் , புலிகளின் இழப்பும் அதிகரிக்கிறது. விநியோகங்கள் மட்டுப்படுத்தப் பட்ட ஒரு சூழலில் லட்சக்கணக்கான மக்களையும் தம்மோடு அழைத்துச் சென்றது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

- புதுக்குடியிருப்பு சமர் தான் சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர் என்றார் ஒரு ஆய்வாளர் , அப்புதுக்குடியிருப்பும் வீழ்ந்த போது புலிகள் தமது தோல்வி உறுதிப்படுத்தப்பட்டதை உணர்ந்திருப்பார்கள். அப்போதாகினும் கரந்தடி வீரர்களாக தம்மை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து மரபுவழிச் சண்டையைப் புரிந்துகொண்டிருந்தது ஏன்?

- எப்பேர்ப்பட்ட விடுதலை வீரனுக்கும் , போராளிகளுக்கும் காடுகள் போன்றதொரு கவசம் இருப்பதில்லை.....வெறும் நாட்டுத்துப்பாக்கிகளை வைத்துக்கொண்டே மூன்று மாநில அதிரடிப் படைகளை பல பத்தாண்டு காலம் தண்ணி காட்டிய வீரப்பன் அதற்கு நல்ல உதாரணம். அவ்வளவு ஏன்......இந்திய அரசின் வலிமைவாயந்த அதிரடிப்படையையே புலிகள் சமாளித்ததும் கரந்தடி வீரர்களாகவே. அப்பேர்ப்பட்ட காடுகளை விட்டுவிட்டு புதுமாத்தளனை தம் கடைசிச் சமருக்கு தேர்ந்தெடுத்தது ஏன்?

-   முள்ளிவாய்க்காலுக்கும் , நந்திக்கடலுக்கும் இடைப்பட்ட ஒரு சிறு நிலத்தில் கடற்கரையை ஒட்டிய நிலப்பரப்பை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? ஏதேனும் வெளிநாடொன்று உதவிக்கு வரப்போவதாய் யாரேனும் நம்பிக்கை அளித்திருந்தார்களா? ஒரு வேளை அப்படியான உறுதி அளிக்கப்பட்டிருக்குமானால் , வெளிநாடுகளுடன் தொடர்பில் இருந்த கே.பி மூலமாகவே நடந்திருக்கும்.

இறுதிப்போரின் மே முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் வெளிநாடொன்றின் போர்க்கப்பல் ஒன்று புலிகளின் தலைவரைக் காப்பாற்ற ஆயத்தமானதொரு செய்தியையோ , வதந்தியையோ கேள்விப்பட்டிருப்பீர்கள்.....அதுபோன்ற ஒரு உதவியை எதிர்ப்பார்த்தா முள்ளிவாய்க்கால் நோக்கிப் பயணித்தார்கள் புலிகளும் , தேசியத்தலைவரும்???

எப்படிப் பார்த்தாலும் , ஏதோவொரு நம்பிக்கையின் பேரில் தான் தமக்குச் சற்றும் பாதுகாப்பில்லாத ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டார்கள் புலிகள் என்பதில் நமக்கு சந்தேகம் இல்லை. 

அந்த நம்பிக்கையை கொடுத்தவர் யார்? அந்த நம்பிக்கையை உலகின் எந்தச் சக்தி கொடுத்திருந்தாலும் திரு.கே.பி அவர்களின் மூலமே கொடுத்திருக்க இயலும் . ஆக , அதில் திரு. கே.பி அவர்களின் பங்களிப்பு மறைக்க முடியாததும் , தவிர்க்க முடியாததும் ஆகிறது.முள்ளீவாய்க்காலில் நாம் வீழ்ந்த பிறகு அத்தகைய நம்பிக்கையை அளித்தவர்களை ஏன் தோலுரித்துக்காட்டவில்லை திரு. கே.பி அவர்கள்?

தேசியத்தலைவர் வீரமரணம் அடைந்தார் என்றும் , பாரிய துரோகங்களின் விளைவாகவே அது நிகழ்ந்தது என்றும் கே.பி சொன்னார் எனில் கே.பியையும் தாண்டி துரோகமிழைத்தவர் யாரேனும் உளரோ என்ற கேள்வியும் எழுகிறது.

ஆக , எந்நோக்கில் பார்த்தாலும் திரு.கே.பி அவர்கள் இறுதிக்கட்டப்போருக்கு முன்னரே அரசாங்கத்துடனான இணக்கப்பாட்டு அரசியலை  ஏற்படுத்திக்கொண்டாரோ என்ற சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நம்ப வைத்துக் கழுத்தறுத்தவர்கள் எந்த முகத்தோடு மக்களைச் சந்திக்க வடக்குக்குப் போனார்கள் என்ற கோபமும் , வேதனையும் , ஆற்றொணாத் துயரமும் அடிமனதில் எழுகிறது.

