Tuesday, July 13, 2010

சினிமாக்காரர் சீமான்..!

சினிமாக்காரர் சீமான் ஓட்டம் என்று முதலில் சொன்ன தினமலர் பின்பு சினிமாக்காரர் சீமான் கைது என்று மாற்றிப்போட்ட செய்தியை இங்கே சிலர் படித்திருப்பீர்கள். இருப்பினும் படிக்காதவர்களுக்காக இதோ இணைப்பு.

முதலில் ஓட்டம் என்று செய்தி வெளியிட்ட தினமலர் , பின்பு காரில் வந்த சீமானை காத்திருந்த போலிசார் லபக் என்று பிடித்தததாக சொல்கிறது.
பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டியது தான் ...ஆனால் தான் தோன்றித் தனமாக தனக்குத்தோன்றியவற்றை எல்லாம் மனம் போன போக்கில் எழுதித் தள்ளுவது தவறு...

அதே நிகழ்வில் பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டிருக்கிறார்கள்...சினிமாக்காரர் கலைஞர் கருணாநிதி அவர்களின் போலீசார் அராஜகம் என்று தினமலர் எழுதத்துணியுமா? 

துணியாது..

காரணம் இன்று கருணாநிதி அவர்கள் பக்கம்....!!

அந்தச் செய்தியிலேயே தினமலரின் இந்த பொல்லாப் புத்தியை பலர் இடித்துரைத்திருக்கிறார்கள்...

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு. மற்ற முழுமையான பின்னூட்டங்களை மேற்கண்ட செய்தியின் இணைப்பை அழுத்தினால் முழுமையாகப் படிக்கலாம்.!

pavendhan - sydney,ஆஸ்திரேலியா 
தனக்கு பிடிக்காதவர்களை பற்றி நல்ல செய்திகளை தவிர்த்து,மற்ற செய்திகளை கிண்டலாக எழுதுவதாக நினைத்து தினமலர் தன்னைத்தானே தாழ்த்தி கொள்கிறது. முன்பு சீமான் முகத்தில் கரி என்று செய்தி. இப்பொழுது சினிமாகாரர்..உயிரை பணயம் வைத்து ஈழத்திற்கு சென்றவரை,சண்டையின்போது ஈழத்தின் கோரத்தை பதிவுசெய்யாத தினமலர்,கிண்டலடிப்பது துரதிர்ஷ்டவசமானது....
ஜெகதீஸ்வரன்.இரா - Dubai,யூ.எஸ்.ஏ 
சரியான செய்திகளை திரித்து கூறுவதில் தினமலரை மிஞ்ச ஆளில்லை என மீண்டும் நிருப்பித்து விட்டீர்கள். இந்த செய்தித்தாளை படித்தால் சரியான நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள முடியாது..!!... 

சாமீ - Sharjah,யூ.எஸ்.ஏ 
அது என்ன சினிமாகாரர் சீமான் ! அப்படி என்றால் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் இவர்கள் எல்லாம் யார். சூரிய குடும்பம் அத்தனையும் சினிமா தானே எடுக்குது. மீனவன் செத்தால் நீங்களும் கேட்க மாடீங்க. கேட்குரவனையும் கேவலமா எழுத வேண்டியது... கருத்தை விமர்சனம் செய்வதை விட்டு விட்டு அரசியல் வியாதியைப் போல ஆளை விமர்சனம் செய்ய கூடாது... 

poda - NewYork,உஸ்பெகிஸ்தான் 
 
இது வரை 400 க்கு மேலான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.இதுவரை மத்திய அரசும் மாநில அரசும் எந்த ஒரு சிறு நடவடிக்கையும் எடுத்ததில்லை.இனியும் எடுக்க போவதும் இல்லை. சீமானின் பேச்சுக்கு கோபப்படும் அன்பர்கள், சற்று சிந்திக்க வேண்டும்.மௌனமாக இருந்தால் எதுவும் நடக்காது....

