Showing posts with label கடிதம். Show all posts
Showing posts with label கடிதம். Show all posts

Thursday, February 24, 2011

பிரபல பதிவர்கள் படிக்க விரும்பாத ஒரு செய்தி.!

எல்லா செய்திகளையும் அக்குவேறாக , ஆணிவேறாக ஆராய்ந்து   பதிவெழுதும் சிலருக்கு  பிடிக்காத செய்தி ஒன்று ஒரு சில (உண்மையாகவே ஒருசில) பத்திரிக்கைகளில் மட்டும்  வந்திருக்கிறது..


நாளொரு மேனியும் ,பொழுதொரு வண்ணமும் கருணாநிதியையும் , அவர்தம் அரசையும் குறைகூறிப் பொழுது போக்குபவர்களுக்கும்  , உலகத்தின் சிறந்த முதல்வர் நரேந்திர மோடி என்று பில்ட் அப் காட்டுபவர்களுக்கும் பதில் சொல்லும் அந்தச் செய்திதான் என்ன?

பிரபல வட  இந்திய  ஆங்கிலத் தொலைக்காட்சியான சி.என்.என். ஐ.பி.என் வழங்கும் இந்தியாவின் சிறந்த மாநிலம் ( CNN-IBN's Diamond states award ) விருதினை தமிழகம் பெற்ற செய்திதான் அது.


ஒட்டுமொத்த விருதினை தமிழகம் பெற்றதோடு மக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த மாநிலத்துக்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது. 



இதுபற்றிய செய்தி.
சென்னை: சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியின், சிறந்த இந்திய மாநிலத்திற்கான வைர மாநில விருது தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது. இந்த விருதை துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சி.என்.என்.-ஐ.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம், 2008ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களைத் தேர்வு செய்து, அம்மாநிலங்களுக்கு வைர மாநில விருதுகள் வழங்கி வருகிறது.

2010ஆம் ஆண்டிற்கு 9 பிரிவுகளின் கீழ் வைர மாநில விருதுகளும், சிறப்பு விருதுகளாக இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம், சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில், தமிழ்நாடு-இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற சிறப்பு விருதினையும்; குடிமக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த மாநிலத்திற்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது.

சி.என்.என்.-ஐ.பி.என். செய்தி நிறுவனம் சார்பில் 23.2.2011 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற சிறப்புமிகு விழாவில், இந்த விருதுகளை குடியரசுத் துணைத்தலைவர் அமீத் அன்சாரி அவர்கள், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம் வழங்கியதுடன், முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்குத் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவிக்குமாறும் கூறினார்.

சி.என்.என்.-ஐ.பி.என். செய்தி நிறுவனம் வழங்கிய இந்த விருதுகளை -முதல்வர் கருணாநிதியிடம் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காண்பித்தார்.

இந்நிகழ்வின்போது, நிதியமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி, உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, உணவு அமைச்சர் எ.வ.வேலு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகளுக்கான நீதிபதிகள் யார்...? தேர்வு செய்த முறையென்ன?

The selection process for ‘IBN7 Diamond States Awards 2011’ was a credible multi-pronged approach involving secondary data from authentic sources and primary data from a nationwide research exercise conducted by Nielsen, the research partner for the awards. KPMG, the independent Knowledge Partner managed the process, methodology and the data for arriving at the best states for the various categories of the awards.

The list of parameters in each category were evaluated by the best journalistic brains in the country from IBN18 Network Editorial Board & the Outlook Editorial Board comprising of Raghav Bahl, Rajdeep Sardesai, Ashutosh, Vinod Mehta & Neelabh Mishra. A five member jury comprising well-known personalities drawn by different walks of life, deliberated on the categories, criteria and parameters to finalize the framework of selection and ranking of states across the different categories.

The Jury included eminent citizens like Dr. Bimal Jalan – Former RBI Governor & Chairman of the Jury, Mr. M Damodaran – Former Chairman SEBI, Dr. Bakul H Dholaki - Former Director IIM-A, Mr. TSR Subramanium – Ex- Cabinat Secretary, Govt of India, Dr. Shaibal Gupta – Secretary Asian Development Research Institute.

At the occasion, Rajdeep Sardesai, Editor-in-Chief, IBN18 Network said, “IBN7 Diamond States Awards celebrate excellence in human and social development among Indian states. They truly signify the diamond standard for good governance in India. These winners have been arrived at through a rigorous and credible evaluation process.”

Ashutosh, Managing Editor, IBN7 added, “We congratulate the states, on this wonderful acknowledgement of their work. Their story illustrates not only the Indian dream but also their mission to improve the human and social standards of the country.”

