Saturday, March 05, 2011

கலைஞருக்கு நன்றி..நன்றி!

ஊரில் கெட்டது நல்லதுக்கு கூட ஒன்றுகூடாத ராமண்ணனும் , சடையப்பனும் இன்று ஒன்றுகூடி பட்டாசு வெடித்தார்கள்...

சில வருடங்களாகவே கொடியேற்றாமல் கிடக்கும் கம்பத்திற்கு இன்று வெகுவேகமாகப் பூச்சு வேலை நடக்கிறது.....நெல்லை முத்து விலாஸ் ஸ்வீட்ஸ்டாலில் நான் 7 மணிக்கு லட்டு வாங்கப்போனால் தீர்ந்து போனது என்று சொல்லிவிட்டான்...இருங்க இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடும்ங்கறான்...!

சரக்கு வாங்கச் சொல்லி செயலாளர் காசு கொடுத்தனுப்பி கனநேரமாயிற்று...செல்பேசியில் நண்பன் சொல்கிறான் , அண்ணே......சரியான கூட்டம் , பூரா கரைவேட்டிதான். இம்புட்டு சந்தோஷமா கட்சிக்காரங்கள நான் பாத்ததே கெடையாதுங்கறான்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திலிருந்து கரை வேட்டி கட்டுவதை நிறுத்தியிருந்த சலூன் கடை நாச்சியப்பன் இன்று சலவை போட்ட கரைவேட்டியுடன் ஊரில் மிடுக்காக நடந்து போகிறான்......
தொலைபேசியில் அம்பாசமுத்திரத்தில் இருக்கும் என் பள்ளித்தோழனும் , கட்சி அனுதாபியுமான பார்த்தசாரதியுடன் பேசினேன்...

"டேய் மாப்ளே , நீ கூப்பிடுவேன்னு தெரியும்........நைட்டு தலைவரு அறிக்க வந்தவுடனே முடிவாயிருச்சுடா மாப்ளே...எழுதி வச்சிக்க...இனி எலக்சன் வரைக்கும் ஒரு நைட்டு கூட தூங்கப்போறதில்ல நான்...இன்னிக்கு நைட்டு கூட செவரு ரிசர்வ் பண்ண கெளம்பிட்டேன்..நெறயா நாளைக்கு பின்னாடி திமுககாரன் எப்படி வேல செய்வான்னு ஊருக்கு காட்டணும்டா மாப்ள....!!"

டீக்கடை , பெட்டிக்கடை எங்கு திரும்பினாலும் இதேதான் பேச்சு........வலையுலக கட்சி அனுதாபிகளுக்கும் ஒரு பெருமூச்சு...

இன்றல்ல நேற்றல்ல...கடந்த சில வருடங்களாகவே வெளியில் சொல்லாமல் தொண்டையிலேயே வைத்திருந்தோம். .எந்தத் தேர்தலிலும் நாம் எமக்குழைப்பதை விட காங்கிரசுக்காரர்களுக்கு உழைப்பதே அதிகம்.........இனி நாம் எமக்கு உழைப்போம்...முழுவெறியுடன் உழைப்போம்.............திமுக பட்டுப்போன செடியல்ல.......கூட்டணி விலங்குகளால் சிறிதே வாடிப்போன செடி...அதற்கான உரம் தன்னம்பிக்கைதான்...அது டன் டன்னாக காங்கிரஸ் வெளியேறியதில் இருந்து கிடைத்திருக்கிறது....

எப்போதும் திராவிடக்கட்சிகளின் முதுகிலேறி சவாரி செய்யும் காங்கிரசுக்கு அவர்கள் பலமென்ன என்பது தெரியத்தான் போகிறது!!!தனியே நின்றாலும் சரி........அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தாலும் சரி!

நடுநிலையான அதிமுக ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல...திமுக தொண்டர்களுக்கும் அனுதாபிகளுக்கும் இப்போது பெரிய நிம்மதி!!

வேண்டாத சுமையான காங்கிரசைக் விட்டு விலகிய போது ஏற்பட்ட நிம்மதி திமுக ஆட்சியமைக்கும் போது கூட இருந்ததில்லை..வந்ததுமில்லை.!!!

தொண்டர்களின் குரலுக்கு மதிப்புக்கொடுப்பதில் கலைஞருக்கும் , பேராசிரியருக்கும் நிகரேது....என்ன கொஞ்சம் தாமதமாகிவிட்டது...அவ்வளவுதான்...

ஒற்றை டீயைக்குடித்துவிட்டு விடிய விடிய உதயசூரியன் சின்னத்தை தெருவெங்கும் வரைந்த காலம் நினைவில் இருக்கிறது....இந்தத் தேர்தலில் மீண்டும் அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த கலைஞருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி....

நம்புங்கள் தலைவர்களே..வெற்றி நமது கையில்.!!

9 comments:

உடன்பிறப்பு said...

கடினமான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாயினும் , இப்போதுங்கூட எடுக்கவில்லையென்றால் முதலுக்கே மோசமாகிவிடும்!. முழுமனதுடன் வரவேற்கிறேன்.நிம்மதியாகத் தூங்கலாம் இன்றிரவு.

South-Side said...

நன்றி உடன்பிறப்பு...

South-Side said...

பட்டாசு எங்கள் ஊரில் மட்டுமல்ல....நெல்லையிலும் வெடித்திருக்கிறது.!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=200077

திருநெல்வேலி : மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., வெளியேறுவதாக தி.மு.க., உயர்மட்ட செயல்திட்ட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடி‌வை வரவேற்று நெல்லையில் தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இனியா said...

Good decision by DMK
If Congress joins ADMK, who would seeman and Vaiko support?

இளங்கோ said...

குட்டி குலைத்து தாய் தலையில் விடிந்த கதையாக காங்கிரசின் நிலைமை உள்ளது.யாரையோ திருப்தி படுத்த திமுகவை சீண்டுகின்றனர்.மத்தியில் இப்போது இருக்கும் அரியணையும்,அதிகாரமும் நிரந்தரம் இல்லை.இல்லாதபோது தெரியவரும் உண்மை நிலை.

Anonymous said...

I can't stop my laugh if congress contests alone in TN.

Anonymous said...

I can't stop my laugh if congress contests alone in TN.

bandhu said...

காங்கிரஸ்ஸிற்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று தெரிந்தே காங்கிரஸ் தனியே நிற்க தயாராகிறது!

Anonymous said...

"தலைவேண்டா..."!