பதிவுக்குள் போகுமுன் , ஒரு விடயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். என்ன தான் இராஜபக்சே மேல் கோபம் இருந்தாலும் இந்த ரயில் தண்டவாள தகர்ப்பு போன்ற முட்டாள் தனமான காரியங்களை என்றைக்குமே ஆதரிப்பதில்லை , சாதாரண அப்பாவி பொதுமக்களின் மீதான வன்முறையைப் போன்ற விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான காரியம் எதுவுமில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். ஒரு வேளை உண்மையான தமிழுணர்வாளர்களே இந்த மட்டரகமான காரியத்தைச் செய்திருந்தாலும் அதை ஆதரிப்பதில் உடன்பாடில்லை.
சரி நிற்க ;
விழுப்புரம் தண்டவாள தகர்ப்பினைக் கண்டுபிடித்ததாக பத்திரிக்கைச் செய்தி சொல்கிறது. எப்படிக் கண்டுபிடித்ததாம்? அவர்கள் மொழியிலேயே பார்ப்போம்.
நாசவேலையில் இருந்து தப்பியது எப்படி? :
நூற்றுக்கணக்கானவர்கள் பலியாவது தவிர்க்கப்பட்டு பெரும் நாசவேலையில் இருந்து ரயில் விபத்து தப்பிய சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து அங்கிருந்து கிடைத்த தகவலின்படி விவரம் வருமாறு: இந்த பாதையில் நள்ளிரவு 2. மணி . 10 நிமிடத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற போது ரயில் டிரைவர் சேகரன், ரயில் சற்று பம்முவதுபோல, உணர்வதாக பேரணி ஸ்டேஷன் மாஸ்டர் ருத்ரபாண்டிக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த ரயில் கடந்து செல்லும்போது தண்டவாளம் தகர்க்கப்படவில்லை.
இவர் இன்னும் சில மணி நேரத்தில் இந்த வழியாக வரும் ராக்போட் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திக்கொள்ளுமாறு விழுப்புரம் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்துள்ளார். ( இதற்கு இடைப்பட்ட நேரத்தில் வெடி வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டுள்ளது) இதனையடுத்து ரயில்வே ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் கோபால்நாத் ராவுக்கு முண்டியம்பாக்கம் ஸ்டேஷனில் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது தொடர்ந்து ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி ரயிலை தண்டவாளம் தகர்ந்த இடத்திற்கு 15 மீட்டர் இடைவெளியில் ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதத்தில் இருந்து பயணிகள் தப்பினர்.
ஆதாரம் : தினமலர்
# பம்முவது என்றால் என்ன? முதலில் இதுபோன்ற கலோக்கியல் மொழியினை ஒரு நாகரீக ஊடகத்தில் வெளியிடுவது முறையல்ல என்பதைத் தள்ளிவைத்து விடுவோம். பம்முவது என்றால் தயங்கித் தயங்கி என்று வைத்துக்கொள்ளலாமா ? அல்லது திணறித் திணறி என்றும் வைத்துக்கொள்ளலாம். அப்போது தண்டவாளம் தகர்க்கப்படவில்லை என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கிறது பத்திரிக்கை... பிறகெப்படி ரயில் பம்மியது? ரயில் பம்மியது என்றால் குண்டு வைத்துத் தகர்க்கும் வரை ரயில்வே போலீசாரும் , அலுவலர்களும் வேடிக்கை பார்த்தார்களா?
