Monday, July 12, 2010

த்தூ....!

-: file photo :-

செய்தி ஒன்று

சென்னை: வன்முறையைத் தூண்டியதாக பேசிய வழக்கில் இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் நடந்த போராட்டத்தில்  சீமான் கலந்து கொண்டார்.

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் சீமானை போலீசார் தேடி வந்தது. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேச வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


செய்தி இரண்டு

தமிழகத்தில் மினி எமர்ஜென்சி.
கோவை : தமிழகத்தில் மினி எமர்ஜென்சி சூழ்நிலை நிலவுகிறது. என்னதான் அடக்குமுறையைக் கையாண்டாலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டுதான் இருப்போம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.


செய்தி மூன்று

சென்னை: கொழும்புவில் இருந்து சென்னை வந்த இலங்கைத் தமிழர் ஒருவர், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில் திருப்பி அனுப்பப்பட்டார்.

செய்தி - நான்கு

 தமிழக மீனவர்களைத் சிங்களக் கடற்படை தாக்கவில்லை...இலங்கை அரசு பதில்.......ஆனால் இந்திய அரசின் பதில் என்ன?  தெரியவில்லை. அல்லது இந்திய அரசு எதுவும் சொல்வதே இல்லை....


செய்தி - ஐந்து

இதோ , மீனவர்கள் மீதான தாக்குதலை அரசு அதிகாரிகளே உறுதிப் படுத்துகிறார்கள் என்று பி.டி.ஐ. செய்தி வெளியிட்டிருக்கிறது.......இந்திய அரசின் நிலையென்ன , இலங்கை அரசின் மறுப்பிற்கு சரியென்று பதில் அளிக்கிறார்களா இல்லை தவறென்கிறார்களா?
Fifty fishermen from Tamil Nadu were injured when they were attacked allegedly by Sri Lankan Naval (SLN) personnel while fishing off Katchathivu Island, PTI reported Sunday, citing Indian Fisheries department officials.

source : tamilnet

இந்தப் பதிலைக் கூட பெற்றுத்தரவில்லையென்றால் திமுகவிற்கு எதற்கு மத்திய மந்திரி பதவிகள்?? எதற்கு மாநில அரசு??? சீமானைக் கைது செய்து சிறையில் அடைக்க மட்டுமா?


த்தூ....!!!!

11 comments:

South-Side said...

பத்திரிக்கையாளர்களையும் மதிக்கவில்லை இந்த ஜனநாயக விரோதிகள்..

போலீசாரை கண்டித்து பத்திரிகையாளர்கள் சாலை மறியல்

வன்முறை மற்றும் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசியதாக சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கைது செய்யப்படுவதற்கு முன் சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களை சந்திப்பதாக சீமான் தகவல் வெளியிட்டிருந்தார். இதையறிந்த பத்திரியாளர்கள் சென்னை பிரஸ் கிளப்பில் குவிந்தனர். இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு முன்பு சீமானை கைது செய்ய வேண்டும் என்று போலீசார் திட்டமிட்டிருந்தனர்.


மேலும் சென்னை பிரஸ் கிளப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை பிரஸ் கிளப்புக்கு வந்த சீமானை, போலீசார் உள்ளே நுழைய விடாமல் கைது செய்தனர்.


அப்போது பத்திரையாளர்கள் சீமானிடம் கருத்து கேட்க சென்றபோது, போலீசார் பத்திரையாளர்களை தாக்கியுள்ளனர். இதனால் போலீசாரை கண்டித்து பத்திரிûயாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=35670

South-Side said...

சினிமாக்காரர் சீமான் கைது; தயாராக இருந்த போலீசார் லபக்

தினமலர் செய்தி.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=37355


என்றைக்காவது கருணாநிதியை சினிமாக் காரர் என்று செய்தி வெளியிட்டு இருக்கிறதா தினமலர்?

