எல்லோரையும் போலவே , உணர்வின்றி , சுரத்தின்றி , செவியின்றி , அறிவின்றி இந்தியனாகவே இருந்திட ஆசைதான். ஆனால் என்ன செய்வது? இந்தியனாக இருப்பதிலுள்ள சிரமங்கள் அதிகரித்துக்கொண்டே போகத்தான் செய்கின்றன. அதற்குக் காரணம் நாமில்லை என்பதை எல்லா இந்தியர்களும் அறியவே செய்வார்கள்.!
சில தினங்களுக்கு முன்னால் , இந்தியர்களாகவே ஹைதராபாத் சென்று "பெல்" நிறுவனத் தேர்வினை எழுதி விட்டு வந்த தமிழக மாணவர்களைக் காட்டுத்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள் ஆந்திர மாணவர்கள். அங்கே கைகலப்பில் ஈடுப்பட்டது ஆந்திரமும் , தமிழகமும் -இதில் இந்தியன் எங்கே வந்திருக்கிறது.
மும்பையில் ரயில்வே தேர்வு எழுத வந்த பீகார் , உ.பி. மாநிலத்தாரை மகாராஷ்டிராவின் நவ் நிர்மாண் சேனாவினர் தாக்கிய போது வெகுண்டெழுந்த இந்திய மீடியாக்கள் , பத்திச் செய்தியாகக் கூட ஆந்திராவில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதைச் செய்தியாக்க வில்லை. நாம் இந்தியர்களாகவே இருக்கிறோம். அவர்கள் நம்மை இந்தியர்களாகவே பார்க்கவில்லை போலும்.!
தீவீரவாதத்திற்கெதிராகவே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழ்மக்கள் புலிகளை அங்கீகரிக்கவில்லை என்று சொன்ன இந்தியர்கள் - குறிப்பாக சொக்கத்தங்கம் சோனியா காந்தியின் சேலையைப் பிடித்து அரசியல் பாடம் படித்துக்கொண்டிருந்த பிதாமகர்கள் சொன்னார்கள். ஆனால் இன்று "யாழ்ப்பாண தமிழர்கள் " என்ன சொல்கிறார்கள் என்பதை ஒரு இந்திய ஏடு எடுத்துப் போட்டிருக்கிறது பாருங்கள்.....!!! அதை அப்படியே கீழே தருகிறேன்.
A Jaffna man blames India for the defeat of the LTTE. “India had failed to stop the last leg of the war between the Lankan forces and the LTTE and prevent the killing of thousands of Tamil civilians,” they complained.Tamil Nadu Chief Minister M Karunanidhi only enacted a “drama” in support of the Tamils here, they sneered.
source : The New Indian Express
தமிழில் அதை மொழி பெயர்த்திருக்கிறேன். அது கீழே.
யாழ்ப்பாண தமிழர் ஒருவர் புலிகளின் தோல்விக்கு இந்தியாவையே குற்றஞ்சாட்டுகிறார். இறுதிக்கட்ட போரை நிறுத்துவதற்கு இந்தியா தவறிவிட்டது , அதன் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழிப்பதைத் தடுப்பதிலுமிருந்து தவறிவிட்டது. தமிழக முதல்வர் கருணாநிதி ஈழத்தமிழர்களை ஆதரிப்பது போல நாடகம் மட்டுமே நடாத்திக்கொண்டிருந்தார் என்றும் குற்றம் சாட்டுகிறார் என்று அந்த ஏடு பிரசுரித்திருக்கிறது.
அத்துடன் , யாழ்ப்பாண மக்களின் பொதுப்படையான கருத்தாக இருப்பதாக இன்னொரு பத்தியையும் பிரசுரித்திருக்கிறது.
The businessmen and others Express spoke to made it clear that they had fraternal feelings towards Indians. The issue was with the government in Delhi and the ruling party in Tamil Nadu, they stressed. The general feeling here is that Congress leader Sonia Gandhi had punished people for a crime they did not commit.
source :The New Indian Express , Date 18th Feb 2010
இந்தியன் எக்ஸ்பிரஸ் பேசிய வெகுபல யாழ்ப்பாண வாசிகளும் இந்தியாவின் மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள். இந்திய அரசாங்கத்தின் மீதும் , தமிழக ஆளுங்கட்சியின் மீதுமே அவர்கள் வெகுவாக குற்றஞ்ச்சாட்டினார்கள். தாங்கள் செய்யாத ஒரு குற்றத்திற்காக இந்தியாவை ஆளும் காங்கிரஸ் தலைவியான சோனியா காந்தி அவர்கள் தம்மைத் தண்டித்து விட்டதாக வேதனைப் பட்டார்கள் என்றும் அந்த ஏடு எழுதியிருக்கிறது.
தமிழ்த்தேசியவாதிகள் கதறியபோதும் , தமிழினம் அழிகிறது என்று ஓலமிட்ட போதும் வாய்மூடி மெளனியாக இருந்த இந்திய அரசினையும் , இந்திய அரசிற்குக் கப்பம் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் குறுநில மன்னனையொத்த தமிழக அரசினையும் , எவ்வாறு எமக்கான அரசாக ஏற்றுக்கொள்ள முடியும் சொல்லுங்கள். எந்த அடிப்படையில் நாம் இந்தியர்களாக இருப்பதில் பெருமை கொள்ள முடியும் சொல்லுங்கள்.
