Thursday, February 24, 2011

பிரபல பதிவர்கள் படிக்க விரும்பாத ஒரு செய்தி.!

எல்லா செய்திகளையும் அக்குவேறாக , ஆணிவேறாக ஆராய்ந்து   பதிவெழுதும் சிலருக்கு  பிடிக்காத செய்தி ஒன்று ஒரு சில (உண்மையாகவே ஒருசில) பத்திரிக்கைகளில் மட்டும்  வந்திருக்கிறது..


நாளொரு மேனியும் ,பொழுதொரு வண்ணமும் கருணாநிதியையும் , அவர்தம் அரசையும் குறைகூறிப் பொழுது போக்குபவர்களுக்கும்  , உலகத்தின் சிறந்த முதல்வர் நரேந்திர மோடி என்று பில்ட் அப் காட்டுபவர்களுக்கும் பதில் சொல்லும் அந்தச் செய்திதான் என்ன?

பிரபல வட  இந்திய  ஆங்கிலத் தொலைக்காட்சியான சி.என்.என். ஐ.பி.என் வழங்கும் இந்தியாவின் சிறந்த மாநிலம் ( CNN-IBN's Diamond states award ) விருதினை தமிழகம் பெற்ற செய்திதான் அது.


ஒட்டுமொத்த விருதினை தமிழகம் பெற்றதோடு மக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த மாநிலத்துக்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது. 



இதுபற்றிய செய்தி.
சென்னை: சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியின், சிறந்த இந்திய மாநிலத்திற்கான வைர மாநில விருது தமிழகத்திற்குக் கிடைத்துள்ளது. இந்த விருதை துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சி.என்.என்.-ஐ.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம், 2008ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களைத் தேர்வு செய்து, அம்மாநிலங்களுக்கு வைர மாநில விருதுகள் வழங்கி வருகிறது.

2010ஆம் ஆண்டிற்கு 9 பிரிவுகளின் கீழ் வைர மாநில விருதுகளும், சிறப்பு விருதுகளாக இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம், சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில், தமிழ்நாடு-இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற சிறப்பு விருதினையும்; குடிமக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த மாநிலத்திற்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது.

சி.என்.என்.-ஐ.பி.என். செய்தி நிறுவனம் சார்பில் 23.2.2011 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற சிறப்புமிகு விழாவில், இந்த விருதுகளை குடியரசுத் துணைத்தலைவர் அமீத் அன்சாரி அவர்கள், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம் வழங்கியதுடன், முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்குத் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவிக்குமாறும் கூறினார்.

சி.என்.என்.-ஐ.பி.என். செய்தி நிறுவனம் வழங்கிய இந்த விருதுகளை -முதல்வர் கருணாநிதியிடம் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காண்பித்தார்.

இந்நிகழ்வின்போது, நிதியமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி, உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, உணவு அமைச்சர் எ.வ.வேலு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகளுக்கான நீதிபதிகள் யார்...? தேர்வு செய்த முறையென்ன?

The selection process for ‘IBN7 Diamond States Awards 2011’ was a credible multi-pronged approach involving secondary data from authentic sources and primary data from a nationwide research exercise conducted by Nielsen, the research partner for the awards. KPMG, the independent Knowledge Partner managed the process, methodology and the data for arriving at the best states for the various categories of the awards.

The list of parameters in each category were evaluated by the best journalistic brains in the country from IBN18 Network Editorial Board & the Outlook Editorial Board comprising of Raghav Bahl, Rajdeep Sardesai, Ashutosh, Vinod Mehta & Neelabh Mishra. A five member jury comprising well-known personalities drawn by different walks of life, deliberated on the categories, criteria and parameters to finalize the framework of selection and ranking of states across the different categories.

The Jury included eminent citizens like Dr. Bimal Jalan – Former RBI Governor & Chairman of the Jury, Mr. M Damodaran – Former Chairman SEBI, Dr. Bakul H Dholaki - Former Director IIM-A, Mr. TSR Subramanium – Ex- Cabinat Secretary, Govt of India, Dr. Shaibal Gupta – Secretary Asian Development Research Institute.

