Monday, February 21, 2011

உண்மைத்தமிழன் வகையறாக்களுக்கு சில கேள்விகள்....!

ரொம்ப நாளாவே மனச அரிச்சிகிட்டுக் கீற விஷயமுங்கோ , அதுனால கேட்டுப்புடலாம்னு இருக்கேன்.!

ஸ்பெக்டரமை  சி.பி.ஐ. ஆராய்ஞ்சதை விட அதிகமா ஆராய்ஞ்சி கிழித்திருக்கும் உண்மைத்தமிழன் வகையறாக்களுக்கு சில கேள்விகள்!!

அடிப்படையான கேள்விகள் என்பதால் ஒதுக்கிவிடாமல் என்னைப் போன்ற பாமரனுக்கு புரியும் படி விளக்கிச் ( ஸபீனா பவுடர் போட்டாலும் ஓக்கே...விம் பார் போட்டாலும் ஓக்கே.!!!) சொன்னால் நலம்!

2 ஜி ஸ்பெக்டரம் என்றால் என்ன? அது செல்போன் கண்டுபிடிச்சாப்ல இருந்தே இருக்கா? இல்லன்னா அதுக்கு முன்னாடி எப்படி செல்போன் உபயோகிச்சாங்க?

நாம உபயோகப்படுத்தற எல்லா செல்பேசிகளிலும் 2ஜியை உபயோகப்படுத்துறோமா? அப்படீன்னா , அது கரீக்டா இன்னா வேலை செய்யுது?  இல்லேன்னா சுமார் எத்தினி சதவீதம் பேர் 2ஜி உபயோகிப்பாங்க?

ஜி.எஸ்.எம் ந்னா இன்னா? சி.டி.எம்.ஏன்னா இன்னா? அதுக்கும் 2ஜிக்கும் தொடர்ப்பிருக்கா?

இப்ப 3ஜின்னு ஒரு டெக்னாலஜி வந்திருக்கே , இத வச்சி இன்னா பண்ணலாம்.....? 

பல லட்சம் கோடி நஷ்டம்ங்கிறாங்களே.......ராசாவுக்கு முன்னாடி யாரும் 2ஜியே பேசலையா...அதுமூலமா வருசா வருசம் வந்த லட்சக்கணக்கான கோடி ரூவா வருமானத்தை இந்தியா கவுருமெண்டு எந்த பேங்க்க்குல போட்டிச்சி? அதுக்கெல்லாம் எங்க கணக்கு? ( நன்றி , பட்டாபட்டியோட பதிவுல வந்த பின்னூட்டம்!)

ஒரு வேளை ராசாவுக்கு முன்னாடி அந்த ஸ்பெக்டரத்த ஒதுக்கீடு செய்யவே இல்லன்னா ,   பல லட்சம் கோடிக்கு போகும் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்யாம அது மூலமா கவுருமெண்டுக்கு வந்த நட்டத்துக்கு யாரு பொறுப்பு?


கடேசியா ஒரு கேள்வி......"ராசாவை" ஒரு கருவியா உபயோகப்படுத்தினாங்கன்னே வச்சிக்கிடலாம்....அவரை உங்களால் தண்டிக்க முடியும்? ஆனா அதுமூலமா பலனடைஞ்ச கார்ப்பரேட் கனவான்களை என்ன செய்யலாம்? ஏன்னா அவுங்களுக்குத்தான் இதில் பெரும்பங்கு.....ஒண்ணுமே செய்ய முடியாதுன்னு தெரிஞ்சும் "ராசா"வை மட்டுமே குற்றவாளியாக்கி வேடிக்கை பார்ப்பது உண்மையிலேயே சமூகத்தின் மீதான அக்கறையா இல்லை உங்கள் காழ்ப்புணர்வா?

பதில்  சொல்ல் விருப்பமிருந்தா நீங்க சொல்லலாம்....இங்கேயே பின்னூட்டத்திலும் சொல்லலாம்..இல்லை தனிப்பதிவிட்டும் சொல்லலாம்....உங்களை பதிலையொட்டியே நாம் மீண்டும் பேசமுடியும்!!

பதில் படிக்கும்படியும் இருக்கலாம்..இல்லையென்றால் உங்களின் வழக்கமான ஸ்டைலின் நீளத்துக்கும் இருக்கலாம்...படிக்க நான் ரெடி , இந்த ஒருமுறையாவது முழுதும் !!!

ஹிஹிஹி....

ஆவலுடன்

உங்கள் அன்புத்தம்பி...

28 comments:

ramalingam said...

இப்படி ஒரு தேவையில்லாத நக்கல் எதுக்கு?

South-Side said...

இதுல நக்கல் எங்கே கீது சார்? அனேக பேர் இதுகூட தெரியாமத்தான் ஊழல் ஊழல் ந்னு உதார் விடுறாங்க....

அதுனால நல்லாத் தெரிஞ்ச நாலு பேர் விளக்கிச்சொன்னா தெரிஞ்சிக்கிடலாம்னுதான்.!

மத்தபடி நக்கல் எல்லாம் ஒண்ணுமே இல்லை! இந்தக் கேள்விகளுக்கும் , ஊழல்னு சொல்லப்படற விடயத்திற்கும் மிகப்பெரிய ஒத்துமை கீதுங்ணான்னு சொல்லி வச்சிடுறேன்..!!!

இந்தக் கேள்விகளூக்கான பதிலை தெரிஞ்சிகிட்டாலே அந்த ஊழல் ந்னு சொல்லப்படற விடயம் பத்தி புரிஞ்சிடும்ங்கறேன்!அம்புட்டுதான்....

South-Side said...

79 Views /

எழுபத்தொம்பது பேர் பாத்துக்கறாங்க...அத்துல ஒத்த்ருக்கு கூடவா ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல விருப்பமில்ல....உண்மைத்தமிழனுக்கு மட்டும் கேட்ட கேள்வின்னு எடுத்துக்காதீங்க மக்களே...அல்லாருக்கும்தான்!

South-Side said...

சில வாந்திகளை தவிர்ப்பதற்காக பின்னூட்ட மாடரேசன்...