புலிகளின் புலனாய்வுத் துறை இன்னமும் இயங்குவதாக இலங்கை அரசாங்கமே ஒப்புக்கொண்டிருக்கிறது. இனியாவது , குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில் புலிகள் தெளிவான சேதியொன்றை உலகிற்குத் தர வேண்டும். இல்லையெனில் கே.பி யின் வரிசையில் இன்னும் பலர் இணைவதை தடுக்க முடியாது..



இனியும் மெளனம் , இருப்பிற்கே ஆபத்து என்று உணரும் நிலை வருமா?

கே.பி உலகிற்கு ஒரு சேதி சொல்லிச் சென்றிருக்கிறார். எதிரியை விட துரோகியே பலத்த இழப்பை ஏற்படுத்துவான் என்று...துரோகிகளைத் தண்டிக்கும் வரை புலிகள் வீழ்த்தப்படாமல் இருந்தார்கள்.....


என்றைக்கு இந்த மாற்றுக்கருத்து மகராசன்கள் பாசிசப் பாட்டு பாடினார்களோ அன்று துரோகிகளைக் கொல்லாமல் விட்டார்கள் , அதன் விளைவு ? இன்று ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றாகி விட்டது !


இதுவே கே.பி தந்த சேதி.

த்தூ....!

-: file photo :-

செய்தி ஒன்று

சென்னை: வன்முறையைத் தூண்டியதாக பேசிய வழக்கில் இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போராட்டத்தில்  சீமான் கலந்து கொண்டார்.

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் சீமானை போலீசார் தேடி வந்தது. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேச வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


செய்தி இரண்டு

தமிழகத்தில் மினி எமர்ஜென்சி.
கோவை : தமிழகத்தில் மினி எமர்ஜென்சி சூழ்நிலை நிலவுகிறது. என்னதான் அடக்குமுறையைக் கையாண்டாலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டுதான் இருப்போம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.


செய்தி மூன்று

சென்னை: கொழும்புவில் இருந்து சென்னை வந்த இலங்கைத் தமிழர் ஒருவர், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் திருப்பி அனுப்பப்பட்டார்.

செய்தி - நான்கு

 தமிழக மீனவர்களைத் சிங்களக் கடற்படை தாக்கவில்லை...இலங்கை அரசு பதில்.......ஆனால் இந்திய அரசின் பதில் என்ன?  தெரியவில்லை. அல்லது இந்திய அரசு எதுவும் சொல்வதே இல்லை....


செய்தி - ஐந்து

இதோ , மீனவர்கள் மீதான தாக்குதலை அரசு அதிகாரிகளே உறுதிப் படுத்துகிறார்கள் என்று பி.டி.ஐ. செய்தி வெளியிட்டிருக்கிறது.......இந்திய அரசின் நிலையென்ன , இலங்கை அரசின் மறுப்பிற்கு சரியென்று பதில் அளிக்கிறார்களா இல்லை தவறென்கிறார்களா?
Fifty fishermen from Tamil Nadu were injured when they were attacked allegedly by Sri Lankan Naval (SLN) personnel while fishing off Katchathivu Island, PTI reported Sunday, citing Indian Fisheries department officials.

source : tamilnet

இந்தப் பதிலைக் கூட பெற்றுத்தரவில்லையென்றால் திமுகவிற்கு எதற்கு மத்திய மந்திரி பதவிகள்?? எதற்கு மாநில அரசு??? சீமானைக் கைது செய்து சிறையில் அடைக்க மட்டுமா?


த்தூ....!!!!

Thursday, July 08, 2010

திராவிடத்தால் விளைந்த கேடுகள்.. - திரு.பிரின்ஸ் சாமாவுக்கு (மட்டுமல்ல)


எந்த  ஒரு தனிமனிதனுக்கும் அடையாளம் தேவைப்படுகிறது.  அதனால் தான் இன்று மனிதர்கள் சாதியால் கூடுவதும் , தம் ஊர் என்ற பெயரில் கூடுவதும். இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணி பயம். இந்தச் சமூகம் தனி மனிதனின் குரலை செவி கொடுத்துக் கேட்பதே இல்லை. அவனவன் தனக்கென ஒரு கூட்டம் சேர்த்துக் கொடி பிடித்தால் தான் திரும்பியேனும் பார்க்கிறது. 

