Friday, February 18, 2011

அரசியற்களம்! முந்தும் திமுக!

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுவதிலும், உங்களையெல்லாம் சந்திப்பதிலும் மகிழ்ச்சி.

நன்று...தமிழகம் மீண்டுமொரு தேர்தலைச் சந்திக்கிறது.....தேர்தல் சூழலில் பெரிதான  விவாதக்களமோ இல்லை விடயங்களே இல்லாமல் வித்தியாசமான தேர்தலாகவே இருக்கிறது...

திமுக, காங்கிரஸ் , பாமக , விடுதலைச்சிறுத்தைகள் , முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் ஓரணியாக நிற்கின்றன.

இந்த அணியில் கொங்கு முன்னேற்றக் கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி இன்னபல சின்னச்சின்ன கட்சிகள் இடம் பெற வாய்ப்புக்கள் உண்டு.....

அதிமுக அணி இன்றைய சூழலில் குழப்பத்தில் தத்தளிப்பதாகவே தெரிகிறது....பொதுவாக அந்த அணி இப்படி அமையலாம்...

அதிமுக , தேமுதிக , மதிமுக,மூ.மு.க., ம.ம.க,நா.ம.கட்சி,இந்திய குடியரசுக்கட்சி  ,புதிய தமிழகம் மற்றும் சில சிறிய கட்சிகள்...!!

திமுகவிற்கு தனது இலவசத்திட்டங்களும் , அங்கிங்கெனாதபடி எங்கும் சீர்திருத்தப்பட்ட கிராமச்சாலைகளும் ,விவசாயக்கடன் தள்ளுபடியும் கைகொடுக்கும் என்பது நம்பிக்கை.........

காங்கிரஸுக்கோ ராகுலின் வருகையால் உத்வேகம் பெற்றிருக்கும் இளைஞர் காங்கிரஸூம் கைகொடுக்கும் என்பது நம்பிக்கை.....

பாமகவோ பெண்ணாகரம் தேர்தலில் இரண்டாம் இடம்   பெற்ற நம்பிக்கையில் திமுகவுடன் இணைந்து களம் காண்கிறது.

விடுதலைச்சிறுத்தைகளுக்கான வாக்குவங்கி வடமாவட்டங்களில் கணிசமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அதிமுக கணிசமான மாவட்டத்தலைவர்களை திமுகவிடம் இழந்திருந்தாலும் இன்னமும் கூட தனித்துவத்தை  இழந்துவிடவில்லை......இரட்டை இலைக்கான குறிப்பிடத்தகுந்த வாக்குவங்கியுடன் ஆட்சிக்கெதிரான வாக்குக்களும் நிச்சயமாக கூடுதல் பலமே.

வருவாரா மாட்டாரா என்ற குழப்பத்தில் கேப்டன்....ஒருவேளை விஜயகாந்த் அதிமுக அணியில் சேருவாரானால் அவருக்கு தற்போது கிடைக்கும் நடுநிலை வாக்குகள் சிதறிப்போகும் என்பது என் கணிப்பு.....எப்போதுமே இரு கட்சிகளையும் விமர்சித்து "எனக்கு ஒரு வாய்ப்புக்க்கொடுங்க" என்று ஓட்டுக்கேட்கும் விஜயகாந்த் இப்போது இரட்டை இலைக்கு வாக்குச் சேகரித்தால் மக்கள் அதை எங்ஙனம் எடுத்துக்கொள்வார்கள் என்பது  ஆய்வுக்குரியது.!


இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவரையும் இழந்து பரிதாப நிலையில் களம் காணும் கட்சி வைகோவின் மதிமுக.....அதிகம் பேசவேண்டிய  நிலையில் அவரும் இல்லை...அவரது கட்சியும்  இல்லை...


எப்போதுமே  அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் முக்குலத்தோரின் வாக்குகளுக்கு வேட்டு வைக்கப்போவது புதிய தமிழகத்துடனான கூட்டு என்பது  என்   வத்தலக்குண்டு நண்பரொருவரின் கருத்து....!

ஆக , தமிழகத்தை மூன்று மண்டலமாகப் பிரித்தால்  ஒருவேளை முடிவு எப்படி இருக்கலாம் என்பதற்கான என் கணிப்பு...


