Tuesday, June 15, 2010

விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு : காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு தொடர்பு?

விழுப்புரம் தண்டவாள தகர்ப்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹசன் அலிக்கு தொடர்பிருப்பதாகவும் , அதுபற்றிய ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ஐந்து வழக்கறிஞர்கள் கொடுத்த புகாரினால் புதிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இது பற்றிய நக்கீரன் செய்தி வருமாறு.

விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு: காங்கிரஸ் எம்எல்ஏ மீது புகார்


விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விவகாரத்தில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஹசன் அலிக்கு தொடர்ப்பு இருப்பதாக, விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் வழக்கறிஞர்கள் 5 பேர் புகார் மனு கொடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதை முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில் இன்று விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம், தண்டவாள தகர்ப்பில் ஈழத்தமிழர் ஆதரவாளர்களுக்கு தொடர்பு இல்லை. விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பில் காங்கிரஸ் எம்எல்ஏ அசன் அலிக்கு, தொடர்பு உள்ளது என்றும், அதற்கான ஆதாரங்கள் தங்களி‌டம் இருப்பதாகவும். ஆனால் அதை வெளியிட்டால் வழக்கின் புலன் விசாரணைக்கு பாதகமாகிவிடும் என்று வழுக்கறிஞர்கள் 5 பேர் புகார் மனு கொடுத்துள்ளனர். 


தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தில், காங்கிரஸ் எம்எல்ஏ மீது புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



இதுபற்றி நாம் எழுதிய இன்னொரு பதிவுக்கு இங்கே செல்லலாம்..


சரி யார் இந்த  ஹசன் அலி? 


மகிந்த இராஜபக்சே வின் மிக நெருங்கிய நண்பர். கடந்த மாதம் திரு.அசன் அலி அவர்களின் வீட்டைத் திருடர்கள் கொள்ளையடித்த போது மகிந்த இராஜபக்சேவே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் அளவிற்கு நெருக்கம்...

இன்னும் அசன் அலியின் சிங்களத் தொடர்பு பற்றிய கட்டுரைகள். அக்கட்டுரைகளுக்கான ஆதாரங்களுக்கு நாம் பொறுப்பானவர்களில்லை. 



ஒருவேளை இச்செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் , நிருபிக்கப்படும் பட்சத்தில் , தமிழ்த்தேசிய உணர்வாளர்களை ஒழித்துக்கட்டவே இந்த தண்டவாள தகர்ப்பு என்பதும் உறுதி செய்யப்படும்.

Monday, June 14, 2010

செம்மொழி மாநாட்டை ஆதரிக்கும் உடன்பிறப்புகளுக்கு...

செம்மொழி மாநாட்டை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பது பற்றி ஏற்கெனவே எழுதி இருக்கிறோம்.


நாம் இதுபற்றி முன்பே எழுதிய பதிவொன்று - கடந்த செப்டம்பரில் எழுதப்பட்டது. இணைப்பிற்கு .  இனி அதன் முழு வடிவம்.

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை கோவையில் அடுத்த ஆண்டு நடத்துவதாக பெருமதிப்பிற்குரிய முதல்வர் கலைஞர் அறிவித்திருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்பு.

முதன்முதலில் மொழியால் இணைந்தவர்கள் அம்மொழிக்காக விழா எடுத்த பெருமை தமிழ் மொழியையே சாரும்.அத்தகைய மொழிக்காக ஏறக்குறைய இருபதாண்டுகளுக்குப் பிறகு மாநாடு நடத்த முயல்பவர்களை நடுநிலையாளர்கள் நிச்சயம் பாராட்டவே முயல்வார்கள்.

அத்தகைய நன்முயற்சியில் அரசியலைக் கலப்பதில் யாருக்கும் விருப்பமிருக்கவியலாது. தமிழர்களில் பெரும்பான்மையானோர் தாய்த்தமிழகத்திலும் , அதற்கடுத்தாற்போல் மலேசியாவிலும் , ஈழத்திலும் மற்றெல்லா நாடுகளிலும் வாழ்ந்துவருகிறார்கள். இன்றைய அளவில் தமிழர்களுக்கு முக்கியமான பிரச்சினை , ஈழ வதை முகாம்களில் வாடுகின்ற ஒரு சூழலே….