At the occasion, Rajdeep Sardesai, Editor-in-Chief, IBN18 Network said, “IBN7 Diamond States Awards celebrate excellence in human and social development among Indian states. They truly signify the diamond standard for good governance in India. These winners have been arrived at through a rigorous and credible evaluation process.”

Ashutosh, Managing Editor, IBN7 added, “We congratulate the states, on this wonderful acknowledgement of their work. Their story illustrates not only the Indian dream but also their mission to improve the human and social standards of the country.”

ALCHEMIST Group, one of India’s fastest growing publicly traded Conglomerates with interests in Food Processing, Hotels & Resorts, Restaurants, Road Technologies and Healthcare is the presenting sponsor for the awards.
முழுச்செய்திக்கு இணைப்பினை அழுத்தவும்!



Winners of IBN7 Diamond States Awards 2011
Category Best Big State Best Small State
Citizen Security Tamil Nadu Sikkim
Core Infrastructure Gujarat Delhi
Education Kerala Himachal Pradesh
Employment Andhra Pradesh Mizoram
Environment N/A Jammu & Kashmir
Healthcare Kerala Goa
Poverty Reduction Chhattisgarh Himachal Pradesh
Water and Sanitation Tamil Nadu Tripura
Women Empowerment Tamil Nadu Nagaland 

9 comments:

Anonymous said...

ஓக்கே இருக்கட்டும் ! என்ன சொல்ல வருகிறீர்கள் சிஎன்என் விருது தமிழகத்துக்கு கிடைத்தது சரி ! அதனால் தமிழகம் சிறந்த மாநிலமா??? நோ நோ ...... எந்த திருடனில் நல்லத் திருடன். எந்த கேப்மாறியில் உத்தம கேப்மாறிக்கு விருதுக் கொடுத்து இருக்கிறார்கள். உலகம் தெரியாத கிணற்றுத்தவளைகளாய் இருந்த 20 வருடத்துக்கு முன் இந்தச் செய்தியைக் கேட்டிருந்தால் துள்ளிக் குதித்து சந்தோசப்பட்டு இருக்கலாம். ஆனால் இப்போலாம் காபி குடிக்க சிங்கப்பூர் போற, டிஃபன் சாப்பிட லண்டன் போற காலம். போக முடியாட்டியும் இண்டர்னெட்ல பார்க்கிறோம். அப்படி இருக்க. இவர்கள் செய்தது எல்லாம் ஒரு சாதனை அதுக்கு விருது . தூ... கத்தேறி........ சென்னையில் மழை நீர் பெருகிய சேற்றுச் சாலை. கட் ஆகும் கறண்ட். சுற்றுச்சூழல் கேடு இப்படி வாழத்தகாத நாட்டில் இருக்கும் போது. இந்த விருதுகள் எம்மை மேலும் கொதிப்ப்டையச் செய்கிறது

ramalingam said...

இந்த ஆரியத் தொலைக்காட்சிகள் கொடுக்கும் விருதை தன்மானமுள்ள முதல்வர் புறக்கணிக்க வேண்டும்.

Dominic RajaSeelan said...
This comment has been removed by the author.
Dominic RajaSeelan said...

நண்பா உங்கள் தகவலுக்கு நன்றி. நம்முடைய இணையதள வெட்டி பேச்சு வீரர்களுக்கு கலைஞர் என்றாலே பிடிக்காமல் போய்விட்டது. வெயிலின் அருமை நிழலில்தான் தெரியும். கலைஞர் இருக்கும் வரைக்கும் பிரச்சனை இல்லை. பாரதியாரையே இருக்கும்போது கிறுக்கன் , மனநிலை பாதிக்க பட்டவன் என்று சொன்ன தமிழகம் தான் இது. அவர் நமைவிட்டு பிரிந்த பிறகுதான் அவருடைய திறமை மக்களுக்கு தெரிந்தது.

South-Side said...

வணக்கம் இக்பால் செல்வன்.

இலங்கையில் சாதியம் என்ற பதிவில் உங்கள் ஆணித்தரமான வாதங்களை மிகவும் ரசித்தேன்..வாழ்த்துக்க்கள்..

சரி இப்ப வருவோம் மேட்டருக்கு....

எப்போதும் கருணாநிதியைக் குறை சொல்லும் கூட்டம் (என்னையும் சேர்த்து) பற்றி மட்டுமே என் பார்வை!!

சென்னையிலும் சேற்றூச்சாலை இருக்கிறது...மும்பையிலும் சேற்றுச்சாலை இருக்கிறது....எந்த மாநில அரசாங்கம் சரியாகச் செயல்படுகிறது என்பதற்கே விருது....

குற்றங்களை மட்டுமே சொல்லிக்காட்டுபவர்களின் உள்நோக்கம் என்னவென்பதையே நாம் வினவுகிறோம்!

நீங்கள் சொல்வதெல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவின் குறைகள்!!!

South-Side said...

இந்த ஆரியத் தொலைக்காட்சிகள் கொடுக்கும் விருதை தன்மானமுள்ள முதல்வர் புறக்கணிக்க வேண்டும்./

அன்பு ராமலிங்கம்...இவர்கள் விருது கொடுத்துத்தான் துணைமுதல்வரின் திறமை தெரிய வேண்டிய அவசியம் இல்லை....

தனிப்பட்ட துறைகளில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட மூன்று விருதுகளில் இரண்டுக்குச் சொந்தக்காரர் ஸ்டாலின் என்பது கொசுறு தகவல்!!

South-Side said...

பிளாகர் Dominic RajaSeelan கூறியது...

நண்பா உங்கள் தகவலுக்கு நன்றி. நம்முடைய இணையதள வெட்டி பேச்சு வீரர்களுக்கு கலைஞர் என்றாலே பிடிக்காமல் போய்விட்டது. //

எனக்கும் கூடத்தான்,அவரது திரிசங்கு ஈழநிலையின் பால் இன்னமும் கூட வெறுப்பு, தணியாத கோபம் உண்டு!!! அதற்காக அதிமுகவுக்குக் காவடி தூக்கும் எந்தவொரு ஈழ ஆதரவாளரையும் என்னால் ஆதரிக்க முடியாது!

======

வெயிலின் அருமை நிழலில்தான் தெரியும். கலைஞர் இருக்கும் வரைக்கும் பிரச்சனை இல்லை. பாரதியாரையே இருக்கும்போது கிறுக்கன் , மனநிலை பாதிக்க பட்டவன் என்று சொன்ன தமிழகம் தான் இது. அவர் நமைவிட்டு பிரிந்த பிறகுதான் அவருடைய திறமை மக்களுக்கு தெரிந்தது.//

நன்றி...இருப்பவனைக் கொண்டாட மறுப்பது தமிழனுக்கே உள்ள குறைபாடு...இன்று ஈழத்தில் பிரபாகரனின் இல்லாமைதான் அவரது இறுப்பின் தேவையை உணர்த்துகீறது அல்லவா, அதுபோலத்தான்!

Anonymous said...

டோண்டு மகாராஜாவுக்கு இந்த இடுகை ஒரு பார்சல்

பாலசுப்ரமணியன் said...

@இக்பால் செல்வன்,
அழைத்தவுடன் 5 நிமிடத்தில் ஆம்புலன்ஸ், மூன்று மருத்துவக் கல்லூரிகள் அமைப்பு, பதிற்றாண்டுகளுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாகத் திறப்பு, ஆ.சு.நி. நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுவது, ஒரு ரூபாய் அரிசி, மளிகை பொருள்களை உள்ளடக்கிய நாட்டிலேயே சிறந்த பொது விநியோக முறை, ஆயிரக்கணக்கில் புதிய பேருந்துகள், நாட்டிலேயே குறைந்த பேருந்து கட்டணம், நுழைவுத் தேர்வு ரத்து, சமச்சீர் கல்விக்கான முதல் படியில் வெற்றி, நாட்டில் எங்கும் இல்லாத வகையில் தொடக்கக் கல்வியில் செயல்வழிக் கற்றல், ஆயிரக்கணக்கான பள்ளிகள் புதிதாகத் தொடக்கம், தரம் உயர்வு..... இன்னும் பல பல.

இதெல்லாம் "தூ.....த்தேறியா" இக்பால் செல்வன்? ஒருவேளை "நீங்கள் காபி குடிக்க சிங்கப்பூர் போற, டிஃபன் சாப்பிட லண்டன் போற" ஆளாயிருந்தால் இதெல்லாம் தூத்தேறிதான்.