Monday, May 10, 2010

வக்கற்ற நிலையிலும் மானம் காத்த பார்வதியம்மாள்.!

எண்பது வயதிற்கும் மூத்த உயர்திரு தேசியத்தலைவரின் தாயார் இந்தியா வருவதற்கு மத்திய அரசாங்கம் போட்ட நிபந்தனைகளைப் பார்த்தால் , அது கோபாலபுரத்தில் எழுதித்தரப்பட்டு சொக்கத்தங்கம் சோனியாவின் ஒப்புதலை பெற்றுவந்த ஒன்றாகவே தோற்றமளிக்கிறது....



அந்த  நிபந்தனைகள்:

பார்வதி தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும். மருத்துவமனையில் தான் தங்க வேண்டும், வேறெங்கும் அவர் தங்கக் கூடாது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அவர் விரும்பினால், அதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

எந்த அரசியல் கட்சியினருடனும் குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் பங்கு வைத்திருப்பவர்களுடன், எந்த தொடர்பும் அவர் வைத்துக் கொள்ளக் கூடாது.

பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே, தொடர்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட  நிபந்தனைகளுடன் நண்பன்  கூப்பிட்டால் கூட போகத்தோன்றாது. இதில் எமது தேசியத்தலைவரைப் பெற்றெடுத்த பார்வதி அம்மையார் அவர்கள் செல்வார்களா என்ற சந்தேகம் அப்போதே எழுந்தது. இருப்பினும் போக்கிடம் இல்லா ஒரு கேவலமான சூழலுக்கு அவரை நம்  தமிழினத்துரோகிகள் கொண்டு வந்து விட்டார்கள் என்ற உண்மை சுட்டதால் அமைதி காத்தோம்.

ஆனால் , அந்த வீரத்தாய் , இத்தகைய கேவலமான நிபந்தனைகளுடன் இந்தியா வரத்தேவையில்லை என்று இந்தியா அளித்த "விசா"வை தூக்கி எறிந்து இலங்கைக்கே சென்று விட்டார் அவ்வம்மையார்


NEW DELHI/CHENNAI: Parvathi Ammal, mother of slain LTTE chief V Prabhakaran, has rejected the conditions that the Centre has attached to her visit to Tamil Nadu, Home Ministry sources said on Monday.

Parvathi Ammal flew from Malaysia to Sri Lanka on Monday after rejecting the Centre’s conditions for her stay in India. Sources told Express that Parvathi has has gone back to her home in Valvettithurai in Jaffna, where she hopes to live the rest of her life.


இதுகாறும் எமக்கு பெரிதான கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை. ஒருவேளை அப்படியொருவர் இருந்தால் இந்த தமிழகத்தின் ஈனப்பிறப்புக்களை கண்டிப்பாக மன்னிக்கவே மன்னிக்காதீர்கள்....அப்படி மன்னித்தால் , நாங்கள் உங்களின் நேர்மையைக்கூட சந்தேகிக்க நேரிடும்.

வக்கற்ற நிலையிலும் கூட வாய்மை காத்த , வீரம் காத்த , மானம் காத்த பார்வதி அம்மையார் இருக்கும் திசை நோக்கி மனம்  வருந்தி  வணங்குகிறோம்....நாங்கள் எல்லாம் இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற துக்கம் பொங்குகிறது.....!!!

நாடுபோற்றும் நல்லதொரு பிள்ளையை பெற்றெடுத்த தாயே , உமது இந்த வலிக்கு இந்த நயவஞ்சகர்கள் பதில் சொல்லும் காலம் வரும்...அதை உங்கள் காலத்திலேயே பார்ப்பீர்கள் என்று மட்டும் சொல்லி விடைபெறுகிறோம். 

5 comments:

Unknown said...

இந்த கேவலமான பிறப்புகளை விட ராஜ பக்‌ஷே மேல் என்று முடிவெடுத்து விட்டார் போலிருக்கு. இவன்களுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

South-Side said...

உண்மைதான் திரு.பரிதி நிலவன்...

ஆனாலும் நெஞ்சுரம் மிக்க முடிவு அது.

தமிழ் உதயன் said...

யாருப்பா அது தமிழின (ஈன) தலைவன் தன் முதுகை தானே தட்டிகொள்ளும் போது இடைஞ்சல் பண்ணுவது?

அ. நம்பி said...

`மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று
மிதியாமை கோடி பெறும்.'

Anonymous said...

Nambi's comments r d best.