Thursday, July 08, 2010

திராவிடத்தால் விளைந்த கேடுகள்.. - திரு.பிரின்ஸ் சாமாவுக்கு (மட்டுமல்ல)


எந்த  ஒரு தனிமனிதனுக்கும் அடையாளம் தேவைப்படுகிறது.  அதனால் தான் இன்று மனிதர்கள் சாதியால் கூடுவதும் , தம் ஊர் என்ற பெயரில் கூடுவதும். இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணி பயம். இந்தச் சமூகம் தனி மனிதனின் குரலை செவி கொடுத்துக் கேட்பதே இல்லை. அவனவன் தனக்கென ஒரு கூட்டம் சேர்த்துக் கொடி பிடித்தால் தான் திரும்பியேனும் பார்க்கிறது. 

மொட்டனூத்து  என்ற கிராமத்திற்குள் , ஒரு கவுண்டன் அல்லது இன்ன சாதி என்பது அடையாளம் , அதே கிராமத்தை விட்டு வெளியே வந்தால் மொட்டனூத்துக்காரன் என்பது அடையாளம் , வெளிமாவட்டம் போனால் ஈரோட்டுக்காரன் என்பது அடையாளம்  , மற்ற மாநிலங்களுக்குப் போனால் தமிழ்நாட்டுக்காரன் என்பது அடையாளம் , வெளிநாடுகளுக்குப் போனால் இந்தியன் என்பது அடையாளம்.

ஆக , அடையாளம் என்பது இடத்திற்கு இடம் , சூழலுக்கு சூழல் மாறுபடுகிறது....ஆனால் , இறுதிவரை நம்மோடு பயணிக்கும்  , மாறாத அடையாளம் எது? விவாதத்திற்குரிய கேள்வி...

தமிழை , மலையாளத்தை, கன்னடத்தை , தெலுங்கை , துளுவைப் பேசுகிறவர்கள் எல்லோரும் திராவிடர்கள் என்றார் பெரியார். அதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் காலத்தின் கட்டாயத்தால் நம்மை அங்ஙனம் அழைக்க வேண்டிய சூழல் இருந்தது. ஏனென்றால் அவர் இருந்த காலம் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருக்காத காலம். 

ஒட்டுமொத்த திராவிட சமூகமும் , சென்னை மாகாணம் என்ற பெயரில் வழங்கப்பட்ட காலம்...... 

என்றைக்கு பொட்டி ஸ்ரீராமுலு அவர்கள் தனி ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கென உண்ணாவிரதம் இருந்து இறந்தாரோ அன்றைக்கே திராவிடம் செத்துப் போனது. அது செத்துப் போன பாம்பு....

என்றைக்கு மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டதோ அன்றைக்கே திராவிடக் கொள்கைக்கு மூடுவிழா நடத்தியாகி விட்டது. அதை இன்றைய திமுகவும் ஒத்துக்கொண்டது. அதனால்தான் சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. அதைப் பெரியாரே ஒத்துக்கொண்டிருக்கிறார்.  


இன்று கேரளம் முல்லைபெரியார் அணைக்கு தடை போடுவதும் , காவிரிக்கு கர்நாடகம் தடை போடுவதும் திராவிடவியல் கருத்தியலுக்கு சவாலாக விளங்குகின்றன. திராவிடம் என்கிற பெயரில் கட்சி நடத்தும் திமுகவுக்கோ , அதிமுகவுக்கோ ஒரு சட்டமன்ற , நாடாளுமன்ற பிரதிநிதி இருக்கின்றாரோ மற்றைய திராவிட மாநிலங்களில். இல்லை மற்றைய மாநிலங்கள் தான் இவர்களை தமது பிரதிநிதிகளாக , திராவிடத்தின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்கிறார்களா ????
இப்படி , செல்லாக் காசான திராவிடத்தை இக்கட்சிகள் சுமப்பது  திராவிடர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவா அல்லது இவர்களது பிழைப்பியலுக்கா?


