Friday, May 07, 2010

"நாம் தமிழர்" இணையத்தள நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்...!

அன்புக்குரிய "நாம் தமிழர்" இணையத்தள நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

ஆயிற்று , புதுமாத்தளன் / முள்ளிவாய்க்கால் கொலைக்கள நிகழ்வுகள் நடந்து ஒருவருட நினைவிற்கு இன்னும் சில நாட்களே மீதமுள்ளது. உலகெல்லாம் எழுந்த பெரெழுச்சி தமிழகத்தில் இல்லையே என்ற வருத்தம் மிகுந்த போது "தனிச்" சூரியனாய் எமக்காய்ப் பொங்கியெழுந்து போர்க்களமென்ற சிறைக்களம் சென்றவர் "சீமான்".

உணர்வு பொங்கும் பேச்சால் உலகத்தமிழர்களைக் கட்டிப்போடும் ஆற்றல் மிகுந்தவர் அவர். அன்னார் தொடங்கப்போகும் "நாம் தமிழர்" என்ற அரசியல் கட்சியை முழு மனதோடு "ழகரம்" வரவேற்கிறது. அதை , அவ்வியக்கத்தை உரிய இளைஞர்களிடம் கொண்டு செல்லும் பாரிய பணியையும் "ழகரம்" செய்யும்.

அத்தகைய அர்ப்பணிப்புள்ள ஒரு இயக்கத்தின் "அதிகாரப்பூர்வ" இணையதளமான www.naamtamilar.org நிர்வாகிகளுக்கு நாம் விடுக்கும் தாழ்மையான வேண்டுகோள் இது.


நாம் தமிழர் இயக்கம் உலகளாவிய முறையில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது என்பதை அறிவீர்கள்.......குறிப்பாக , புலம் பெயர் தமிழர்கள் , நாம் தமிழர் இயக்கத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். அத்தகு சூழலில் "நாம் தமிழர்" அதிகாரப்பூர்வ வலைத்தள செயல்பாடு மிக அவசியமானதாகிறது.

ஆனால் , எப்போதாவது தரமேற்றப்படும் செய்திகள் மட்டுமே வலம் வந்து கொண்டிருக்கின்றன அத்தளத்தில்.

உதாரணத்திற்கு , இந்தச்செய்தி (சீமானின் செய்தியாளர் சந்திப்பு ) 6 ஆம் தேதி வந்திருக்கிறது. ஆனால் செய்தியாளர் சந்திப்பில் நடந்த நிக்ழவுகள் பற்றி இன்று இப்பதிவு வெளியாகும் வரையிலும் எந்தத் தகவலும் இல்லை...  (பதிவிட்ட திகதி : 08 , மே , 2010 இந்திய நேரம் காலை 11.15 .)


நாம் தமிழர் இயக்கமும் , அதன் செயல்பாடுகளும் வெகுஜன பத்திரிக்கைகளால் புறக்கணிக்கப்படுகிற ஒரு சூழலில் "இணையச் செயல்பாடு " இன்னும் வலுவாக இருப்பின் மட்டுமே 'நாம் தமிழர்" இயக்கத்தின் இருப்பும் , செயல்பாடும் இன்னும் வலுப்பெறும் , வலுவுறும்.!!!!


அடுத்து , புகைப்படமும் , கருத்தும் என்ற தலைப்பில் , சற்றும் ஒவ்வாத கருத்து வந்திருக்கிறது. அது சரியான கருத்தோ , தவறோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அதுபோன்ற பதிவுகள் வருவது தவிர்க்கத்தக்கது. 



தோன்றியதைச் சொல்லியாகிவிட்டது. இனி செய்வதும் செய்யாததும் உங்கள் விருப்பம். 

"நாம் தமிழர்" ஆல் போல் தளைத்து , அருகு போல் வேரூன்றி வாழ்ந்திட வாழ்த்தும்....

தோழமையுடன்,
"ழகரம்"

No comments: