Thursday, May 27, 2010

த. தே. கூவை தடை செய்யக் காரணங்கள் உள்ளன - ஒரு சிங்கள ஏடு..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய போதுமான காரணங்கள் இருக்கின்றன என்று ஒரு சிங்கள இணைய ஏடு சொல்கிறது... இந்த "போதுமான" என்ற வார்த்தைக்கு லங்காவெப் அந்த சிங்கள ஊடகம் கையாண்டிருக்கிற அல்லது உதாரணம் காட்டியிருக்கிற சேதி இன்னமும் விசேடம்...

அதாவது , இந்திய நடுவண் அரசு "புலிகளை" தடை செய்ய அல்லது சட்ட விரோத அமைப்பாக அறிவிக்க கூறியிருக்கும் காரணங்கள் அனைத்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் பொருந்துமாம்....

இந்திய அரசு புலிகளை சட்டவிரோத அமைப்பாக அறிவித்ததற்குக் கூறியிருந்த காரணங்களை முழுவதுமாகப் படிக்க இங்கே க்ளிக்கவும்...

சீன அரவணைப்பில் சுகம் காணும் சிறிலங்கா அரசை திருப்திப் படுத்த இந்திய நடுவண் அரசும் , தமிழக அரசும் போட்ட உத்தரவை எடுத்துக்கொண்டு , தமிழீழ மக்களின் ஒரே குரலாக ( அது மட்டுப்படுத்தப்பட்ட , தணிக்கை செய்யப்பட்ட குரலாகவே இருந்தாலும்)  இன்று இலங்கைத் தீவினுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரே தமிழருக்கான வாய்ப்பாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும் என்று ஒரு சிங்கள் ஊடகத்தின் பத்தி எழுத்தாளர் எழுதுகிறார் எனில் , சிங்களர்களின் மனப்போக்கு என்னவென்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்...


ஜனநாயக ரீதியாகக் கூட தமது குரலை எடுத்தியம்ப தமிழர்களுக்கு அனுமதியளிக்கத் தயாராக இல்லை இலங்கையின் பெரும்பான்மைச் சிங்களச் சமுதாயம் என்பதை "தில்ருக் கன்னன்கரா" என்ற  சிங்கள எழுத்தாளரின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்...



Demonstrations regularly carried out by separatists elements and civil disobedience campaigns TNA has vowed to carry out.  More disquiet and threat is faced by Sri Lanka than by India by these harsh campaigns done under the guise of peaceful protest. Ultra racism associated with these is another grave concern for Lankans.

 விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் என்றார்கள்....ஏதோ , ஆயுதமெடுத்துப் போராடியது மட்டுமே குற்றமென்பதாகவும் , ஜனநாயக முறையில் போராடி இருந்தால் சுதந்திரத்தை சும்மா தூக்கிக்கொடுத்திருப்பார்கள் என்று சொல்லும் அகிம்சாவாதிகள் இந்த அநியாய வாதம் பற்றி என்ன கருத்துச் சொல்கிறார்கள் என்பதைக் கேட்க வேண்டும் போலவே இருக்கிறது....

இந்தியா தான் வழிகாட்டுகிறது சிறிலங்காவிற்கு எப்போதும் என்று வேறு சொல்கிறார் கட்டுரையாளர்......அதையும் பார்ப்போம்...

Indian concerns further give rise to yet another important issue that affects Sri Lanka more than India. India illegalized all separatist activity in 1962 whereas it took Sri Lanka another 21 years to follow suit. During this time Tamil separatists passed the Vaddukoddai Resolution in 1976. Had Sri Lanka followed India in 1962 in illegalizing all forms of separatism, this would not have happened.
இந்தியா 1962 லேயே அனைத்து தனிநாட்டுக் கோரிக்கைகளையும் தடை செய்து விட்டதாகவும் , ஆனால் சிறிலங்கா 21 வருடங்கள் கழித்தே அதைச் செய்ததாகவும்  சொல்கிறார்.....

இப்போது சில விடயங்களைப் பார்ப்போம்...

- விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் களைந்து விட்டு நிராயுதபாணியாக  "13 வது" சட்டதிருத்தத்தின் மூலம் "வட கிழக்கு " மாகாணங்களைப் பெற்றுக் கொண்டு அமைதியாக இருந்துவிட வேண்டும் என்று சிங்களத்துக்குச் சார்பான தொரு ஒப்பந்தத்தை திணித்தது இந்தியா.....