உலகம் முழுமையும் ( தத்தமது சுயநல நோக்களுக்காக என்றாலும் ) அப்பிரச்சினையை தீவிரமாக அணுகி இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்குதலைக் கொடுக்கக் கூடிய ஒரு சூழலில் , உலகத் தமிழ் மாநாட்டை முன்னெடுக்கும் கலைஞர் அவர்களின் செயல்பாடு என்ன என்பதை நடுநிலைத் தமிழர்கள் நன்றாகவே உணர்கிறார்கள். இன்றைக்கு ஈழத்தமிழர்கள் கலைஞரின் செயல்பாடு பற்றி அதிருப்தி கொண்டிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

இப்படியொரு நிலையில் இன்றைக்கு உலகத் தமிழ் மாநாட்டைக் காட்டிலும் முக்கியத்துவம் பெறுகின்ற ஈழத்தமிழர் பிரச்சினைக்காக இந்திய நடுவண் அரசினை வலியுறுத்தி முகாம்களில் வாடும் தமிழர்களை விடுவிக்கவும் , அதன் பின்னர் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையினையும் பெற்றுத் தர கலைஞர் முயற்சிப்பாரானால் உலகத் தமிழ் மாநாட்டை உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி வெற்றி மாநாடாக்கி அந்த வெற்றியை கலைஞரின் காலடியில் சமர்பிப்பார்கள்.


அப்போதுதான் மாநாட்டின் நோக்கம் முழுமையாக வெற்றி பெரும். அதைவிடுத்து இந்த மாநாட்டையும் ஒரு அரசியல் ஆதாயமாக பயன்படுத்திக் கொள்ளும் தந்திரமோ என்ற இயல்பான சந்தேகம் தமிழர்களிடையே மிகுந்து கிடக்கிறது. அதைத் தெளிவுபடுத்த வேண்டியது கலைஞரின் கடமை…

காரணம் உலகத்தமிழ் மாநாடு திமுகவின் மாநாடு அல்ல.
தமிழர்களின் மாநாடு…

அதை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டியது தமிழர்களின் கடமை…! அக்கடமையை சரிவர தமிழர்கள் செய்ய கலைஞர் மீது இழந்துவிட்ட நம்பிக்கையை மீளப்பெறுதல் மிக முக்கியமானது. அதுவே வெற்றிக்கு அடிப்படையானது.

(19.09.09) - உலகத் தமிழ் மாநாடு



 இந்தக் கட்டுரை எழுதப்பட்டது சற்றேறக்குறைய 10 மாதங்களுக்கு முன்.....ஆனால் என்ன முன்னேற்றம் ? இதுகாறும் என்ன ஆக்கப்பூர்வ முன்னேற்றங்களை தமிழர்கள் வாழ்வில் ஏற்படுத்தி இருக்கிறார் கலைஞர்?

இன்றுவரை , இந்த நிமிடம் வரை ஊரை ஏமாற்றி , மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதில் தான் கலைஞருக்கு நாட்டமிருக்கிறது என்பதை இராஜபக்சே வரும்போது எழுதிய கடிதத்தை வைத்துப் புரிந்து கொள்ளலாம். 

உண்மையாகவே , தமிழர்கள் மீது அக்கறையிருக்கும் , தமிழின் மீது அக்கறையிருக்கும் எவர் ஒருவரும் 

#   ஈழப் படுகொலை யொட்டி இராஜபக்சே அரசைப் பற்றி கண்டிருத்திருப்பார்கள்.....

# படுகொலைக்குக் காரணமாக சகோதர யுத்தம் பற்றிப் பேசி பிடில் வாசித்திருக்க மாட்டார்கள்.


#   சாயந்திரத்திற்குள் தம் உண்ணாவிரதத்தால் போர் நின்றது என்று புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்க மாட்டார்கள்.

#    முதுகுத் தண்டு வலியோடு , ஆஸ்பத்திரிக்கட்டிலில் அமர்ந்து "ஈழம் பெற்றுத்தர முயற்சிப்போம்" என்று பொய் வாக்குறுதிகளைத் தந்து அதைப் பின் மறந்திருக்க மாட்டார்கள்.