இந்தப்பதிவுக்கு மட்டும்!

மதுரை சரவணன் said...

வீ.ஏ.ஓ வாங்கிய ஆயிரம் ரூபாய் லஞ்சத்தைப்பத்தியே பேசிப் பேசி மறக்கிற சமுதாயத்தில இப்படி பொசுக்குன்னு கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்லுறது.. நங்களும் உண்மைத் தமிழர்கள் தான் .. எப்படி...! காச வாங்கினோமா ஓட்டப் போட்டோமா போனோமா என்கிற வெகுஜனமாகவே இருக்கிறோம்...

வடகரை வேலன் said...

முதல்ல 1ஜி 2ஜி 3 ஜின்னா என்னன்னு பார்ப்போம்.

முதல்/இரண்டாம்/மூன்றாம் தலைமுறைன்னு தமிழ்ல்ல சொன்னாலும் அடிப்படையில் அது அளிக்கும் பயன்பாடுகளில் வித்தியாசம் உண்டு.

ரேடியோ, விமானம், டிவி, காவல்துறை, ராணுவம் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு எண்ணுள்ள ப்ரீக்வென்சிக்களை உபயோகப் படுத்தும்

இப்ப எஃப் எம் ரேடியோ ஒரு குறிப்பிட்ட சுற்றளவுக்குத்தான் எடுக்கும். அதே நேரம் சென்னை-1 சென்னையை சுற்றிச் சில மாவட்டங்களிலும் எடுக்கும். இதற்குக் காரணம் ஒலி அலைகளை அந்த மின் அலைகளில் ஏற்றி அனுப்பி அவை பயணிக்கும் தூரத்தை அதிகப் படுத்துவதுதான்.

சில ப்ரீக்வென்சிக்களை சில வேலைகளுக்கு என அரசாங்கம் வகை பிரித்து வைத்திருக்கிறது.

செல் போன் வரும் வரை அந்த ப்ரீக்வென்சிக்கள் பயன்படவில்லை.

முதல்தலைமுறை செல்போன்களுக்கு குறிப்பிட்ட ஃப்ரீக்வென்சி பயன்பட்டது அதில் வெறும் டெக்ஸ்ட் மெஸேஜ்தான் அனுப்ப முடியும்.

2ஜியில்தான் படங்கள் மற்றும் mms அனுப்ப முடியும்.

3ஜியில் வீடியோ கான்ஃப்ரென்சிங் முடியும்.

இதை ஒதுக்கீடு செய்வதில் ஆரம்பத்தில் இருந்தே ஏலம் விடுவது பழக்கத்தில் இல்லை.

ஆனால் ராசா செய்த தவறுகளாக நான் கருதுவது

1. ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த நிறுவனங்களின் தகுதியைச் சோதிக்காதது
2. முடிவுத் தேதிய முன் தள்ளிவைத்து மேலும் சிலர் விண்ணப்பிக்க முடியாமல் செய்தது
3. மற்ற கம்பெனிகள் அதிக விலை கொடுக்கத் தயாராக இருந்தும் அவர்களை ஒதுக்கி அவருக்கு வேண்டியவர்களுக்குக் கொடுத்தது.

(13200 கோடிக்கு வாங்க ஒரு நிறுவனம் தயாராக இருந்தும் 1200 கோடிக்குக் கொடுத்தது. வாங்கிய நிறுவனம் சில நாட்களிலேயே அதை 4500 கோடிக்கு விற்றதாகத் தகவல்)

4. இவர் ஒதுக்கீடு வழங்கிய நிறுவனங்களுக்கும் இவரது குடும்ப நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தொழில் உறவு மற்றும் பணப் பரிவர்த்தனை.

இந்நான்கிற்கும் இதுவரை தெளிவான பதில் யாரும் சொல்லவில்லை.

மழுப்புகிறார்கள.

South-Side said...

நன்றி வடகரை வேலன்.

////முதல்தலைமுறை செல்போன்களுக்கு குறிப்பிட்ட ஃப்ரீக்வென்சி பயன்பட்டது அதில் வெறும் டெக்ஸ்ட் மெஸேஜ்தான் அனுப்ப முடியும்.////

மிகச்சரி.

////2ஜியில்தான் படங்கள் மற்றும் mms அனுப்ப முடியும்./////

மிக மிகச் சரி...!!இன்னும் சொல்லப்போனால் வண்ணப்படங்கள் / அதிக பைல் சைஸ் உள்ள படங்கள்...சாதாரண பிக்சல்களால் ஆன படங்களை சாதாரண ஜி.எஸ்.எம். ப்ரிக்வன்சி சேவையிலேயே வழங்க முடியும்...முடிந்தது.... சாதாரண டெக்ஸ்ட் மெஜெஜை விட 25 மடங்கு விலை அதிகம் ஒரு எம்.எம்.எஸ் அனுப்ப வேண்டுமானால்...

எனக்குத் தெரிந்து இந்தியாவில் மிக மிகக் குறைவான , ஒருவேளை மெட்ரோ நகரங்களில் மட்டுமே எம்.எம்.எஸ் உபயோகித்திருப்பார்கள்...அதற்காக கனவிலும் எண்ணிப் பார்க்காத தொகையில் எந்தவொரு செல்பேசி நிறுவனமும் அந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டை வாங்கி இருக்க முடியாது.!!! அது சர்வ நிச்சயமாக சாத்தியப்படாத ஒன்று!

///3ஜியில் வீடியோ கான்ஃப்ரென்சிங் முடியும். இதை ஒதுக்கீடு செய்வதில் ஆரம்பத்தில் இருந்தே ஏலம் விடுவது பழக்கத்தில் இல்லை.
////

3ஜி வீடியோ ஸ்ட்ரீமிங் கூட அவ்வளவு எளிதல்ல....அதற்கு 3.5 ஜி எனப்படுகின்ற 3ஜி ஹெச்.எஸ்.பி.டி.ஏ தொழில்நுட்பம் தேவை....3ஜி யோ / 2ஜியோ , கூடுதல் பயன்பாடு என்பது மொபைல் போனில் வரும் இணையத்தொடர்பு......