- இலங்கை புலிகளைத் தடை செய்வதற்கு வெகு காலத்திற்கு முன்பே தடை செய்தது இந்தியா..

- புலிகளை ஒடுக்க அனைத்து வகை ஆயுத , இராஜதந்திர உதவிகளைச் செய்ததாக குற்றம் சாட்டுகிறார்கள் புலம்பெயர் தமிழர்கள்......அதை இன்று வரை இல்லை என்று நிருபிக்க முடியவில்லை இந்தியாவால்.....குறைந்தபட்சம் , தமிழகத் தமிழர்களின் திருப்திக்காவது நிருபிக்க முயலவில்லை.....லோக்கல் கதர்ச்சட்டைகள் தான் இல்லை இல்லை என்று கூவினார்கள்.......டெல்லி ஏறெடுத்தும் பார்க்கக் காணோம்...

- தமிழினத்திற்கெதிரான யுத்தத்தில் ஐநாவின் , மேற்குலகத்தின் அழுத்தங்கள் அத்தனையையும் குடைபோல நின்று சிங்களத்தைக் காத்தது இந்தியா என்பது உண்மைதானே.....அதன் மூலம் தமிழின அழிவுக்கு இந்தியாவும் காரணமே என்பதுவே தமிழர்களின் வாதம்....

இவ்வாதங்களை மறுக்கவோ , மறைக்கவோ செய்ய இயலாத இந்தியா "புலிகளால்" இந்தியத் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் என்று அறிவிப்பது என்பது முறையோ இல்லையோ பிறகு பார்க்கலாம்....அது சிறிலங்காவை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவே இருக்கலாம்....காரணம் இந்தியாவை விட்டு சிறிலங்கா சீனாவை தேடிப் போய்க் கொண்டிருக்கிறது...

அதை பன்னாட்டு பொருளாதார இதழான "பைனான்சியல் டைம்ஸ்"ல் இந்திய ஆய்வாளர்  இப்படிக் குறிப்பிடுகிறார்..

"China has been trying to jump in and seize more opportunities in Sri Lanka," says Brahma Chellaney, professor of strategic studies at the Centre for Policy Research, a New Delhi think-tank.
China was Sri Lanka's biggest source of foreign funding in 2009, providing $1.2bn - almost triple the amount given by the Asian Development Bank, the number two overseas lender

source : financial times

நிலைமை இவ்வாறிருக்க , சிங்களத்தைக் குளிர்விக்க இந்திய இராஜதந்திரிகள் புலிகள் மீது பாய்கிறார்கள்....அதைச் சற்றும் சட்டை செய்யாத சிங்களர்கள் 
இந்தியாவுடனான "செபா " ஒப்பந்தத்தை நிறுத்த வேண்டும் என்கிறார்கள்.......

President Mahinda Rajapaksa on Tuesday said Sri Lanka would not enter into trade agreements that would have an adverse effect on the country’s economy when he met a group of protestors against the implementation of a comprehensive economic partnership agreement (CEPA) with India.

ஆக , சீனாவிற்கு அம்பாந் தோட்டை துறைமுகம் , அனல்மின் நிலையம் என்று அள்ளிக்கொடுக்கும் சிறிலங்கா "இந்தியாவிற்கு" ஒரு சாதாரண வர்த்தக ஒப்பந்ததிற்கு "பெப்பே" காட்டுகிறது என்றால் சிறிலங்கா செல்லும் திசையைப் புரிந்து கொள்ளாத இராஜதந்திரிகள் தான் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலைதானே????

அந்த இராஜதந்திரிகள்  , உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மறுப்பது மட்டுமின்றி இன்னமும் புலிப்பூச்சாண்டி காட்டுகிறார்கள்.......காட்டி தமிழக மக்களை திசை திருப்ப முயல்கிறார்கள்...

அப்படித் திசை திருப்ப முயலும் இந்த இராஜதந்திரிகள் , ஒருவேளை சிங்களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு "இந்தியா" சொன்ன அதே காரணங்களுக்காக தடை செய்யப்படுமானால் அதையும் வழிமொழிவார்களா என்பதே நம் கேள்வி......

யாருக்குத் தெரியும் ......த.தே.கூட்டமைப்பும் கூட சட்டவிரோத அமைப்பென்ற கெஜட் அறிவிப்பும் கூட கூடியவிரைவில் வரலாம் என்கிறீர்களா நண்பர்களே???

கோபாலபுரத்தாரின் ஆசியும் , சொக்கத்தங்கத்தின் ஆதரவும் இருக்கும் போது இந்திய இராஜதந்திரிகள் இதைக் கூட செய்ய மாட்டார்களா என்ன????

-கதிரவன்

Monday, May 24, 2010

"நாம் தமிழர் " இயக்கத்திற்கு "செக்" வைக்கிறது இந்தியா.

அனேகர் இந்த செய்தியை இப்போது படித்திருப்பீர்கள்......

ஊடகங்களின் ஒட்டுமொத்த புறக்கணிப்பையும் தாண்டி ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் மதுரையில் "நாம் தமிழர்" இயக்க மாநாட்டில் கூடினார்கள் என்ற செய்தி டெல்லி வரை எட்டியிருக்கிறது......

இது "நாம் தமிழர்" இயக்கத்திற்கு புதுதில்லியின் இந்திய மத்திய அரசாங்கம் வைத்த "செக்" என்று சொல்லலாம் என்று "பட்சி" சொல்கிறது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு சட்ட விரோத அமைப்பு. 

சென்னை: இந்தியாவில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் [^] இயக்கத்தை, சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு [^] அறிவித்துள்ளது. இது தொடர்பாக எமர்ஜென்சி கெஜட் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் புலிகளை ஆதரிப்போர் மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை [^] எடுப்பது மேலும் எளிதாகும்.
இது தொடர்பாக மத்திய உள்துறை இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா சார்பில் நாடு முழுவதும் முக்கிய பத்திரிக்கைகளி்ல் வெளியிடப்பட்டுள்ள அவரச அரசணையில் (எமர்ஜென்சி கெஜட் அறிவிப்பு) கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ.) இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் பெரும்பாலான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுவிட்டாலும் எஞ்சியுள்ள போராளிகளும், தலைவர்களும், அவர்களது லட்சியமான தமிழ் ஈழத்தை உருவாக்கும் நோக்குடனும், இந்திய அரசு மற்றும் இலங்கை அரசை பழிவாங்கும் நோக்குடனும் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்பது சமீபத்தில் பெறப்பட்ட அறிக்கைகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

எஞ்சியுள்ள போராளிகள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தும், கள்ளத் தோணியில் இந்தியா வந்துள்ளனர். இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை தாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து திட்டம் வகுக்கும் தளமாக அவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதை ஒதுக்கிட விட முடியாது.

கடல்வழியாகவும், முறையான ஆவணங்கள் மூலமாகவும், இலங்கை தமிழ் அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை புறந்தள்ளிவிடவும் முடியாது.

உலகம் முழுவதும் பரவியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினர், புலிகளின் தோல்விக்கு இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளுமே காரணம் என்பது போன்ற, இந்திய விரோதப் போக்கை இலங்கை தமிழர்களிடையே விதைக்கும் வகையில் கட்டுரைகளை இணையதளத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இத்தகைய பிரசாரம், இந்தியாவின் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை மிகவும் பாதிப்பதாக உள்ளன.

மேற்கண்ட காரணங்களுக்காக, விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும், இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகள் அனைத்தையும் இயன்ற வகையிலெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை தொடர்ந்து உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது.

1) தமிழகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட எல்.டி.டி.இ. போராளிகள், அந்த அமைப்பைவிட்டு விலகியவர்கள், அனுதாபிகள் ஆகியோரின் நடவடிக்கைகள், குறித்து விசாரித்ததில் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள், எல்.டி.டி.இ. இயக்கத்தினரால் எப்படியேனும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவர் என்று தெரியவருகிறது;

2) புலிகள் மீது தடை அமலில் இருந்தும், இந்தியாவில் எல்.டி.டி.இ. ஆதரவு இயக்கங்கள் மற்றும் தனி மனிதர்களின் நடவடிக்கைகள் காணப்பட்டதாலும், இந்த சக்திகள் எல்.டி.டி.இ. இயக்கத்துக்கு தங்களது ஆதரவை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டன.

