Wednesday, June 02, 2010

பதிவுலகச் சண்டையும், குழாயடிச் சண்டையும்

பதிவுலகத்தில் சண்டை போடுபவர்கள் , குழாயடிச் சண்டையைப் பார்த்து முகம் திருப்பிப் போவார்கள்..

குழாயடிச் சண்டையில் வாயில் கேட்கக் கூசும் வார்த்தைகளைப் பேசுவது அனேகமாக பெண்கள்...இங்கே சில ஆண்கள்....

குழாயடிச் சண்டை சிலசமயம் அடிதடியில் முடிவதுண்டு....அனேகமாக அது முடியிழுப்பு போராட்டமாகவே இருக்கும்.......இங்கேயும் அடிதடிகள் அனேகம் உண்டு...

ஆனால் குழாயடிச் சண்டையில் சண்டை போடும் இருவரையும் பலர் விலக்குவார்கள் அல்லது விலக்கவாவது முயல்வார்கள்... ஆனால் பதிவுலகில் , சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாய் இருக்கும் போது பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் அவரவர் அவரவருக்கு தேவையான வாக்கில் ஆதரவும் , எதிர்ப்பும் தெரிவித்து அரசியல்வாதிகளாகி விடுவார்கள்.

சமயத்தில் பதிவுகள் எழுதி , ஆறிப்போயிருக்கும் ரணத்தை ( இதோ இந்தப் பதிவு போலவேதான்...) கிளறிக் காயப்படுத்துவார்கள்......

ரோட்டில் , நாட்டில் , திருமணத்தில் , வீட்டில் , அலுவலகத்தில் , கோவிலில் , அரசியற் கட்சிகளில் மற்றுமெல்லா இடங்களிலும் நடக்கும் நிகழ்வுகளிலான ஆணாதிக்கம் பற்றி கருத்தேதும் எழுதாத எல்லாப் பதிவர்களும் ஆணாதிக்கத்தை வேரறுக்க வந்த தேவதூதர்களாக தம்மைக் காட்டிக் கொள்ள நல்லதொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது....விடுவானேன்....???  எழுதிக்கிளப்புங்கள்..உங்கள் வார்த்தைகளின் வீச்சில் பதிவுலக ஆணாதிக்கம் பட்டுப் போய்விடும்...அட்லீஸ்ட் பதிவுலக ஆணாதிக்கமாவது......

புஷ்பா தங்கதுரை தெரியுமா உங்களுக்கு? சற்றேறக்குறைய "சரோஜா" தேவி புத்தகங்களையொற்றிய கதைகளை எழுதிக்குவித்தவர் அவர்.....அதையும் மீறி  குருவையும் மிஞ்சின சிஷ்யனாகிவிட்ட ஒருவருக்கு ஆதரவு கொடுக்கவும் ஆளிருக்கிறது என்றால் "நித்யானாந்தாவையும் " , பிரேமானந்தாவையும் மட்டுமே நித்தம் நித்தம் வைது இங்கே பதிவுகள் இடுவதன் அர்த்தம் தான் என்ன? 

உங்களுக்குப் பொழுது போகவில்லையென்றால் வாசகர்களின் நேரத்தைக் கொலவதற்கான சுதந்திரத்தை உங்களுக்கு யார் கொடுத்தார்கள்??

பெரியாரியத்தையொட்டிய , கம்யூனிசத்தையொட்டிய , பெண்ணுரிமையொட்டிய , சாதிப்பூசலையொட்டிய இன்னும் சமுதாயத்திற்கான அடிப்படைப் பிரச்சினைகளையொட்டிய விவாதங்கள் இங்கே இதுபோன்ற பலப்பல பதிவுகளாய் எழுந்திருக்குமானால் அது ஆரோக்கியம்......ஆனால் , இது வீண் விவாதம்...வெட்டிப்பேச்சு விழலுக்கிரைத்த நீர்.......