மொட்டனூத்து  என்ற கிராமத்திற்குள் , ஒரு கவுண்டன் அல்லது இன்ன சாதி என்பது அடையாளம் , அதே கிராமத்தை விட்டு வெளியே வந்தால் மொட்டனூத்துக்காரன் என்பது அடையாளம் , வெளிமாவட்டம் போனால் ஈரோட்டுக்காரன் என்பது அடையாளம்  , மற்ற மாநிலங்களுக்குப் போனால் தமிழ்நாட்டுக்காரன் என்பது அடையாளம் , வெளிநாடுகளுக்குப் போனால் இந்தியன் என்பது அடையாளம்.

ஆக , அடையாளம் என்பது இடத்திற்கு இடம் , சூழலுக்கு சூழல் மாறுபடுகிறது....ஆனால் , இறுதிவரை நம்மோடு பயணிக்கும்  , மாறாத அடையாளம் எது? விவாதத்திற்குரிய கேள்வி...

தமிழை , மலையாளத்தை, கன்னடத்தை , தெலுங்கை , துளுவைப் பேசுகிறவர்கள் எல்லோரும் திராவிடர்கள் என்றார் பெரியார். அதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் காலத்தின் கட்டாயத்தால் நம்மை அங்ஙனம் அழைக்க வேண்டிய சூழல் இருந்தது. ஏனென்றால் அவர் இருந்த காலம் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருக்காத காலம். 

ஒட்டுமொத்த திராவிட சமூகமும் , சென்னை மாகாணம் என்ற பெயரில் வழங்கப்பட்ட காலம்...... 

என்றைக்கு பொட்டி ஸ்ரீராமுலு அவர்கள் தனி ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கென உண்ணாவிரதம் இருந்து இறந்தாரோ அன்றைக்கே திராவிடம் செத்துப் போனது. அது செத்துப் போன பாம்பு....

என்றைக்கு மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டதோ அன்றைக்கே திராவிடக் கொள்கைக்கு மூடுவிழா நடத்தியாகி விட்டது. அதை இன்றைய திமுகவும் ஒத்துக்கொண்டது. அதனால்தான் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. அதைப் பெரியாரே ஒத்துக்கொண்டிருக்கிறார்.  


இன்று கேரளம் முல்லைபெரியார் அணைக்கு தடை போடுவதும் , காவிரிக்கு கர்நாடகம் தடை போடுவதும் திராவிடவியல் கருத்தியலுக்கு சவாலாக விளங்குகின்றன. திராவிடம் என்கிற பெயரில் கட்சி நடத்தும் திமுகவுக்கோ , அதிமுகவுக்கோ ஒரு சட்டமன்ற , நாடாளுமன்ற பிரதிநிதி இருக்கின்றாரோ மற்றைய திராவிட மாநிலங்களில். இல்லை மற்றைய மாநிலங்கள் தான் இவர்களை தமது பிரதிநிதிகளாக , திராவிடத்தின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்கிறார்களா ????
இப்படி , செல்லாக் காசான திராவிடத்தை இக்கட்சிகள் சுமப்பது  திராவிடர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவா அல்லது இவர்களது பிழைப்பியலுக்கா?


நண்பர் பிரின்ஸ் உடனே  சொல்லக்கூடும் " ஆமாம் திராவிடம் என்று பிழைக்க திராவிடர் கழகம் என்ற ஓட்டரசியலிலா இருக்கிறது " என்று? இல்லைதான். ஆனால் பெரியாரின் சீடர்களை வெகுஜன அரசியலிலிருந்து மேலும் விலக்கிய சாதனையைத் தான் இன்றைய தி.க செய்கிறது.....செய்திருக்கிறது. 

பெரியார் என்னும்  மாமனிதர் மறைந்த  பிறகு "திராவிடர் கழகம்" தமிழ்நாட்டுக்கு , திராவிட நாட்டுக்கு செய்த அரும்பணிகளைப் பட்டியல் இட இயலுமா திரு. பிரின்ஸ் அவர்களே...

செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு "சமூக நீதிக் காவலர்" என்ற பட்டம் வழங்கிய சாதனை இதில் சேராது.

திராவிடம் என்று பேசும்  திகவோ , திமுகவோ , அதிமுகவோ திராவிடர்களை ஒன்றிணைக்க என்ன செய்திருக்க்கிறார்கள்??

தமிழ் தவிர மற்ற திராவிட மொழிகள் தழைக்க என்ன செய்திருக்கிறார்கள்??

