மக்கள் திமுக ஆட்சி மீது வெறுப்பாக இருக்கிறார்கள்...ஊழலைக் கண்டுபிடித்ததே திமுகதான்.......ஊழலற்ற ஆட்சிக்கு அப்பழுக்கற்ற புரட்சித்தலைவிதான் வேண்டும் என்று வலையுலக இரத்தத்தின் இரத்தங்களும் , இன்னபல வலையுலகப் புரட்சியாளர்களும் , பத்திரிக்கைகளும் கூவிக்கொண்டிருக்கிறார்கள்...
அவர்களுக்கெல்லாம் "டான்சி" நிலம் பற்றியோ இல்லை பிற ஊழல்களைப் பற்றியோ நாம் சொல்லி அப்பழுக்கற்ற புரட்சித்தலைவியை அவமானப்படுத்துவது நம் நோக்கமல்ல..
அத்தகைய ஊழல்களிலிருந்து வெளியே வர அம்மாவின் தொண்டர் திரு.மைத்ரேயன் அவர்கள் ஒருவரிடம் அவர் தான் நீதிபதி என்று நினைத்து பேரம் பேசியிருக்கிறாராம்....அந்தப் போலி நீதிபதியை பிடித்துவிட்டார்களாம்...இப்படியொரு செய்தியை தினமலர் வெளியிட்டிருக்கிறது.....
மதுரை: பெங்களூருவில் நடக்கும் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க மைத்ரேயன் எம்.பி.,யிடம் பேரம் பேசிய போலி நீதிபதி முத்து விஜயகுமார் (52) மதுரையில் கைது செய்யப்பட்டார். இவர், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த இவர், மேலூர் கோர்ட்டில் ஜூனியர் பெய்லீப்பாக பணியாற்றுகிறார். கடந்த 2006ல், எழுமலையை சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் கருப்பையாவின் மகன், மருமகனுக்கு மதுரை கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, 45 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடி செய்தார். இவரை மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் எஸ்.பி., மயில்வாகனன், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜேசுஜெயபால் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டை சோதனையிட்ட போது, வேலை மற்றும் பணியிட மாறுதல் தொடர்பான 15 விண்ணப்பங்கள், மூன்று மொபைல் போன்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் முகவரி, போன் எண்கள் கொண்ட புத்தகம், கார் "சைரன்' இருந்தது. அவரை தீவிரமாக விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பாலசுப்பிரமணியன், கமிஷனர் பாரி உத்தரவிட்டனர்.
எம்.பி.,யிடம் பேச்சுவார்த்தை: கடந்த ஜனவரியில், அ.தி.மு.க., எம்.பி., மைத்ரேயனை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு, "நான் நீதிபதி தினகரன் பேசுகிறேன். ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கை அவருக்கு சாதகமாக முடித்து தருகிறேன்' என முத்து விஜயகுமார் பேரம் பேசியுள்ளார். தொடர்ந்து 10 நாட்களில் நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்.நன்றி : தினமலர்
அவர் பேசியதாலேயே ஜெயலலிதா புழக்கடை வழியாக வெளியே வர முயற்சிக்கிறார் என்று நாம் சொல்லவில்லை...ஆனால், அத்தகைய பேர்வழியிடம் தொடர்ந்து நான்கு முறை திரு.மைத்ரேயன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார் ( தெரிந்து இவ்வளவு...தெரியாதது???) என்றால் அதுபோன்ற முயற்சிகளில் அம்மாவின் ஆதரவின்றி எப்படி முடியும் என்பதே நமது கேள்வி!!!!
சிக்கிக்கொண்டது போலி நீதிபதி மட்டும்தானா?
1 comment:
தமிழ்மணத்துல நெகட்டிவ் ஓட்டுப் போட்டவரு , பின்னூட்டத்தில ஏன் போட்டேன்னு வந்து சொல்லவும்!! இல்லாங்காட்டி இன்னோரு ஐடியில வந்து ஒரு பாஸிட்டிவ் ஓட்டுப் போட்டாகணும்!!! அக்காங்.!
Post a Comment