Thursday, March 17, 2011

பிரபலங்கள் ஆதரிக்கும் கட்சி!

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியல்வாதிகளும் ,  நடிகர் , நடிகைகளும் பிரபலமானவர்கள்.........பதிவுலகத்தைப் பொறுத்தவரை சில பல நடுநிலையான பதிவர்களே பிரபலங்கள்....அவர்களது நடுநிலையான அதிமுக ஆதரவு நிலைப்பாடு  வெகு பிரசித்தம்.

பத்துக்கட்டுரைகள்  எழுதினால் அதில் ஒன்பது திமுகவை எதிர்க்கும்,கலைஞரை  வசைபாடும் நடுநிலைக்கட்டுரைகளாகவே இருக்கும்..

அத்தகைய பிரபலங்கள்/ பிரபல பதிவர்கள் ஆதரிக்கும் கட்சியான அதிமுகவின் , அதன் தலைவியின் அருமையை, பெருமையை அவர்களின் வாயாலேயே கேட்பதன்  மூலம்   அவர்களின்  நிலையினை மக்கள் புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கும்!

ஸ்டார்ட் மீயுசிக்.

கலைஞர் கருணாநிதியைப் போலவே ஆட்சி நடத்தும் தகுதியே இல்லாத புரட்சித் தலைவி ஜெயலலிதா, கட்சி நடத்தும் தகுதியும் தனக்கு இல்லாததை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்..!


இவர் கணிப்பில் கட்சி நடத்தும் தகுதியே இல்லாத  ஜெ....ஆட்சி நடத்தினால் எப்படி இருக்கும் என்று மக்கள் தான் சொல்லவேண்டும்!

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடுவதற்கு முன்பு வரையிலும் தமிழினத்தின், தமிழகத்தின் பொது எதிரியான கருணாநிதி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்றுதான் தமிழகமே நம்பிக் கொண்டிருந்தது.

இவரது கணிப்புப்படி தமிழினத்தின் , தமிழகத்தின் பொது எதிரியை கூட்டணி சேர்ந்துதான் எதிர்க்கவேண்டுமோ? ஒருவேளை இவர் கருணாநிதியை பற்றி    சொல்பவை உண்மை எனில் மக்களே அவர்களை ஏன் புறக்கணிக்க மாட்டார்கள்?...எதற்கு கூட்டணி???


தனது கட்சிக்காரர்களை மட்டும்தான் ஜெயலலிதா இதுவரையில் மதிக்காமல் இருந்திருக்கிறார் என்றால், இப்போது கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அதேபோல் நினைத்துவிட்டார்..! ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் இதுதான் வித்தியாசம்..!
 
 
தனது வீடு திறந்த வீடு என்பதை வெளிக்காட்டி தமிழகத்தின் கலாச்சாரத்திற்கேற்றவாறு, நாகரிகமான முறையில் யார் வந்தாலும் வரவேற்கிறார் கருணாநிதி. ஆனால் ஜெயலலிதாவோ தான் சந்திர மண்டலத்தில் குடியிருப்பதைப் போல காட்டிக் கொண்டு இறுக மூடிய வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு பொது வாழ்க்கைப் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்..!

நிறைய சந்தோஷம்......அதிமுக சார்பான மறைமுக அஜெண்டா வைத்திருக்கும்   நடுநிலையாளர்களைக் கூடகருணாநிதி கவர்ந்திருக்கிறார் .
 

கருணாநிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரே கொள்கையோடு ஒன்று சேரும் அனைத்துக் கட்சிக்காரர்களையும்

இங்கே தான் உண்மையான சுயரூபம் வெளிப்படுகிறது........இது மட்டுமே ஒரே கொள்கை இவர்களுக்கு....ஊழல், இலவசம் , குடும்ப ஆதிக்கம் இதுவெல்லாம் தொட்டுக்கொள்ள ஊறுகாய் மட்டுமே!



ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா பணத்தை லஞ்சமாக பெற்றுள்ளார். அதனை பல்வேறு நாடுகளில் முதலீடு செய்துள்ளார் என்று நேற்று பட்டவர்த்தனமாக சி.பி.ஐ.யின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டார். இதனைவிடவும் மிகக் கேவலமான ஒரு விஷயம் தமிழகத்து மக்களுக்கும், தி.மு.க.வுக்கும் இதுவரையில் நடந்ததில்லை..!

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் , தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்தாரே அதெல்லாம் கேவலக்கணக்கில்  சேர்த்தியில்லையா? பொம்மையாக ஜீரோ.பன்னீர்செல்வத்தை  இயக்கினாரே? இது கேவலமில்லையா? அப்பேர்ப்பட்ட செயலலிதாவை முதல்வராக்க தூக்கிப்பிடிக்கும் உங்கள் செயல் கேவலமில்லையா....??


ஊழல் விஷயத்தில் கருணாநிதியைவிட ஜெயலலிதாதான் சில வருடங்களுக்கு முன்புவரையிலும் முன்னணியில் இருந்தார்.


அஹாஹஹாஹாஹஹ......இதுதான் என்னை மிகவும் கவர்ந்த அறிவுப்பூர்வமான வாசகம்.....!! சிலவருடங்களுக்கு முன்புவரை ஆட்சியில்  இருந்தார் , அதனால் ஊழல் புகார்.......இப்ப கொடநாட்டில் தூங்கிக்கொண்டுதானே இருக்கிறார் ,,,,,இப்படி எப்படி ஊழல் புகார் இருக்கும்???



