கடந்த மே 18 ல் உரிமைக்குரலெழுப்பி ஓங்கி ஒலித்த தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்தது.சுமார் 7000 அப்பாவித் தமிழர்கள் வரை இறந்திருக்கலாம் என்று ஐ.நா சபையும் , 20000 பேர் இறுதி சில நாட்களில் பலியானதாக லண்டன் டைம்ஸ் நாளிதழும் , ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் , இறுதி யுத்தத்தில் 40000 பேர் வரை மடிந்திருக்கலாம் என்று அச்சம் தெரிவித்திருக்கிறார்.
தற்போது உலகத் தமிழர்களின் ஓயாத ஆசையாகிய இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை வருகிற மார்ச் மாதத்தில் நடைபெறலாம் என்ற செய்தியை யாழ்ப்பாணத்திலிருந்து வரும் வலம்புரி நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.
முழுச்செய்தி பின்வருமாறு...
வன்னிப் போர்க்குற்றம் ஐ.நா. விசாரணை நடத்தும்
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-02-12 06:55:53| யாழ்ப்பாணம்]
இலங்கை அரசாங்கம் வன்னியில் மேற் கொண்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐக் கிய நாடுகள் சபையின் விசாரணை எதிர் வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேர வை இந்த விசாரணையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை தடுக்கும் நோக்கிலேயே மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா சென்றுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.சனல் 4 தொலைக்காட்சி வெளி யிட்ட காணொளி மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் நேரடி சாட்சியங்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த விசாரணையின் போது இலங்கை அரசாங்கம் போர்க்குற் றங்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால் பாரிய அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என் றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.இதேவேளை இந்த விசாரணை யில் சாட்சியமளிப்பதற்கு முன்னாள் இராணுத் தளபதி சரத் பொன்சேகா இணங்கியிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
சரத் பொன்சேகா கைது செய்யப் பட்டுள்ள நிலையில் இறுதி யுத்தத்தில் பங்கெடுத்த வேறு இராணுவ அதிகாரிகளை இந்த விசாரணையின் போது பயன்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை முனைப்புக் காட்டிவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் தகவல்கள் கசிந்தததற்கான மூலத்தை அப்பத்திரிக்கை வெளியிடவில்லை.....எவ்வளவு தூரம் அதற்கான முன்முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதுவும் இன்னும் தெளிவாகவில்லை.... Tweet
No comments:
Post a Comment