சாமி - bangkok,டோகோ

வர வர தினமலர் செய்திகளின் தலைப்பு ஒரு மாதிரியாக தான் இருக்கிறது. தமிழ் மாநாடு ஆரம்பிப்பதற்கு சில காலம் முன்பிருந்து தலைப்புகளை நன்றாக கவனித்து பார்த்தால் தெரியும். இன்றைக்கு வந்த சேதியும் அப்படி தான் இருக்கு. சீமானின் கோபம் நியாயமானது. அந்த கோபம் ஒவ்வொரு தமிழனுக்கு இருக்க வேண்டும். அவன் உப்பு போட்டு சாப்பிடுபவனாக இருந்தால். ஆனால் அவர் பேசிய அனைத்து வார்த்தைகளையும் ஒப்பு கொள்ள முடியாது. படிக்கும் மாணவர்களை கொல்வதாக கூறுவதை ஏற்க முடியாது. வேண்டுமானால் சிங்கள ராணுவத்தை கொல்வோம் என்று கூறலாம். நாளையிலிருந்து சினிமாகாரர் விஜயகாந்த் பேசினார். சினிமாகாரர் கருணாநிதி பேசினார். சினிமாகாரி ஜெயலலிதா பேசினார் என்று செய்தியை வெளி இடவும். நன்றி வணக்கம்....
 
k.senthilkumar - singapore,இந்தியா 
ஏங்க தினமலர் ஆசிரியர் அவர்களே ... நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் என்று சொன்னால் உங்கள் செய்தித்தாள் விற்பனை குறைந்து விடுமா ?... 

மதன்ராஜ் - Pune,இந்தியா 
அவ்வாறு பேசியது தவறுதான். சீமானை கைதுசெய்ய துடிக்கும் அரசு மீனவர்களை காக்க நடவடிக்கை எடுப்பதில் ஏன் அக்கறை காட்டுவது இல்லை. சீமான் என்ன செய்வார் பாவம். தமிழ் ரத்தம் துடிக்கத்தான் செய்யும். இந்த கடலோர காவல் படையும் கடற்படையும் எங்கள் வரி பணத்தில் வாழ்ந்துகொண்டு எங்கள் மீனவரை காப்பாற்றாமல் இருப்பது ஏன்? இலங்கை கடற்படையுடன் கூட்டு ரோந்து மட்டும் செய்ய முடிகிறதோ? ஆஸ்திரேலியாவில் அடிவாங்கும் வடஇந்தியனுக்கும் பிரான்சில் சீக்கியர் முண்டாசு அணிய தடை செய்வதற்கு மட்டும் மன்மோகன் singh குரல் கொடுப்பாரா?... 

gansesh - chennai,இந்தியா 
இங்கே சீமான், என்னா தப்பு செய்தார்? இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக என்ன கருத்துகள் முன் வைக்க படுகின்றன என்று உங்களில் யாருக்கு தெரியும். இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ் நாட்டு மீனவன் துடிக்க துடிக்க சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டான்- இப்போது புலிகள் அழிக்கப்பட்ட நிலையிலும் இந்த நிலைமை தொடர்வது ஏன்? இந்திய நாட்டு கடற்படை கூட இலங்கை மீனவர்களை கைது செய்து இருக்கிறது, ஆனால் கொல்லவில்லை. நண்பர்களே உண்மையை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பன் யார் என்று....

நண்பர்கள் பலரும் தினமலரை "தினமலம்" என்று விளிப்பதுண்டு. அப்போதெல்லாம் அவர்களுடன் ஒரு வெகுஜனப் பத்திரிக்கையை இப்படி அவதூறாகப் பேசலாமா என்று விவாதித்தது உண்டு. இப்போது தான் அதன் முழுமையான அர்த்தம் புரிகிறது.

இனிமேலாவது , வெகுஜன , நியாயமான , நடுநிலையான செய்தித்தாள்கள் என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் பத்திரிக்கைகள் எவ்வளவு கீழ்த்தரமான நோக்கங்களைக் கொண்டிருக்கின்றன என்று அம்பலப்படுத்தவே இப்பதிவு.  !

19 comments:

ஜோ/Joe said...

+1

செந்தமிழன் said...

பதிவை வரவேற்கிறேன். நேர்மையான இந்தக் கருத்திற்கு என் முழு ஆதரவும் உண்டு. தினமலர் கண்டிக்கப்பட வேண்டிய பத்திரிக்கை என்பது மேலும் நிருபணமாகிறது.

