Tuesday, March 22, 2011

ஒரு தேர்தல் சவால்! ஓட்டுப்போடுங்க சார். !

அன்பு வலையுலக வாசகப் பெருமக்களுக்கு ,நீண்ட நாட்களாக எமது மனதில் அரித்துக்கொண்டேயிருக்கும் கேள்வியினை உங்கள் வாக்கெடுப்பிற்கு விடுகிறேன். தமிழ்மணம் , தமிழிஷ் இவற்றில் வாக்கே கேட்காத நான் கீழ்க்கண்ட வாக்கெடுப்பில் உங்கள் பங்கெடுப்பினையும் , அதற்கான உங்கள் கருத்தையும் அறிய விளைகிறேன். முன்கூட்டிய நன்றி!!

 

திமுகவைத் தோற்கடிக்கத் துடிப்பவர்களில் முதலிடம் பிடிப்பது யார்?

Thursday, March 17, 2011

பிரபலங்கள் ஆதரிக்கும் கட்சி!

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியல்வாதிகளும் ,  நடிகர் , நடிகைகளும் பிரபலமானவர்கள்.........பதிவுலகத்தைப் பொறுத்தவரை சில பல நடுநிலையான பதிவர்களே பிரபலங்கள்....அவர்களது நடுநிலையான அதிமுக ஆதரவு நிலைப்பாடு  வெகு பிரசித்தம்.

பத்துக்கட்டுரைகள்  எழுதினால் அதில் ஒன்பது திமுகவை எதிர்க்கும்,கலைஞரை  வசைபாடும் நடுநிலைக்கட்டுரைகளாகவே இருக்கும்..

அத்தகைய பிரபலங்கள்/ பிரபல பதிவர்கள் ஆதரிக்கும் கட்சியான அதிமுகவின் , அதன் தலைவியின் அருமையை, பெருமையை அவர்களின் வாயாலேயே கேட்பதன்  மூலம்   அவர்களின்  நிலையினை மக்கள் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கும்!

ஸ்டார்ட் மீயுசிக்.

கலைஞர் கருணாநிதியைப் போலவே ஆட்சி நடத்தும் தகுதியே இல்லாத புரட்சித் தலைவி ஜெயலலிதா, கட்சி நடத்தும் தகுதியும் தனக்கு இல்லாததை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்..!


இவர் கணிப்பில் கட்சி நடத்தும் தகுதியே இல்லாத  ஜெ....ஆட்சி நடத்தினால் எப்படி இருக்கும் என்று மக்கள் தான் சொல்லவேண்டும்!

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடுவதற்கு முன்பு வரையிலும் தமிழினத்தின், தமிழகத்தின் பொது எதிரியான கருணாநிதி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றுதான் தமிழகமே நம்பிக் கொண்டிருந்தது.

இவரது கணிப்புப்படி தமிழினத்தின் , தமிழகத்தின் பொது எதிரியை கூட்டணி சேர்ந்துதான் எதிர்க்கவேண்டுமோ? ஒருவேளை இவர் கருணாநிதியை பற்றி    சொல்பவை உண்மை எனில் மக்களே அவர்களை ஏன் புறக்கணிக்க மாட்டார்கள்?...எதற்கு கூட்டணி???


தனது கட்சிக்காரர்களை மட்டும்தான் ஜெயலலிதா இதுவரையில் மதிக்காமல் இருந்திருக்கிறார் என்றால், இப்போது கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அதேபோல் நினைத்துவிட்டார்..! ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் இதுதான் வித்தியாசம்..!
 
 
தனது வீடு திறந்த வீடு என்பதை வெளிக்காட்டி தமிழகத்தின் கலாச்சாரத்திற்கேற்றவாறு, நாகரிகமான முறையில் யார் வந்தாலும் வரவேற்கிறார் கருணாநிதி. ஆனால் ஜெயலலிதாவோ தான் சந்திர மண்டலத்தில் குடியிருப்பதைப் போல காட்டிக் கொண்டு இறுக மூடிய வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு பொது வாழ்க்கைப் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்..!

நிறைய சந்தோஷம்......அதிமுக சார்பான மறைமுக அஜெண்டா வைத்திருக்கும்   நடுநிலையாளர்களைக் கூடகருணாநிதி கவர்ந்திருக்கிறார் .
 

கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரே கொள்கையோடு ஒன்று சேரும் அனைத்துக் கட்சிக்காரர்களையும்

இங்கே தான் உண்மையான சுயரூபம் வெளிப்படுகிறது........இது மட்டுமே ஒரே கொள்கை இவர்களுக்கு....ஊழல், இலவசம் , குடும்ப ஆதிக்கம் இதுவெல்லாம் தொட்டுக்கொள்ள ஊறுகாய் மட்டுமே!



ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளார். அதனை பல்வேறு நாடுகளில் முதலீடு செய்துள்ளார் என்று நேற்று பட்டவர்த்தனமாக சி.பி.ஐ.யின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார். இதனைவிடவும் மிகக் கேவலமான ஒரு விஷயம் தமிழகத்து மக்களுக்கும், தி.மு.க.வுக்கும் இதுவரையில் நடந்ததில்லை..!

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் , தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்தாரே அதெல்லாம் கேவலக்கணக்கில்  சேர்த்தியில்லையா? பொம்மையாக ஜீரோ.பன்னீர்செல்வத்தை  இயக்கினாரே? இது கேவலமில்லையா? அப்பேர்ப்பட்ட செயலலிதாவை முதல்வராக்க தூக்கிப்பிடிக்கும் உங்கள் செயல் கேவலமில்லையா....??


ஊழல் விஷயத்தில் கருணாநிதியைவிட ஜெயலலிதாதான் சில வருடங்களுக்கு முன்புவரையிலும் முன்னணியில் இருந்தார்.


அஹாஹஹாஹாஹஹ......இதுதான் என்னை மிகவும் கவர்ந்த அறிவுப்பூர்வமான வாசகம்.....!! சிலவருடங்களுக்கு முன்புவரை ஆட்சியில்  இருந்தார் , அதனால் ஊழல் புகார்.......இப்ப கொடநாட்டில் தூங்கிக்கொண்டுதானே இருக்கிறார் ,,,,,இப்படி எப்படி ஊழல் புகார் இருக்கும்???



இன்னொரு பக்கம் இத்தனை வருடங்களாக தனக்கென்று எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் எத்தனையோ இழப்புகளைத் தாங்கிக் கொண்டு ஆதரவை அளித்து வந்த வைகோ தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியில் தலை காட்டாமல் இருக்கிறார். தமிழகத்து அரசியலில் அவர் நிலைமை பரிதாபமானதற்கு காரணம் அவருடைய நியாயமான, நேர்மையான குணம்தான்..!
 
 
முழுதும் ஒத்துப்போகிறேன்....வருத்தம்தான்..நேரம் தாண்டிவிட்டது...இல்லாவிடில் தாய்க்கழகம் வைகோவை அரவணைத்திருக்கும்..........செயலலிதாவின் பாசிசம் பற்றிப் பேச மேடையாவது கிடைத்திருக்கும் அவருக்கு!

ஊர்க் காசை அடித்து உலையில் போடும் வித்தையில் கரை கண்ட முதல் தமிழகத்து அரசியல் பெண்மணி என்ற கெட்ட பெயரோடு ஜெயலலிதா ஜெயிலுக்குள் வாசம் செய்யப் போவதும் உறுதிதான்..! இத்தனை விஷயங்கள் தனக்காகக் காத்திருக்கும்போது அதனை எதிர்கொள்ள எத்தனை ராஜதந்திர விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்..? கருணாநிதியிடம் இத்தனை நாட்களாக அரசியல் நடத்திய ஜெயலலிதா அவரிடம் கற்றுக் கொண்டதுதான் என்ன..?

நல்லது , இதன் மூலம் உ.த. சார் சொல்லவிளைவது ஆட்சிக்கு வந்து வழக்குகளை தமக்கு சார்பாக முடித்துக்கொள்வதை விட்டுவிட்டு கூட்டணிக்கு  ஆப்பு வைக்கிறாரே ஜே.. ...ஆக, ஊழலோ , ஊழல் வழக்குகளோ கவலை இல்லை....ஆட்சிக்கு ஜெ வந்து அவர் மீதான வழக்குகளை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம்!!
  .....அவ்வளவு மட்டுமே....!!! 
 