என்றைக்காவது எம்.ஜி.ஆரை , அண்ணாவை சினிமாக் காரர் என்று செய்தி வெளியிட்டு இருக்கிறதா இந்த தினமலர்?


என்றைக்காவது ஜெயலலிதாவை சினிமாக் காரி என்று செய்தி வெளியிட்டு இருக்கிறதா இந்த தினமலர்?

என்றைக்காவது விஜயகாந்தை சினிமாக் காரர் என்று செய்தி வெளியிட்டு இருக்கிறதா இந்த தினமலர்?


ஏன் சீமான் மீது மட்டும் காழ்ப்புணர்வு? காரணம் பயம்...மக்கள் விழித்துக்கொள்வார்களோ என்ற பயம்....

மக்கள் விழித்துக்கொள்ளும் போது இது போன்ற நேர்மையற்ற பத்திரிக்கைகளையும் கிழித்தெழிவார்கள்..

விழிக்கும் காலம் வெகுதூரம் இல்லை.

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

த்தூ....!!!!

செந்தமிழன் said...

நானும் காறி உமிழ்கிறேன் இந்த வெட்கங்கட்ட மாநில அரசை நோக்கி.

த்தூ.
த்தூ..
த்தூ....!

Anonymous said...

ஆக தமிழக அரசும் சிஙகள கொடுங்கோலருக்கு விலை போய் விட்டது. அட ஈழததமிழனை விட்டு விடு தன் மண்ணில் நடக்கும் அப்பாவி மீனவர்களின் அநியாய மரணங்களைக்கூட கண்டு கொள்ளாத இந்த அசிங்கங்களை என்னவென்று சொல்வது. கோமாளிகள் என சிங்களவன் சொன்னதிலும் தவறில்லை என்பது நிருபிக்கப்ட்டுக் கொண்டிருக்கின்றது. யாழ்

Anonymous said...

நச்

சவுக்கடி said...

எத்தனை உமிழ்ந்தாலும் எத்தனை பேர் உமிழ்ந்தாலும் இப்பிறவிகளுக்குச் சூடு சொரணையே இருப்பதில்லை.

இங்கும் பாருங்கள்:

http://thamizhanambi.blogspot.com/2009_12_06_archive.html

South-Side said...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) கூறியது...

த்தூ....!!!!

செந்தமிழன் கூறியது...

நானும் காறி உமிழ்கிறேன் இந்த வெட்கங்கட்ட மாநில அரசை நோக்கி.

த்தூ.
த்தூ..
த்தூ....!/

நன்றி , உலவு.காம் மற்றும் செந்தமிழன்.

South-Side said...

ஆக தமிழக அரசும் சிஙகள கொடுங்கோலருக்கு விலை போய் விட்டது. அட ஈழததமிழனை விட்டு விடு தன் மண்ணில் நடக்கும் அப்பாவி மீனவர்களின் அநியாய மரணங்களைக்கூட கண்டு கொள்ளாத இந்த அசிங்கங்களை என்னவென்று சொல்வது. கோமாளிகள் என சிங்களவன் சொன்னதிலும் தவறில்லை என்பது நிருபிக்கப்ட்டுக் கொண்டிருக்கின்றது. யாழ்/

நன்றி யாழ்

South-Side said...

எத்தனை உமிழ்ந்தாலும் எத்தனை பேர் உமிழ்ந்தாலும் இப்பிறவிகளுக்குச் சூடு சொரணையே இருப்பதில்லை.

இங்கும் பாருங்கள்:

http://thamizhanambi.blogspot.com/2009_12_06_archive.html

//

மிக அருமையான பாடலாக வந்திருக்கிறது. அருமையாக வேடதாரிகளை கிழித்தெறிந்திருக்கிறீர்கள் . நன்றி சவுக்கடி.

South-Side said...

பெயரில்லா பெயரில்லா கூறியது...

நச்/

நன்றி அனானி