செம்மொழி மாநாட்டை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பது பற்றி ஏற்கெனவே எழுதி இருக்கிறோம்.
இருப்பினும் சில உடன்பிறப்புகள் தற்போது கலைஞரை எதிர்ப்பவர்களே செம்மொழி மாநாட்டையும் எதிர்க்கிறார்கள் என்று கிளம்பி இருக்கிறார்கள். நமது அமைதி அவர்கள் கருத்தினை நியாயப்படுத்தி விடக்கூடாது என்பதால் இந்தப் பதிவு.
நாம் இதுபற்றி முன்பே எழுதிய பதிவொன்று - கடந்த செப்டம்பரில் எழுதப்பட்டது. இணைப்பிற்கு . இனி அதன் முழு வடிவம்.
ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை கோவையில் அடுத்த ஆண்டு நடத்துவதாக பெருமதிப்பிற்குரிய முதல்வர் கலைஞர் அறிவித்திருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு.
முதன்முதலில் மொழியால் இணைந்தவர்கள் அம்மொழிக்காக விழா எடுத்த பெருமை தமிழ் மொழியையே சாரும்.அத்தகைய மொழிக்காக ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு மாநாடு நடத்த முயல்பவர்களை நடுநிலையாளர்கள் நிச்சயம் பாராட்டவே முயல்வார்கள்.
அத்தகைய நன்முயற்சியில் அரசியலைக் கலப்பதில் யாருக்கும் விருப்பமிருக்கவியலாது. தமிழர்களில் பெரும்பான்மையானோர் தாய்த்தமிழகத்திலும் , அதற்கடுத்தாற்போல் மலேசியாவிலும் , ஈழத்திலும் மற்றெல்லா நாடுகளிலும் வாழ்ந்துவருகிறார்கள். இன்றைய அளவில் தமிழர்களுக்கு முக்கியமான பிரச்சினை , ஈழ வதை முகாம்களில் வாடுகின்ற ஒரு சூழலே….
உலகம் முழுமையும் ( தத்தமது சுயநல நோக்களுக்காக என்றாலும் ) அப்பிரச்சினையை தீவிரமாக அணுகி இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்குதலைக் கொடுக்கக் கூடிய ஒரு சூழலில் , உலகத் தமிழ் மாநாட்டை முன்னெடுக்கும் கலைஞர் அவர்களின் செயல்பாடு என்ன என்பதை நடுநிலைத் தமிழர்கள் நன்றாகவே உணர்கிறார்கள். இன்றைக்கு ஈழத்தமிழர்கள் கலைஞரின் செயல்பாடு பற்றி அதிருப்தி கொண்டிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.
இப்படியொரு நிலையில் இன்றைக்கு உலகத் தமிழ் மாநாட்டைக் காட்டிலும் முக்கியத்துவம் பெறுகின்ற ஈழத்தமிழர் பிரச்சினைக்காக இந்திய நடுவண் அரசினை வலியுறுத்தி முகாம்களில் வாடும் தமிழர்களை விடுவிக்கவும் , அதன் பின்னர் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினையும் பெற்றுத் தர கலைஞர் முயற்சிப்பாரானால் உலகத் தமிழ் மாநாட்டை உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி வெற்றி மாநாடாக்கி அந்த வெற்றியை கலைஞரின் காலடியில் சமர்பிப்பார்கள்.
அப்போதுதான் மாநாட்டின் நோக்கம் முழுமையாக வெற்றி பெரும். அதைவிடுத்து இந்த மாநாட்டையும் ஒரு அரசியல் ஆதாயமாக பயன்படுத்திக் கொள்ளும் தந்திரமோ என்ற இயல்பான சந்தேகம் தமிழர்களிடையே மிகுந்து கிடக்கிறது. அதைத் தெளிவுபடுத்த வேண்டியது கலைஞரின் கடமை…
காரணம் உலகத்தமிழ் மாநாடு திமுகவின் மாநாடு அல்ல.
தமிழர்களின் மாநாடு…
அதை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டியது தமிழர்களின் கடமை…! அக்கடமையை சரிவர தமிழர்கள் செய்ய கலைஞர் மீது இழந்துவிட்ட நம்பிக்கையை மீளப்பெறுதல் மிக முக்கியமானது. அதுவே வெற்றிக்கு அடிப்படையானது.
