கடந்த சில வாரம் சுயநலமிகளின் சேதிகளால் நிரம்பி இருந்தது. செம்மொழி மாநாடு என்னும் துரோகத்தின் கொண்டாட்டமானது நடைபெறுகிற வேளையில் , கே.பி அவர்கள் அரசாங்கத்துடன் இணக்கப்பாடான அரசியலை மேற்கொள்ளப் போவதான ஒரு செய்தியும் வெளி வந்திருந்தது.
ஒரு புறம் , கலைஞர் மு கருணாநிதி என்னும் முதியவர் தமிழர்கள் எல்லோரும் செல்வச்செழிப்பினில் மிதந்து கொண்டிருப்பதைப் போலொரு தோற்றஞ் செய்ய செம்மொழிக் கூத்தை நிகழ்த்திக்கொண்டிருந்த வேளையில் திருவாளர் கே.பி அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படப் போகிறார்.
வருத்தமான ஒரு சேதிதான்......அனேகமாக வெளிவரும் சேதிகளைப் பார்க்கையில் அது உண்மையானதாய் இருக்கவே வாய்ப்புக்கள் அதிகம்.
தேசியத்தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்றும் , புலிகளின் வழங்கல்களை முழுதாக மேற்கொண்டவர் என்ற வகையிலும் , இறுதிக்கட்டப் போரின் நிகழ்வுகளை முற்று முழுதாக அறிந்தவர்களில் ஒருவர் என்ற வகையிலும் , விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவர் தாம்தான் என அறிவித்துக்கொண்டவர் என்ற வகையிலும் இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைத்த அரிய சொத்து திரு.கே.பி. என்பது முற்றிலும் உண்மை.
உலகெங்கும் படர்ந்திருக்கும் புலிகளின் சொத்துக்கள் அனைத்தையும் அறிந்தவர் என்ற வகையிலும் , புலனாய்வுப் போராளிகளனைவரையும் அவர்தம் செயல்பாடுகளை அறிந்து தெளிந்தவர் என்ற வகையிலும் அவரது தாவல் அடுத்த கட்ட தமிழீழப் போருக்கு பாரிய பின்னடைவு என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
கே.பியின் இணக்க அரசியல் இப்போது ஆரம்பித்ததா , அவர் காலத்தின் கைதி ஆகிவிட்டாரா இல்லை இறுதிக்கட்டப் போருக்கு முன்னரே அவர் அரசாங்கத்தின் வலையில் விழுந்து விட்டாரா?
நமக்குப் பிரேதப் பரிசோதனை செய்வதில் விருப்பமிருக்காவிடினும் , அத்தகைய சுய சோதனையே செய்த தவறுகளை சரி செய்ய உதவும் என்பதில் மாற்றுக்கருத்திருக்காது.
முதலில் , சில கருத்துக்கள் வெளிப்படையாக.
எப்போது இறுதிக்கட்டப் போரில் கே.பி வெளிப்படையாக உள் நுழைகிறார்?
*விடுதலைப்புலிகள் வன்னியில் கிளிநொச்சியை இழந்த பிறகு தேசியத்தலைவரால் உலகளாவிய தொடர்புகளுக்காக நியமிக்கப்படுகிறார்.
*இறுதிக்கட்டப் போரின் அனைத்து விடயங்களிலும் , தேசியத்தலைவருடன் தொடர்பில் இருக்கிறார்.
*முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்து போனபிறகு தலைவர் இருப்பதாகவும் , பின்பு வீரமரணமடைந்தார் எனவும் அறிவிக்கிறார்.
*பின்பு புலிகளின் தலைமைச் செயலாளர் என தம்மை பிரகடனப்படுத்திக்கொள்கிறார். எழுந்த எதிர்ப்புகளை அனைத்தையும் வெல்கிறார்.
*2009 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மலேசியாவில் கைது செய்யப்பட்டு பின்பு இலங்கைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.
* 2010 ல் அரசாங்கத்துடன் இணக்கப்பாடாக செயல்படப் போவதாக தகவல்கள் வெளி வருகின்றன.