கருணாநிதியின் மீதான , பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட சனங்களின் மீதான  பரம்பரை எதிர்ப்பு வியாதி இவர் போன்ற நடுநிலைவியாதிகளை பீடித்திருக்கிறது... அது அவரது இன்னொரு பதிவில் தெளிவாக வெளிப்படுகிறது...
 
இப்படிச்சொல்கிறார் அவர்...
 


சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, துறைமுகம், கொளத்தூர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம் என்ற சென்னை தொகுதிகளெல்லாம் இருக்கும் நிலையிலேயே தாத்தா, தனது சொந்த ஊரான திருவாரூருக்கு ஓடிப் போயிருக்கும் விஷயத்தை பார்த்தால் பாவமாக இருக்கிறது..!

ஜெயல்லிதா தன் சமுதாய    மக்களை நம்பி ,ஸ்ரீரங்கம் ஓடிப்போனதை  அவர் காதில் கொஞ்சம் போடுங்களேன்....ஆண்டிப்பட்டி இல்லேன்னா தேனி , உசிலம்பட்டி இல்லையா?அங்கு ஏன் அவர் போட்டியிடவில்லை.....
இஹிஹிஹிஹி....இதைத்தான் செலக்டிவ் அம்னீசியா என்பார்களோ???

நமக்கு உண்மைத்தமிழன் சார் மீது தனிப்பட்ட எந்தக்காழ்ப்புணரவும் இல்லை...இது முழுதும் அரசியல்ரீதியான   எதிர்வாதங்களே......எப்போதும் போல் நண்பர்களாகவே சண்டையிட்டுக்கொள்வோம்....
 
ஆனால், நடுநிலை  வேசம் மட்டும் போடாதீங்க உ.த சார்...!! தாங்க  முடியலை!!
 
ஸ்டாப் த மியுசிக்!!!

கலைஞர்...ஜெ....மலையும் மடுவும் !

தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது.....ஜெ என்ற அகம்பாவம் பிடித்த , திருந்தாத அரசியல் தலைமையின் சாயமும் வெளுத்துப்போயிருக்கிறது....!!

திமுக என்ற பாரிய அரசியல் இயக்கத்திற்கும் , அந்தக் காலம் தொட்டே தனிநபர் சொத்தாக விளங்கும் அதிமுகவிற்கும் உள்ள பாரிய வித்தியாசம் இங்கே வெளிப்பட்டு நிற்கிறது...

கூட்டணி தர்மத்தின் பால் 2 இடங்களுக்கு முஸ்லீம் லீக் ஒத்துக்கொண்ட பிறகும் மூன்று தொகுதிகளை மீண்டும் தந்த திமுக எங்கே...முதலில் ஒரு தொகுதியை ஒதுக்கிவிட்டு பின்பு கார்த்திக்கை கழட்டிவிட்ட அதிமுக எங்கே?

காங்கிரஸ் , பாமக , விடுதலைச் சிறுத்தைகள் , கொங்கு முன்னேற்றக் கழகம் , முஸ்லீம் லிக் என்று அனைத்துக்கட்சிகளுடனும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டு அவர்களுக்கான தொகுதியையும் ஒதுக்கிக்கொடுத்துவிட்டு இன்னமும் தமது வேட்பாளர் பட்டியலை வெளியிடாத திமுக எங்கே?

கூட்டணிக்கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடே முடியாத போது தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக எங்கே?

அரசியல் நாகரீகம் என்றால் என்ன என்பதன் அடிப்படை கூடத்தெரியாத இந்த அதிமுகதான் இன்றைய எதிர்க்கட்சி...வென்றால் ஆளுங்கட்சி...

அகங்காரம் , ஆணவம் , திமிர் இவற்றின் மொத்த உருவம் தான் ஜெயலலிதா என்பது வெகுபலர் அறிந்ததே......வெல்வோமா , இல்லையா என்று தெரிவதற்கு முன்னமே இப்படிக் கூட்டணிக்கட்சிகளை அலட்சியப்படுத்துவது முறையா? ஒருவேளை வென்றால்...

கம்யூனிஸ்டுகளும் , விசயகாந்தும் வேண்டுமானால் பணிந்து போகலாம்..அவர்களுக்காவது இத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டது...ஆனால் மதிமுக?? அன்றும் இன்றும் என்றுமே பரிதாபத்திற்குரியவராகவே தோற்றமளிக்கிறார் அவர்...அதற்கு அவர் மட்டுமே காரணம்....

