Wednesday, February 24, 2010

ஜய்ய்ய்ஞ் ஜக்க்க்க்க்க்க்க்!

பொதுவாகவே , இந்திய அரசியலில் , குறிப்பாக தமிழக அரசியலில் ஆளுங்கட்சியோ , எதிர்க்கட்சியோ , எதிரிக்கட்சியோ தத்தமது கூட்டணித்தாளங்களுக்கு ஏற்பவே விமர்சனங்களை வைப்பது புதிய காட்சியல்ல. அதையே மீண்டும் உணர்த்துகிறது நேற்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்...!


தமிழகத்தை பொறுத்தவரை இந்த ரயில்வே பட்ஜெட் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக உள்ளது' என, ரயில்வே பட்ஜெட் குறித்து அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்

ரயில்வே பட்ஜெட் குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை வெறும் வணிகக் கண்ணோட்டத்துடன் மட்டும் பார்க்காது, ஒரு சமூகப் பார்வையோடு கருத வேண்டும் என்ற கொள்கை கோட்பாட்டை கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த அமைச்சர் மம்தா பானர்ஜி, வரும் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டிலும், இக்கோட்பாட்டை மீண்டும் வலியுறுத்தி, நாடு முழுவதும் புது ரயில்வே பாதைகளையும், ஏற்கனவே இருக்கும் பாதைகளுக்கு இரண்டாவது பாதை அமைக்க அறிவித்து இருப்பதை பாராட்டுகிறேன் என்று பாராட்டியிருக்கிறார்.

ஆனால் உண்மை நிலை என்ன?

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கென்று உருப்படியான திட்டங்கள் எதுவுமே இல்லாத நிலை காணப்படுவது வெள்ளிடை மலை.


Railway Minister Mamata Banerjee announced that 54 new trains will be introduced.

Here is a list of the trains with their origin and destination points:
Tanakpur - Jauljobi
Bilaspur - Leh
Amethi - Shahganj via Sultanpur
Bahadurgarh - Jhajhar
Ajmer - Kota
Vyas - Kapurthala
Guwahati - Mumbai Karambhumi train
New Jalpaiguri - Amritsar Karambhumi train
Janambhumi trains will run once a week
Ahmedabad - Udhampur Janambhumi train
16 Bharat Tirth train between Himachal - Kanyakumari
Indore - Mumbai New Duranto
Sultanpur - Mumbai
Sultanpur - Ajmer
Kolkotta - Ajmer
Hardwar - Mumbai
Sambhalpur - Hawarh
Gwalior - Pune
Ahmedabad - Jodhpur
Kolkotta - Darbhanga
Gwalior - Chindwara
Hawarh - Shirdi
Trains will be named after great leaders
First rail line in Andaman and Nicobar
to connect Port Blair to Diglipur, farthest town of North Andaman


இதில் தமிழகத்துக்கான உருப்படியான திட்டம் எது என்று தெரியவில்லை.....ஆனால் , ஆளுங்கட்சியும் , எதிர்க்கட்சியும் விழுந்து விழுந்து பாராட்டுகின்றன. ஆளுங்கட்சிக்கோ , காங்கிரஸை தன் பக்கமே வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்....எதிர்க்கட்சிக்கோ காங்கிரஸை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்ற கட்டாயம். !!! இதில் தமிழகத்தின் நலனைப் பற்றி கவலைப்படுவதற்கு நேரமில்லை....!


மேற்கு வங்கத்தைப் பற்றி மட்டுமே பேசுகின்ற இந்த ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கான எந்தவித உருப்படியான திட்டங்களும் இல்லை....ஏற்கனவே கடந்த நிதியாண்டில் பேசப்பட்ட திட்டங்களையே மேல்பூச்சு பூசி அறிவித்திருப்பதை உச்சத்தில் வைத்துக்கொண்டாடும் தமிழக முதல்வர் அவர்கள் " தனது மகனும் , இராசனயத்துரை அமைச்சருமான திரு.அழகிரி அவர்களின் கோரிக்கையான "உர விலை " உயர்வை ரத்து செய்ய வேண்டும் " என்பதை புறந்தள்ளி விட்டு மத்திய அரசாங்கம் செயல்படுவதை மறந்துவிட்டாரா எனத்தெரியவில்லை.!