3) இந்த அமைப்பு குறித்த இந்தியாவின் கொள்கை மற்றும் அவர்களுடைய செயல்களை ஒடுக்குவதில் மாநில நிர்வாகத்தின் நடவடிக்கை ஆகியவை குறித்து எல்.டி.டி.இ. தலைவர்கள், இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், வெறுப்புற்றிருக்கிறார்கள் என்றும், மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

எல்.டி.டி.இ. அமைப்பின் மேற்சொன்ன நடவடிக்கைகள் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பொது அமைதிக்கும், தொடர்ந்து அச்சுறுத்தலாகவும், குந்தகம் விளைவிப்பதாகவும் கருதி இவ்வமைப்பு ஒரு சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்பட வேண்டுமென்றும் மத்திய அரசு கருதுகிறது.

மேலும் அ) எல்.டி.டி.இ. அமைப்பின் தொடர்ந்த வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதாலும்,

ஆ) இவ்வமைப்பு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், எல்.டி.டி.இ. அமைப்பை சட்டவிரோதமான அமைப்பாக உடனடியாக அறிவிப்பது அவசியம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.

எனவே, தற்போது 1967-ம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (37/1967) 3-ம் பிரிவின் (1) உட்பிரிவிலும், (3) உட்பிரிவின் வரம்பு நிபந்தனைகளிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை (எல்.டி.டி.இ) சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கிறது.

இவ்வாறு இந்த அவரச கெஜட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, May 12, 2010

படித்தவை (பிடித்தவையும் கூட)


படித்ததில் பிடித்தது.....

ஊருக்குத்தான் உபதேசம்.........! 


வெளுத்துக்கட்டுகிறார் திரு. நம்பி அவர்கள் திரு.கருணாநிதியின் அடேங்கப்பா கட்டளையை......பி.டி.எப் இணைப்பை படிக்கத்தவறாதீர்கள்.......!



****

சுயநலப் பேய்களடா தம்பி...சுக்குக்கும் உதவாரடா...!

ஈழத் தமிழர்களுக்காக வீரமரணம் அடையத் தயாராக இருக்க வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் பண்ணிய , சிவப்புச்சட்டைகளிலேயே கொஞ்சம் மாறுபட்ட வாய்ச்சவடால் வீரராக தோற்றமளிக்கும் திரு.தா.பாண்டியன் அவர்கள் இப்போது என்ன செய்கிறார் என்று அவர்கள் பத்திரிக்கையிலாவது போட்டால் படித்துத் தெரிந்து கொள்வோம்....


தமிழர்களுக்காக வீரமரணத்துக்கு தயாராகுங்கள் - தா.பாண்டியன்

எழவெடுத்த சுயநலக் கூட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகளீலும் பஞ்சமில்லை தான் போங்கள்.

****

நம்மில் ஒற்றுமை நீங்கின்?

யார் இந்த சேரமான் ? எங்கிருந்து வந்தார் திடீரென்று ? யாருடைய விருப்பமாக திரு.ஜெயானந்த மூர்த்தி அவர்களை நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறார்??

என்னதான் நடக்கிறது நாடு கடந்த தமிழீழ அரசில்? யார்தான் பிரச்சினை செய்கிறார்கள்??? யாராவது தெளிவு படுத்தினால் நலம்....இப்படிப்பட்ட குழப்பங்கள் தொடருமானால் , சத்தியமாக தமிழர்களின் விடுதலை உணர்வும் , தேசியத்தின் பாலான விருப்பும் மழுங்கப்பட்டுவிடும்......

அதையொட்டி படித்ததில் பிடித்தது திரு.ஜெயானந்த மூர்த்தி அவர்களின் அறிக்கை...

"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது"

- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்.

சமீபத்திய காமெடிகள்...
திரு.ஜெயராம் ரமேஷ் அவர்களின் சீன விஜயமும் , உள்துறை அமைச்சகம் பற்றிய கமெண்ட்டும்.....

திரு. திக் விஜய்சிங் அவர்களின் ப.சிதம்பரம் பற்றிய கமெண்ட்.....அராஜகமாக நடந்து கொள்கிறாராம் திரு.சிதம்பரம் மாவோயிஸ்டுகள் விடயத்தில்.....


உச்சகட்ட காமெடி....

சிறிலங்காவைப் போல் அராஜகமாகவும் , மனசாட்சியின்றியும் மாவோயிஸ்டுகளின் விடயத்தில் நடந்து கொள்ள மாட்டோம்.....

- உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 

ஆனால்  , போரில் மகிந்தா வென்றவுடன் முதல் பாராட்டு டெல்லியிடமிருந்து....

ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டு வந்த போது , அதை முழுமூச்சாக தோல்வி அடையச் செய்த பெருமை இந்திய காங்கிரஸ் அரசுக்கே உண்டு.....அப்படியானால் அராஜகத்திற்கு மனச்சாட்சியின்றி ஆதரவு நல்கியதா இந்திய நடுவண் அரசு என்ற கேள்வி நம்மில் எழுந்தால் அது தேசத்துரோகமா என்ற எமது கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் வைத்திருக்கிறதா?

Monday, May 10, 2010

வக்கற்ற நிலையிலும் மானம் காத்த பார்வதியம்மாள்.!

எண்பது வயதிற்கும் மூத்த உயர்திரு தேசியத்தலைவரின் தாயார் இந்தியா வருவதற்கு மத்திய அரசாங்கம் போட்ட நிபந்தனைகளைப் பார்த்தால் , அது கோபாலபுரத்தில் எழுதித்தரப்பட்டு சொக்கத்தங்கம் சோனியாவின் ஒப்புதலை பெற்றுவந்த ஒன்றாகவே தோற்றமளிக்கிறது....



அந்த  நிபந்தனைகள்:

பார்வதி தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும். மருத்துவமனையில் தான் தங்க வேண்டும், வேறெங்கும் அவர் தங்கக் கூடாது.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அவர் விரும்பினால், அதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

எந்த அரசியல் கட்சியினருடனும் குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் பங்கு வைத்திருப்பவர்களுடன், எந்த தொடர்பும் அவர் வைத்துக் கொள்ளக் கூடாது.

பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே, தொடர்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட  நிபந்தனைகளுடன் நண்பன்  கூப்பிட்டால் கூட போகத்தோன்றாது. இதில் எமது தேசியத்தலைவரைப் பெற்றெடுத்த பார்வதி அம்மையார் அவர்கள் செல்வார்களா என்ற சந்தேகம் அப்போதே எழுந்தது. இருப்பினும் போக்கிடம் இல்லா ஒரு கேவலமான சூழலுக்கு அவரை நம்  தமிழினத்துரோகிகள் கொண்டு வந்து விட்டார்கள் என்ற உண்மை சுட்டதால் அமைதி காத்தோம்.

ஆனால் , அந்த வீரத்தாய் , இத்தகைய கேவலமான நிபந்தனைகளுடன் இந்தியா வரத்தேவையில்லை என்று இந்தியா அளித்த "விசா"வை தூக்கி எறிந்து இலங்கைக்கே சென்று விட்டார் அவ்வம்மையார்


NEW DELHI/CHENNAI: Parvathi Ammal, mother of slain LTTE chief V Prabhakaran, has rejected the conditions that the Centre has attached to her visit to Tamil Nadu, Home Ministry sources said on Monday.

Parvathi Ammal flew from Malaysia to Sri Lanka on Monday after rejecting the Centre’s conditions for her stay in India. Sources told Express that Parvathi has has gone back to her home in Valvettithurai in Jaffna, where she hopes to live the rest of her life.


இதுகாறும் எமக்கு பெரிதான கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை. ஒருவேளை அப்படியொருவர் இருந்தால் இந்த தமிழகத்தின் ஈனப்பிறப்புக்களை கண்டிப்பாக மன்னிக்கவே மன்னிக்காதீர்கள்....அப்படி மன்னித்தால் , நாங்கள் உங்களின் நேர்மையைக்கூட சந்தேகிக்க நேரிடும்.

வக்கற்ற நிலையிலும் கூட வாய்மை காத்த , வீரம் காத்த , மானம் காத்த பார்வதி அம்மையார் இருக்கும் திசை நோக்கி மனம்  வருந்தி  வணங்குகிறோம்....நாங்கள் எல்லாம் இருந்தும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற துக்கம் பொங்குகிறது.....!!!

நாடுபோற்றும் நல்லதொரு பிள்ளையை பெற்றெடுத்த தாயே , உமது இந்த வலிக்கு இந்த நயவஞ்சகர்கள் பதில் சொல்லும் காலம் வரும்...அதை உங்கள் காலத்திலேயே பார்ப்பீர்கள் என்று மட்டும் சொல்லி விடைபெறுகிறோம். 