5 ஆண்டுகளுக்கு முன் இதே நிலை ஏற்பட்டது அவருக்கு..ஆனால் அதற்கு கலைஞர் காரணமில்லை....அவரே தான் காரணம்......கூடுதலாகச் சில தொகுதிகள் வேண்டுமென்பதற்காக தன்னை 19 மாதம் சிறை வைத்த அம்மாவுடன் சேர்ந்ததுதான் அவரது இத்தனை இழிவுக்கும் காரணம்...

மாற்றுக்கட்சிகளை மதிப்பதில் கலைஞர் மலை....இழிவுபடுத்தும் ஜெ மடு.!!

மாற்றுக்கட்சிகளின் கருத்தைக் காது கொடுத்துக்கேட்பவர் கலைஞர்.......கேட்பதே தன் கவுரவக்குறைச்சல் என்றெண்ணுபவர் ஜெ..!!

மாற்றுக்கட்சித்தலைவர்களையும் தன் அருகழைத்து தள்ளாத வயதிலும் மதிப்பவர் கலைஞர்....அவர்களை அமரக் கூடச் சொல்லாதவர் ஜெ.!!

திருமங்கலம் பார்மூலா , அழகிரி கண்டுபிடித்ததாகச் சொல்லும் அரசியல் அடிப்படை தெரியாதவர்களுக்கு "சாத்தான் குளம்" யாருடைய பார்முலா என்று சொல்லமுடியுமா?

ஊழலைக் கண்டுபிடித்ததே கலைஞர் என்று ஒப்பாரி வைக்கும் பார்ப்பன ஊடகங்களே...இன்றைக்கும் கலைஞர் மீதான உறுதியான ஊழல் குற்றச்சாட்டொன்றை சொல்லமுடியுமா?? ஆனால் , மலைமலையாக குற்றச்சாட்டுக்கள் குவிந்துகிடக்கும் ஊழல் அரசியல்வாதியான ஜெ எப்படி மாற்றாக முடியும்??

எவ்விதத்தில் பார்த்தாலும் கலைஞர் ஒர் மலை....ஜெ. ஒரு மடு..!!

அன்றாடம் கலைஞரைக் கரித்துக்கொட்டுவதிலேயே காலம் கழிக்கும் அதிமுகவின் உண்மைத்தொண்டன் "உண்மைத்தமிழன் (???) " போன்றவர்கள் திமுகவிற்கு மாற்றாக காட்டுபவர்களின் தகுதி இதுதான்....!!

Tuesday, March 15, 2011

காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகள் பட்டியல்!

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள்
குறித்த விவரம் இன்று வெளியானது.


முதல்வர் கருணாநிதிக்கும், காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கும் இடையே இன்று இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் உடன்பாடு கையெழுத்தானது. இதையடுத்து தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டது.

காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:

  1. திருத்தணி
  2. பூந்தமல்லி (தனி)
  3. ஆவடி
  4. திரு.வி.க.நகர் (தனி)
  5. ராயபுரம்
  6. அண்ணா நகர்
  7. தியாகராய நகர்
  8. மயிலாப்பூர்
  9. ஆலந்தூர்
  10. ஸ்ரீபெரும்புதூர் (தனி)
  11. மதுராந்தகம் (தனி)
  12. சோளிங்கர்
  13. வேலூர்
  14. ஆம்பூர்
  15. கிருஷ்ணகிரி
  16. ஓசூர்
  17. செங்கம் (தனி)
  18. கலசப்பாக்கம்
  19. செய்யாறு
  20. ரிஷிவந்தியம்
  21. ஆத்தூர் (தனி)
  22. சேலம் வடக்கு
  23. திருச்செங்கோடு
  24. ஈரோடு மேற்கு
  25. மொடக்குறிச்சி
  26. காங்கேயம்
  27. உதகை
  28. அவிநாசி (தனி)
  29. திருப்பூர் தெற்கு
  30. தொண்டாமுத்தூர்
  31. சிங்காநல்லூர்
  32. வால்பாறை (தனி)
  33. நிலக்கோட்டை (தனி)
  34. வேடசந்தூர்
  35. கரூர்
  36. மணப்பாறை
  37. முசிறி
  38. அரியலூர்
  39. விருத்தாச்சலம்
  40. மயிலாடுதுறை
  41. திருத்துறைப்பூண்டி (தனி)
  42. பாபநாசம்
  43. பட்டுக்கோட்டை
  44. பேராவூரணி
  45. திருமயம்
  46. அறந்தாங்கி
  47. காரைக்குடி
  48. சிவகங்கை
  49. மதுரை வடக்கு
  50. மதுரை தெற்கு
  51. திருப்பரங்குன்றம்
  52. விருதுநகர்
  53. பரமக்குடி (தனி)
  54. ராமநாதபுரம்
  55. விளாத்திகுளம்
  56. ஸ்ரீவைகுண்டம்
  57. வாசுதேவநல்லூர் (தனி)
  58. கடையநல்லூர்
  59. நாங்குனேரி
  60. ராதாபுரம்
  61. குளச்சல்
  62. விளவங்கோடு
  63. கிள்ளியூர்
2 நாள் விருப்ப மனு தரலாம்:

தொகுதிப் பட்டியலை வெளியிட்டுக் கூறிய காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, நாளையும், நாளை மறுநாளும் விருப்ப மனுக்கள் பெறப்படும். சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை பெற்று சமர்ப்பிக்கலாம்.

பொதுத் தொகுதிகளுக்கு ரூ. 5000 கட்டியும், தனித் தொகுதிகளுக்கு ரூ. 2500 கட்டியும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு ரூ. 2500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விருப்ப மனுக்களை ஐவர் குழு பரிசீலித்து டெல்லி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கும். வேட்பாளர் பட்டியலை டெல்லி மேலிடம் முடிவு செய்யும் என்றார்.

Saturday, March 05, 2011

கலைஞருக்கு நன்றி..நன்றி!

ஊரில் கெட்டது நல்லதுக்கு கூட ஒன்றுகூடாத ராமண்ணனும் , சடையப்பனும் இன்று ஒன்றுகூடி பட்டாசு வெடித்தார்கள்...

சில வருடங்களாகவே கொடியேற்றாமல் கிடக்கும் கம்பத்திற்கு இன்று வெகுவேகமாகப் பூச்சு வேலை நடக்கிறது.....நெல்லை முத்து விலாஸ் ஸ்வீட்ஸ்டாலில் நான் 7 மணிக்கு லட்டு வாங்கப்போனால் தீர்ந்து போனது என்று சொல்லிவிட்டான்...இருங்க இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடும்ங்கறான்...!

சரக்கு வாங்கச் சொல்லி செயலாளர் காசு கொடுத்தனுப்பி கனநேரமாயிற்று...செல்பேசியில் நண்பன் சொல்கிறான் , அண்ணே......சரியான கூட்டம் , பூரா கரைவேட்டிதான். இம்புட்டு சந்தோஷமா கட்சிக்காரங்கள நான் பாத்ததே கெடையாதுங்கறான்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திலிருந்து கரை வேட்டி கட்டுவதை நிறுத்தியிருந்த சலூன் கடை நாச்சியப்பன் இன்று சலவை போட்ட கரைவேட்டியுடன் ஊரில் மிடுக்காக நடந்து போகிறான்......
தொலைபேசியில் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் என் பள்ளித்தோழனும் , கட்சி அனுதாபியுமான பார்த்தசாரதியுடன் பேசினேன்...

"டேய் மாப்ளே , நீ கூப்பிடுவேன்னு தெரியும்........நைட்டு தலைவரு அறிக்க வந்தவுடனே முடிவாயிருச்சுடா மாப்ளே...எழுதி வச்சிக்க...இனி எலக்சன் வரைக்கும் ஒரு நைட்டு கூட தூங்கப்போறதில்ல நான்...இன்னிக்கு நைட்டு கூட செவரு ரிசர்வ் பண்ண கெளம்பிட்டேன்..நெறயா நாளைக்கு பின்னாடி திமுககாரன் எப்படி வேல செய்வான்னு ஊருக்கு காட்டணும்டா மாப்ள....!!"

டீக்கடை , பெட்டிக்கடை எங்கு திரும்பினாலும் இதேதான் பேச்சு........வலையுலக கட்சி அனுதாபிகளுக்கும் ஒரு பெருமூச்சு...