இன்னொரு பக்கம் இத்தனை வருடங்களாக தனக்கென்று எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் எத்தனையோ இழப்புகளைத் தாங்கிக் கொண்டு ஆதரவை அளித்து வந்த வைகோ தனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியில் தலை காட்டாமல் இருக்கிறார். தமிழகத்து அரசியலில் அவர் நிலைமை பரிதாபமானதற்கு காரணம் அவருடைய நியாயமான, நேர்மையான குணம்தான்..!
 
 
முழுதும் ஒத்துப்போகிறேன்....வருத்தம்தான்..நேரம் தாண்டிவிட்டது...இல்லாவிடில் தாய்க்கழகம் வைகோவை அரவணைத்திருக்கும்..........செயலலிதாவின் பாசிசம் பற்றிப் பேச மேடையாவது கிடைத்திருக்கும் அவருக்கு!

ஊர்க் காசை அடித்து உலையில் போடும் வித்தையில் கரை கண்ட முதல் தமிழகத்து அரசியல் பெண்மணி என்ற கெட்ட பெயரோடு ஜெயலலிதா ஜெயிலுக்குள் வாசம் செய்யப் போவதும் உறுதிதான்..! இத்தனை விஷயங்கள் தனக்காகக் காத்திருக்கும்போது அதனை எதிர்கொள்ள எத்தனை ராஜதந்திர விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்..? கருணாநிதியிடம் இத்தனை நாட்களாக அரசியல் நடத்திய ஜெயலலிதா அவரிடம் கற்றுக் கொண்டதுதான் என்ன..?

நல்லது , இதன் மூலம் உ.த. சார் சொல்லவிளைவது ஆட்சிக்கு வந்து வழக்குகளை தமக்கு சார்பாக முடித்துக்கொள்வதை விட்டுவிட்டு கூட்டணிக்கு  ஆப்பு வைக்கிறாரே ஜே.. ...ஆக, ஊழலோ , ஊழல் வழக்குகளோ கவலை இல்லை....ஆட்சிக்கு ஜெ வந்து அவர் மீதான வழக்குகளை நீர்த்துப்போகச் செய்ய வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம்!!
  .....அவ்வளவு மட்டுமே....!!! 
 
கருணாநிதியின் மீதான , பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட சனங்களின் மீதான  பரம்பரை எதிர்ப்பு வியாதி இவர் போன்ற நடுநிலைவியாதிகளை பீடித்திருக்கிறது... அது அவரது இன்னொரு பதிவில் தெளிவாக வெளிப்படுகிறது...
 
இப்படிச்சொல்கிறார் அவர்...
 


சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, துறைமுகம், கொளத்தூர், வில்லிவாக்கம், விருகம்பாக்கம் என்ற சென்னை தொகுதிகளெல்லாம் இருக்கும் நிலையிலேயே தாத்தா, தனது சொந்த ஊரான திருவாரூருக்கு ஓடிப் போயிருக்கும் விஷயத்தை பார்த்தால் பாவமாக இருக்கிறது..!

ஜெயல்லிதா தன் சமுதாய    மக்களை நம்பி ,ஸ்ரீரங்கம் ஓடிப்போனதை  அவர் காதில் கொஞ்சம் போடுங்களேன்....ஆண்டிப்பட்டி இல்லேன்னா தேனி , உசிலம்பட்டி இல்லையா?அங்கு ஏன் அவர் போட்டியிடவில்லை.....
இஹிஹிஹிஹி....இதைத்தான் செலக்டிவ் அம்னீசியா என்பார்களோ???

நமக்கு உண்மைத்தமிழன் சார் மீது தனிப்பட்ட எந்தக்காழ்ப்புணரவும் இல்லை...இது முழுதும் அரசியல்ரீதியான   எதிர்வாதங்களே......எப்போதும் போல் நண்பர்களாகவே சண்டையிட்டுக்கொள்வோம்....
 
ஆனால், நடுநிலை  வேசம் மட்டும் போடாதீங்க உ.த சார்...!! தாங்க  முடியலை!!
 
ஸ்டாப் த மியுசிக்!!!

11 comments:

South-Side said...

சற்றே நீண்ட பதிவு...
மன்னிக்கவும்!

சண்முககுமார் said...

அருமயான பதிவு

இதயம் படிச்சி பாருங்க
எதிர்த்து போராடுபவனே நிஜமான வீரன்

சமுத்ரா said...

hmm well said

Pranavam Ravikumar said...

Good one...!

South-Side said...

சண்முககுமார் கூறியது...

அருமயான பதிவு

இதயம் படிச்சி பாருங்க
எதிர்த்து போராடுபவனே நிஜமான வீரன்

17 மார்ச், 2011 10:34 pm//


நன்றி சண்முககுமார்.உங்கள் இணைப்பைப் படித்தேன்...தன்னம்பிக்கை அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல...அனைவருக்கும் தேவை.அவ்வகையில் கட்டுரை அருமை!

South-Side said...
This comment has been removed by the author.
South-Side said...

hmm well said

17 மார்ச், 2011 10:41 pm
நீக்கு
பிளாகர் Pranavam Ravikumar a.k.a. Kochuravi கூறியது...

Good one...!/

நன்றி திரு.பிரநவம் ரவிக்குமார் அவர்களே...தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும்!

South-Side said...

பிளாகர் சமுத்ரா கூறியது...

hmm well said.//

நன்றி சமுத்ரா....வருகைக்கும், கருத்துக்கும்!

Prakash said...

Good One

ழகரம் said...

Prakash சொன்னது…

Good One
//


நன்றி திரு.பிரகாஷ்

jothi said...

ப‌திவுனால‌ கம்ப்யூட்ட‌ர் சூடாயிருச்சு