ஜனவரி 2009 ல் புலிகளின் தலைவர் திரு.செல்வராசா பத்மநாதனை அனைத்துலகப் பொறுப்பாளராக நியமிக்கிறார் என்னும் போது கனகாலமாவது தேசியத்தலைவர் தொடர்ச்சியாக அவருடன் தொடர்பில் இருந்திருப்பார். அதாவது கிளிநொச்சி வீழ்வதற்கு முன்னரே. அதைத்தான் நாம் இங்கு தெளிவுபடுத்த விளைகிறோம்.
இனி , கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பிறகான புலிகளின் செயல்பாடு எப்படி இருந்தது?
- மக்களையும் தம்மோடு அழைத்துக்கொண்டு புலிகள் படிப்படியாக பின்வாங்குகிறார்கள்....ஒவ்வோர் நாளிலும் மக்களின் இழப்புடன் , புலிகளின் இழப்பும் அதிகரிக்கிறது. விநியோகங்கள் மட்டுப்படுத்தப் பட்ட ஒரு சூழலில் லட்சக்கணக்கான மக்களையும் தம்மோடு அழைத்துச் சென்றது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
- புதுக்குடியிருப்பு சமர் தான் சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர் என்றார் ஒரு ஆய்வாளர் , அப்புதுக்குடியிருப்பும் வீழ்ந்த போது புலிகள் தமது தோல்வி உறுதிப்படுத்தப்பட்டதை உணர்ந்திருப்பார்கள். அப்போதாகினும் கரந்தடி வீரர்களாக தம்மை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து மரபுவழிச் சண்டையைப் புரிந்துகொண்டிருந்தது ஏன்?
- எப்பேர்ப்பட்ட விடுதலை வீரனுக்கும் , போராளிகளுக்கும் காடுகள் போன்றதொரு கவசம் இருப்பதில்லை.....வெறும் நாட்டுத்துப்பாக்கிகளை வைத்துக்கொண்டே மூன்று மாநில அதிரடிப் படைகளை பல பத்தாண்டு காலம் தண்ணி காட்டிய வீரப்பன் அதற்கு நல்ல உதாரணம். அவ்வளவு ஏன்......இந்திய அரசின் வலிமைவாயந்த அதிரடிப்படையையே புலிகள் சமாளித்ததும் கரந்தடி வீரர்களாகவே. அப்பேர்ப்பட்ட காடுகளை விட்டுவிட்டு புதுமாத்தளனை தம் கடைசிச் சமருக்கு தேர்ந்தெடுத்தது ஏன்?
- முள்ளிவாய்க்காலுக்கும் , நந்திக்கடலுக்கும் இடைப்பட்ட ஒரு சிறு நிலத்தில் கடற்கரையை ஒட்டிய நிலப்பரப்பை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? ஏதேனும் வெளிநாடொன்று உதவிக்கு வரப்போவதாய் யாரேனும் நம்பிக்கை அளித்திருந்தார்களா? ஒரு வேளை அப்படியான உறுதி அளிக்கப்பட்டிருக்குமானால் , வெளிநாடுகளுடன் தொடர்பில் இருந்த கே.பி மூலமாகவே நடந்திருக்கும்.
இறுதிப்போரின் மே முதலாவது அல்லது இரண்டாவது வாரத்தில் வெளிநாடொன்றின் போர்க்கப்பல் ஒன்று புலிகளின் தலைவரைக் காப்பாற்ற ஆயத்தமானதொரு செய்தியையோ , வதந்தியையோ கேள்விப்பட்டிருப்பீர்கள்.....அதுபோன்ற ஒரு உதவியை எதிர்ப்பார்த்தா முள்ளிவாய்க்கால் நோக்கிப் பயணித்தார்கள் புலிகளும் , தேசியத்தலைவரும்???
எப்படிப் பார்த்தாலும் , ஏதோவொரு நம்பிக்கையின் பேரில் தான் தமக்குச் சற்றும் பாதுகாப்பில்லாத ஒரு இடத்தில் மாட்டிக்கொண்டார்கள் புலிகள் என்பதில் நமக்கு சந்தேகம் இல்லை.