ஒரு துறையின் அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்ள வில்லையெனில் அந்த அமைச்சர் பதவிதான் எதற்கு? பன்னாட்டுக்கம்பெனிகள் உயர்வு பெற நம் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கத்துணிகிற இந்த நடுவண் அரசு எப்படி மக்களுக்கான அரசாக இருக்கமுடியும்?

இப்படியான கேள்விகள் , இந்திய அரசியலில் , ஜனநாயகத்தில் எழப்போவதே இல்லை..............இது போன்ற ஜய்ய்ய்ய்ய்ய்ய்ஞ்......ஜக்க்க்க்க்க்க்க்குகள் இருக்கும் வரை....!

சுயநலப்பேய்களடா  தம்பி இவர்கள்
சுக்குக்கும் உதவாராடா தம்பி...........

பன்னாட்டு முதலாளிகள் தான் இவர்க்கு
படியளந்து கொடுப்பாரடா தம்பி.........

பலபேரை ஏமாற்றி நீ பலகோடி
பணம் பெற்றால் அரசுதான் உனதாகும்....
பாவம் ஏழை விவசாயி பிணமாவான்.
உண்ணவோ உணவுமில்லை.....
உடுத்தவோ உடையுமில்லை...
ஒதுங்கவோ கூரையில்லை.....ஆனால்
இந்தியன் நிலவுக்குப் போறானடா....

புண்ணாக்கு அரசியல்வாதிகளால் நாம்
புவியாள்வோமென்பது பொல்லாத புரளியடா....

தம்பி...........

சுயநலப்பேய்களடா  தம்பி இவர்கள்
சுக்குக்கும் உதவாராடா தம்பி...........

Friday, February 19, 2010

இந்தியனாக இருப்பதில் உள்ள சிரமங்கள்.!

எல்லோரையும் போலவே , உணர்வின்றி , சுரத்தின்றி , செவியின்றி , அறிவின்றி இந்தியனாகவே இருந்திட ஆசைதான். ஆனால் என்ன செய்வது? இந்தியனாக இருப்பதிலுள்ள சிரமங்கள் அதிகரித்துக்கொண்டே போகத்தான் செய்கின்றன. அதற்குக் காரணம் நாமில்லை என்பதை எல்லா இந்தியர்களும் அறியவே செய்வார்கள்.!

சில தினங்களுக்கு முன்னால் , இந்தியர்களாகவே ஹைதராபாத் சென்று "பெல்" நிறுவனத் தேர்வினை எழுதி விட்டு வந்த தமிழக மாணவர்களைக் காட்டுத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள் ஆந்திர மாணவர்கள். அங்கே கைகலப்பில் ஈடுப்பட்டது ஆந்திரமும் , தமிழகமும் -இதில் இந்தியன் எங்கே வந்திருக்கிறது. 

மும்பையில் ரயில்வே தேர்வு எழுத வந்த பீகார் , உ.பி. மாநிலத்தாரை மகாராஷ்டிராவின் நவ் நிர்மாண் சேனாவினர் தாக்கிய போது வெகுண்டெழுந்த இந்திய மீடியாக்கள் , பத்திச் செய்தியாகக் கூட ஆந்திராவில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதைச் செய்தியாக்க வில்லை. நாம் இந்தியர்களாகவே இருக்கிறோம். அவர்கள் நம்மை இந்தியர்களாகவே பார்க்கவில்லை போலும்.!

தீவீரவாதத்திற்கெதிராகவே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்மக்கள் புலிகளை அங்கீகரிக்கவில்லை என்று சொன்ன இந்தியர்கள் - குறிப்பாக சொக்கத்தங்கம் சோனியா காந்தியின் சேலையைப் பிடித்து அரசியல் பாடம் படித்துக்கொண்டிருந்த பிதாமகர்கள் சொன்னார்கள். ஆனால் இன்று "யாழ்ப்பாண தமிழர்கள் " என்ன சொல்கிறார்கள் என்பதை ஒரு இந்திய ஏடு எடுத்துப் போட்டிருக்கிறது பாருங்கள்.....!!! அதை அப்படியே கீழே தருகிறேன். 
A Jaffna man blames India for the defeat of the LTTE. “India had failed to stop the last leg of the war between the Lankan forces and the LTTE and prevent the killing of thousands of Tamil civilians,” they complained.Tamil Nadu Chief Minister M Karunanidhi only enacted a “drama” in support of the Tamils here, they sneered.

source : The New Indian Express  

தமிழில் அதை மொழி பெயர்த்திருக்கிறேன். அது கீழே.



யாழ்ப்பாண தமிழர் ஒருவர் புலிகளின் தோல்விக்கு இந்தியாவையே குற்றஞ்சாட்டுகிறார். இறுதிக்கட்ட போரை நிறுத்துவதற்கு இந்தியா தவறிவிட்டது , அதன் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழிப்பதைத் தடுப்பதிலுமிருந்து தவறிவிட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர்களை ஆதரிப்பது போல நாடகம் மட்டுமே நடாத்திக்கொண்டிருந்தார் என்றும் குற்றம் சாட்டுகிறார் என்று அந்த ஏடு பிரசுரித்திருக்கிறது.


அத்துடன் , யாழ்ப்பாண மக்களின் பொதுப்படையான கருத்தாக இருப்பதாக இன்னொரு பத்தியையும் பிரசுரித்திருக்கிறது.

The businessmen and others Express spoke to made it clear that they had fraternal feelings towards Indians. The issue was with the government in Delhi and the ruling party in Tamil Nadu, they stressed. The general feeling here is that Congress leader Sonia Gandhi had punished people for a crime they did not commit.
source :The New Indian Express , Date 18th Feb 2010

இந்தியன் எக்ஸ்பிரஸ் பேசிய வெகுபல யாழ்ப்பாண வாசிகளும் இந்தியாவின் மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள். இந்திய அரசாங்கத்தின் மீதும் , தமிழக ஆளுங்கட்சியின் மீதுமே அவர்கள் வெகுவாக குற்றஞ்ச்சாட்டினார்கள். தாங்கள் செய்யாத ஒரு குற்றத்திற்காக இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைவியான சோனியா காந்தி அவர்கள் தம்மைத் தண்டித்து விட்டதாக வேதனைப் பட்டார்கள் என்றும் அந்த ஏடு எழுதியிருக்கிறது. 

தமிழ்த்தேசியவாதிகள் கதறியபோதும் , தமிழினம் அழிகிறது என்று ஓலமிட்ட போதும் வாய்மூடி மெளனியாக இருந்த இந்திய அரசினையும் , இந்திய அரசிற்குக் கப்பம் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் குறுநில மன்னனையொத்த தமிழக அரசினையும் , எவ்வாறு எமக்கான அரசாக ஏற்றுக்கொள்ள முடியும் சொல்லுங்கள். எந்த அடிப்படையில் நாம் இந்தியர்களாக இருப்பதில் பெருமை கொள்ள முடியும் சொல்லுங்கள்.

தமிழர்களின் மன வேதனையை தீர்க்கத்தவறிய மன்னனை மக்கள் இரசிப்பதிலும் , போற்றுவதிலும் நியாயம் ஏதும் உண்டா சொல்லுங்கள்... அப்படி போற்றுவதிலிருந்து மக்கள் தவறுகின்ற போது மனவேதனையைத் தீர்க்கத் தவறியது மன்னனின் தவறுதானேயொழிய மக்களின் தவறாக முடியுமா?

ராஜிவ்காந்தி என்ற ஒரு உயிருக்காக ஈழத் தமிழர்களை கொன்றொழித்தீர்கள். இந்திராகாந்தியைக் கொன்றொழித்தவனை இன்னமும் சீக்கியர்கள் தேசபக்தனாக போற்றும் போது அமைதியாக இருப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும் என்ற இளந்தமிழர் இயக்கத்தினரின் நேர்மையான கேள்விக்கு பதில் சொல்வதற்கு துப்பிருக்கிறதா இந்திய காங்கிரஸ் காரர்களிடம்? 

இந்திராகாந்தியைக் கொன்ற பியாந்த் சிங்கை தியாகியாக வருணித்து பொற்கோவிலில் புகைப்படத்தை வைத்து சீக்கியர்கள் வழிபடுவதை ஆதாரத்துடன் நிருபித்திருக்கிறார்கள் இளந்தமிழர் இயக்கத்தினர். இணைப்பு இதோ இங்கே.!

அதைப் பற்றி கேட்டதற்கு , பஞ்சாப் பொற்கோயிலில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. தமிழக காங்கிரஸ்காரர்கள் தமிழகப் பிரச்னையில் மட்டும்தான் தலையிட முடியும். உலகில்(!) நடக்கும் பிரச்னைகளில் எங்களால் தலையிட முடியாது என்று பஜனை பாடியிருக்கிறார் இந்திய தேசிய வியாதி முத்திப்போனவர்களில் மூத்தவரான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.  ( ஆதாரம் : குமுதம் ரிப்போர்ட்டர் )
பஞ்சாப் என்பது உலகமானால் , அதில் தலையிட மாட்டோம் என்றால் ஏன் இலங்கைக்கு மட்டும் ஆயுதம் கொடுத்து ஈழத்தமிழர்களைக் கொன்றீர்கள் என்று கேட்டால் , ஆயுதமெல்லாம் கொடுக்கவில்லை , சும்மா ரேடார் மட்டுமே கொடுத்தோம் என்றீர்கள் . பிறகு இலங்கை இராணுவச் சாயம் பூசி அனுப்பின இரண்டு போர்க்கப்பல்களின் குட்டு வெளிப்பட்டது. பொன்சேகாவிற்கும் - இராஜபக்சேவும் பிரச்சினை என்றவுடன் கடல் தாண்டிப் போய் பஞ்சாயத்து பண்ணி வைத்தீர்கள்.

இப்படி இந்தியர்களாக நாங்கள் இருப்பதில் ஏகப்பட்ட சிரமங்களை நீங்களே உருவாக்கி விட்டு , தேசப்பற்றுடன் பேசுங்கள் என்றால் எங்கிருந்து வரும் தேசப்பற்று. ? 
அதென்ன சுக்கா , மிளகா - கடையில் போய் கால் கிலோ வாங்கிவர....? இன்னமும் கூட எல்லோரையும் போலவே , உணர்வின்றி , சுரத்தின்றி , செவியின்றி , அறிவின்றி இந்தியனாகவே இருந்திட ஆசைதான்...
அப்படியாவது இருக்க விடுவார்களா இந்த இந்திய தேசிய வியாதிகள்?

இப்படிக்கு,
இன்னமும் ஒரு இந்தியன். !

Tuesday, February 16, 2010

ஆறப்போடுவதில் ஆஸ்கார் வாங்கும் இந்திய அரசு.!

அன்று நாம் கதறினோம். கேட்கத் தயாராய் இல்லை இந்திய நடுவண் அரசு.

முத்துக்குமார் தொடங்கி இரட்டை இலக்கங்களை தமிழுக்காய் தன்னை மாய்த்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை தொட்டபிறகும் வாய்திறந்து எதுவுமே பேசாமல் தமிழ்நாட்டிற்கும் , தமக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போலவே பேசா மடந்தையாய் , தொலைநோக்கின்றி , அனேக தமிழர்களுக்குள் தாம் இந்தியர் என்னும் உணர்வையே கொஞ்சம் வெறுக்க/ மறக்கத் தூண்டியது இந்திய நடுவண் அரசின் செய்கைகள்.!

அதன் பின்னர் , கச்சத் தீவினையொட்டிய தமிழக அரசின் / தமிழக எதிர்க்கட்சிகளின் கருத்தினை முற்றிலும் புறந்தள்ளி கச்சத்தீவு முடிந்து போன கதை என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.