#    ஈழத்தமிழருக்காக உயிர்துறந்த முத்துக்குமாரின் சிலையை வைக்க அனுமதி மறுத்திருக்க மாட்டார்கள். 

#      இந்திய அரசாங்கத்தின் துரோகத்தை அம்பலப்படுத்திய மலேசிய பினாங்கு மாநிலத் துணை முதல்வர் செம்மொழி மாநாட்டிற்கு வரக்கூடாது என்று ஃபிலிம் காட்டி இருக்க மாட்டார்கள் ( இதில் முக்கிய கூத்து என்னவெனில் , மாநாட்டைப் புறக்கணிப்போம் என்று அவர் சொன்னபிறகு. ). 

#    பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை சென்னை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பி இருக்க மாட்டார்கள். 

#    சிங்களத்தான் கோபப்படும் படி ஏதும் பேசாதீர்கள் என்று குருட்டு உபதேசம் பண்ணியிருக்க மாட்டார்கள்.


#    பத்திரிக்கைகளில் ஈழத்தமிழரை ஆதரிப்பது சட்டவிரோதம் என்று புலிப்பூச்சாண்டி காட்டியிருக்க மாட்டார்கள்..


#    பார்ப்பன ஊடக ஆதிக்கம் என்று படம்காட்டுபவர்கள் முள்ளிவாய்க்கால் சோகம் பற்றி தமது சொந்தத் தொலைக்காட்சியில் முணுகவாவது செய்திருப்பார்கள். ஈழத்தில் எதுவுமே நடக்காத மாதிரி இருட்டடிப்பு செய்திருக்க மாட்டார்கள்.


#   முள்ளிவாய்க்காலின் முதலாண்டு நினைவில் ஒரு மெழுகு வர்த்தி ஏந்தியாவது இறந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தி இருப்பார்கள்......

இவை எதையுமே        செய்யாதவர்கள் தமிழர்கள் என்ற வரைமுறைக்குள்ளேயே அடங்க மாட்டார்கள் என்கிற போது , அவர்கள் நடாத்தும் உலகத் தமிழ் மாநாட்டை மட்டும் எப்படி தமிழர்கள் நடாத்தும் மாநாடாக ஏற்றுக்கொள்ள முடியும்?

ஊரை ஏமாற்றுகின்ற இன்னொரு கண்கட்டு வித்தையே அன்றி வேறென்ன இது? இவர்கள் ஊரை ஏமாற்ற நாம் ஏன் நம் ஆதரவைத் தர வேண்டும்...


எதிர்க்கும் சில கூட்டத்தை வரலாறு புறக்கணிக்கும் , செம்மொழி மாநாட்டையெ வரலாறு நினைவில் வைக்கும் என்று வேறு ஒரு உடன்பிறப்பு சொல்கிறார். எங்களை நினைவில் வரலாறு வைக்காது என்பது உண்மைதான்.

ஆனால் , உலகத்தமிழினம் அவமானத்திலும் , வேதனையிலும் , பசியிலும் , பஞ்சத்திலும் தவித்த போது , மாநாடு நடத்தி மகிழ்ந்த இன்னொரு ரோமாபுரி அரசனாக , தமிழினம் மடிந்த போது குத்தாட்டம் பார்த்துக் கழித்தக் கிழவனாகவே கலைஞரை வரலாறு எழுதி வைக்கும்..

அது வரலாற்றின் கருப்புப் பகுதி........கட்டபொம்மனைப் பற்றி பேசும் போதும் எட்டப்பனைப் பற்றியும் வரலாறு பேசும் என்பதனால் எட்டப்பனுக்கு அவமானம் தானே தவிர  கட்டபொம்மனுக்கு அவமானமல்ல.

முதலில் , தமிழ் பேசும் தமிழனைக் காப்பாற்றுங்கள்....பிறகு தமிழுக்கு விழா எடுக்கலாம்... 

கூரை ஏறி கோழி புடிக்க முடியாதவன் , 
வானம் ஏறி வைகுந்தம் புடிக்க போறானாம்...
அப்படி இருக்கு கத!!