ALCHEMIST Group, one of India’s fastest growing publicly traded Conglomerates with interests in Food Processing, Hotels & Resorts, Restaurants, Road Technologies and Healthcare is the presenting sponsor for the awards.
முழுச்செய்திக்கு இணைப்பினை அழுத்தவும்!



Winners of IBN7 Diamond States Awards 2011
Category Best Big State Best Small State
Citizen Security Tamil Nadu Sikkim
Core Infrastructure Gujarat Delhi
Education Kerala Himachal Pradesh
Employment Andhra Pradesh Mizoram
Environment N/A Jammu & Kashmir
Healthcare Kerala Goa
Poverty Reduction Chhattisgarh Himachal Pradesh
Water and Sanitation Tamil Nadu Tripura
Women Empowerment Tamil Nadu Nagaland 

Wednesday, June 02, 2010

பதிவுலகச் சண்டையும், குழாயடிச் சண்டையும்

பதிவுலகத்தில் சண்டை போடுபவர்கள் , குழாயடிச் சண்டையைப் பார்த்து முகம் திருப்பிப் போவார்கள்..

குழாயடிச் சண்டையில் வாயில் கேட்கக் கூசும் வார்த்தைகளைப் பேசுவது அனேகமாக பெண்கள்...இங்கே சில ஆண்கள்....

குழாயடிச் சண்டை சிலசமயம் அடிதடியில் முடிவதுண்டு....அனேகமாக அது முடியிழுப்பு போராட்டமாகவே இருக்கும்.......இங்கேயும் அடிதடிகள் அனேகம் உண்டு...

ஆனால் குழாயடிச் சண்டையில் சண்டை போடும் இருவரையும் பலர் விலக்குவார்கள் அல்லது விலக்கவாவது முயல்வார்கள்... ஆனால் பதிவுலகில் , சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாய் இருக்கும் போது பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் அவரவர் அவரவருக்கு தேவையான வாக்கில் ஆதரவும் , எதிர்ப்பும் தெரிவித்து அரசியல்வாதிகளாகி விடுவார்கள்.

சமயத்தில் பதிவுகள் எழுதி , ஆறிப்போயிருக்கும் ரணத்தை ( இதோ இந்தப் பதிவு போலவேதான்...) கிளறிக் காயப்படுத்துவார்கள்......

ரோட்டில் , நாட்டில் , திருமணத்தில் , வீட்டில் , அலுவலகத்தில் , கோவிலில் , அரசியற் கட்சிகளில் மற்றுமெல்லா இடங்களிலும் நடக்கும் நிகழ்வுகளிலான ஆணாதிக்கம் பற்றி கருத்தேதும் எழுதாத எல்லாப் பதிவர்களும் ஆணாதிக்கத்தை வேரறுக்க வந்த தேவதூதர்களாக தம்மைக் காட்டிக் கொள்ள நல்லதொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது....விடுவானேன்....???  எழுதிக்கிளப்புங்கள்..உங்கள் வார்த்தைகளின் வீச்சில் பதிவுலக ஆணாதிக்கம் பட்டுப் போய்விடும்...அட்லீஸ்ட் பதிவுலக ஆணாதிக்கமாவது......

புஷ்பா தங்கதுரை தெரியுமா உங்களுக்கு? சற்றேறக்குறைய "சரோஜா" தேவி புத்தகங்களையொற்றிய கதைகளை எழுதிக்குவித்தவர் அவர்.....அதையும் மீறி  குருவையும் மிஞ்சின சிஷ்யனாகிவிட்ட ஒருவருக்கு ஆதரவு கொடுக்கவும் ஆளிருக்கிறது என்றால் "நித்யானாந்தாவையும் " , பிரேமானந்தாவையும் மட்டுமே நித்தம் நித்தம் வைது இங்கே பதிவுகள் இடுவதன் அர்த்தம் தான் என்ன? 

உங்களுக்குப் பொழுது போகவில்லையென்றால் வாசகர்களின் நேரத்தைக் கொலவதற்கான சுதந்திரத்தை உங்களுக்கு யார் கொடுத்தார்கள்??

பெரியாரியத்தையொட்டிய , கம்யூனிசத்தையொட்டிய , பெண்ணுரிமையொட்டிய , சாதிப்பூசலையொட்டிய இன்னும் சமுதாயத்திற்கான அடிப்படைப் பிரச்சினைகளையொட்டிய விவாதங்கள் இங்கே இதுபோன்ற பலப்பல பதிவுகளாய் எழுந்திருக்குமானால் அது ஆரோக்கியம்......ஆனால் , இது வீண் விவாதம்...வெட்டிப்பேச்சு விழலுக்கிரைத்த நீர்.......