அந்த நம்பிக்கையை கொடுத்தவர் யார்? அந்த நம்பிக்கையை உலகின் எந்தச் சக்தி கொடுத்திருந்தாலும் திரு.கே.பி அவர்களின் மூலமே கொடுத்திருக்க இயலும் . ஆக , அதில் திரு. கே.பி அவர்களின் பங்களிப்பு மறைக்க முடியாததும் , தவிர்க்க முடியாததும் ஆகிறது.முள்ளீவாய்க்காலில் நாம் வீழ்ந்த பிறகு அத்தகைய நம்பிக்கையை அளித்தவர்களை ஏன் தோலுரித்துக்காட்டவில்லை திரு. கே.பி அவர்கள்?
தேசியத்தலைவர் வீரமரணம் அடைந்தார் என்றும் , பாரிய துரோகங்களின் விளைவாகவே அது நிகழ்ந்தது என்றும் கே.பி சொன்னார் எனில் கே.பியையும் தாண்டி துரோகமிழைத்தவர் யாரேனும் உளரோ என்ற கேள்வியும் எழுகிறது.
ஆக , எந்நோக்கில் பார்த்தாலும் திரு.கே.பி அவர்கள் இறுதிக்கட்டப்போருக்கு முன்னரே அரசாங்கத்துடனான இணக்கப்பாட்டு அரசியலை ஏற்படுத்திக்கொண்டாரோ என்ற சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நம்ப வைத்துக் கழுத்தறுத்தவர்கள் எந்த முகத்தோடு மக்களைச் சந்திக்க வடக்குக்குப் போனார்கள் என்ற கோபமும் , வேதனையும் , ஆற்றொணாத் துயரமும் அடிமனதில் எழுகிறது.
புலிகளின் புலனாய்வுத் துறை இன்னமும் இயங்குவதாக இலங்கை அரசாங்கமே ஒப்புக்கொண்டிருக்கிறது. இனியாவது , குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில் புலிகள் தெளிவான சேதியொன்றை உலகிற்குத் தர வேண்டும். இல்லையெனில் கே.பி யின் வரிசையில் இன்னும் பலர் இணைவதை தடுக்க முடியாது..
இனியும் மெளனம் , இருப்பிற்கே ஆபத்து என்று உணரும் நிலை வருமா?
கே.பி உலகிற்கு ஒரு சேதி சொல்லிச் சென்றிருக்கிறார். எதிரியை விட துரோகியே பலத்த இழப்பை ஏற்படுத்துவான் என்று...துரோகிகளைத் தண்டிக்கும் வரை புலிகள் வீழ்த்தப்படாமல் இருந்தார்கள்.....
என்றைக்கு இந்த மாற்றுக்கருத்து மகராசன்கள் பாசிசப் பாட்டு பாடினார்களோ அன்று துரோகிகளைக் கொல்லாமல் விட்டார்கள் , அதன் விளைவு ? இன்று ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றாகி விட்டது !
இதுவே கே.பி தந்த சேதி. Tweet
2 comments:
நீங்கள் சொல்வதை மறுப்பதற்கில்லை. துரோகிகளை இனங்காணாமல் போனது நம் துரதிருஷ்டம்.
I believe kp was arrested in 2007 itself in thailand(later the arrest news was toned down).
and it seems he was not active with the tiger movement for the past 6 years.
from 2007 kp might have been under the control of security agencies.
they used him for announcing that praba is dead and take over the movement to demoralize expat tamils.
as you know expats are the backbone for funding the tigers.they will demoralize if praba is dead and see the organisation going in a disarray.they may reduce the funding and eventually the international network may die out.
this is the reason for the sustained campaign that praba is dead.see ,after 1 1/2 years since praba's death(presumed),they were not able to close rajiv's murder case.and india did not move for kp's extradition even though he was also one of the main person involved in rajiv's case. and so far kp was not shown to media,only his photo is shown in govt controlled media.is this seems fishy.
on the other hand , for praba if he is alive ,it will not go well for the tamil population if he shows that he is alive .in that case the SL govt will get more points to commit genocide.
I believe ,praba would have sensed the defeat atleast one year before and withdrawn most of his cadre to safe location.their strategy seems to be inflicting severe casuality .
and i believe most of those arrested 10000 young men and women are innocent and are branded tigers
and arrested to deny praba the future man power.they legitimised the arrest thro' kp as he told initially his objective was to secure the release of cadres.
only god knows
Post a Comment