நண்பர் பிரின்ஸ் உடனே  சொல்லக்கூடும் " ஆமாம் திராவிடம் என்று பிழைக்க திராவிடர் கழகம் என்ற ஓட்டரசியலிலா இருக்கிறது " என்று? இல்லைதான். ஆனால் பெரியாரின் சீடர்களை வெகுஜன அரசியலிலிருந்து மேலும் விலக்கிய சாதனையைத் தான் இன்றைய தி.க செய்கிறது.....செய்திருக்கிறது. 

பெரியார் என்னும்  மாமனிதர் மறைந்த  பிறகு "திராவிடர் கழகம்" தமிழ்நாட்டுக்கு , திராவிட நாட்டுக்கு செய்த அரும்பணிகளைப் பட்டியல் இட இயலுமா திரு. பிரின்ஸ் அவர்களே...

செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு "சமூக நீதிக் காவலர்" என்ற பட்டம் வழங்கிய சாதனை இதில் சேராது.

திராவிடம் என்று பேசும்  திகவோ , திமுகவோ , அதிமுகவோ திராவிடர்களை ஒன்றிணைக்க என்ன செய்திருக்க்கிறார்கள்??

தமிழ் தவிர மற்ற திராவிட மொழிகள் தழைக்க என்ன செய்திருக்கிறார்கள்??

ஈழத்தில் தமிழன் பிணமான போது திராவிடத்தின்  பெயரால்  தென் மாநிலங்களை ஒன்றிணைத்து தம் குரலை வலிமையாக ஓலிக்கச் செய்ய முயற்சி எடுத்தீர்களா திராவிடர்களே????

இப்படி சுக்குக்கும் உதவாத திராவிடத்தை வைத்து என்ன சாதிக்க முயல்கிறீர்கள்??? 

உங்கள் நோக்கம் தான் என்ன?

இவர்கள் சாதித்தது எல்லாம் , மாற்று மொழிக் காரர்களிடம் தமிழர்களை அடகு வைத்தது மட்டுமே...

தமிழர்களை ஆண்ட எம்.ஜி.ஆரில் தொடங்கி , ஜெயலலிதா , வைகோ , விஜயகாந்த் என தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்களை தமிழ்த் தலைவர்கள் ஆக்கியதுதான்......

திராவிடக் கருத்துருவாக்கம் போலி என்பதல்ல நமது கருத்து. தீராவிடத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் போலியானவர்கள்.....அதன் மூலம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் என்பதே உண்மை...இதை உறுதிப்படுத்துவதாக இக்கட்டுரையின் அடுத்த பகுதி அமையும்..

இன்னும் வரும்........



தொடர்புபட்ட திரு.ப்ரின்ஸ் என்.ஆர் சாமா அவர்களின் கட்டுரையைப் படிக்க இங்கே செல்லவும்.

2 comments:

Anonymous said...

தங்கள் இருப்பை காட்ட இந்த கழகங்கள், திராவிடத்தை சுமந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் பகுத்தறிவுள்ள எவரும் திராவிடம் பேச மாட்டார்கள். இவர்கள் தான் தங்கள் பகுத்தறிவை ஆட்சியாளர்களிடம் அடகு வைத்துள்ளார்களே. சுயநலத்தின் பேரில்.

Anonymous said...

//பெரியார் என்னும் மாமனிதர் மறைந்த பிறகு "திராவிடர் கழகம்" தமிழ்நாட்டுக்கு , திராவிட நாட்டுக்கு செய்த அரும்பணிகளைப் பட்டியல் இட இயலுமா திரு. பிரின்ஸ் அவர்களே..//

முதலில் பெரிய் தாடிக்காரர் என்ற முண்டம் செய்த நல்ல காரியங்களை பட்டியல் போடுங்க பார்ப்போம்.அப்புறம் பெரியார் பெயரைச் சொல்லி வியாபாரம் செய்யும் இந்த திராவிட கழக நாய்கள் செய்யும் நன்மைகளை பட்டியல் போடலாம்.