# தண்டவாளம் தகர்க்கப்பட்டதன் பதினைந்து மீட்டர் முன்னால் தான் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் நிற்கிறது என்கிற போது அந்த கும்மிருட்டில் ( நள்ளிரவு ) தண்டவாளம் அவ்வளவு சரியாகத் தெரிந்ததா?காரணம் , பதினைந்து மீட்டர் முன்னால் ரயிலை நிறுத்த குறைந்தபட்சம் குண்டு வெடிப்பை ஒரு மைலுக்கும் அதிகமான தொலைவில் இருந்து தண்டவாளத் தகர்ப்பை பார்த்திருக்க வேண்டும். ஏனென்றால், நான் கேள்விப்பட்ட வரை பதினைந்து மீட்டர் முன்னால் எல்லாம் ரயிலை நிறுத்தினாலும் , ரயில் நிற்க குறைந்த பட்சம்ஓரு மைல் தொலைவிற்கு பயணித்தே நிற்கும். அதுபற்றிய ஆதாரம் தேடிய போது கிடைத்த தகவல்...
on most trains, if the engineer can see you, it is usually too late to stop for you, even when placing the train into an emergency application of the brakes. So, lets just say the average stopping distance in full emergency is at least a mile and up.
Source : Yahoo
# முதல் ரயில் (சேலம் எக்ஸ்பிரஸ்) போனபிறகே குண்டு வெடித்திருந்தால் , பிறகெப்படி முதல் ரயில் குலுங்கிக் குலுங்கிச் செல்லும்? எப்படி விபத்துக்குள்ளாகாமல் தப்பியிருக்கும்?
சரி , டெக்னிக்கல் கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும். ஒரே ஒரு துண்டுச் சீட்டை வைத்துக்கொண்டு , அதுவும் தெள்ளத்தெளிவாக புலிகள் இதைச் செய்தார்கள் என்று பட்டம் சூட்டுவதைப் பார்த்தால் , இது என்னமோ அரசியல் நாடகம் போலத்தான் தோன்றுகிறதோ தவிர வேறொன்றும் எண்ணத் தோன்றவில்லை.
# எப்படி நீதிமன்ற வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தை ஒடுக்கி கடந்த முறை தமிழகத்தில் எழுந்த ஈழ ஆதரவு அலையை ஒடுக்க முயற்சித்தார்களோ சற்றேறக்குறைய அதே நிலையில் தான் இந்தச் சதியும் நடந்திருக்கிறது. சற்றே ஒடுங்கியிருந்த தமிழின உணர்வாளர்கள் "இராஜபக்செ" வின் வருகையையொட்டி போராட்டங்களை நடாத்துகிறார்கள்..... அவர்களை ஒடுக்கவும் , செம்மொழி மாநாட்டைக் காரணம் காட்டி அவர்களை எல்லாம் சிறையில் தள்ளவும் நடக்கும் முயற்சியோ என்ற கேள்வி எழாமல் இல்லை.
# புலிகளே இலங்கையில் செய்யாத இது போன்ற அற்பத்தனமான காரியங்களை புலிகளின் ஆதரவாளர்கள் இங்கே செய்திருப்பார்கள் என்று சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்று புரியவில்லை.
# தமிழர்களின் மரணத்திற்கு பதில் கேட்டு உலுக்கும் தமிழின உணர்வாளர்கள் தமிழர்களையே கொல்ல முயற்சிப்பார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
# இராஜபக்சேவை எதிர்க்கத் துணிபவர்கள் , வருவதற்கு முன் எச்சரிப்பார்களா இல்லை அதற்குப் பின்னரா? உண்மையில் தமிழர்தம் நிலைபற்றி ஊடகங்களின் கவனத்தைக் கவர முயற்சிப்பவர்கள் இராஜபக்சே வருகைக்கு முன்னால் தானே செய்ய வேண்டும்?
எனக்கென்னமோ , இந்தச் சம்பவத்திற்குப் புலிப் பெயர் சூட்டி , தமிழின ஆதரவாளர்களை ஒடுக்கும் முயற்சியாகத் தான் தோன்றுகிறது என்றாலும் நாமும் அதுபோன்ற முடிவிற்கு வந்தால் நமக்கும் , இராஜதந்திரிகளுக்கும் வித்தியாசம் என்னவிருக்கிறது?