Friday, May 07, 2010

"நாம் தமிழர்" இணையத்தள நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்...!

அன்புக்குரிய "நாம் தமிழர்" இணையத்தள நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள்.

ஆயிற்று , புதுமாத்தளன் / முள்ளிவாய்க்கால் கொலைக்கள நிகழ்வுகள் நடந்து ஒருவருட நினைவிற்கு இன்னும் சில நாட்களே மீதமுள்ளது. உலகெல்லாம் எழுந்த பெரெழுச்சி தமிழகத்தில் இல்லையே என்ற வருத்தம் மிகுந்த போது "தனிச்" சூரியனாய் எமக்காய்ப் பொங்கியெழுந்து போர்க்களமென்ற சிறைக்களம் சென்றவர் "சீமான்".

உணர்வு பொங்கும் பேச்சால் உலகத்தமிழர்களைக் கட்டிப்போடும் ஆற்றல் மிகுந்தவர் அவர். அன்னார் தொடங்கப்போகும் "நாம் தமிழர்" என்ற அரசியல் கட்சியை முழு மனதோடு "ழகரம்" வரவேற்கிறது. அதை , அவ்வியக்கத்தை உரிய இளைஞர்களிடம் கொண்டு செல்லும் பாரிய பணியையும் "ழகரம்" செய்யும்.

அத்தகைய அர்ப்பணிப்புள்ள ஒரு இயக்கத்தின் "அதிகாரப்பூர்வ" இணையதளமான www.naamtamilar.org நிர்வாகிகளுக்கு நாம் விடுக்கும் தாழ்மையான வேண்டுகோள் இது.


நாம் தமிழர் இயக்கம் உலகளாவிய முறையில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது என்பதை அறிவீர்கள்.......குறிப்பாக , புலம் பெயர் தமிழர்கள் , நாம் தமிழர் இயக்கத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். அத்தகு சூழலில் "நாம் தமிழர்" அதிகாரப்பூர்வ வலைத்தள செயல்பாடு மிக அவசியமானதாகிறது.

ஆனால் , எப்போதாவது தரமேற்றப்படும் செய்திகள் மட்டுமே வலம் வந்து கொண்டிருக்கின்றன அத்தளத்தில்.

உதாரணத்திற்கு , இந்தச்செய்தி (சீமானின் செய்தியாளர் சந்திப்பு ) 6 ஆம் தேதி வந்திருக்கிறது. ஆனால் செய்தியாளர் சந்திப்பில் நடந்த நிக்ழவுகள் பற்றி இன்று இப்பதிவு வெளியாகும் வரையிலும் எந்தத் தகவலும் இல்லை...  (பதிவிட்ட திகதி : 08 , மே , 2010 இந்திய நேரம் காலை 11.15 .)


நாம் தமிழர் இயக்கமும் , அதன் செயல்பாடுகளும் வெகுஜன பத்திரிக்கைகளால் புறக்கணிக்கப்படுகிற ஒரு சூழலில் "இணையச் செயல்பாடு " இன்னும் வலுவாக இருப்பின் மட்டுமே 'நாம் தமிழர்" இயக்கத்தின் இருப்பும் , செயல்பாடும் இன்னும் வலுப்பெறும் , வலுவுறும்.!!!!


அடுத்து , புகைப்படமும் , கருத்தும் என்ற தலைப்பில் , சற்றும் ஒவ்வாத கருத்து வந்திருக்கிறது. அது சரியான கருத்தோ , தவறோ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அதுபோன்ற பதிவுகள் வருவது தவிர்க்கத்தக்கது. 



தோன்றியதைச் சொல்லியாகிவிட்டது. இனி செய்வதும் செய்யாததும் உங்கள் விருப்பம். 

"நாம் தமிழர்" ஆல் போல் தளைத்து , அருகு போல் வேரூன்றி வாழ்ந்திட வாழ்த்தும்....

தோழமையுடன்,
"ழகரம்"

Monday, May 03, 2010

மே 18 - அழிஞ்சுதான் போயினம்…ஆனா.........