மேற்சொன்ன சொலவடை மாதிரிதான் இருக்கு உடன்பிறப்புகள் நடாத்தும் செம்மொழி மாநாட்டுக் கதையும்.!!!!!!!!

அங்கே மானமுள்ள , உணர்வுள்ள , துடிப்புள்ள தமிழன் எவனும் தன் காலைக் கூட எடுத்து வைக்க மாட்டான்... உணர்வற்ற , சுயமரியாதை அற்ற , பதவிக்குக் காவடி தூக்கும் அடியார் பட்டாளமே மிகுந்து கிடக்கும்....

அதில் நீங்களும் ஒருவரா என்று கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள் உடன்பிறப்புகளே.. 

பொதுவில் அல்ல , உங்கள் மனசாட்சியிடம்...

அது சொல்லும் உண்மைகளை..... 

ஒரு வேளை மனசாட்சி என்று ஒன்று இருந்தால். !!!!!!!





Saturday, June 12, 2010

விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு : சதியா ? நாடகமா?

பதிவுக்குள் போகுமுன் , ஒரு விடயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். என்ன தான் இராஜபக்சே மேல் கோபம் இருந்தாலும் இந்த ரயில் தண்டவாள தகர்ப்பு போன்ற முட்டாள் தனமான காரியங்களை என்றைக்குமே ஆதரிப்பதில்லை , சாதாரண அப்பாவி பொதுமக்களின் மீதான வன்முறையைப் போன்ற விடுதலைப்போராட்டத்திற்கு எதிரான காரியம் எதுவுமில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன். ஒரு வேளை உண்மையான தமிழுணர்வாளர்களே இந்த மட்டரகமான காரியத்தைச் செய்திருந்தாலும் அதை ஆதரிப்பதில் உடன்பாடில்லை. 

சரி நிற்க ; 

விழுப்புரம் தண்டவாள தகர்ப்பினைக் கண்டுபிடித்ததாக பத்திரிக்கைச் செய்தி சொல்கிறது. எப்படிக் கண்டுபிடித்ததாம்? அவர்கள் மொழியிலேயே பார்ப்போம்.


நாசவேலையில் இருந்து தப்பியது எப்படி? :

நூற்றுக்கணக்கானவர்கள் பலியாவது தவிர்க்கப்பட்டு பெரும் நாசவேலையில் இருந்து ரயில் விபத்து தப்பிய சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து அங்கிருந்து கிடைத்த தகவலின்படி விவரம் வருமாறு: இந்த பாதையில் நள்ளிரவு 2. மணி . 10 நிமிடத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற போது ரயில் டிரைவர் சேகரன், ரயில் சற்று பம்முவதுபோல, உணர்வதாக பேரணி ஸ்டேஷன் மாஸ்டர் ருத்ரபாண்டிக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த ரயில் கடந்து செல்லும்போது தண்டவாளம் தகர்க்கப்படவில்லை.
 
இவர் இன்னும் சில மணி நேரத்தில் இந்த வழியாக வரும் ராக்போட் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்திக்கொள்ளுமாறு விழுப்புரம் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்துள்ளார். ( இதற்கு இடைப்பட்ட நேரத்தில் வெடி வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டுள்ளது) இதனையடுத்து ரயில்வே ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர் கோபால்நாத் ராவுக்கு முண்டியம்பாக்கம் ஸ்டேஷனில் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது தொடர்ந்து ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்தி ரயிலை தண்டவாளம் தகர்ந்த இடத்திற்கு 15 மீட்டர் இடைவெளியில் ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதத்தில் இருந்து பயணிகள் தப்பினர். 

ஆதாரம் : தினமலர்

# பம்முவது என்றால் என்ன? முதலில் இதுபோன்ற கலோக்கியல்  மொழியினை ஒரு நாகரீக ஊடகத்தில் வெளியிடுவது முறையல்ல என்பதைத் தள்ளிவைத்து விடுவோம். பம்முவது என்றால் தயங்கித் தயங்கி என்று வைத்துக்கொள்ளலாமா ? அல்லது திணறித் திணறி என்றும் வைத்துக்கொள்ளலாம். அப்போது தண்டவாளம் தகர்க்கப்படவில்லை என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கிறது பத்திரிக்கை... பிறகெப்படி ரயில் பம்மியது? ரயில் பம்மியது என்றால் குண்டு வைத்துத் தகர்க்கும் வரை ரயில்வே போலீசாரும் , அலுவலர்களும் வேடிக்கை பார்த்தார்களா?