ஆகவே , விசாரணைக்குப் பின் தான் முடிவு தெரியும். ஆனால் விசாரிப்பவர்கள் யார் ? ஒருவேளை அந்தச் சதியை யார் செய்திருப்பார்களோ என்று ஒருதரப்பு சந்தேகிக்கும் நபர்கள். இருந்தாலும் விசாரணையைப் பொறுத்தே முடிவெடுக்க வேண்டும்...ஏனெனில் இது சனநாயக நாடு..
விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு : சதியா ? நாடகமா?
- எழுத ஆரம்பித்த போது எழுந்த கேள்வி எழுதி முடித்தபின்னும் அப்படியே இருக்கிறது.
Tweet
3 comments:
சந்தேகமென்ன ? நாடகம் தான். மக்களை முட்டாளாக்க ஆட்சியாளர்களே போடும் நாடகம்.
இந்த டகாலடி, டுபாகூர் வேலை தானே வேண்டாம்கிறது ! தமிழர்களிடையே பெருகி வரும் அரசு எதிர்ப்பு, தமிழின துரோகிகள் யார் என்று மக்கள் கண்டு கொண்டதால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக தான் இந்த சம்பவம் இந்த அரசால் அரங்கேற்றப்பட்ட நாடகம். இவ்வளவு மட்டமாக அரசியல் போகும் என்று யாரும் நினைக்க வில்லை. இந்த துரோக சதியில் மத்திய மாநில அரசுக்கு சம்பந்தம் உள்ளது. தண்ணீருக்கு அடியில் இருந்து "காஸ்" விட்டால் அது மேலேதானே வர வேண்டும். எத்தனை காலம் தான் திசை திருப்பும் முயர்ச்சியிலும், பொய், பிரட்டல் வேலைகளிலும் மக்களை முட்டாளாக வைத்திருக்க முடியும் ? உங்களுக்கு முடிவு காலம் வந்து விட்டது. இதுலேயும் உன்னோட விஞ்ஞான விளையாட்டை அறிமுக படுத்தி விட்டாயா ???
தினமணியில் பன்னாடைப் பாண்டியன்
தினமலத்தில் நந்தகுமார்.
nandakumar - addisababaethiopia,Ethiopia
2010-06-12 21:35:21 IST
இன்றைக்கு ராஜபக்சே தைரியமாக இந்தியாவுக்குள் வந்து சிம்லாவில் ஹாய் யாக ரெஸ்ட் எடுக்கிறார்.இத்தனை தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள விரும்பாத இந்திய அரசாங்கத்தின் விருந்தாளியாக.சோனியாவின் விருப்பத்தை நிறைவேற்றிய மதப்புடன் அதற்கு கட்டியம் கூறுவதுபோல தமிழக எம்பி கள் அவரிடம் அரசியல் தீர்வு கேட்பது செவிடன் காதில் குருட்டு ஊமையன் பேசிய கதைதான்.நண்பர்களே நன்றாக யோசித்து பாருங்கள் தமிழன் தன்னுடைய உரிமையை கேட்டது தவறா? தமிழனுக்கு இந்தியாவிலேயே ஏன் தமிழ்நாட்டிலேயே மரியாதையை இல்லை.ஈழ தமிழர்கள் அனைவர்களும் இந்தியாவின் பூர்வ குடிகள் என்பதை இந்திய மறந்துவிட்டது . செய்தியாளருக்கு வணக்கம், புலிகள் ஆதரவாளர்கள் தமிழ் பற்றும் தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டவர்கள். அவர்கள் தமிழ் மக்களை கொல்ல இப்படி செய்திருக்க மாட்டார்கள். அதுவும் ஓர் அரக்கன் வந்ததிற்காக தமிழ் மக்களை பலியிட மாட்டார்கள். இந்த சம்பவம் வேறு யாராவது செய்திருப்பார்கள். இதற்கு முழு விசாரணை நடத்தி இதை செய்தவர்களை பிடித்து அதே இடத்தில் ரயிலை ஏற்றி கொல்ல வேண்டும். நன்றி . . . வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் மக்கள் !!......
Post a Comment