கோவி.கண்ணன் said...

தினமலர் தமிழ் பத்திரிக்கை என்று கூறிக் கொண்டு தமிழர் விரோதப் போக்கை கடைபிடித்துவருவது புதிதல்ல, இதற்கு பதிலாக தமிழர்களின் கழிவரைகளை குத்தகைக்கு எடுத்து தினமலர் தம் பிழைப்பை நடத்தலாம்.

South-Side said...

நன்றி திரு.ஜோ மற்றும் செந்தமிழன்

South-Side said...

நன்றி திரு.கோவி கண்ணன் , நீங்கள் சொல்வதே அவர்களுடைய மனபாங்கிற்கு சிறந்த தொழில்.

South-Side said...

மேலே பதிவினில் வெளியிட்ட சில பின்னூட்டங்களில் ஊர்களின் பெயர்களும் , நாடுகளின் பெயர்களூம் கலந்து கட்டி வெளியாகி இருக்கின்றன. அதில் எம் தவறென்று ஏதும் இல்லை.

அங்கே இருப்பதை அப்படியே கட் காப்பி பேஸ்ட் செய்திருக்கிறோம் அவ்வளவே தான். மற்றபடி கருத்துக்களை மட்டும் பார்க்குமாறு வேண்டி விரும்பி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

Anonymous said...

க‌ல்லூரி ந‌ட‌த்தி அதில் ப‌ண‌ம் கொல்லைய‌டிக்கும் "தின‌ம‌ல‌ர்" நேர்மை ப‌ற்றி, ஊழ‌ல் ப‌ற்றி எழுதுவ‌து அசிங்க‌ம். நேர்மைக்கும், வாய்மைக்கும் எந்த‌ தொட‌ர்பும் இல்லாத‌து தின‌ம‌ல‌ரும் அத‌ன் அதிப‌ரும். அழ‌க‌ப்பா துணைவேந்த‌ர் ஒருவ‌ர் எழுதிய‌ புத்த‌க‌த்தை ப‌திப்பித்த‌து தின‌ம‌ல‌ர், அத‌ற்கு பெற்ற‌ கைய்யூட்டு, தின‌ம‌ல‌ர் அதிப‌ருக்கு "கௌர‌வ‌ முனைவ‌ர்" ப‌ட்ட‌ம்.

Anonymous said...

சினிமாக்காரர் சீமான் கைது தினமலர்
பத்திரிக்கை
எனவே, இன்று முதல், நாம் அனைவரும் தினமலரைப் புறக்கணிக்க வேண்டும், இணையதளத்திலும் கூட படிப்பதுக் கூடாது. நமது நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சென்று நமது கோரிக்கையினை வைத்து, அதற்கான காரணங்களை விளக்கி அவர்கள் தினமலர் வாங்குவதை நிறுத்தச் செய்ய வேண்டும். ஓவ்வோர் நாளும் குறைந்தது 10 பேரிடமாவது இது குறித்து பேச வேண்டும். அதற்கான உறுதிமொழியினை அனைவரும் எடுக்க வேண்டுகிறேன்.

இதே போன்று இந்து உள்ளிட்ட அனைத்து தமிழின விரோத பத்திரிக்கைகளை புறக்கணிக்க வேண்டுகிறேன். பொருளாதார ரீதியில் இவர்களுக்கு நாம் கொடுக்கப்போகும் அடி, இனிமேல் ஒருபோதும் இவர்களை எழச்செய்யக் கூடாது.

ramalingam said...

//இதற்கு பதிலாக தமிழர்களின் கழிவரைகளை குத்தகைக்கு எடுத்து தினமலர் தம் பிழைப்பை நடத்தலாம்.//
கரெக்ட். டாய்லெட் பேப்பராக உபயோகப்படுத்தலாம்.

R.Ulages said...

இணையத்தில் தினமலர் படிப்பதை விட்டொழித்து ஒரு வருடம் ஆகிறது.