(19.09.09) - உலகத் தமிழ் மாநாடு
இந்தக் கட்டுரை எழுதப்பட்டது சற்றேறக்குறைய 10 மாதங்களுக்கு முன்.....ஆனால் என்ன முன்னேற்றம் ? இதுகாறும் என்ன ஆக்கப்பூர்வ முன்னேற்றங்களை தமிழர்கள் வாழ்வில் ஏற்படுத்தி இருக்கிறார் கலைஞர்?
இன்றுவரை , இந்த நிமிடம் வரை ஊரை ஏமாற்றி , மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதில் தான் கலைஞருக்கு நாட்டமிருக்கிறது என்பதை இராஜபக்சே வரும்போது எழுதிய கடிதத்தை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.
உண்மையாகவே , தமிழர்கள் மீது அக்கறையிருக்கும் , தமிழின் மீது அக்கறையிருக்கும் எவர் ஒருவரும்
# ஈழப் படுகொலை யொட்டி இராஜபக்சே அரசைப் பற்றி கண்டிருத்திருப்பார்கள்.....
# படுகொலைக்குக் காரணமாக சகோதர யுத்தம் பற்றிப் பேசி பிடில் வாசித்திருக்க மாட்டார்கள்.
# சாயந்திரத்திற்குள் தம் உண்ணாவிரதத்தால் போர் நின்றது என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்க மாட்டார்கள்.
# முதுகுத் தண்டு வலியோடு , ஆஸ்பத்திரிக்கட்டிலில் அமர்ந்து "ஈழம் பெற்றுத்தர முயற்சிப்போம்" என்று பொய் வாக்குறுதிகளைத் தந்து அதைப் பின் மறந்திருக்க மாட்டார்கள்.
# ஈழத்தமிழருக்காக உயிர்துறந்த முத்துக்குமாரின் சிலையை வைக்க அனுமதி மறுத்திருக்க மாட்டார்கள்.
# இந்திய அரசாங்கத்தின் துரோகத்தை அம்பலப்படுத்திய மலேசிய பினாங்கு மாநிலத் துணை முதல்வர் செம்மொழி மாநாட்டிற்கு வரக்கூடாது என்று ஃபிலிம் காட்டி இருக்க மாட்டார்கள் ( இதில் முக்கிய கூத்து என்னவெனில் , மாநாட்டைப் புறக்கணிப்போம் என்று அவர் சொன்னபிறகு. ).
# பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை சென்னை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பி இருக்க மாட்டார்கள்.
# சிங்களத்தான் கோபப்படும் படி ஏதும் பேசாதீர்கள் என்று குருட்டு உபதேசம் பண்ணியிருக்க மாட்டார்கள்.
# பத்திரிக்கைகளில் ஈழத்தமிழரை ஆதரிப்பது சட்டவிரோதம் என்று புலிப்பூச்சாண்டி காட்டியிருக்க மாட்டார்கள்..
# பார்ப்பன ஊடக ஆதிக்கம் என்று படம்காட்டுபவர்கள் முள்ளிவாய்க்கால் சோகம் பற்றி தமது சொந்தத் தொலைக்காட்சியில் முணுகவாவது செய்திருப்பார்கள். ஈழத்தில் எதுவுமே நடக்காத மாதிரி இருட்டடிப்பு செய்திருக்க மாட்டார்கள்.
# முள்ளிவாய்க்காலின் முதலாண்டு நினைவில் ஒரு மெழுகு வர்த்தி ஏந்தியாவது இறந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தி இருப்பார்கள்......
இவை எதையுமே செய்யாதவர்கள் தமிழர்கள் என்ற வரைமுறைக்குள்ளேயே அடங்க மாட்டார்கள் என்கிற போது , அவர்கள் நடாத்தும் உலகத் தமிழ் மாநாட்டை மட்டும் எப்படி தமிழர்கள் நடாத்தும் மாநாடாக ஏற்றுக்கொள்ள முடியும்?
ஊரை ஏமாற்றுகின்ற இன்னொரு கண்கட்டு வித்தையே அன்றி வேறென்ன இது? இவர்கள் ஊரை ஏமாற்ற நாம் ஏன் நம் ஆதரவைத் தர வேண்டும்...
எதிர்க்கும் சில கூட்டத்தை வரலாறு புறக்கணிக்கும் , செம்மொழி மாநாட்டையெ வரலாறு நினைவில் வைக்கும் என்று வேறு ஒரு உடன்பிறப்பு சொல்கிறார். எங்களை நினைவில் வரலாறு வைக்காது என்பது உண்மைதான்.
ஆனால் , உலகத்தமிழினம் அவமானத்திலும் , வேதனையிலும் , பசியிலும் , பஞ்சத்திலும் தவித்த போது , மாநாடு நடத்தி மகிழ்ந்த இன்னொரு ரோமாபுரி அரசனாக , தமிழினம் மடிந்த போது குத்தாட்டம் பார்த்துக் கழித்தக் கிழவனாகவே கலைஞரை வரலாறு எழுதி வைக்கும்..
அது வரலாற்றின் கருப்புப் பகுதி........கட்டபொம்மனைப் பற்றி பேசும் போதும் எட்டப்பனைப் பற்றியும் வரலாறு பேசும் என்பதனால் எட்டப்பனுக்கு அவமானம் தானே தவிர கட்டபொம்மனுக்கு அவமானமல்ல.
முதலில் , தமிழ் பேசும் தமிழனைக் காப்பாற்றுங்கள்....பிறகு தமிழுக்கு விழா எடுக்கலாம்...
கூரை ஏறி கோழி புடிக்க முடியாதவன் ,
வானம் ஏறி வைகுந்தம் புடிக்க போறானாம்...
அப்படி இருக்கு கத!!
மேற்சொன்ன சொலவடை மாதிரிதான் இருக்கு உடன்பிறப்புகள் நடாத்தும் செம்மொழி மாநாட்டுக் கதையும்.!!!!!!!!
அங்கே மானமுள்ள , உணர்வுள்ள , துடிப்புள்ள தமிழன் எவனும் தன் காலைக் கூட எடுத்து வைக்க மாட்டான்... உணர்வற்ற , சுயமரியாதை அற்ற , பதவிக்குக் காவடி தூக்கும் அடியார் பட்டாளமே மிகுந்து கிடக்கும்....
அதில் நீங்களும் ஒருவரா என்று கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள் உடன்பிறப்புகளே..
பொதுவில் அல்ல , உங்கள் மனசாட்சியிடம்...
அது சொல்லும் உண்மைகளை.....
ஒரு வேளை மனசாட்சி என்று ஒன்று இருந்தால். !!!!!!!
13 comments:
அருமையான தெளிவான பதிவு ழகரம்.
நண்பரே அடுத்த வீட்டுக்காரன் குடிக்க தண்ணி இல்ல உண்ண உணவு இல்ல இருக்க இடம் இல்ல உடுத்த மாற்று துணி கூட இல்ல என் வீட்டுல்ல அவனுக்கும் சேர்த்து விழா எடுக்கிறேன் என்னுடிய மொழி பற்றை புரியாமல் பேசுகீறீகளே?? என் குடும்ப புழைக்க வேண்டாமா????. இப்ப ரெம்ப ரெம்ப அவசியம்???? செம்மொழி மகாநாடு தெர்யுமா ??? நீங்க நினைக்கிற மாதிரி கொஞ்ச நாள்லில் மறந்து விடுவான் இந தமிழ் மக்கள் அடுத்து ம ஒட்டு போடுவான் இவங்க கூட்டம்தான் வரும் அப்பாவும் நமக்கு விடிவு ஏது ஏதாவது miracle நடந்தால் உண்டு அதுவரை நமக்கு நரக வேதனைதான் !!
நண்பரே அடுத்த வீட்டுக்காரன் குடிக்க தண்ணி இல்ல உண்ண உணவு இல்ல இருக்க இடம் இல்ல உடுத்த மாற்று துணி கூட இல்ல என் வீட்டுல்ல அவனுக்கும் சேர்த்து விழா எடுக்கிறேன் என்னுடிய மொழி பற்றை புரியாமல் பேசுகீறீகளே?? என் குடும்ப புழைக்க வேண்டாமா????. இப்ப ரெம்ப ரெம்ப அவசியம்???? செம்மொழி மகாநாடு தெர்யுமா ??? நீங்க நினைக்கிற மாதிரி கொஞ்ச நாள்லில் மறந்து விடுவான் இந தமிழ் மக்கள் அடுத்து ம ஒட்டு போடுவான் இவங்க கூட்டம்தான் வரும் அப்பாவும் நமக்கு விடிவு ஏது ஏதாவது miracle நடந்தால் உண்டு அதுவரை நமக்கு நரக வேதனைதான் !!