தொப்பியும் , சீருடையும் , கவசமும் தரித்த அரசுப்படைகளுடன்,
பிய்ந்த ரப்பர் செருப்பினையும் , லுங்கிகளையும் தரித்துப் போரிட்ட
எமது புலிமறவக் கூட்டங்கள் சலிக்காமல் ரவையடித்தக் கதையதுகாண்.
எல்லாமும் கைமீறிப் போயிற்று…ஆம் , எல்லாமும் தான்.
எதிர்கால நம்பிக்கையாகவிருந்த  “கருணா”க்கள் குறிசொல்ல
அச்சமும் , பழியும் , பகையும் கொண்ட சிங்களன் சினம்கொண்டு வந்தனன்.
அதிர்வேட்டுக் கிளப்பி , அன்றாடம் அனல்காற்றென சுட்டெரித்த எம்
புலிக்கூட்டம் அந்தோ பரிதாபம் , விஷக்காற்றினால் வீழ்ந்தது காண்…!
வீரம் எம்மோடு விளைந்த தொன்றே….ஆனால் துரோகம் எமக்கு தூரமன்றோ?
சூழ்ச்சிக் களத்தில் சுருண்டு போயினர் எம் புலித்தலைவர்கள் ஆனந்தபுரத்தில்!.
நந்திக்கடலொரு புறமாய் , இந்து மகா சமுத்திரமொரு புறமாய்
நச்சுத்திட்டமிதையிட்டு எம் தலைமையிதை முற்றுகை செய்த சதியெது?
ஆரேனும் வந்து எம் சனத்தை , புலியை , போராளியை மீட்டுச்செல்வரென
ஆகாத நம்பிக்கையை ஊட்டி வளர்த்தது யார்? எச்சக்தியது?
கரந்தடிப்புலியாகி , இந்திய வல்லரசை இமை மூடாவண்ணம்
காத தூரம் ஓட்டிய பிரபாகரனின் பிள்ளைகள் காசுக்கு குரைக்கும்
சிங்களத்து சிறுபிள்ளைகளிடம் வீழ்ந்த கதை எப்படி நம்ப?
சீனத்து வெடிமருந்தோ , சீமையின் தந்திரமோ , ஆரியத்தின் சூழ்ச்சிதானோ…
சினம் மிகுந்து கேட்டுக்கொண்டேன்…சிக்கவில்லை விடையின்னும்….
ஆறாத காயமுண்டு……ஆற்றாமை நெஞ்சிலுண்டு….
ஆரியக் கூட்டத்தின் மேல் அடங்காத கோபமுண்டு…….
அப்போது சொல்லிப்போட்டான் அருகிலுள்ள என் நண்பன்.
ஊரை வெய்தென்ன உபயோகம்…. ஊட்டுக்குள்ளே இருந்தது துரோகம்.
ஊமை போல் அது நின்னு அழித்துப்போட்டது தமிழ்ப்பிள்ளைகளை.!
ஆறாத காயத்துக்கு மருந்தின்னும் போடவில்லை.
அதுக்குள்ளே வந்து நிற்குது அடுத்த மே மாசம்….
ஆம் , கடந்து போன மே – 18 , அழிந்துதான் போயினம்…
அக்குவேறு ஆணிவேறா பிரிந்துதான் போயினம்……..
வீரப்பிள்ளைகளை பரிகொடுத்துத் தவிக்கினம். ஆனாலும்
வீரமொன்னும் போகவில்லே…….வீரியமும் குறையவில்லே.
தமிழீழ மண்ணைத்தான் கொஞ்சம் பையிலே முடிஞ்சிகிட்டு
தக்க சமயத்துக்கு காத்திருக்கோம் கண்ணுறங்கும் வீரர்களே….
தமிழால ஒண்ணு சேர்ந்தோம்..தமிழுக்கே செத்துப்போனோம்…..ஆமாம்
தக்க சமய்த்துக்கும் காத்திருக்கோம் கண்மணிகளாள்…….
கொஞ்சம் பொறுத்துக்குங்கோ….கூடவந்து சேந்துடுவோம்….
சுதந்திரக் காற்றக்கொஞ்சம் கொண்டு வந்து சேத்துடுவோம்….!
அதுக்கான சபதமொன்னை இப்போதான் எடுத்திடுவோம்….!
ஆம். மே – 18 அழிஞ்சுதான் போயினோம்…ஆனால்
உயிர்த்தெழுவோம்…அடங்காத காளைகளாய்………!