அது ஆப்பிள் ஐ.போன், ப்ளாக்பெர்ரி , ஹெச் டிஸி , மிக மிக விலை உயர்ந்த செல்போன்கள் மட்டுமே அந்தச் சேவையை வழங்குகின்றன.....

சொற்ப சதவீதம் பேரையே எட்டியிருக்கும் அந்தச் சேவைக்கு எந்த நிறுவனமாவது அந்த மாபெரும் தொகையை கொடுத்து வாங்கி இருக்குமா? அதுவும் ஸ்மார்ட் போன்கள் பற்றிய அறிவு மிகவும் குறைவாகவிருந்த 2008 போன்ற சூழலில்!

ஆக, ஊழல் நடந்ததாக சொல்லப்படும் அடிப்படையே தவறு.!

South-Side said...

ஆனால் ராசா செய்த தவறுகளாக நான் கருதுவது

///1. ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த நிறுவனங்களின் தகுதியைச் சோதிக்காதது.///

இது நியாயமான ஆதங்கம்...இதற்கு ராசா மட்டுமே காரணமல்ல...துரைசார் அறிவுஜீவிகளும் , அதிகாரிகள் சரிநிகர் பங்கை வகித்திருக்க வேண்டும்..!


////2. முடிவுத் தேதிய முன் தள்ளிவைத்து மேலும் சிலர் விண்ணப்பிக்க முடியாமல் செய்தது
3. மற்ற கம்பெனிகள் அதிக விலை கொடுக்கத் தயாராக இருந்தும் அவர்களை ஒதுக்கி அவருக்கு வேண்டியவர்களுக்குக் கொடுத்தது.

(13200 கோடிக்கு வாங்க ஒரு நிறுவனம் தயாராக இருந்தும் 1200 கோடிக்குக் கொடுத்தது. வாங்கிய நிறுவனம் சில நாட்களிலேயே அதை 4500 கோடிக்கு விற்றதாகத் தகவல்)////

நிச்சயம் அப்படி நடந்திருந்தால் , தவறே... இவையிரண்டும் ஆதாரப்பூர்வமாக கோர்ட்டில் நிருபிக்க வேண்டியவை..!!


////4. இவர் ஒதுக்கீடு வழங்கிய நிறுவனங்களுக்கும் இவரது குடும்ப நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தொழில் உறவு மற்றும் பணப் பரிவர்த்தனை.////

இவை மட்டுமே ஒரு பாரிய ஊழலை நிகழ்த்தியதாக சொல்லப்போதுமான காரணங்கள் அல்ல...இவைகள் தவறென்றால் , தொழில் தொடங்கும் எவருமே மத்திய அமைச்சர்களாக இருக்க முடியாது......வேளாண் அமைச்சர் சரத் பவார் தான் இந்தியா முழுமைக்குமான பஞ்சு உற்பத்தி/ ஏற்றுமதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.....

தனியார் பஞ்சாலை வைத்திருக்கும் சிதம்பரம் தான் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்தார்...


////இந்நான்கிற்கும் இதுவரை தெளிவான பதில் யாரும் சொல்லவில்லை.

மழுப்புகிறார்கள./////

தெளிவான பதிலைக் கண்டுபிடிக்கத்தானே சிபிஐ விசாரணை...அதன் விசாரணை அறிக்கைக்காகக் கூட பொறுமையின்றி இங்கே ஒட்டுமொத்தமாக ராசா தான் குற்றவாளி என்று சொல்வது ஏன்? அதுவும் குற்றச்சாட்டின் அடிப்படையே தவறாக இருக்கும் பட்சத்தில்??????

வடகரை வேலன் said...

//சொற்ப சதவீதம் பேரையே எட்டியிருக்கும் அந்தச் சேவைக்கு எந்த நிறுவனமாவது அந்த மாபெரும் தொகையை கொடுத்து வாங்கி இருக்குமா? அதுவும் ஸ்மார்ட் போன்கள் பற்றிய அறிவு மிகவும் குறைவாகவிருந்த 2008 போன்ற சூழலில்!//

மிகத் தவறு. நமக்கு அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் மீது பெரிய காதலே இருக்கிறது நமக்குத் தேவையா இல்லையா என்பதை யாரும் கருத்தில் கொள்வதில்லை.




//இது நியாயமான ஆதங்கம்...இதற்கு ராசா மட்டுமே காரணமல்ல...துரைசார் அறிவுஜீவிகளும் , அதிகாரிகள் சரிநிகர் பங்கை வகித்திருக்க வேண்டும்..!//

அரசு அதிகாரிகள் அளித்த பரிந்துரையை அவர் புறந்தள்ளி இருக்கிறார்.

//இவை மட்டுமே ஒரு பாரிய ஊழலை நிகழ்த்தியதாக சொல்லப்போதுமான காரணங்கள் அல்ல...இவைகள் தவறென்றால் , தொழில் தொடங்கும் எவருமே மத்திய அமைச்சர்களாக இருக்க முடியாது......வேளாண் அமைச்சர் சரத் பவார் தான் இந்தியா முழுமைக்குமான பஞ்சு உற்பத்தி/ ஏற்றுமதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.....

தனியார் பஞ்சாலை வைத்திருக்கும் சிதம்பரம் தான் இந்தியாவின் நிதியமைச்சராக இருந்தார்... //

என்ன சொல்ல வருகிறீர்கள்?

இவர்களெல்லாம் ஊழல்வாதிகள். போலவே ராசவும் என்றா?

//தெளிவான பதிலைக் கண்டுபிடிக்கத்தானே சிபிஐ விசாரணை...//

காங்கிரஸ் ஆளும்வரை உண்மை வெளியே வராது.

//அதுவும் குற்றச்சாட்டின் அடிப்படையே தவறாக இருக்கும் பட்சத்தில்??????//

புரியவில்லையே?

bandhu said...