ஈழத்தில் தமிழன் பிணமான போது திராவிடத்தின்  பெயரால்  தென் மாநிலங்களை ஒன்றிணைத்து தம் குரலை வலிமையாக ஓலிக்கச் செய்ய முயற்சி எடுத்தீர்களா திராவிடர்களே????

இப்படி சுக்குக்கும் உதவாத திராவிடத்தை வைத்து என்ன சாதிக்க முயல்கிறீர்கள்??? 

உங்கள் நோக்கம் தான் என்ன?

இவர்கள் சாதித்தது எல்லாம் , மாற்று மொழிக் காரர்களிடம் தமிழர்களை அடகு வைத்தது மட்டுமே...

தமிழர்களை ஆண்ட எம்.ஜி.ஆரில் தொடங்கி , ஜெயலலிதா , வைகோ , விஜயகாந்த் என தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்களை தமிழ்த் தலைவர்கள் ஆக்கியதுதான்......

திராவிடக் கருத்துருவாக்கம் போலி என்பதல்ல நமது கருத்து. தீராவிடத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் போலியானவர்கள்.....அதன் மூலம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் என்பதே உண்மை...இதை உறுதிப்படுத்துவதாக இக்கட்டுரையின் அடுத்த பகுதி அமையும்..

இன்னும் வரும்........



தொடர்புபட்ட திரு.ப்ரின்ஸ் என்.ஆர் சாமா அவர்களின் கட்டுரையைப் படிக்க இங்கே செல்லவும்.

Tuesday, July 06, 2010

கொழும்பு ஐ.நா அலுவலகம் முற்றுகையில். !

கொழும்பு ஐ.நா அலுவலகம் இலங்கை அமைச்சர் விமல வீரவன்ச அவர்களால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது.


ஐநா நியமித்த நிபுணர் குழுவை கலைக்கும் வரையில் முற்றுகையைத் தளர்த்தப் போவதில்லை என்று விமல வீரவன்ச அறிவித்திருக்கிறார்.


Massive protest outside UN


By Supun Dias

A large crowd has gathered outside the UN office in Colombo to stage a protest against UN Chief Ban Ki Moon’s decision to appoint an Expert Panel. Government Minister Wimal Weerawansa is leading the protest.

More than a 1000 protestors have gathered outside the UN office in Bauddhaloka Mawatha.

The protestors have put down a police barricade near the UN office and have got on top of the UN parapet wall and are staging the protest against the UN Secretary General.

The protestors have also begun a 'sathyagraha' until Ban Ki Moon reverts his decision.

Weerawansa had last week urged the public to surround the UN office in Sri Lanka and trap the staff inside until a decision was taken by the UN Secretary General to dissolve the panel he appointed on Sri Lanka.

The UN last week responded by saying its security officials were monitoring the comments made by Weerawansa and said there was an indication the government may apologise to the comments made by the government minister. (Daily Mirror online)
 
http://www.dailymirror.lk/index.php/news/4863-massive-protest-outside-un.html

The large number of protestors led by Minister Wimal Weerawansa who have gathered outside the UN office in Colombo have erected a stage, blocking the entrance of the office preventing UN members from entering or leaving the building.

Weerawansa speaking to reporters gathered in the area said that they will not move from outside the office till such time UN Secretary General Ban Ki Moon does not dissolve the Expert Panel.

The protestors have also started a fast unto death ‘sathyagraha’ outside the office

http://www.dailymirror.lk/index.php/news/4866-un-office-under-siege.html

ஒரு கை ஓசை என்ன செய்யப் போகிறது. தமிழர்கள் நீதி வேண்டும் என்று கேட்க இதைவிட சிறந்த தருணம் இருக்கப்போகிறது?

நீதி தேவதையின் கதவுகளைத் தட்ட ,உலகம் முழுமையும் ஒருங்கே இலங்கையின் மேல் பார்வை செலுத்துகின்ற இந்த நாள் தான் தமிழர்கள் /புலம்பெயர்கள் தமிழர்கள் தெருவிற்கு வந்து போராட வேண்டிய நாள்....

நிபுணர் குழுவைக் கலைக்கக் கூடாது என்று உரத்துக்குரல் கொடுக்க வேண்டும்

வாய்ப்பிருக்கும் இடமெல்லாம் ஐநா அலுவலகத்தின் முன்னால் கூடிக் கொடி பிடிக்கத் தயாராக வேண்டும்...

மக்களவை , உலகத்தமிழ் பேரவை , நாடு கடந்த தமிழீழ அரசு , நாம் தமிழர் இயக்கம் என்று நீண்டிருக்கும் தமிழ்த்தேசிய சகதிகள் சந்தர்ப்பத்தை தவற விடக்கூடாது என்பதே நமது கருத்து.!!