தமிழர்களின் மன வேதனையை தீர்க்கத்தவறிய மன்னனை மக்கள் இரசிப்பதிலும் , போற்றுவதிலும் நியாயம் ஏதும் உண்டா சொல்லுங்கள்... அப்படி போற்றுவதிலிருந்து மக்கள் தவறுகின்ற போது மனவேதனையைத் தீர்க்கத் தவறியது மன்னனின் தவறுதானேயொழிய மக்களின் தவறாக முடியுமா?
ராஜிவ்காந்தி என்ற ஒரு உயிருக்காக ஈழத் தமிழர்களை கொன்றொழித்தீர்கள். இந்திராகாந்தியைக் கொன்றொழித்தவனை இன்னமும் சீக்கியர்கள் தேசபக்தனாக போற்றும் போது அமைதியாக இருப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும் என்ற இளந்தமிழர் இயக்கத்தினரின் நேர்மையான கேள்விக்கு பதில் சொல்வதற்கு துப்பிருக்கிறதா இந்திய காங்கிரஸ் காரர்களிடம்?
இந்திராகாந்தியைக் கொன்ற பியாந்த் சிங்கை தியாகியாக வருணித்து பொற்கோவிலில் புகைப்படத்தை வைத்து சீக்கியர்கள் வழிபடுவதை ஆதாரத்துடன் நிருபித்திருக்கிறார்கள் இளந்தமிழர் இயக்கத்தினர். இணைப்பு இதோ இங்கே.!
அதைப் பற்றி கேட்டதற்கு , பஞ்சாப் பொற்கோயிலில் என்ன வைத்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. தமிழக காங்கிரஸ்காரர்கள் தமிழகப் பிரச்னையில் மட்டும்தான் தலையிட முடியும். உலகில்(!) நடக்கும் பிரச்னைகளில் எங்களால் தலையிட முடியாது என்று பஜனை பாடியிருக்கிறார் இந்திய தேசிய வியாதி முத்திப்போனவர்களில் மூத்தவரான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். ( ஆதாரம் : குமுதம் ரிப்போர்ட்டர் )
பஞ்சாப் என்பது உலகமானால் , அதில் தலையிட மாட்டோம் என்றால் ஏன் இலங்கைக்கு மட்டும் ஆயுதம் கொடுத்து ஈழத்தமிழர்களைக் கொன்றீர்கள் என்று கேட்டால் , ஆயுதமெல்லாம் கொடுக்கவில்லை , சும்மா ரேடார் மட்டுமே கொடுத்தோம் என்றீர்கள் . பிறகு இலங்கை இராணுவச் சாயம் பூசி அனுப்பின இரண்டு போர்க்கப்பல்களின் குட்டு வெளிப்பட்டது. பொன்சேகாவிற்கும் - இராஜபக்சேவும் பிரச்சினை என்றவுடன் கடல் தாண்டிப் போய் பஞ்சாயத்து பண்ணி வைத்தீர்கள்.
இப்படி இந்தியர்களாக நாங்கள் இருப்பதில் ஏகப்பட்ட சிரமங்களை நீங்களே உருவாக்கி விட்டு , தேசப்பற்றுடன் பேசுங்கள் என்றால் எங்கிருந்து வரும் தேசப்பற்று. ?
அதென்ன சுக்கா , மிளகா - கடையில் போய் கால் கிலோ வாங்கிவர....? இன்னமும் கூட எல்லோரையும் போலவே , உணர்வின்றி , சுரத்தின்றி , செவியின்றி , அறிவின்றி இந்தியனாகவே இருந்திட ஆசைதான்...
அப்படியாவது இருக்க விடுவார்களா இந்த இந்திய தேசிய வியாதிகள்?
இப்படிக்கு,
இன்னமும் ஒரு இந்தியன். !
Tweet
6 comments:
என்னுடைய எண்ணங்கள் அப்படியே எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் உங்களின் கருத்தாழம் அதிகம்.
நன்றி அரைக்கிறுக்கன். கருத்தாழம் எல்லாம் அதிகமில்லை. வலியும் , வேதனையும் தான் அதிகம்.
உண்மையை புட்டு புட்டு வைக்கும் உங்கள் கட்டுரை வெகு காரமாகவும் அதே சமயம் ஜோராகவும் உள்ளது.sangeethaBairavan.
செருப்படி கொடுக்கும் இடுகை. ஒரு கேள்விக்குக் கூட இந்தியர்களால் பதில் சொல்ல முடியாது
உண்மையை புட்டு புட்டு வைக்கும் உங்கள் கட்டுரை வெகு காரமாகவும் அதே சமயம் ஜோராகவும் உள்ளது.sangeethaBairavan//
நன்றி திருமதி சங்கீதா பைரவன்
செருப்படி கொடுக்கும் இடுகை. ஒரு கேள்விக்குக் கூட இந்தியர்களால் பதில் சொல்ல முடியாது//
நன்றி உங்கள் கருத்துக்கு
Post a Comment