கேரள முல்லைப் பெரியார் பிரச்சினையில் கூட அனேக குழப்பங்கள்...கேரளாவிற்கு புது அணை கட்டும் ஆய்விற்கான அனுமதியினை வழங்கி முற்றிலும் கேரளாவிற்குச் சார்பான ஒரு முடிவினை எடுத்தார் ஜெய்ராம் ரமேஷ். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக ஒரு பொதுக்கூட்டம் மதுரையில் நடத்த முயன்ற போது , ஸ்பெக்ட்ரம் விசாரணையை கையிலெடுத்து திமுகவை மிரட்டிப் பணிய வைத்த சாதனையையும் செய்தது இந்திய நடுவண் அரசு.

தெலுங்கானா பிரச்சினையில் இந்திய நடுவண் அரசின் சொதப்பல் ஊரறிந்ததே. முதலில் தெலுங்கானாவை அங்கீகரிப்பதாகச் சொல்லிவிட்டு , பின்பு பின்வாங்கி , விசாரணைக் கமிஷன் அமைப்பதாகச் சொல்லி பிரச்சினையை ஆறப்போட்டு சூடு தணிக்கும் அபார வித்தையில் இறங்கி இருக்கிறது இந்திய அரசு. 

ராஜ் தாக்கரே மராட்டியம் மராட்டியர்களுக்கே என்று முழங்கி வந்த போதுஞ் சரி , மகாராஷ்டிரத்தில் மராட்டியர்களுக்கு மட்டுமே வேலை என்று வடமாநிலக் காரர்களைத் தாக்கிய போதும் சரி கொர் என்று குறட்டைவிட்டுத் தூங்கி விட்டு இன்று பால் தாக்கரே ஷாருக்கை விமர்சித்தவுடன் பொங்கியெழுந்த புதுவித்தையையும் செய்து காட்டியது இந்திய அரசு. 

இந்தியப்படைகளில் அதிக சதவீதம் பேர் பீகார் , உ.பிக் காரர்கள் தான் ...அதனால் இந்தியாவைக் காப்பவர்கள் அவர்கள்தான் என்று புதுமொழி சொன்னார் இந்திய நடுவண் அரசின் மவுத் பீஸான இராகுல் காந்தி.....இது அடுத்த மாநிலக்காரர்களை அவமானப்படுத்தும் செயல் என்ற அடிப்படை கூடப் புரியாமல்.!

கூர்க்காலாந்து , விதர்பா என்று தனித்தனி மாநிலக் கோரிக்கைகள் எழுவது எதனால் ? அதன் அடிப்படை என்ன என்று சிந்தித்து ஆராய வேண்டிய நடுவண் அரசோ எதைப்பற்றியும் சிந்திக்க மறுக்கிறது.....எதைப்பற்றியும் கருத்துச் சொல்ல தயங்குகிறது. 

முதுகெலும்பற்ற வகையில் எல்லா முடிவுகளையும் ஜவ்வு இழுப்பு இழுத்து மக்களைச் சோர்வடையச் செய்கிறது. அதன் மூலம் ஒருமைப்பாட்டுணர்வை குறைக்கச் செய்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயரிய தத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே இந்திய அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் நிலைகுலையச் செய்கின்றன.

இந்திய மாநிலங்கள் தனித்தனி இனங்கள் , தனித்தனி கலாச்சாரம் கொண்டவை , அவர்களை இன்றைய அளவில் பிணைப்பது என்பது இந்திய நடுவண் அரசு மட்டுமே....ஏதேனும் பிணக்குகள் ஏற்படின் அதனை உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டியதும் இந்திய நடுவண் அரசுதான்.

ஆனால் , தன் கடமையைச் சரிவரச் செய்கிறதா அது? எண்ணிப்பார்க்கவேண்டும்.

ஆனால் , கருத்து வேறுபாடற்ற முறையில் , மக்களுக்கான குரலாக , பழங்குடியின மக்களின் போராட்டங்களை , போராட்டங்களுக்கான விழுமியங்களை ஆராயாமலும் கிடப்பில் போட்டுக்கொண்டிருக்கிறது.