சென்னை + வடமாவட்டங்கள்.......

பாமக, வி.சி. பலத்துடன் பாரம்பரிய திமுக வாக்குகளுடன் இலவசத்திட்டங்களும் இணைந்து வெற்றிக்கூட்டணியாக திமுக கூட்டணியே இருக்கப்போகிறது...

அதிமுக+தேமுதிக + மக்களின் ஆளுங்கட்சி அதிருப்தி கூட்டணி சர்வநிச்சயமாக சரியான போட்டியைக்கொடுக்கும்...ஒருவேளை தேமுதிகவுடனான கூட்டணி இல்லையென்றால் அனேகமாக அனைத்துத்தொகுதிகளும்  திமுகவிற்கே செல்லும்!

தென்மாவட்டங்கள்...

என்னதான் மூவேந்தர் முன்னேற்றக்கழகமும் , கார்த்திக்கும்,  புதிய  தமிழகமும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டாலும் , தலித்களும் முக்குலத்தோரும் ஒரணிக்கு  வாக்களிப்பதில் சிரமம் இருக்கிறது....ஆனாலும் , அழகிரியின் சமிபத்திய அதிருப்தியும், சரத்குமார்  இணைந்தால் கொண்டுவரும் நாடார் ஓட்டுக்களும் அதிமுக கூட்டணிக்கே வெற்றிவாய்ப்பிலிருப்பதாக கணிக்க வைக்கிறது.....

ஒருவேளை அழகிரி பார்முலா முழுவீச்சில் வேலை செய்தால் சரிசமமான போட்டி இருக்கலாம்.......கிராமங்கள் நிறைந்த இந்த பெல்ட்டில் ஸ்பெக்டரமோ ஊழலோ தேர்தல் விடயமாக இருக்கப்போவதில்லை என்பதுவும்  ஒரு கூடுதல்  பாயிண்ட்.

கொங்குமண்டலம்...

எப்போதுமே அதிமுகவிற்கு ஆதரவான இந்த மண்டலம் இம்முறை எப்படி இருக்கப்போகிறது...

அதற்குமுன் செல்லுமுன் கடந்த தேர்தலைவிட மாறுபட்ட காட்சியொன்று இங்கே இருக்கிறது...இப்போது கொங்கு முன்னேற்றக் கழகம் என்ற கட்சியொன்று வெகுவேகமாக வளர்ந்திருக்கிறது....ஆரம்பித்த ஒரே வருடத்தில் அனேக பாராளுமனறத்தொகுதிகளில் லட்சக்கணக்கில் வாக்குகளை வாங்கிக்குவித்த கட்சியான இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று...

ஒட்டுமொத்த தமிழகத்தில் இன்றைய சூழலில் மிகவும் முன்னேறிய சமுகமாகவும் , பொருளாதார வளம் மிக்கவர்களாகவும் கருதப்படும் கவுண்டர்களின் கடசி எந்தக்கூட்டணியில் இடம்பெறும் என்பதையிட்டு முடிவுகள் மாற வாய்ப்புண்டு...

ஒருவேளை கொமுக ,  திமுக கூட்டணியில் இடம்பெறுமானால் சரிசமமான போட்டியே  நிலவும்.....தனித்து நிற்குமானால் அது ஆட்சிக்கெதிரான வாக்குக்களைப் பிரிப்பதன் மூலம் திமுக கூட்டணிக்கே  சாதகமாக இருக்கும்.......கொங்குமண்டலத்தின் அனேக சிட்டிங் எம்.எல்.ஏக்கள் அதிமுகவினர் என்பதும் அவர்களின் பாலான  அதிருப்தியும் திமுகவிற்கு ஒரு ப்ளஸ் ஆக அமையும்...கொங்கு மண்டலத்தின் தலித்களின் பெருமபாலானவர்கள் அருந்ததியர் என்பதுவும் அனேகர் அதிமுக ஆதரவாளர்கள் என்பதுவும் தெரிந்த ஒன்றே. அவர்களுக்கான உள் ஒதுக்கீடு ம், செம்மொழி மாநாடும் திமுகவிற்கு கணிசமாக வாக்குக்களை பெற்றுத்தரும் என்பதுவும் என் கணிப்பு!