1G மற்றும் 2G க்கு இடையே உள்ள மிக பெரிய வித்யாசம், 1G is analog, 2G is digital. இப்போது நடைமுறையில் உள்ள எல்லா மொபைல் போன் சர்வீஸ் அனைத்தும் டிஜிட்டல் மட்டுமே. 1G நடைமுறையில் இல்லை. அதனால், 2G பெரு நகரத்தில் மட்டுமே உபயோகப்படும் சர்வீஸ் இல்லை. அனைவரும் உபயோகப்படுத்துவதால் தான் அந்த அலைவரிசைக்கு இவ்வளவு மதிப்பு!

காவ்யா said...

உணமைத் தமிழன் ஒரு பொறியாளரோ அல்லது கல்லூரிப்படிப்புப் படித்தவரோ கிடையாது. 10ம் வகுப்பு பாஸ். இவரை வேலைக்கு வைத்தால் பியூன் வேலைதான் கொடுப்பார்கள். இவரால் விஞ்ஞான உண்மைகளைப்புரிய முடியாது. ஆங்கிலத்தில் உள்ளவைகளைப் படிக்கவியலாது.

எனவே இவருக்கு செய்திகள் ஊட்டப்படுகின்றன. இவரின் பின்னர் பலர் இருக்கலாம். சோவை ‘சார்’ என அழைக்கின்றாரென்றால் உங்களுக்கு ஏன் எனத் தெரியலாம்.

சினிமா, கவர்ச்சி போன்றவகளைப்பற்றி எழுதிவிட்டால் நிறையப்பேர் சேருவார்கள். பின்னர் அந்த பாப்புலாரிட்டியைப் பயன்படுத்தி, மற்றவை, மற்றவர் மூலமாக எழுதலாம். அல்லது மற்றவர்கள் இவர் பதிவை பயன்படுத்தலாம்.

இவருடைய பிராமண்ச்சார்பு நிலை பொறியியல் துறை, பத்திர்க்கை துறையில் வியாபித்திருக்கும் ப்ராமணர்களை இவரைப் பிரபலப்படுத்தவும் ஊக்குவிக்கவும் உதவுகிறது.

உங்களுக்கு பதில் போடுவதற்கு அவருக்கு inputs அவர்களிடமிருந்து வரும். பின்னர்தான் போடுவார்.

பதில் பரபரப்பாக எழுதப்படுகிறது. வரும்.

THOPPITHOPPI said...

உங்கள் இந்த பதிவின் நோக்கம் என்ன என்று எனக்கு புரியவில்லை

//

மிகச்சரி.

மிக மிகச் சரி...!!

//

வடகரை வேலன் சொன்ன பதில் சரியா தவறா என்று சொல்லும் அளவுக்கு உங்களுக்கு ஸ்பெக்ட்ரம் பற்றிய அறிவு இருக்கிறது என்றால் நீங்களே இதைப்பற்றி விளக்கி பதிவு எழுதி இருக்கலாமே?


//
2 ஜி ஸ்பெக்டரம் என்றால் என்ன? அது செல்போன் கண்டுபிடிச்சாப்ல இருந்தே இருக்கா? இல்லன்னா அதுக்கு முன்னாடி எப்படி செல்போன் உபயோகிச்சாங்க?

நாம உபயோகப்படுத்தற எல்லா செல்பேசிகளிலும் 2ஜியை உபயோகப்படுத்துறோமா? அப்படீன்னா , அது கரீக்டா இன்னா வேலை செய்யுது? இல்லேன்னா சுமார் எத்தினி சதவீதம் பேர் 2ஜி உபயோகிப்பாங்க?
//

தினத்தந்தியில் இன்றைய செய்திதாளில் ஒரு செய்தி " தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம்" என்று நீங்க வேணும்னா தினத்தந்திக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்

" கள்ளக்காதல் என்றால் என்ன?, அது எத்தனை சதவிகிதம் இந்தியாவில் உள்ளது? , அது எல்லாம் ஊர்லையும் இருக்கா?
கள்ளக்காதல் கண்டுப்புடிச்சது யாரு?

இப்படியெல்லாம் கேள்வி கேட்டு தினத்தந்திக்கு ஒரு கடிதம் எழுதுங்க ஏனா நீங்க உண்மைத்தமிழன் அவர்களிடம் கேட்டிருக்கும் கேள்வி அப்படித்தான் இருக்கு.

நேத்து நைட்டு ஸ்பெக்ட்ரம், gsm,cdma பற்றிய தகவல்களை இணையத்தளத்தில் கண்ணு முழிச்சி படிச்சிங்களோ?


//பதில் படிக்கும்படியும் இருக்கலாம்..இல்லையென்றால் உங்களின் வழக்கமான ஸ்டைலின் நீளத்துக்கும் இருக்கலாம்...படிக்க நான் ரெடி , இந்த ஒருமுறையாவது முழுதும் !!! //


இதுவரைக்கும் ஒருமுறை கூட முழுவதும் படிக்காததால்தான் இப்படி சின்னப்புள்ளதனமா கேள்வி கேட்டு இருக்கீங்க போல முழுசா படிங்க.

South-Side said...

மிகத் தவறு. நமக்கு அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் மீது பெரிய காதலே இருக்கிறது நமக்குத் தேவையா இல்லையா என்பதை யாரும் கருத்தில் கொள்வதில்லை..//

நமக்கு..அதாவது எண்ட் யூஸர்களுக்கு....ஆனால் , அருவது கோடி செல்பேசி உபயோகிப்பாளர்களில் ஒரு கோடிப்பேர் கூட 3ஜி போன்ற உயர்தொழில்நுட்ப சேவைகளை உபயோகப்படுத்தியிருக்க முடியாது என்பது என் எண்ணம்.!! அதனால் குற்றம் சுமத்துபவர்கள் சொல்லும் இமாலய தொகைக்கான வாய்ப்பில்லை என்பதே என் கருத்து...சரியான புள்ளிவிவரங்கள் இல்லாத இந்நாட்டில் எதையும் அனுமானத்தின் பேரில்தான் சொல்ல முடிகிறது!

South-Side said...