எல்லாவற்றையும் ஆறப்போட்டு காரியம் சாதிக்க நினைப்பது என்கிற நரசிம்மராவ் பார்முலா தான் , டிசம்பர் ஆறாம் தேதி பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்திற்கு அடிப்படை என்பதுவும் , இந்து - முஸ்லீம் மக்களிடையே தீராப் பிணக்கை ஏற்படுத்திய அச்சம்பவமே இன்றைய நிறைய தீவிரவாதச் சம்பவங்களூக்கும் காரணம் என்பதுவும் யாராலும் மறைக்க முடியாதது. 

காவிரி , முல்லைப் பெரியார் , தெலுங்கானா என்று தொடங்கி நேற்று நடந்த மராட்டியப் பிரச்சினை வரைக்கும் எதற்குமே சரியான முடிவொன்றை கண்டு பிடிக்காமல் ஆட்சிக்காலத்தை தள்ளிக்கொண்டு போவதிலும் , கூட்டணித் தேரை வடம் பிடித்துப் போவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகிறதோ இந்திய நடுவண் அரசு என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை...!

Friday, February 12, 2010

இலங்கை : ஐ.நா போர்க்குற்ற விசாரணைகளை நடத்துகிறது?

கடந்த மே 18 ல் உரிமைக்குரலெழுப்பி ஓங்கி ஒலித்த தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்தது.சுமார் 7000 அப்பாவித் தமிழர்கள் வரை இறந்திருக்கலாம் என்று ஐ.நா சபையும் , 20000 பேர் இறுதி சில நாட்களில் பலியானதாக லண்டன் டைம்ஸ் நாளிதழும் , ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் , இறுதி யுத்தத்தில் 40000 பேர் வரை மடிந்திருக்கலாம் என்று அச்சம் தெரிவித்திருக்கிறார். 


தற்போது உலகத் தமிழர்களின் ஓயாத ஆசையாகிய இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை வருகிற மார்ச் மாதத்தில் நடைபெறலாம் என்ற செய்தியை யாழ்ப்பாணத்திலிருந்து வரும் வலம்புரி நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. 

முழுச்செய்தி பின்வருமாறு...

வன்னிப் போர்க்குற்றம் ஐ.நா. விசாரணை நடத்தும்


[
செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-02-12 06:55:53| யாழ்ப்பாணம்]

இலங்கை அரசாங்கம் வன்னியில் மேற் கொண்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐக் கிய நாடுகள் சபையின் விசாரணை எதிர் வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேர வை இந்த விசாரணையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தடுக்கும் நோக்கிலேயே மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா சென்றுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.சனல் 4 தொலைக்காட்சி வெளி யிட்ட காணொளி மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் நேரடி சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த விசாரணையின் போது இலங்கை அரசாங்கம் போர்க்குற் றங்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் பாரிய அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என் றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.இதேவேளை இந்த விசாரணை யில் சாட்சியமளிப்பதற்கு முன்னாள் இராணுத் தளபதி சரத் பொன்சேகா இணங்கியிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

சரத் பொன்சேகா கைது செய்யப் பட்டுள்ள நிலையில் இறுதி யுத்தத்தில் பங்கெடுத்த வேறு இராணுவ அதிகாரிகளை இந்த விசாரணையின் போது பயன்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை முனைப்புக் காட்டிவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இருப்பினும் தகவல்கள் கசிந்தததற்கான மூலத்தை அப்பத்திரிக்கை வெளியிடவில்லை.....எவ்வளவு  தூரம் அதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதுவும் இன்னும் தெளிவாகவில்லை....

Monday, February 08, 2010

"பொன்சேகா கைது!"....காலம் கனிகிறது...!

இலங்கை இராணுவத்தால் நேற்று நடுநிசியில் முன்னாள் இராணுவத் தலைமையதிகாரியும் , கடந்த இலங்கை பொதுத்தேர்தலில் தமிழர் பகுதிகளில் வென்றவருமான திரு.பொன்சேகா அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதுவும் எப்போது?