ஒருவேளை அதிமுக, தேமுதிக , மதிமுக ,கொமுக இணைந்தால் கொங்கு மண்டலத்தில் இலை மலருவதைத் தவிர்க்க முடியாது...!!

காவிரி டெல்டா மாவட்டங்களைப் பற்றிய பெரிதான அரசியல் அறிவு எனக்கு இல்லை.

வடமாவட்டங்களில் திமுக முந்துவதும், தென் மற்றும் கொங்கு மாவட்டங்களில்  சரிசமமான போட்டியும் தற்சமய நிலவரமே...

கூட்டணிக்கணக்குகள் மாறும்போது கணிப்பும் மாறும்..அணிகள் இறுதியாகும்போது இன்னொருமுறை அலசுவோம்...

10 comments:

Anonymous said...

Different Perspective. let us see what will happen.

MUTHU said...

அதிமுக+தேமுதிக + மக்களின் ஆளுங்கட்சி அதிருப்தி கூட்டணி சர்வநிச்சயமாக சரியான போட்டியைக்கொடுக்கும்...ஒருவேளை தேமுதிகவுடனான கூட்டணி இல்லையென்றால் அனேகமாக அனைத்துத்தொகுதிகளும் திமுகவிற்கே செல்லும்!

PERFECT JUDGEMENT

மதுரக்காரன் said...

எப்போதுமே அதிமுகவிற்கு ஆதரவளிக்கும் முக்குலத்தோரின் வாக்குகளுக்கு வேட்டு வைக்கப்போவது புதிய தமிழகத்துடனான கூட்டு என்பது என் வத்தலக்குண்டு நண்பரொருவரின் கருத்து....!

வத்தலக்குண்டுக்காராசின் கருத்தோடு ஒன்றுபட்டுக்கொள்கிரேன்.

உடன்பிறப்பு said...

திமுக வெல்லும்.இதை காலம் சொல்லும்!

Unknown said...

//நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுவதிலும், உங்களையெல்லாம் சந்திப்பதிலும் மகிழ்ச்சி.//
வலையில் தினமும் update செய்து கொள்ளுவதில் திமுக ஆதரவாளர்கள் குறைவே என்பது உங்களின் பதிவில் தெரிகின்றது

//ஒருவேளை அதிமுக, தேமுதிக , மதிமுக ,கொமுக இணைந்தால் கொங்கு மண்டலத்தில் இலை மலருவதைத் தவிர்க்க முடியாது...!!//

சரியான கணிப்பு...
(இது தான் நடக்குமோ ?)

South-Side said...

Different Perspective. let us see what will happen./


Sure....Let us see.

South-Side said...

SAKKIMUTHU கூறியது...

அதிமுக+தேமுதிக + மக்களின் ஆளுங்கட்சி அதிருப்தி கூட்டணி சர்வநிச்சயமாக சரியான போட்டியைக்கொடுக்கும்...ஒருவேளை தேமுதிகவுடனான கூட்டணி இல்லையென்றால் அனேகமாக அனைத்துத்தொகுதிகளும் திமுகவிற்கே செல்லும்!

PERFECT JUDGEMENT//

Thank You Isakki Muthu

South-Side said...

வத்தலக்குண்டுக்காராசின் கருத்தோடு ஒன்றுபட்டுக்கொள்கிரேன்./

Thank you Madurakaranji & UdanPirappu

South-Side said...

பிளாகர் ஆகாயமனிதன்.. கூறியது...

//நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுவதிலும், உங்களையெல்லாம் சந்திப்பதிலும் மகிழ்ச்சி.//
வலையில் தினமும் update செய்து கொள்ளுவதில் திமுக ஆதரவாளர்கள் குறைவே என்பது உங்களின் பதிவில் தெரிகின்றது /

Thank you Akaya Manithan Sir. I'm not a DMK Supporter , you can read my earlier posts and can come to a conclusion.But This time My Vote Will be For DMK because I believee that will be the right decision under current circumstances..!!

My Vote is not for PMK / Congress / ADMK / DMDK /MDMK !!!

I believe DMK is complained by unaccepted speculation by some anti tamil peoples !!

Anonymous said...

டெல்ட்டாவில் திமுக, ஜெயலலிதா கட்சி சமபலத்தில் இருக்கும்.

- எம்.எம்.அப்துல்லா