Thursday, March 17, 2011

கலைஞர்...ஜெ....மலையும் மடுவும் !

தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது.....ஜெ என்ற அகம்பாவம் பிடித்த , திருந்தாத அரசியல் தலைமையின் சாயமும் வெளுத்துப்போயிருக்கிறது....!!

திமுக என்ற பாரிய அரசியல் இயக்கத்திற்கும் , அந்தக் காலம் தொட்டே தனிநபர் சொத்தாக விளங்கும் அதிமுகவிற்கும் உள்ள பாரிய வித்தியாசம் இங்கே வெளிப்பட்டு நிற்கிறது...

கூட்டணி தர்மத்தின் பால் 2 இடங்களுக்கு முஸ்லீம் லீக் ஒத்துக்கொண்ட பிறகும் மூன்று தொகுதிகளை மீண்டும் தந்த திமுக எங்கே...முதலில் ஒரு தொகுதியை ஒதுக்கிவிட்டு பின்பு கார்த்திக்கை கழட்டிவிட்ட அதிமுக எங்கே?

காங்கிரஸ் , பாமக , விடுதலைச் சிறுத்தைகள் , கொங்கு முன்னேற்றக் கழகம் , முஸ்லீம் லிக் என்று அனைத்துக்கட்சிகளுடனும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டு அவர்களுக்கான தொகுதியையும் ஒதுக்கிக்கொடுத்துவிட்டு இன்னமும் தமது வேட்பாளர் பட்டியலை வெளியிடாத திமுக எங்கே?

கூட்டணிக்கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடே முடியாத போது தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக எங்கே?

அரசியல் நாகரீகம் என்றால் என்ன என்பதன் அடிப்படை கூடத்தெரியாத இந்த அதிமுகதான் இன்றைய எதிர்க்கட்சி...வென்றால் ஆளுங்கட்சி...

அகங்காரம் , ஆணவம் , திமிர் இவற்றின் மொத்த உருவம் தான் ஜெயலலிதா என்பது வெகுபலர் அறிந்ததே......வெல்வோமா , இல்லையா என்று தெரிவதற்கு முன்னமே இப்படிக் கூட்டணிக்கட்சிகளை அலட்சியப்படுத்துவது முறையா? ஒருவேளை வென்றால்...

கம்யூனிஸ்டுகளும் , விசயகாந்தும் வேண்டுமானால் பணிந்து போகலாம்..அவர்களுக்காவது இத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டது...ஆனால் மதிமுக?? அன்றும் இன்றும் என்றுமே பரிதாபத்திற்குரியவராகவே தோற்றமளிக்கிறார் அவர்...அதற்கு அவர் மட்டுமே காரணம்....

5 ஆண்டுகளுக்கு முன் இதே நிலை ஏற்பட்டது அவருக்கு..ஆனால் அதற்கு கலைஞர் காரணமில்லை....அவரே தான் காரணம்......கூடுதலாகச் சில தொகுதிகள் வேண்டுமென்பதற்காக தன்னை 19 மாதம் சிறை வைத்த அம்மாவுடன் சேர்ந்ததுதான் அவரது இத்தனை இழிவுக்கும் காரணம்...

மாற்றுக்கட்சிகளை மதிப்பதில் கலைஞர் மலை....இழிவுபடுத்தும் ஜெ மடு.!!

மாற்றுக்கட்சிகளின் கருத்தைக் காது கொடுத்துக்கேட்பவர் கலைஞர்.......கேட்பதே தன் கவுரவக்குறைச்சல் என்றெண்ணுபவர் ஜெ..!!

மாற்றுக்கட்சித்தலைவர்களையும் தன் அருகழைத்து தள்ளாத வயதிலும் மதிப்பவர் கலைஞர்....அவர்களை அமரக் கூடச் சொல்லாதவர் ஜெ.!!

திருமங்கலம் பார்மூலா , அழகிரி கண்டுபிடித்ததாகச் சொல்லும் அரசியல் அடிப்படை தெரியாதவர்களுக்கு "சாத்தான் குளம்" யாருடைய பார்முலா என்று சொல்லமுடியுமா?

ஊழலைக் கண்டுபிடித்ததே கலைஞர் என்று ஒப்பாரி வைக்கும் பார்ப்பன ஊடகங்களே...இன்றைக்கும் கலைஞர் மீதான உறுதியான ஊழல் குற்றச்சாட்டொன்றை சொல்லமுடியுமா?? ஆனால் , மலைமலையாக குற்றச்சாட்டுக்கள் குவிந்துகிடக்கும் ஊழல் அரசியல்வாதியான ஜெ எப்படி மாற்றாக முடியும்??

எவ்விதத்தில் பார்த்தாலும் கலைஞர் ஒர் மலை....ஜெ. ஒரு மடு..!!

அன்றாடம் கலைஞரைக் கரித்துக்கொட்டுவதிலேயே காலம் கழிக்கும் அதிமுகவின் உண்மைத்தொண்டன் "உண்மைத்தமிழன் (???) " போன்றவர்கள் திமுகவிற்கு மாற்றாக காட்டுபவர்களின் தகுதி இதுதான்....!!

26 comments:

Anonymous said...

very True

Anonymous said...

very great

MUTHU said...

நல்ல ஒப்பீடு. இனியும் விஜயகாந்தும், காம்ரேட்டுகளும். அதிமுகவிற்கு காவடி தூக்கினால் தமிழகத்தை அன்று ரஜினி சொன்னதுதான்

Darren said...

//அன்றாடம் கலைஞரைக் கரித்துக்கொட்டுவதிலேயே காலம் கழிக்கும் அதிமுகவின் உண்மைத்தொண்டன் "உண்மைத்தமிழன் (???) " போன்றவர்கள் திமுகவிற்கு மாற்றாக காட்டுபவர்களின் தகுதி இதுதான்....!!//

உண்மை(??????) த்தமிழன்(???????).

hahah

அஹோரி said...
This comment has been removed by the author.
அஹோரி said...

//கலைஞர் ஒர் மலை....ஜெ. ஒரு மடு..!!//

ஸ்பெக்டரும் அடிச்ச ஊழலால கருணாநிதி ஊழல்ல மலைதான். கண்ணா பாயிண்ட் கிடைசிடிச்சின்னு குதிக்க வேணாம். இதெல்லாம் ஒரு நாடகம். இப்ப வேடிக்க மட்டும் பாரு. அல்லகையா மாறி கருணாநிதிக்கு ஒத்து ஊத நிறைய நேரம் பாக்கி இருக்கு.

அப்பா என்ன அரசாங்க ஊழியரா ? விசுவாசம் பொத்துகிட்டு ஊத்துது.

தென்னவன் said...

நீங்கள் வைகோவைப் பற்றிச் சொன்னதில் கொஞ்சம் வருத்தமே என்றாலும் இந்தச் சூழலில் தான் கருணாநிதிக்கும் , செயலலிதாவிற்கும் உள்ள வித்யாசம் தெரிகிறது.

ஆனாலும் காலம் கடந்து விட்டதால் தேர்தல் புறக்கணிப்போ அல்லது எல்லாத் தொகுதிகளிலும் தனித்து நிற்பதோதான் எங்கள் தலைவர் வைகோ முன் உள்ள தெரிவு.

தனித்து நின்று அதிமுகவின் நம்பிக்கைத்துரோகத்திற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதே எம் அவா

VJR said...

//அப்பா என்ன அரசாங்க ஊழியரா ? விசுவாசம் பொத்துகிட்டு ஊத்துது.//

ஐயா அஹோரி நீங்கள் என்ன சசிகலாவுக்கு எடுப்பா?

பாசம் கொடை நாட்ட தொடுது. இல்ல மன்னார்குடி “கரன்” வைகயறாவா?

ஜெயாவை அழிக்க வேறயாரும் தேவையில்லை, அவரே போதும்.

Anonymous said...

எனக்கு ஒரு சந்தேகம்.திமுகவை உண்மையாவே மக்களுக்கு பிடிக்கலேன்னா எதுக்கு இவுக கூட்டணி அமைக்கனும்? தனியா நிக்கட்டுமே.நின்னா திமுக வ புடிக்காத மக்கள் எல்லாரும் ஓட்டு போட்ட ஜெயிக்கட்டுமே.

South-Side said...

பெயரில்லா பெயரில்லா கூறியது...

very True

17 மார்ச், 2011 1:03 am
நீக்கு
பெயரில்லா பெயரில்லா கூறியது...

very great

17 மார்ச், 2011 1:03 am/

நன்றி அனானி நண்பர்களே

South-Side said...

பிளாகர் ISAKKIMUTHU கூறியது...

நல்ல ஒப்பீடு. இனியும் விஜயகாந்தும், காம்ரேட்டுகளும். அதிமுகவிற்கு காவடி தூக்கினால் தமிழகத்தை அன்று ரஜினி சொன்னதுதான்

17 மார்ச், 2011 1:23 am//


இந்த மேற்கோளுக்கும் ஒரு நடிகர்தான் தேவைப்படுகிறார் என்பது வரலாற்று சோகம்...நன்றி நண்பர் இசக்கிமுத்து!

South-Side said...