நேற்றைய மதியம் திரு.பொன்சேகா அவர்கள் போர்க்குற்றம் செய்தவர்கள் தப்பிக்கக் கூடாது , விடமாட்டேன் என்று வெளிப்படையாகக் கூறிய பிறகு.
தமிழர்கள் "பொன்சேகா" வின் கைதுக்கு வருந்துமளவிற்கு எதுவும் நடந்துவிடவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்த வேட்பாளர் அவர் என்பதைத் தவிர வேறொன்றும் பந்தமோ , பாசமோ தமிழர் தரப்பிற்கும் முன்னாள் ஜெனரலுக்கும் இல்லை என்பதே அதற்கான காரணம்.

பொன்சேகா ஒன்றும் தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசியலுக்கு வந்தவரல்லர். தமது பதவியாசையால் அரசியலுக்கு வந்து , அப்பதவியைப் பெற தமிழர் உதவி தேவை என்றவொரு சூழலில் அதைத் தருகிறேன் , இதைத் தருகிறேன் என்ற ஆசை வார்த்தைகளால் தமிழர் வாக்குகளை வெல்ல முயன்றவர் என்பதைத் தாண்டி நாம் அவரது கைதுக்கு வருத்தப்பட வேண்டியதில்லை.

ஆனாலும் இதையுந்தாண்டி, நாம் வருத்தப்பட வேண்டிய ஒரு விடயம் இருக்கிறது. ஒரு அமெரிக்கக் குடிமகனான , நாடறிந்த அதிபர் வேட்பாளராக , உலக நாடுகள் உன்னித்துப் பார்த்துக்கொண்டு இருக்கிற ஜென்ரலுக்கே இந்நிலை என்றால் , வாய்பேச இயலாத தமிழ் மக்களின் கதி என்ன? , போராளிகள் என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நமது இளைஞர்களின் கதி என்ன ? என்ற விடயமே இனி நமது பாரிய கவனத்துக்கு வரவேண்டிய விடயமாகும்.

அந்த விடயத்துக்கு இலங்கைக்கு வெளியிலிருக்கும் நம்மால் என்ன செய்யவியலும் என்று ஆராய்வதே மிகவும் இயல்பானதாக இருக்க முடியும்....

பாரிய மனித உரிமை மீறல்கள் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் நடந்தது என்று நாம் மட்டுமே சொல்லிக்கொண்டிருந்த நிலை மாறி....இன்று சிங்களத் தலைமையொன்று சொல்லி இருக்கிற சேதி உலக நாடுகளைக் கண்டிப்பாக எட்டியிருப்பினும் , சீனா / ரஷ்யா / இந்தியா இவற்றின் அரவணைப்பில் இருக்கும் ராஜபக்சே கம்பெனிக்கு மேற்குலகத்தின் பத்தி எழுத்தாளர்கள் கொடுக்கும் கண்டனம் கால்காசுக்கும் பெறாது. அதையும் தாண்டி நாம் சிந்திக்க வேண்டிய வேளை வந்திருக்கிறது.

புலம்பெயர் தமிழர்களின் தணியாத போராட்டம் ஜி.எஸ்.பி சலுகை விலக்கிற்கு உதவியதென்றால் அடுத்து நாம் போக வேண்டிய களம் காமன்வெல்த் அமைப்பே......

இலங்கைத் தீவின் ராஜபக்சே கம்பெனியை மேற்குலகிலிருந்து ஐசோலேட் அல்லது தனிமைப்படுத்துவதே அதன் மூலம் பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த முயல்வதே தமிழர்கள் செய்விக்கக் கூடிய மிகச்சிறந்த இராஜதந்திரமாகும்.

அதற்கான காலம் கனிகிறது......

ஆம் , தலைவர் பிரபாகரனின் தீர்க்கதரிசனப்படி இனி இலங்கைக்கு வெளியே வாழ்கிற தமிழர்கள் தான் சுதந்திரப்போரை வழிநடத்துபவர்கள்..........