உங்க டைம் வேஸ்ட்டு , எங்க டைம் வேஸ்ட்டு

அந்தப் பதிவை ஆணாதிக்க வாதி ஒருவரே எழுதியிருக்கட்டும்....அவரே மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் என்று சொன்ன பிறகும் அதைக் குத்திக்கிளறுவது என்ன தான் நியாயம்??


இதையெல்லாம் படிக்கும் போது ஒரு வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது..

"யோவ்....போய் புள்ளை குட்டிங்களைப் படிக்க வையுங்கய்யா..."

ஆனால் , உண்மையைச் சொல்லப்போனால் பெரியவர்களான நாம் தான் வாழ்வில் படிக்க வேண்டியவை ஏராளம் இருக்கிறது....

நன்றி.......திருந்துவோம்....இல்லாவிட்டால்
நாம்         வருந்துவோம்.... இப்போதில்லாவிட்டாலும் எப்போதாவது...

Friday, May 07, 2010

"நாம் தமிழர்" இணையத்தள நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்...!

அன்புக்குரிய "நாம் தமிழர்" இணையத்தள நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

ஆயிற்று , புதுமாத்தளன் / முள்ளிவாய்க்கால் கொலைக்கள நிகழ்வுகள் நடந்து ஒருவருட நினைவிற்கு இன்னும் சில நாட்களே மீதமுள்ளது. உலகெல்லாம் எழுந்த பெரெழுச்சி தமிழகத்தில் இல்லையே என்ற வருத்தம் மிகுந்த போது "தனிச்" சூரியனாய் எமக்காய்ப் பொங்கியெழுந்து போர்க்களமென்ற சிறைக்களம் சென்றவர் "சீமான்".

உணர்வு பொங்கும் பேச்சால் உலகத்தமிழர்களைக் கட்டிப்போடும் ஆற்றல் மிகுந்தவர் அவர். அன்னார் தொடங்கப்போகும் "நாம் தமிழர்" என்ற அரசியல் கட்சியை முழு மனதோடு "ழகரம்" வரவேற்கிறது. அதை , அவ்வியக்கத்தை உரிய இளைஞர்களிடம் கொண்டு செல்லும் பாரிய பணியையும் "ழகரம்" செய்யும்.

அத்தகைய அர்ப்பணிப்புள்ள ஒரு இயக்கத்தின் "அதிகாரப்பூர்வ" இணையதளமான www.naamtamilar.org நிர்வாகிகளுக்கு நாம் விடுக்கும் தாழ்மையான வேண்டுகோள் இது.


நாம் தமிழர் இயக்கம் உலகளாவிய முறையில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது என்பதை அறிவீர்கள்.......குறிப்பாக , புலம் பெயர் தமிழர்கள் , நாம் தமிழர் இயக்கத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். அத்தகு சூழலில் "நாம் தமிழர்" அதிகாரப்பூர்வ வலைத்தள செயல்பாடு மிக அவசியமானதாகிறது.

ஆனால் , எப்போதாவது தரமேற்றப்படும் செய்திகள் மட்டுமே வலம் வந்து கொண்டிருக்கின்றன அத்தளத்தில்.

உதாரணத்திற்கு , இந்தச்செய்தி (சீமானின் செய்தியாளர் சந்திப்பு ) 6 ஆம் தேதி வந்திருக்கிறது. ஆனால் செய்தியாளர் சந்திப்பில் நடந்த நிக்ழவுகள் பற்றி இன்று இப்பதிவு வெளியாகும் வரையிலும் எந்தத் தகவலும் இல்லை...  (பதிவிட்ட திகதி : 08 , மே , 2010 இந்திய நேரம் காலை 11.15 .)


நாம் தமிழர் இயக்கமும் , அதன் செயல்பாடுகளும் வெகுஜன பத்திரிக்கைகளால் புறக்கணிக்கப்படுகிற ஒரு சூழலில் "இணையச் செயல்பாடு " இன்னும் வலுவாக இருப்பின் மட்டுமே 'நாம் தமிழர்" இயக்கத்தின் இருப்பும் , செயல்பாடும் இன்னும் வலுப்பெறும் , வலுவுறும்.!!!!


அடுத்து , புகைப்படமும் , கருத்தும் என்ற தலைப்பில் , சற்றும் ஒவ்வாத கருத்து வந்திருக்கிறது. அது சரியான கருத்தோ , தவறோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அதுபோன்ற பதிவுகள் வருவது தவிர்க்கத்தக்கது. 



தோன்றியதைச் சொல்லியாகிவிட்டது. இனி செய்வதும் செய்யாததும் உங்கள் விருப்பம். 

"நாம் தமிழர்" ஆல் போல் தளைத்து , அருகு போல் வேரூன்றி வாழ்ந்திட வாழ்த்தும்....

தோழமையுடன்,
"ழகரம்"