இன்றல்ல நேற்றல்ல...கடந்த சில வருடங்களாகவே வெளியில் சொல்லாமல் தொண்டையிலேயே வைத்திருந்தோம். .எந்தத் தேர்தலிலும் நாம் எமக்குழைப்பதை விட காங்கிரசுக்காரர்களுக்கு உழைப்பதே அதிகம்.........இனி நாம் எமக்கு உழைப்போம்...முழுவெறியுடன் உழைப்போம்.............திமுக பட்டுப்போன செடியல்ல.......கூட்டணி விலங்குகளால் சிறிதே வாடிப்போன செடி...அதற்கான உரம் தன்னம்பிக்கைதான்...அது டன் டன்னாக காங்கிரஸ் வெளியேறியதில் இருந்து கிடைத்திருக்கிறது....

எப்போதும் திராவிடக்கட்சிகளின் முதுகிலேறி சவாரி செய்யும் காங்கிரசுக்கு அவர்கள் பலமென்ன என்பது தெரியத்தான் போகிறது!!!தனியே நின்றாலும் சரி........அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தாலும் சரி!

நடுநிலையான அதிமுக ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல...திமுக தொண்டர்களுக்கும் அனுதாபிகளுக்கும் இப்போது பெரிய நிம்மதி!!

வேண்டாத சுமையான காங்கிரசைக் விட்டு விலகிய போது ஏற்பட்ட நிம்மதி திமுக ஆட்சியமைக்கும் போது கூட இருந்ததில்லை..வந்ததுமில்லை.!!!

தொண்டர்களின் குரலுக்கு மதிப்புக்கொடுப்பதில் கலைஞருக்கும் , பேராசிரியருக்கும் நிகரேது....என்ன கொஞ்சம் தாமதமாகிவிட்டது...அவ்வளவுதான்...

ஒற்றை டீயைக்குடித்துவிட்டு விடிய விடிய உதயசூரியன் சின்னத்தை தெருவெங்கும் வரைந்த காலம் நினைவில் இருக்கிறது....இந்தத் தேர்தலில் மீண்டும் அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த கலைஞருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி....

நம்புங்கள் தலைவர்களே..வெற்றி நமது கையில்.!!

Thursday, March 03, 2011

ஆனந்தவிகடனின் அதர்ம யுத்தம்.!

பத்திரிக்கைகள் நடுநிலையாக இருக்க வேண்டும்.......அல்லது கலைஞர் தொலைக்காட்சி அல்லது செயா  தொலைக்காட்சி அல்லது நமது எம்.ஜி.ஆர் என்ற பெயரில் நாம் இந்தக்கட்சி சார்பானவர்கள் என்று சொல்லிக்கொள்ள  வேண்டும்...

அந்த விடயத்தில் "தினமலர் மற்றும் துக்ளக்" எப்போதும் தெளிவாகவே இருக்கும்.....நாம் அன்றும் , இன்றும்  என்றும் அவாளுக்கு ஆதரவு என்று வெளிப்படையாகவே அறிவித்துக்கொண்டவை அவை...

ஆனால், நடுநிலைமை என்ற பெயரில் இன்று விகடன் குருப் "திமுக"  எதிர்ப்பு நிலை எடுத்திருக்கிறது    என்று சொல்கிறார்கள்....அதை      நம் பதிவர்கள் சுட்டியும் காட்டுகிறார்கள்!!! 

தி.மு.க வை எதிர்த்து ஆனந்த விகடன் தர்ம யுத்தம்..? 

 

ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....

தோழர் ரஸீம் கஸாலியின் ஆனந்த விகடனின் அடிப்படைக்கணக்கே தவறு என்கிறார்...

உண்மைதானே? 130 தொகுதிகளில் நிற்கும் ஒரு கட்சி  வாங்கும் வாக்குச்சதவீதத்தையும்  , 182 தொகுதிகளில் நிற்கும் ஒரு கட்சி வாங்கும் வாக்கு சதவீதத்தையும் எப்படி  ஒப்பிட முடியும்? இந்த அடிப்படை கூட தெரியாமல் ஒரு பெரிய பத்திர்க்கை தவறான தகவல்களை சொல்வது தவறல்லவா?