கருணாநிதி தமிழர்களுக்காக இதுவரை செய்து கிழித்தது தெரிந்தும் இந்தப் பதிவா?அய்யோ பாவம் கனிமொழி...!
எதற்கெடுத்தாலும் ”கருணாநிதி கருணாநிதி” என்று பெரும்பாலான வலைப்பதிவர்கள் கருணாநிதி எதிர்ப்பு அரசியலில் சிக்கி விட்டார்கள்.
உங்கள் பின்னூட்டக் கருத்திற்கு நன்றி திரு. மா.சிவக்குமார்.
+++
உங்கள் பின்னூட்டக் கருத்திற்கு நன்றி திரு. ஹமாரா கானா ( ஆமாம் இது இந்திப்பெயர் இல்லே? - செம்மொழி மாநாடு தேவையே , செம்மொழி மாநாட்டின் அவசியம் குறித்தான கேள்வி இங்கு எழவே இல்லை. ஆனால் காலமும் , நடாத்துபவர்களின் உள்நோக்கமுமே இங்கே கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது திரு.ஹமாரா கானா.
கருணாநிதி தமிழர்களுக்காக இதுவரை செய்து கிழித்தது தெரிந்தும் இந்தப் பதிவா?அய்யோ பாவம் கனிமொழி...!
++++
திரு.இராவணன்..
உங்கள் பின்னூட்டத்தின் வழியாகச் சொல்ல முயலும் சேதி எனக்கு விளங்கவில்லை.
இருப்பினும் எள்ளல் போன்றே தோன்றுவதால் ஸ்மைலி.
:))
எதற்கெடுத்தாலும் ”கருணாநிதி கருணாநிதி” என்று பெரும்பாலான வலைப்பதிவர்கள் கருணாநிதி எதிர்ப்பு அரசியலில் சிக்கி விட்டார்கள்.
+++
கட்டுரையை முழுதும் படித்துவிட்டு கருத்திட்டால் நலம் திரு.இளங்கோ.
இங்கே கருணாநிதி எதிர்ப்பு அரசியல் எங்கு வந்தது. தமிழினத் தலைவர் என்று சொல்லிக்கொள்ளும் அவர் ஏன் இப்படிச் செய்தார் என்ற ஆதங்கமே மேலிட்டிருக்கிறது. செய்வதையும் செய்து விட்டு ஊரை ஏமாற்ற முயல்வது ஏன்...அது அவரது தகுதிக்கு அழகா என்ற கேள்வியே எஞ்சி நிற்கிறது.
இது கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்று சொல்வீர்களானால் ..ஸாரி , எதுவும் சொல்வதற்கில்லை.
நாங்கள் அந்த அரசியலையே செய்து விட்டுப்போகிறோம் போங்கள். காரணம் , எங்களிடம் உண்மையும் , நேர்மையும் இருக்கிறது.
எது தர்மமோ அதுவே வெல்லும்.
உங்கள் எழுத்தை பார்க்க வந்தேன்! உங்கள் தரம் எங்கோ இருக்கிறது! நான் சத்தியமாய் அரசிலயலுக்குள் புக மாட்டேன்! என் கடன் சாப்ட்வேர் கோடு எழுதி கிடப்பதே! தயவு செய்து என்னை வம்பிழுக்க வேண்டாம்! நன்றி!
அன்பு சாப்ட்வேர் சார்.
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி,
உங்களை வம்புக்கு இழுத்தேனா? உங்களை தெம்பூட்டும் விதத்தில் தான் பின்னூட்டம் இட்டேன்.
அடிக்கடி வாங்க சார்..
:))
அன்பு ழகரம் சார் - மிக்க நன்றி! தொடர்ந்து வருவேன்!
nice view. it reflects the reality
காத்திருக்கிறேன் சாப்ட்வேர் சார்.
+++
நன்றி அனானி அன்பரே
Post a Comment