#    தண்டவாளம் தகர்க்கப்பட்டதன் பதினைந்து மீட்டர் முன்னால் தான் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் நிற்கிறது என்கிற போது அந்த கும்மிருட்டில் ( நள்ளிரவு ) தண்டவாளம் அவ்வளவு சரியாகத் தெரிந்ததா?காரணம் , பதினைந்து மீட்டர் முன்னால் ரயிலை நிறுத்த குறைந்தபட்சம் குண்டு வெடிப்பை ஒரு மைலுக்கும் அதிகமான தொலைவில் இருந்து தண்டவாளத் தகர்ப்பை பார்த்திருக்க வேண்டும். ஏனென்றால், நான் கேள்விப்பட்ட வரை பதினைந்து மீட்டர் முன்னால் எல்லாம் ரயிலை நிறுத்தினாலும் , ரயில் நிற்க குறைந்த பட்சம்ஓரு மைல் தொலைவிற்கு பயணித்தே நிற்கும்.  அதுபற்றிய ஆதாரம் தேடிய போது கிடைத்த தகவல்...

on most trains, if the engineer can see you, it is usually too late to stop for you, even when placing the train into an emergency application of the brakes. So, lets just say the average stopping distance in full emergency is at least a mile and up.

Source : Yahoo
#   முதல் ரயில் (சேலம் எக்ஸ்பிரஸ்) போனபிறகே குண்டு வெடித்திருந்தால் , பிறகெப்படி முதல் ரயில் குலுங்கிக் குலுங்கிச் செல்லும்? எப்படி விபத்துக்குள்ளாகாமல் தப்பியிருக்கும்?

 
சரி , டெக்னிக்கல் கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும். ஒரே ஒரு துண்டுச் சீட்டை வைத்துக்கொண்டு , அதுவும் தெள்ளத்தெளிவாக புலிகள் இதைச் செய்தார்கள் என்று பட்டம் சூட்டுவதைப் பார்த்தால் , இது என்னமோ அரசியல் நாடகம் போலத்தான் தோன்றுகிறதோ தவிர வேறொன்றும் எண்ணத் தோன்றவில்லை.

# எப்படி நீதிமன்ற வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டத்தை ஒடுக்கி கடந்த முறை தமிழகத்தில் எழுந்த ஈழ ஆதரவு அலையை ஒடுக்க முயற்சித்தார்களோ சற்றேறக்குறைய அதே நிலையில் தான் இந்தச் சதியும் நடந்திருக்கிறது. சற்றே ஒடுங்கியிருந்த தமிழின உணர்வாளர்கள் "இராஜபக்செ" வின் வருகையையொட்டி போராட்டங்களை நடாத்துகிறார்கள்..... அவர்களை ஒடுக்கவும் , செம்மொழி மாநாட்டைக் காரணம் காட்டி அவர்களை எல்லாம் சிறையில் தள்ளவும் நடக்கும் முயற்சியோ என்ற கேள்வி எழாமல் இல்லை.

# புலிகளே இலங்கையில் செய்யாத இது போன்ற அற்பத்தனமான காரியங்களை புலிகளின் ஆதரவாளர்கள் இங்கே செய்திருப்பார்கள் என்று சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்று புரியவில்லை.

#    தமிழர்களின் மரணத்திற்கு பதில் கேட்டு உலுக்கும் தமிழின உணர்வாளர்கள் தமிழர்களையே கொல்ல முயற்சிப்பார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. 

# இராஜபக்சேவை எதிர்க்கத் துணிபவர்கள் , வருவதற்கு முன் எச்சரிப்பார்களா இல்லை அதற்குப் பின்னரா? உண்மையில் தமிழர்தம் நிலைபற்றி ஊடகங்களின் கவனத்தைக் கவர முயற்சிப்பவர்கள் இராஜபக்சே வருகைக்கு முன்னால் தானே செய்ய வேண்டும்?