உண்மை(??????) த்தமிழன்(???????).

hahah//


ஹஹாஹஹஹஹா....உண்மைத்தமிழன் சாரைத்தான் நான் சொன்னேன்...யோக்கிய சிகாமணி என்று பேர் வைத்துக்கொள்பவர்கள் எல்லாம் யோக்கியர்கள் அல்லரே... கோடிஸ்வரன் என்று பேர் வைத்துகொள்பவர்கள் எல்லாம் கோடிஸ்வரன் அல்லவே...அந்த அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளவும்!

நன்றி..

South-Side said...

ஸ்பெக்டரும் அடிச்ச ஊழலால கருணாநிதி ஊழல்ல மலைதான். கண்ணா பாயிண்ட் கிடைசிடிச்சின்னு குதிக்க வேணாம். இதெல்லாம் ஒரு நாடகம். இப்ப வேடிக்க மட்டும் பாரு. அல்லகையா மாறி கருணாநிதிக்கு ஒத்து ஊத நிறைய நேரம் பாக்கி இருக்கு.

அப்பா என்ன அரசாங்க ஊழியரா ? விசுவாசம் பொத்துகிட்டு ஊத்துது./


இன்னா அஹோரி அன்னாத்தே...நான் கருணாநிதிக்கு ஒத்து ஊதறதா ஓப்பனா தான சொல்லறேன்?? சில பேருமாதிரி நடுநிலை நாடகம் ஆடலியே?

கலைஞரை ஆதரிக்க அரசாங்க ஊழியனா இருக்க வேண்டியதில்லை..அவரால பலனடைஞ்ச ஒருவனா கூட இருக்கலாம்.அரைகுறை தமிழனா மட்டும் இருக்கக்கூடாது!..இன்னான்றீங்கோ?

South-Side said...

நீக்கு
பெயரில்லா தென்னவன் கூறியது...

நீங்கள் வைகோவைப் பற்றிச் சொன்னதில் கொஞ்சம் வருத்தமே என்றாலும் இந்தச் சூழலில் தான் கருணாநிதிக்கும் , செயலலிதாவிற்கும் உள்ள வித்யாசம் தெரிகிறது.

ஆனாலும் காலம் கடந்து விட்டதால் தேர்தல் புறக்கணிப்போ அல்லது எல்லாத் தொகுதிகளிலும் தனித்து நிற்பதோதான் எங்கள் தலைவர் வைகோ முன் உள்ள தெரிவு.

தனித்து நின்று அதிமுகவின் நம்பிக்கைத்துரோகத்திற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதே எம் அவா/

நன்றி....காலம் கடந்த ஞானம் கால்காசுக்கும் உபயோகமில்லை...வாழ்த்துக்கள் எனிவே.!!

South-Side said...

VJR கூறியது...

//அப்பா என்ன அரசாங்க ஊழியரா ? விசுவாசம் பொத்துகிட்டு ஊத்துது.//

ஐயா அஹோரி நீங்கள் என்ன சசிகலாவுக்கு எடுப்பா?

பாசம் கொடை நாட்ட தொடுது. இல்ல மன்னார்குடி “கரன்” வைகயறாவா?

ஜெயாவை அழிக்க வேறயாரும் தேவையில்லை, அவரே போதும்./


நூத்துல ஒருவார்த்தை விஜேஆர்...நன்றி

South-Side said...

//அப்பா என்ன அரசாங்க ஊழியரா ? விசுவாசம் பொத்துகிட்டு ஊத்துது.//

ஐயா அஹோரி நீங்கள் என்ன சசிகலாவுக்கு எடுப்பா?

பாசம் கொடை நாட்ட தொடுது. இல்ல மன்னார்குடி “கரன்” வைகயறாவா?

ஜெயாவை அழிக்க வேறயாரும் தேவையில்லை, அவரே போதும்.

17 மார்ச், 2011 2:11 am
நீக்கு
பெயரில்லா பெயரில்லா கூறியது...

எனக்கு ஒரு சந்தேகம்.திமுகவை உண்மையாவே மக்களுக்கு பிடிக்கலேன்னா எதுக்கு இவுக கூட்டணி அமைக்கனும்? தனியா நிக்கட்டுமே.நின்னா திமுக வ புடிக்காத மக்கள் எல்லாரும் ஓட்டு போட்ட ஜெயிக்கட்டுமே./


அதானே அனானி...நன்றி!

ராஜ நடராஜன் said...

மாற்றுக்கருத்து சொல்வீர்கள் என்ற எண்ணத்துடன் தொடர்கிறேன்!

ராஜ நடராஜன் said...

The ball is in your court!

இதுவும் சொல்வீங்க இன்னுமும் சொல்வீங்க:)

Anonymous said...

WELL THE TRUTH IS KNOWN BY EVERY SINGLE TAMIL SPEAKING PEOPLE. KALAIGNAR IS ABORN TAMILAN FROM OPPRESSED CASTE. JAYA IS ABORN KANNADIGA FROM BRAHMIN UPPER CASTE.