உணமைத் தமிழன் ஒரு பொறியாளரோ அல்லது கல்லூரிப்படிப்புப் படித்தவரோ கிடையாது. 10ம் வகுப்பு பாஸ். இவரை வேலைக்கு வைத்தால் பியூன் வேலைதான் கொடுப்பார்கள். இவரால் விஞ்ஞான உண்மைகளைப்புரிய முடியாது. ஆங்கிலத்தில் உள்ளவைகளைப் படிக்கவியலாது./

அதில் தவறேதும் கிடையாது....அவர் எல்லாவற்றையும் தெரிந்துதான் எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. எல்லாம் தெரிந்தவன் எவனுமே கிடையாது இவ்வுலகில்..நுனிப்புல் மேய்ந்து விட்டு எல்லாரையும் குற்றம் கண்டு பிடித்துக்கொண்டிருந்தால் அவரது வாழ்க்கைதான் வீணாகும் என்ற அக்கறையில் தான் சொல்கிறேன்!

South-Side said...

அன்பு தொப்பிதொப்பி...

பதிவின் நோக்கத்தைக்கூட புரிந்து கொள்ளாத உங்களிடம் பேசுவதில் கொஞ்சமும் இஷ்டமில்லையெனினும் ஒரு கருத்துக்க்கு மட்டும் பதில் சொல்ல வேண்டுமென நினைக்கிறேன்.!

////இப்படியெல்லாம் கேள்வி கேட்டு தினத்தந்திக்கு ஒரு கடிதம் எழுதுங்க ஏனா நீங்க உண்மைத்தமிழன் அவர்களிடம் கேட்டிருக்கும் கேள்வி அப்படித்தான் இருக்கு.

நேத்து நைட்டு ஸ்பெக்ட்ரம், gsm,cdma பற்றிய தகவல்களை இணையத்தளத்தில் கண்ணு முழிச்சி படிச்சிங்களோ?/////

கேள்விகளை இரண்டு விதமாக நீங்கள் பாருங்களேன்.....
ஒன்று - அடிப்படை எனக்கு தெரியவில்லை ,அதனால் நீங்கள் சொல்லவரும் விடயம் எனக்கு புரியவில்லை.
இரண்டு - நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்களில் அடிப்படையே தவறானது, அதனால் இந்தக்கேள்விகளுக்கான புரிதலை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா என்று கேட்பது...

இதில் நான் கேட்ட கேள்விகள் இரண்டாவது ரகம்!! தேவைப்பட்டால் தினத்தந்தியிடம் கேட்பதில் தவறில்லைதானே?


//பதில் படிக்கும்படியும் இருக்கலாம்..இல்லையென்றால் உங்களின் வழக்கமான ஸ்டைலின் நீளத்துக்கும் இருக்கலாம்...படிக்க நான் ரெடி , இந்த ஒருமுறையாவது முழுதும் !!! //


/////இதுவரைக்கும் ஒருமுறை கூட முழுவதும் படிக்காததால்தான் இப்படி சின்னப்புள்ளதனமா கேள்வி கேட்டு /////

ஐ.ம் ஸாரி பாஸ்...அதுமட்டும் என்னால முடியாது......என் தோல்விய நான் ஒத்துக்கிடறேன்.!

South-Side said...

1G மற்றும் 2G க்கு இடையே உள்ள மிக பெரிய வித்யாசம், 1G is analog, 2G is digital. இப்போது நடைமுறையில் உள்ள எல்லா மொபைல் போன் சர்வீஸ் அனைத்தும் டிஜிட்டல் மட்டுமே. 1G நடைமுறையில் இல்லை. அதனால், 2G பெரு நகரத்தில் மட்டுமே உபயோகப்படும் சர்வீஸ் இல்லை. அனைவரும் உபயோகப்படுத்துவதால் தான் அந்த அலைவரிசைக்கு இவ்வளவு மதிப்பு!//

அது ஒரு பெரிய வித்தியாசமும் கிடையாது...



வாய்ஸ் டெலிபோன்களில் சிறிய மேம்பாடு தவிர , ஜி.பி.ஆர்.எஸ் / வேப் போன்றவற்றில் தான் பெரிய முன்னேற்ற்றம்! சிம்பிளா சொன்னா , டேட்டா சர்வீஸஸ்லில் ( மன்னிக்கவும்...தமிழில் சொல்ல ஆசைதான்...திரும்பப் படிச்சா எனக்கே புரிய மாட்டேங்குது!)

முழுதும் படிக்க இதோ லிங்க்கு..!!!

Analysis of 1G and 2G services

In 1G, Narrow band analogue wireless network is used, with this we can have the voice calls and can send text messages. These services are provided with circuit switching. Today’s the usual call starts from the beginning pulse to rate to the final rate. Then in case of 2G Narrow Band Wireless Digital Network is used. It brings more clarity to the conversation and both these circuit-switching model.

Both the 1G and 2G deals with voice calls and has to utilize the maximum bandwidth as well as a limited till sending messages i.e. SMS. The latest technologies such as GPRS, is not available in these generations. But the greatest disadvantage as concerned to 1G is that with this we could contact with in the premises of that particular nation, where as in case of 2G the roaming facility a semi-global facility is available.

2.5 Generation

In between 2G and 3G there is another generation called 2.5G. Firstly, this mid generation was introduced mainly for involving latest bandwidth technology with addition to the existing 2G generation. To be frank but this had not brought out any new evolution and so had not clicked to as much to that extend.

http://hubpages.com/hub/3G-and-4G-Mobile-Services

அஞ்சா சிங்கம் said...

எனக்கு தெரிஞ்சி 2 ஜி சோனியாஜி மன்மோகன்ஜி ....
அப்புறம் என்ன கேட்டீங்க 3 ஜி சோனியாஜி மன்மோகன்ஜி ராகுல் ஜி ...........
4 ஜி தெரியனுமா சோனியாஜி மன்மோகன்ஜி ராகுல் ஜி கலைஞ்சர் ஜி .................
மக்கள் எல்லாம் முட்டா பசங்க அவங்க எல்லாம் ஜி ... நாம எல்லாம் வெறும் சீ ...................

South-Side said...

ஸ்பெக்டரம் விசாரணையிலிருந்து பாஜக எஸ்கேப்!!

