Thursday, February 24, 2011

குடும்ப ஆட்சியை வீழ்த்த கூட்டணி : பண்ரூட்டியார்..!!

அ.தி.மு.க., வுடன் கூட்டணி மக்கள் விருப்பம்: பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை: தி.முக.,வின் குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க., இடையே தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை இன்று சென்னையில் நடந்தது. சென்னையிலுள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், தே.மு.தி.க., சார்பில், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளர் சுந்தர் ராஜன், இளைஞரணி செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோரும், அ.தி.மு.க., சார்பில் ஓ. பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மாலை 5.30 முதல் 7 மணி வரை நடந்த இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் நிருபர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக தெரிவித்தார். பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் கட்சித்தலைவர் விஜயகாந்திடம் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலுக்குப்பின் அமையும் ஆட்சியில் பங்கு கேட்கும் எண்ணம் எதுவும் தே.மு.தி.க.,விடம் இல்லை என்று தெரிவித்தார். மேலும் தி.முக.,வின் குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.  நன்றி தினமலர்!


கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட சுதீஷ்....அப்பாலிக்கா பிரேமலதா மேடம் , இவுக எல்லாம் யாரு பண்ரூட்டி சார்??

கேட்கறவன் கேனையா இருந்தா எலி ஏரோப் ப்ளேன் ஓட்டுமாம்....

சுத்துங்க...சுத்துங்க...மக்கள் கேட்குற வரைக்கும் சுத்துங்க...

எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு...ஆனா இப்படி எல்லாம் ஃசோக் அடிக்கக் கூடாதப்பா...!!! இதையும் கிண்டலடிச்சி துக்ளக் பத்திரிக்கைல கேள்வி-பதில் வருமா வராதா? ?

5 comments:

bandhu said...

குடும்ப ஆட்சி எதிர்க்கரதுல தப்பில்ல. அதை இன்னொரு குடும்பம் எதிர்க்கனுமா? என்ன கொடும சார் இது!

South-Side said...

அதானே பந்து சார்!! இதக்கேக்கவெல்லாம் நாதியே இல்லையா?

Unknown said...

ஏதோ நல்லது நடந்தா சரி.

South-Side said...

ஏதோ நல்லது நடந்தா சரி.

யாருக்கு பாஸு?

calmmen said...

thats polytics


ஹிமாச்சல் பிரதேசத்தில் , சிம்லா நகருக்கு பொழுது போக்குபூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்க கோரி 10 வயது சிறுமி ஐகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக ஹிமாச்சல் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்‌ளார்.

Read more: http://karurkirukkan.blogspot.com/#ixzz1EwwzZutw