 

இதுபற்றி நண்பர் கொக்கரக்கோவின் பின்னூட்டம் இந்தப்பதிவில்


வணக்கம் சதீஷ்குமார், ஆ.வி, ஜூவி, வகையறாக்கள் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இம்முறை ஜெ. ஆதரவு நிலையை எடுத்திருக்கின்றன. ஜூனியர் போஸ்ட் காலத்திலிருந்தே இவைகளைப் படித்துவரும் என் போன்றவர்களுக்கு இது நன்றாகப் புரியும். அவர்கள் போட்டிருக்கும் இந்த கணக்கு அடிப்படையிலேயே தவறு என்பது அவர்களுக்கும் நன்றாகப் புரிந்து தான் இருக்கும். ஆனாலும் தங்கள் நிலைப்பாட்டை அப்பாவி வாசகர்களிடம் நடுநிலை போர்வையோடு திணிக்கும் செயலை வெற்றிகரமாக செய்து கொண்டுமிருக்கிறார்கள். அந்தக் கணக்கை கீழ் வருவது போல் தான் போட வேண்டும். எல்லா கட்சிகளுமே கூட்டணி அமைத்து போட்டியிடும் பொழுது, ஒரு கட்சி வாங்கிய ஓட்டு சதவிகிதத்தை மொத்த தொகுதிகளான 234 வுடன் பெருக்கி, அதை அக்கட்சி நின்ற தொகுதியால் வகுக்கும் பொழுது வருமே ஒரு விடை அது தான் ஒருவேளை அக்கட்சி 234 தொகுதிகளில் நின்றிருந்தால் அக் கட்சி பெறும் மொத்த வாக்கு சதவிகிதம் ஆகும். உதாரணத்திற்கு தி.மு.க நின்ற தொகுதிகள் = 132 மொத்த தொகுதிகள் = 234 132 இல் வாக்கு சதவீதம் = 26.46% ஆகவே 26.46 x 234 / 132 = 46.90% அ.தி.மு.க நின்ற தொகுதிகள் = 188 மொத்த தொகுதிகள் = 234 188 இல் சதவீதம் = 32.64% ஆகவே 32.64 x 234 / 188 = 40.62% எனவே 2006 தேர்தலில் தி.மு.க வாங்கிய வாக்கு சதவிகிதம் = 46.9% அ.தி.மு.க வாங்கிய வாக்கு சதவீதம் = 40.62% இப்பொழுது புரிகிறதா? விகடன் சொல்வது போல் பயப்படுகின்ற தி.மு.க தலைமையா மூன்று சுற்றுகளாக காங்கிரஸை அலைக்கழித்துக் கொண்டிருக்க முடியும்?! ஒவ்வொரு சுற்று பேச்சு வார்த்தையின் முடிவிலும் ஒவ்வொரு கூட்டனி கட்சியாக அழைத்து தன்னிச்சையாக கூடுதல் தொகுதிகளை ஒதுக்க முடியும்?

நேர்மையில்லாத இவர்கள், தமது மறைமுக அஜண்டாவிற்காக உழைக்கும் இவர்களை பத்திரிக்கையாளர்கள் என்றழைப்பது தகுமோ?

 ****

அடுத்த அதர்ம யுத்தம் , காங்கிரஸின் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் வட இந்திய ரெடிப்.காம் வெளியிட்டிருக்கும் ஜோக்...தமிழ்நாட்டில் 70  இடங்கள் தான் திமுக கூட்டணிக்காம்...அதை ஒட்டிய திரு.சுரேஷ்குமார் பதிவில் படித்த  சில பின்னூட்டங்கள் .....!!!

மாதவன் said...

கோவை, ஈரோடு , திருப்பூர்,சேலம் , தர்ம்புரி, நாமக்கல் ,கரூர் ,திண்டுக்கல்,நீலகிரி மாவட்டங்களில் புதிதாக திமுகவில் இணைந்திருக்கும் கொமுக அத்துணை கணக்குகளையும் மாற்றி எழுதப்போகிறது...காரணம் அது கடந்த தேர்தலில் வாங்கியிருக்கும் வாக்குகள்!!!