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக பாஜக முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் அருண் ஷோரி நேற்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்தார். குடும்பத்தில் ஒருவருக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய வீட்டு வேலை இருப்பதால் தன்னால் வர முடியவில்லை என்று சிபிஐக்கு அவர் தகவல் அனுப்பியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் புன்னியவான் வேடம் போட்டு வரும் பாஜகவின் ஆட்சியில் தான் முதலில் வருபவர்களுக்கு முதலில் ஸ்பெக்ட்ரம் என்ற முறையும், வேண்டியவர்களுக்கு அதை ஒதுக்கித் தரும் முறைகேடும் ஆரம்பித்தன.

இந்த விஷயத்தில் மறைந்த பிரமோத் மகாஜன், அருண் ஷோரி ஆகியோர் மீதும் பெரும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந் நிலையில் அருண் ஷோரியை நேறறு விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பியது சிபிஐ.

இந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான கமிட்டியும் பாஜக ஆட்சியில் தான் இந்த விவகாரத்தில் முறைகேடுகளுக்கு வித்திடப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால் இந்தக் கமிஷன் முற்றிலும் தவறாகவும், உண்மையை திரித்து கூறியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் கபில் சிபல், ராஜாவின் வக்கீல் போல் செயல்படுவதாகவும் அருண் ஷோரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2011/02/22/arun-shourie-fails-appear-before-cbi-2g-spectrum-aid0090.html

வடகரை வேலன் said...

நான் சொன்ன குற்றச்சாட்டுகளை எளிதாகப் புறந்தள்ளிவிட்டீர்கள்.

1. முடிவுத் தேதியை முன் தள்ளவேண்டிய அவசியம் என்ன?

2. அதிக விலைக்கு வாங்க ஆளிருந்தும் குறைந்த விலைக்குக் கொடுத்தது ஏன்?

மா சிவகுமார் said...

//2 ஜி ஸ்பெக்டரம் என்றால் என்ன? அது செல்போன் கண்டுபிடிச்சாப்ல இருந்தே இருக்கா? இல்லன்னா அதுக்கு முன்னாடி எப்படி செல்போன் உபயோகிச்சாங்க?//

2G ஸ்பெக்ட்ரம் என்பது உலகம் தோன்றியதில் இருந்தே இருக்கிறது.

செல்போன் கண்டுபிடிப்பதற்கு முன்பு 2G அலைக்கற்றை பிற இடங்களில் சிறிதளவு பயன்படுத்தப்பட்டது. (பாதுகாப்புத் துறையிடம் இந்த அலைக்கற்றைகளின் கட்டுப்பாடு இருந்தது).

//நாம உபயோகப்படுத்தற எல்லா செல்பேசிகளிலும் 2ஜியை உபயோகப்படுத்துறோமா? அப்படீன்னா , அது கரீக்டா இன்னா வேலை செய்யுது? இல்லேன்னா சுமார் எத்தினி சதவீதம் பேர் 2ஜி உபயோகிப்பாங்க?//

இப்போது பயன்படுத்தும் செல்பேசிகளில் பெரும்பாலானவற்றில் 2G அலைக்கற்றை பயன்படுத்தப்படுகிறது. எத்தனை சதவீதம் என்று புள்ளிவிபரம் தேடிப்பார்த்தால் கிடைக்கும்.

//ஜி.எஸ்.எம் ந்னா இன்னா? சி.டி.எம்.ஏன்னா இன்னா? அதுக்கும் 2ஜிக்கும் தொடர்ப்பிருக்கா?//

http://www.buzzle.com/articles/gsm-vs-cdma.html

GSM
Coverage area is divided into various hexagonal shaped cells.

Network tower serves the mobile phones in that cellular area.

CDMA
There are many devices which use the same spread spectrum.

There is one physical channel, and a special code for every device in the coverage network.

//இப்ப 3ஜின்னு ஒரு டெக்னாலஜி வந்திருக்கே, இத வச்சி இன்னா பண்ணலாம்.....? //

வீடியோ பரிமாற்றத்துக்கு உதவுதாம்.

//பல லட்சம் கோடி நஷ்டம்ங்கிறாங்களே.......ராசாவுக்கு முன்னாடி யாரும் 2ஜியே பேசலையா.//

பேசினாங்க, 1990களில் இருந்தே பேசிக் கொண்டிக்கிறார்கள். அப்போ எல்லாம் செல்போன் பயன்பாட்டுக்கான சந்தை மிகவும் சிறியது. சேவை அளிக்கக் கூட பல நிறுவனங்கள் முன்வரவில்லை.

//அதுமூலமா வருசா வருசம் வந்த லட்சக்கணக்கான கோடி ரூவா வருமானத்தை இந்தியா கவுருமெண்டு எந்த பேங்க்க்குல போட்டிச்சி? அதுக்கெல்லாம் எங்க கணக்கு? ( நன்றி , பட்டாபட்டியோட பதிவுல வந்த பின்னூட்டம்!)//

அதனால் அந்த காலகட்டத்தில் சேவை அளித்து சந்தையை உருவாக்க நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக குறைந்த உரிமக் கட்டணத்துடன் முன் வந்தவர்களுக்கு அலைக்கற்றை அளித்தார்கள். (அதற்கு போட்டா போட்டி இல்லை, கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது).

//ஒரு வேளை ராசாவுக்கு முன்னாடி அந்த ஸ்பெக்டரத்த ஒதுக்கீடு செய்யவே இல்லன்னா , பல லட்சம் கோடிக்கு போகும் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்யாம அது மூலமா கவுருமெண்டுக்கு வந்த நட்டத்துக்கு யாரு பொறுப்பு?//

அப்போ பயன்பாடே குறைவாக இருந்தது. அதனால் ஸ்பெக்ட்ரமும் தேவைப்படவில்லை. (ஆளில்லா ஊரில் டீக்கடை வைக்கவில்லை என்று ஏன் நொந்து கொள்ள வேண்டும்?)

கடந்த பத்தாண்டுகளில் செல்பேசி பயன்பாடு பல மடங்காக வளர்ந்ததால் சந்தையின் அளவும் வளர்ந்தது. அதனால் செல்பேசி சேவை உரிமத்தின் மதிப்பும், அலைக்கற்றையின் மதிப்பும் உயர்ந்தது.