எனக்கென்னமோ , இந்தச் சம்பவத்திற்குப் புலிப் பெயர் சூட்டி , தமிழின ஆதரவாளர்களை ஒடுக்கும் முயற்சியாகத் தான் தோன்றுகிறது என்றாலும் நாமும் அதுபோன்ற முடிவிற்கு வந்தால் நமக்கும் , இராஜதந்திரிகளுக்கும் வித்தியாசம் என்னவிருக்கிறது? 

ஆகவே , விசாரணைக்குப் பின் தான் முடிவு தெரியும். ஆனால் விசாரிப்பவர்கள் யார் ? ஒருவேளை அந்தச் சதியை யார் செய்திருப்பார்களோ என்று ஒருதரப்பு சந்தேகிக்கும் நபர்கள். இருந்தாலும் விசாரணையைப் பொறுத்தே முடிவெடுக்க வேண்டும்...ஏனெனில் இது சனநாயக நாடு..

விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு : சதியா ? நாடகமா?   

- எழுத ஆரம்பித்த போது எழுந்த கேள்வி எழுதி முடித்தபின்னும் அப்படியே இருக்கிறது.

Monday, June 07, 2010

போர்க்குற்றங்களை வெளிப்படுத்தினால் பொன்சேகாவை தூக்கில் இடுவோம்...!

 