உதாரணத்திற்கு கோவையை எடுத்துக்கொள்வோம்! கம்யூனிஸ்டுகளுக்கும், காங்கிரஸுக்குமுள்ள ஓட்டுவித்தியாசம் 40000 மட்டுமே...ஆனால், கொமுக பெற்ற ஓட்டுக்கள் 130000 , தேமுதிக பெற்ற 70000 ஓட்டுக்களைக் கழித்தாலும் கூட 20000 ஓட்டுக்கள் அதிகமிருக்கிறது....இதேபோலத்தான் கொங்குமண்டலத்தின் அனைத்து தொகுதிகளிலும் கணக்கு மாறுகிறது..டெல்லியில் உக்கார்ந்து ஆராய்ச்சி செய்யும் கம்பெனிகளுக்கு கொமுக என்ற கட்சீயைப்பத்தியே தெரியாது, ஹிஹிஹிஹிஹிஹி.!!

1 RAMASUBRAMANIAN. K BSP 2937
2 SELVAKUMAR.G.K.S BJP 37909
3 NATARAJAN.P.R. CPM 293165
4 PRABHU.R INC 254501
5 ESWARAN.E.R KNMK 128070

அதனால் தான் 2 சீட்டு , 3 சீட்டு என்று பத்திரிக்கைகள் சொல்லும்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வண்ணம் கொமுகவிற்கு 7 சீட்டுக்கள் கொடுத்திருக்கிறார் கலைஞர்......

பொறுத்திருந்து பாருங்கள்.....கூடவே கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டத்தில் தனிப்பெரும் செல்வாக்குள்ள மு.கண்ணப்பன்,திருப்பூர் மாவட்டத்தில் கோவிந்தசாமி , ஈரோடு மாவட்டத்தில் முத்துச்சாமி, சேலத்தில் செல்வகணபதி , கரூரில் சின்னச்சாமி என்ற பெருந்தலைகள் கட்சியில் இணைந்திருக்கிறார்கள்..

சும்மா வீட்டில் உட்கார்ந்து திமுக கனவு காணவில்லை...கடந்த மூன்றாண்டுகளாகவே அறிவியற்பூர்வ கணக்கின்மூலம் சட்டசபைத்தேர்தலுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டது அது..பற்றாக்குறைக்குச் செம்மொழி மாநாடு...கோவை நகரெங்கும் பளபளக்கும் சாலைகள்....திருப்பூருக்கு தனிமாவட்ட அந்தஸ்து , திருப்பூர், ஈரோடு இவைகள் மாநகராட்சிகளாக விரிவாக்கம் என்று பணிகள்...

சும்மா கொடநாட்டில் தூங்கிவிட்டு வந்து தேர்தலின் போது மட்டும் பிரச்சாரம் செய்யும் கட்சி திமுக அல்ல நண்பரே.

ஆக, கொங்குநாட்டில் சமன் செய்கிறது......வடமாவட்டங்களில் பாமக , வி.சி ஆதரவுடன் முந்துகிறது....இதுதான் நிலைமை....!!!

நினைவிருக்கட்டும், போனமுறை அதிமுக கூட்டணியில் இருந்த பாமக இந்தமுறை திமுக கூட்டணியில்!!!
பத்திரிக்கைகள் ஆகட்டும், தொலைக்காட்சிகளாகட்டும் கட்சிகள் மக்களை முட்டாள்களாக்குகின்றன என்று சொல்லிக்கொண்டு , தமது மறைமுக அஜண்டாவை மக்கள் மீது  திணிக்கின்றன....


கடந்தமுறையை விட இம்முறை தேர்தல் களம் வித்தியாசமாகவே  இருக்கிறது.....பலம் வாய்ந்த இரு   அணிகள்  மோதுகின்றன...கூட்டணி பலம் இங்கே சமநிலையில் இருக்கும்போது , ஆளுங்கட்சிக்கெதிரான எதிர்ப்பு மற்றும் ஆளுங்கட்சியின் பணிகள் இவைகளே முக்கிய பங்கு வகிக்கப்போகின்றன...அதில் அடித்தட்டு மக்களின் தேவைகளைத் தேடித்தேடி பூர்த்தி செய்திருக்கும் திமுகவே முந்தப்போகிறது...

எந்தக் கருத்துக்கணிப்புகளும் இங்கே செல்லுபடியாகப் போவதில்லை........!!