காடாகக் கிடந்த இடத்தில் சதுர அடி 50 ரூபாய்க்கு 1990ல் நிலம் விற்றார்கள். இப்போ அந்த இடத்தில் 6 வழிச் சாலை போட்டு, அருகில் பெரிய மருத்துவமனை கட்டப்பட்டு, புகழ்பெற்ற பள்ளிக் கூடம் தொடங்கப்பட்டு விட்டது.

அந்த இடத்தில் இருக்கும் புறம் போக்கு நிலத்தை, 'அப்போ 50 ரூபாய்க்குத்தானே விற்றோம்' என்று விற்பனைக்கு அறிவிக்கிறார்கள்.

விற்பதையும், இடத்தை பலனுள்ள வகையில் பயன்படுத்துபவர்களுக்கு விற்காமல், தனக்குத் தெரிந்தவர்கள், இடைத்தரகர்களுக்கு விற்று விட்டார்கள்.

50 ரூபாய் சதுர அடி என்று இடத்தை வாங்கிய கும்பல், 1000 ரூபாய் சதுர அடிக்கு என்று சில நாட்களிலேயே விற்று கொள்ளை லாபம் பார்க்கிறது.

50 ரூபாய் விலையில் நிலம் வாங்கியவர்களில் சிலர், விற்பனைக்குப் பொறுப்பான அரசுப் பிரதிநிதிக்குத் தொடர்புடைய அமைப்புகளுக்கு பணம் கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது.

இப்போ விற்பனை செய்தவரின் மீது சந்தேகம் வருமா வராதா?

மா சிவகுமார்

Prakash said...

Those people are really funny and entertaining. They never go into real facts, whether that much amount worth of scam is really possible or not.

Just by seeing some huge numbers they'll quickly jump into conclusion and start mud sledging.

If some one says, A buffalo drove a Aircraft, these type of people shall immediately say that, “Why DMK has not used Buffalos to fly Aircrafts, because of that 2 Lack Crores was loss!!!!" Other like minded persons will say, "That's Correct"

South-Side said...

நான் சொன்ன குற்றச்சாட்டுகளை எளிதாகப் புறந்தள்ளிவிட்டீர்கள்.

1. முடிவுத் தேதியை முன் தள்ளவேண்டிய அவசியம் என்ன?

2. அதிக விலைக்கு வாங்க ஆளிருந்தும் குறைந்த விலைக்குக் கொடுத்தது ஏன்?//

நிச்சயமாக புறந்தள்ளவில்லை நண்பரே....அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அது தவறு என்றுதான் நானும் சொல்கிறேன்...

அதுபற்றிய விசாரணையின் முடிவு வருவதற்கு முன்பே எப்படி நாமாக குற்றவாளி அவர் என்று முடிவு செய்யலாம் என்கிறேன்.

South-Side said...

//பல லட்சம் கோடி நஷ்டம்ங்கிறாங்களே.......ராசாவுக்கு முன்னாடி யாரும் 2ஜியே பேசலையா.//

பேசினாங்க, 1990களில் இருந்தே பேசிக் கொண்டிக்கிறார்கள். அப்போ எல்லாம் செல்போன் பயன்பாட்டுக்கான சந்தை மிகவும் சிறியது. சேவை அளிக்கக் கூட பல நிறுவனங்கள் முன்வரவில்லை.



//ஒரு வேளை ராசாவுக்கு முன்னாடி அந்த ஸ்பெக்டரத்த ஒதுக்கீடு செய்யவே இல்லன்னா , பல லட்சம் கோடிக்கு போகும் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்யாம அது மூலமா கவுருமெண்டுக்கு வந்த நட்டத்துக்கு யாரு பொறுப்பு?//

அப்போ பயன்பாடே குறைவாக இருந்தது. அதனால் ஸ்பெக்ட்ரமும் தேவைப்படவில்லை. (ஆளில்லா ஊரில் டீக்கடை வைக்கவில்லை என்று ஏன் நொந்து கொள்ள வேண்டும்?)

கடந்த பத்தாண்டுகளில் செல்பேசி பயன்பாடு பல மடங்காக வளர்ந்ததால் சந்தையின் அளவும் வளர்ந்தது. அதனால் செல்பேசி சேவை உரிமத்தின் மதிப்பும், அலைக்கற்றையின் மதிப்பும் உயர்ந்தது. //

1990 லிருந்து நேரே 2008 க்கு வந்துவிட்டீர்கள்......இடையிலிருக்கும் 2006 , 2007 பற்றிய நிலவரங்களைத்தான் கேட்கிறேன்!

நீங்கள் சொல்லும் பத்தாண்டுகளின் ஆரம்பம் 1998லிருந்து ஆரம்பிக்கிறது......அதுவரை செல்போன் உபயோகிப்பாளர்களின் விகிதாச்சாரம் படிப்படியாகவே உயர்ந்திருக்க முடியும் என்று நம்புகிறேன்!

====

South-Side said...

காடாகக் கிடந்த இடத்தில் சதுர அடி 50 ரூபாய்க்கு 1990ல் நிலம் விற்றார்கள். இப்போ அந்த இடத்தில் 6 வழிச் சாலை போட்டு, அருகில் பெரிய மருத்துவமனை கட்டப்பட்டு, புகழ்பெற்ற பள்ளிக் கூடம் தொடங்கப்பட்டு விட்டது.

அந்த இடத்தில் இருக்கும் புறம் போக்கு நிலத்தை, 'அப்போ 50 ரூபாய்க்குத்தானே விற்றோம்' என்று விற்பனைக்கு அறிவிக்கிறார்கள்.

விற்பதையும், இடத்தை பலனுள்ள வகையில் பயன்படுத்துபவர்களுக்கு விற்காமல், தனக்குத் தெரிந்தவர்கள், இடைத்தரகர்களுக்கு விற்று விட்டார்கள்.

50 ரூபாய் சதுர அடி என்று இடத்தை வாங்கிய கும்பல், 1000 ரூபாய் சதுர அடிக்கு என்று சில நாட்களிலேயே விற்று கொள்ளை லாபம் பார்க்கிறது.