உலகேஷ்(வேதாரண்யம்); மலேசியா

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இந்த தினமலம், தமிழர்க்கு விரோதமா இப்படி எழுதி தமிழர்க்கிட்டேயே வித்துப் பொழைக்கிறான் பாருங்க!
இதுக்கு இவன் தினமலம் போனத்த வீணாக்க வேண்டியதில்லை. பயன்படுத்திக்கொள்ளலாம்!

+1

Jey said...

இவர்கள் வேற் தொழில் செய்யலாம். ஏன் பத்திரிக்கை நடத்துகிறார்கள் என்று தெரியவில்ல.

South-Side said...

க‌ல்லூரி ந‌ட‌த்தி அதில் ப‌ண‌ம் கொல்லைய‌டிக்கும் "தின‌ம‌ல‌ர்" நேர்மை ப‌ற்றி, ஊழ‌ல் ப‌ற்றி எழுதுவ‌து அசிங்க‌ம். நேர்மைக்கும், வாய்மைக்கும் எந்த‌ தொட‌ர்பும் இல்லாத‌து தின‌ம‌ல‌ரும் அத‌ன் அதிப‌ரும். அழ‌க‌ப்பா துணைவேந்த‌ர் ஒருவ‌ர் எழுதிய‌ புத்த‌க‌த்தை ப‌திப்பித்த‌து தின‌ம‌ல‌ர், அத‌ற்கு பெற்ற‌ கைய்யூட்டு, தின‌ம‌ல‌ர் அதிப‌ருக்கு "கௌர‌வ‌ முனைவ‌ர்" ப‌ட்ட‌ம்./

இது புது செய்தியா இருக்கே. இருப்பினும் எது உண்மையென்பது தெரியாத காரணத்தால் நான் பார்வையாளராக மட்டும் இருந்து கொள்கிறேன்.


நன்றி ஜெகதீஸ்வரன் .

அனானி இரண்டு - புறக்கணிப்பு மட்டுமே மருந்தாகி விடுமா இவர்களது விடயமும் , தமிழின விரோதப்போக்கும் புறக்கணிப்பாலும் குணப்படுத்தவியலாதவை.

South-Side said...

ramalingam கூறியது...

//இதற்கு பதிலாக தமிழர்களின் கழிவரைகளை குத்தகைக்கு எடுத்து தினமலர் தம் பிழைப்பை நடத்தலாம்.//
கரெக்ட். டாய்லெட் பேப்பராக உபயோகப்படுத்தலாம்.//

ஹாஹாஹா..நன்றி திரு ராமலிங்கம்..

South-Side said...

//இதற்கு பதிலாக தமிழர்களின் கழிவரைகளை குத்தகைக்கு எடுத்து தினமலர் தம் பிழைப்பை நடத்தலாம்.//
கரெக்ட். டாய்லெட் பேப்பராக உபயோகப்படுத்தலாம்.

13 ஜூலை, 2010 4:52 am
நீக்கு
பிளாகர் R.Ulages கூறியது...

இணையத்தில் தினமலர் படிப்பதை விட்டொழித்து ஒரு வருடம் ஆகிறது.

உலகேஷ்(வேதாரண்யம்); மலேசியா

./

Nandri thiru ulagesh

South-Side said...

இந்த தினமலம், தமிழர்க்கு விரோதமா இப்படி எழுதி தமிழர்க்கிட்டேயே வித்துப் பொழைக்கிறான் பாருங்க!
இதுக்கு இவன் தினமலம் போனத்த வீணாக்க வேண்டியதில்லை. பயன்படுத்திக்கொள்ளலாம்!
//

Nandri thiru Jothibarathi

South-Side said...

இவர்கள் வேற் தொழில் செய்யலாம். ஏன் பத்திரிக்கை நடத்துகிறார்கள் என்று தெரியவில்ல.

athane? nandri thiru "Jey".

Anonymous said...

இப்படி அம்பலப்படுத்துவது வெகுஜனங்களுக்கு போய்ச் சேர மாட்டேங்குதே என்ற ஆதங்கம் தான் எனக்கு

Anonymous said...

தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பத்திரிகைகள் அரசுக்கு சாதகமான செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன. அரசுக்கு இவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவு உண்மையான சம்பவங்களை உள்ளதை உள்ளபடி வெளியிடவும் செய்ய வேண்டும்.