மேற்குலக வர்த்தகத்திற்கு இணையென சர்வநிச்சயமாக இலங்கையால் வெறெங்கும் வாணிபத்தை பெருக்கிக்கொள்வது இயலாது. உலகளாவிய முறையில் சீனா ஊர் ஊராகக் கூவி துணி விற்றுக்கொண்டிருக்கும் போது , இலங்கை சீனாவில் போய் துணி விற்க முடியுமா? வேறெந்த தொழில்களும் அவ்வாறே.

இலங்கைக்கு பொருளாதார ரீதியில் தடையேற்படும் போதுதான் தென்னிலங்கை மக்கள் மூன்று தசாப்தங்களாக தமிழர்கள் பட்ட வேதனையை உணர்ந்து கொள்வார்கள்.

தென்னிலங்கை மக்களுக்கான வாழ்வதாரம் பாதிக்கப்படும் போது தான் அவர்கள் அதைத் தீர்க்கும் வழி என்ன வென்பதை சிந்திக்கத் தலைப்படுவார்கள்...!!!


அவ்வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது தான் புலம்பெயர் தமிழர்களின் டாலர்கள் இலங்கை அரசுக்குத் தேவைப்படும்...அந்த டாலர்களால் மட்டும் தான் மீண்டும் குறைந்தபட்சம் சமஷ்டி என்கிற அளவிற்காவது பேச்சு நடத்த இலங்கை அரசைப் பணிய வைக்க முடியும்!!

அதுபோன்ற பொருண்மியத்தடைகள் வடகிழக்கு வாழ் தமிழ்மக்களையும் என்பதும் உண்மைதான். ...

வடகிழக்கு மக்களுக்கு பொருண்மியத் தடைகளொன்றும் புதிதல்ல. முப்பது வருடங்களாக இதையும்தாண்டிய கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள்....இனவுரிமைப் போராட்டத்திற்காக அவர்கள் இழந்தது மிகவும் அதிகம்...இனியும் இழக்க எதுவுமே இல்லை என்றாலும் அவர்கள் உணர்வை இழக்கவில்லை என்ற உண்மையத் தான் கடந்த அதிபர் தேர்தல் காட்டி நிற்கிறது.


பழியுணர்ச்சி மேலிட இக்கருத்து வைக்கப்படுகிறது என்ற சொல்லாடலும் உண்மைதான்..

இதை நாம் மறுக்கவேயில்லை. ஒரு லட்சம் மக்கள் எமது மண்ணில் கொன்றொழிக்கப்பட்ட போது நாம் சிங்களர்களீன் மீது பழியுணர்ச்சி காட்டாமல்,  பாசத்தையா பொழிவது? இருப்பினும் சிங்கள மக்கள் எமது எதிரிகளில்லை. அவர்களுக்கு சிங்கள இனவாதத்தை ஊட்டி தமிழர்களை வதைக்கத் துடிக்கும் சிங்களத் தலைமைகள் தான் நமது எதிரி...

எதிரியைப் பணிய வைக்க வேறெந்த மார்க்கமும் இல்லாத சூழலில் , தமிழர்களுக்கான தீர்வுகளைப் பெற்றெடுக்க நாம் வேறு வழிகளைச் சிந்தித்தாக வேண்டும்...
இலங்கையில் சனநாயகம் என்ற எதிர்க்கட்சிகளின் கூக்குரலில் நாமும் இணைந்து கொள்ள வேண்டும்....சனநாயகத்தை வேண்டி உலகத்தின் மனசாட்சியை உலுக்குவதன் மூலம் இலங்கையின் அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கி அதன் மூலம் போர்க்குற்ற விசாரணைகளை அவசரப்படுத்தும் நிர்பந்தங்களைச் செய்தல் வேண்டும்...

எதிர்க்கட்சிகளும், இராஜபக்சேவும் மோதிக்கொண்டு அழியட்டும்...நாம் வெறுமனே கிடப்போம் என்று நாம் வாளாவிருந்துவிட இயலாது.  எதிர்க்கட்சிகளை விட பன்மடங்கு கோபமும் , வெறுப்பும் தணியாத நெருப்பென தமிழர்கள் நெஞ்சில் எரிகிறது......!!
- கதிரவன்.