South-Side said...

பிளாகர் ராஜ நடராஜன் கூறியது...

மாற்றுக்கருத்து சொல்வீர்கள் என்ற எண்ணத்துடன் தொடர்கிறேன்!//

அன்பு நண்பர் ராஜ நடராஜன்...

அன்றும் என்றும் ஒரே கருத்துத்தான் எனது..எனது அரசியல நிலை சற்றெ ( இல்லையில்லை நிறைய ) சிக்கலானது...

என்றுமே நான் திமுக அனுதாபி...இடையில் வந்த ஈழ நிலையின்பால் திமுகவை வெறுத்தேன்....அந்தக் குறிப்பிட்ட காரணத்தால் உதயசூரியனுக்கு ஓட்டுப்போடுவதில்லை என்றும் மாற்றரசியலே தெரிவு என்றும் நினைத்தேன்.ஆனால் அதன்பிறகு நடந்த அரசியல் கூத்துக்கள் என் நிலையை மாற்றின...ஜெயல்லிதா என்றுமே திமுகவிர்கு மாற்றாக முடியாது...

சீமான் போன்ற தமிழ்த்தேசிய அரசியலா இல்லை திமுக வா என்றால் தமிழ்த்தேசிய அரசியலே நான் நாடும் வழி.....அதிமுகவா , திமுகவா என்றால் திமுக என்பதே என் நிலைப்பாடு...

தெளிவாகிறதா இல்லை தெளிவாகக் குழப்பிவிட்டேனா??

South-Side said...

ராஜ நடராஜன் கூறியது...

The ball is in your court!

இதுவும் சொல்வீங்க இன்னுமும் சொல்வீங்க:)//

பந்து எப்போதும் ஓட்டுப்போடும் வாக்காளர்கள் கையில் தான் இருக்கிறது. தமிழ்மணத்தில் ஓட்டுப்போடும் வெகுபலரிடம் இல்லை என்பது கிளைத்தகவல்..( ஆனால் , இந்த முறை வாக்களிப்பேன்...) எங்கள் தொகுதியில் கொமுக நிற்பதால் "சாதிக்கட்சி"க்கு வாக்களிப்பதில்லை என்ற என் நிலையால் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டேன் என்பது இன்னுமொரு கிளைத்தகவல்.

South-Side said...

பெயரில்லா சொன்னது…

WELL THE TRUTH IS KNOWN BY EVERY SINGLE TAMIL SPEAKING PEOPLE. KALAIGNAR IS ABORN TAMILAN FROM OPPRESSED CASTE. JAYA IS ABORN KANNADIGA FROM BRAHMIN UPPER CASTE.
/

நன்றி , பிறப்பால் அல்லது சாதியால் குணநலன் மாறாது..ஆனால் குறிப்பிட்ட அந்தச் சாதியினர் சமூகத்தின் மேலடுக்கில் அமர்ந்து கொண்டு மற்றவர்களின் வாய்ப்புக்களைத் தட்டிப்பறிப்பது நடந்து கொண்டே இருக்கிறது. இன்றளவும், அது அரசியலிலும் எதிரொலிக்கிறது!

Anonymous said...

sippu varuthu.sippu varuthu , sinna manusan periya manusan seyala pathu sippu ( sirippu) varuthu. moonavathaniya nalavathaniya? pilaippu ille. uzaippum ille , uzaikkum makkalai surandi pilaikke puthusa oru ani varuthu

Anonymous said...

இந்த திமுக நாய்கள் கருணாநிதியின் மூத்திரைத்தை குடிக்கத்தான் லாயக்கு. அவனே ஒரு கொலைகாரன் ஜெயா திருடி கருணாநிதி மெஹாதிருடன் கருணாநிதி சாகின்ற நாள் தமிழர்களுக்கு பொங்கல்.

அஹோரி said...

//VJR கூறியது...

//அப்பா என்ன அரசாங்க ஊழியரா ? விசுவாசம் பொத்துகிட்டு ஊத்துது.//

ஐயா அஹோரி நீங்கள் என்ன சசிகலாவுக்கு எடுப்பா?//

இல்ல சசிகலான்னா கடுப்பு.

//அரைகுறை தமிழனா மட்டும் இருக்கக்கூடாது!..இன்னான்றீங்கோ?//

தமிழுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் , சினிமாவுக்கு கதை வசனம் எழுதுனாரு ... அத காரணமா வச்சி அவர "தமிழ் தாத்தா" லெவல் பில்டப் பண்ணாதீங்க ...

உங்க பொது அறிவ நினைச்சாலே சிலிர்க்கிறது போ ....

Anonymous said...

Jayalalitha take ADMK to destration