உங்க டைம் வேஸ்ட்டு , எங்க டைம் வேஸ்ட்டு

அந்தப் பதிவை ஆணாதிக்க வாதி ஒருவரே எழுதியிருக்கட்டும்....அவரே மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் என்று சொன்ன பிறகும் அதைக் குத்திக்கிளறுவது என்ன தான் நியாயம்??


இதையெல்லாம் படிக்கும் போது ஒரு வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது..

"யோவ்....போய் புள்ளை குட்டிங்களைப் படிக்க வையுங்கய்யா..."

ஆனால் , உண்மையைச் சொல்லப்போனால் பெரியவர்களான நாம் தான் வாழ்வில் படிக்க வேண்டியவை ஏராளம் இருக்கிறது....

நன்றி.......திருந்துவோம்....இல்லாவிட்டால்
நாம்         வருந்துவோம்.... இப்போதில்லாவிட்டாலும் எப்போதாவது...

5 comments:

South-Side said...

குறிப்பு :-

இது யாரையும் தனிப்பட்ட முறையில் சாடுவதற்கான பதிவல்ல.

இது போன்ற தேவையற்ற சச்சரவுகள் உலகம் பதிவுலகைக் கவனிக்கும் ஒரு சமயத்தில் தேவையற்றவை என்பதே எமது கருத்து.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதை நாமிங்கே விட்டு விட்டாலே அனேக பிரச்சினைகள் காணாமல் போகும்.

-ழகரம்

smart said...

பதிவுலகத்தில் சண்டை போடுபவர்கள் , குழாயடிச் சண்டையைப் பார்த்து முகம் திருப்பிப் போவார்கள்.:)

Anonymous said...

குட் கொட்டு
அதற்கு ஷொட்டு

======

ரோட்டில் , நாட்டில் , திருமணத்தில் , வீட்டில் , அலுவலகத்தில் , கோவிலில் , அரசியற் கட்சிகளில் மற்றுமெல்லா இடங்களிலும் நடக்கும் நிகழ்வுகளிலான ஆணாதிக்கம் பற்றி கருத்தேதும் எழுதாத எல்லாப் பதிவர்களும் ஆணாதிக்கத்தை வேரறுக்க வந்த தேவதூதர்களாக தம்மைக் காட்டிக் கொள்ள நல்லதொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது....விடுவானேன்....???

=====

அதான கேட்டன்

t t இளங்கோ said...

பெரும்பாலான பதிவர்கள் தங்களை யாரென்று வெளியே காட்டிக்கொள்ளாத நிலையில் வீரம் வீரமாக எழுதுகிறார்கள்.பல பதிவுகள் நேரத்தை வீணடிப்பதால் அவைகளை (பதிவரின் பெயரைப் பார்த்தவுடனேயே) பார்ப்பதில்லை.

ழகரம் said...

நன்றி நண்பர்களே.

திரு.இளங்கோ

உங்க கமெண்ட் எனக்குத்தான் என்றே நினைக்கிறேன்.

ஆனால் , ழகரம் குழுமம் யாரென்று தம்மை வெளிப்படுத்திக் கொள்வதிலும்விட சமூகத்திற்குத் தேவையான கருத்துரைகளைப் பரப்புவதில் விருப்பமாய் இருக்கிறது.

தவிர , பெயரையும் அடையாளத்தையும் வெளியில் சொல்லிக்கொள்வதனால் மட்டுமே எதையும் பேசலாம் என்றும் ஒரு கூட்டம் இங்கே சுற்றுகிற கதையை நீங்கள் அறிவீர்களோ எனத் தெரியவில்லை..

ஆகவே , பதிவினையும் , பதிவின் சாரத்தையும் பாருங்கள்....பதிவெழுதுபவர்களின் வீட்டில் நுழைந்து பார்ப்பதைத் தவிர்க்கலாம் என்பது எனது கருத்து.

நன்றி.