50 ரூபாய் விலையில் நிலம் வாங்கியவர்களில் சிலர், விற்பனைக்குப் பொறுப்பான அரசுப் பிரதிநிதிக்குத் தொடர்புடைய அமைப்புகளுக்கு பணம் கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது.

இப்போ விற்பனை செய்தவரின் மீது சந்தேகம் வருமா வராதா?

மா சிவகுமார்//

கண்டிப்பாக வரும்.....தெரிந்தே செய்த விற்பனைக்கும் ,தெரியாமல் செய்த விற்பனைக்கும் வித்தியாசம் உண்டு....ஒட்டுமொத்த விற்பனையாளர் ( அரசாங்கம்...)மீதுதான் குற்றம் சுமத்தவேண்டுமே ஒழிய ஒரு தனிப்பட்ட நபர் மீதல்ல....இன்று காங்கிரஸ் பெரும்தலைகளும் ,கார்ப்பரேட் புள்ளிகளும் சேர்ந்து சிண்டிகேட் போட்டு செய்த ஒரு கொள்ளையில் ராசாவை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என்பதே என் கருத்து...

அதுவும் , செல்போன் கட்டணங்களை வெகுவாக குறைத்தத்ன் மூலம் தொலைத்தொடர்பு முதலைகளுக்கு ராசா மீதிருந்த கோபமும் , பத்திரிக்கைகளின் உயர்பதவியிலிருக்கும் பார்ப்பனர்களின் இயல்பான திமுக வெறுப்புமே இப்பிரச்சினையை பூதாகரமாக்கியிருக்கிறது என்பதுவும் ஒரு குற்றச்சாட்டு...

ஏன் பர்கா தத் நீரா ராடியா இவர்களின் டேப் மட்டும் மீடியாக்களின் கவனத்திர்கு வருவதில்லை???

South-Side said...

Those people are really funny and entertaining. They never go into real facts, whether that much amount worth of scam is really possible or not.

Just by seeing some huge numbers they'll quickly jump into conclusion and start mud sledging.

If some one says, A buffalo drove a Aircraft, these type of people shall immediately say that, “Why DMK has not used Buffalos to fly Aircrafts, because of that 2 Lack Crores was loss!!!!" Other like minded persons will say, "That's Correct"//


நன்றீ திரு.பிரகாஷ்....உரியவ்ர்கள் புரிந்து கொள்ளட்டும்!!

South-Side said...

இரண்டு லட்சம் கோடி ரூபாய் ஊழல் ஒருவேளை மன்மோகன் சிங்கின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் இஸ்ரோவின் நடந்திருக்கலாம் என்றன மீடியாக்கள்....

ஒதுக்கீட்டை ரத்துசெய்தால் மட்டும் ஊழல் இல்லையென்று ஆகிவிடுமா? அப்படியானால் அதே அணுகுமுறையை ஏன் 2ஜி ஒதுக்கீட்டிலும் கடைபிடிக்கவில்லை?

அதுபற்றி மட்டும் ஏன் வட இந்திய மீடியாக்கள் குரல் எழுப்புவதில்லை?

bandhu said...

//அதுவும் , செல்போன் கட்டணங்களை வெகுவாக குறைத்தத்ன் மூலம் தொலைத்தொடர்பு முதலைகளுக்கு ராசா மீதிருந்த கோபமும் ,...//
எப்படிங்க இப்படி? செல்போன் கட்டணம் குறைந்ததற்கும் ராஜாவிற்கும் என்ன சம்பந்தம்? நிறைய போட்டியாளர்களால் விலை குறைந்தது. இது இந்தியாவில் மட்டுமல்ல. உலகெங்கும் நடப்பது. விலை குறைந்ததற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

South-Side said...

அன்பு பந்து..

அதெப்படிங்க முழு பூசணியை சோத்தில் மறைக்கறீங்க...??? பி.எஸ்.என்.எல்லும் ஒர் போட்டியாளர்தானே? சேவை நோக்கில் அதன் அழைப்பிற்கான கட்டணத்தை குறைத்ததே செல்போன் கட்டணங்கள் குறைய முழுமுதற் காரணம்? இல்லை ஏர்டெல் போன்ற பெருமுதலைகள் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நிமிடத்திற்கு 40 பைசா கட்டணத்தில் நம்மைப் பேசச்சொல்கிறார்களோ
?

இதுவரை நாம் சென்றுவந்த 7 நாடுகளில் இந்தியா அளவிற்கு குறைந்த உள்ளூர்க்கட்டணம் வேரெங்கும் இல்லை......

இண்டர்நெட்டில் கிடைத்தவை.

அமெரிக்காவின் வெரிஜோன் வயர்லஸ் நிமிடத்திற்கு ( ப்ரிபெய்டு) 4 ரூபாய்க்கு மேல் வசூலிக்கிறது.
சிங்கப்பூரின் சிங் டெல் ஒருநாளைக்கு 21 ரூபாய் இன்கமிங் வசதிக்கு வசூலிப்பதோடு வார நாட்களில் ஒரு நிமிடத்திற்கு ஐந்து ரூபாய் உள்ளூர்க்கட்டணமாகவே வசூலிக்கிறார்கள்.!இன்னும் நிறைய , நிறைய உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்!

அங்கெல்லாம் போட்டியாளர்களே இல்லையா? இருக்கிறார்கள்...அரசாங்க மொபைல் ஆப்பரேட்டர்களும் இருக்கிறார்கள்...என்ன அங்கெல்லாம் தனியார் நிறுவனங்களும் , அரசு நிறுவனங்களும் சிண்டிகேட் போட்டுக்கொண்டு விலையைக் குறைப்பதில்லை..இங்கேயும் நமது கார்ப்பரேட் நிறுவனங்கள் அதைத்தான் செய்ய நினைக்கின்றன...!


இந்தியாவை விடக் குறைந்த கட்டணம் உள்ள நாடுகள் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் உள்ளூர்க்கட்டணங்கள் அதிகம் என்று சொல்ல முடியாது என்றால் அதற்கு ராசாவோ , திமுக வோ காரணம் இல்லையா என்பதே என் கேள்வி?