Sri Lanka threatens to execute General Sarath Fonseka 

By Stephen Sackur
Presenter, BBC HARDtalk 
http://news.bbc.co.uk/2/hi/programmes/hardtalk/8725899.stm
The Sri Lankan government has threatened to execute Sarath Fonseka, the army commander who delivered victory over the Tamil Tigers, if he continues to suggest top officials may have ordered war crimes during the final hours of the Tamil war.
General Fonseka
General Fonseka wants to testify before an independent investigation
The threat, issued by Sri Lanka's powerful defence secretary, Gotabaya Rajapaksa, is the latest sign of a bitter and intensifying feud within the Sri Lankan political establishment, little more than a year after the end of the Tamil war.
Mr Rajapaksa, who worked closely with General Fonseka on the aggressive military strategy which crushed the Tigers, told the BBC's HARDtalk programme that the general had proved himself to be a liar and a traitor.
Gen Fonseka quit the military soon after the final defeat of the Tigers. He was the main opposition candidate in last January's presidential election.
Within days of his defeat the former war hero was arrested and is currently in military detention facing a court martial on charges of corruption and politicking while in uniform.
That's a treason. We will hang him (Fonseka) if he do that
Sri Lankan Defence Secretary Gotabya Rajapaksa
Gen Fonseka roused the fury of the ruling Rajapaksa clan when he joined the opposition. The rift deepened when Gen Fonseka suggested there was eyewitness evidence of the defence secretary ordering army officers to shoot and kill surrendering Tamil Tiger leaders at the end of the war.
Government enemy
That eyewitness is said to be a Sri Lankan journalist who is now in hiding overseas.
The very fact that Gen Fonseka has heard the account and gives it credence makes him a dangerous enemy of the current government.
Gen Fonseka told me, in a clandestine telephone interview, that he would be prepared to testify before any independent investigation of alleged abuses during the Tamil war. "I will not hide anything," he said.
When I put this possibility to Mr Rajapaksa he responded with an extraordinary tirade. "He can't do that. He was the commander," he said. "That's a treason. We will hang him if he do that. I'm telling you… How can he betray the country? He is a liar, liar, liar."
Political fallout
The suggestion that Gen Fonseka could be executed is likely to cause a political storm in Sri Lanka. Fonseka is an elected MP and he garnered 40% of the vote in the presidential election. Capital punishment has not been used on the island for 34 years.
Defence secretary Gotabaya Rajapaksa also ruled out any possibility of an independent, third-party investigation of alleged war crimes committed by both the Sri Lankan army and the Tamil Tigers in the final phase of the war.
"We are an independent country, we have the ability to investigate all these things," he said.
Colombo insists that no civilians were killed by the army during their final assault on the Tiger's last redoubt, despite evidence from the UN and international non-governmental organisations (NGOs) which points to thousands of civilian deaths.
With a strong electoral mandate and a big majority in Parliament President Mahinda Rajapaksa seems intent on ruling post-war Sri Lanka without heed to critics at home or abroad.
Powerful family
He has turned his administration into something of a family business. As well as his brother who is the defence secretary, another brother is minister of economic development, another is speaker of the parliament, and his son is a newly elected MP.
In all, the Rajapaksas are responsible for spending more than two-thirds of the state budget.
The dominance of the family is "dangerous and unsustainable," says Vijayadasa Rajapaksa (no relation), a leading Sinhalese barrister and the president's former friend and personal lawyer.
Sri Lanka's defence secretary Gotabaya Rajapaksa
Gotabaya Rajapaksa said General Fonseka was "a liar and a traitor"
He joined the opposition after becoming disillusioned with the president's failure to act on repeated warnings about corruption and waste in the public sector.
Sri Lanka's budget deficit, at some 8% of GDP is significantly above targets set by the IMF in return for a $2.6bn (£1.79bn) loan package, but the Rajapaksa government is committed to a massive programme of post-war spending.
In and around Kilinochchi, the former capital of the Tamil Tiger northern fiefdom it is easy to see where the money should be going.
Houses are destroyed, farmland is lost to jungle and still swathes of territory are off-limits to civilians as the Sri Lankan army continues to clear mines.
At least the de facto internment camp at Menic Farm, which was filled with almost 300,000 Tamil civilians a year ago is now emptying fast. Every day families line up for hours in the sticky heat for buses heading to their home villages across the northern Vanni region.
We want to bring normalcy to this country, but we have suffered from terrorism for 30 years, so it has to happen gradually
Defence Secretary Gotabaya Rajapaksa
But they wait with precious little sense of anticipation.
Farmer and father of three, Thambirasa Karunamurthy, told me: "We came here with one plastic bag of belongings and we're going home with no money, no assets, nothing. We have to start life again in a barren land. We don't know what we are going to do."
On every road and around every settlement Sri Lankan soldiers man guard posts and checkpoints. The government has promised to fully integrate the north into the national economy. It has ruled out significant Tamil autonomy.
"If there is no political solution the conclusion will be that the government wants to impose military victory on the Tamil people, and that the Tamils will never accept," says veteran leader of the Tamil National Alliance Rajavarothiam Sampanthan.
He talks of "organising and resisting through non-violent means".
But Sampanthan speaks from a comfortable office in Colombo. In the ruined villages of the north resistance of any sort seems like a thing of the past.
New struggle
The Tamil Tigers, for years the brutal masters of the Vanni, appear to have been finished for good. Those that were not killed in the war's brutal end-game were rounded up and detained. Just a handful of fighters managed to escape. I spoke to one man now in hiding who was a Liberation Tigers of Tamil Eelam (LTTE) bomb-maker for more than a decade.
This ex-combatant, who was badly wounded earlier in the war, was twitchy with nerves and deep in denial. He denied reports that Tiger cadres forcibly held Tamil civilians in their last redoubt.
He denied the irrefutable evidence that the Tigers conscripted child soldiers and ruthlessly silenced Tamil dissent. And he denied that the war was over.
"You will see, within the next two or three years these very same Tamil people will begin a new armed struggle," he told me. "A new war led by a new leadership."
But before he hobbled away from our covert encounter - he added something else. "I am not afraid to die, but my only worry is that the Tamil people will slowly disappear."
Sri Lankans still live under a state of emergency. The war is over but the government insists Sri Lanka's security is still at risk, whether it be from Tamil "terrorist organisations" overseas, or "traitors" at home.
"We want to bring normalcy to this country, but we have suffered from terrorism for 30 years, so it has to happen gradually," says Gotabaya Rajapaksa. Too gradually, it seems, for his former friend Sarath Fonseka.

 

Sunday, June 06, 2010

தமிழ்மணத்திற்கு நன்றி.

சரியான நேரத்தில் தேவையான முடிவெடுத்த தமிழ்மணத்திற்கு நன்றி....மேலதிக செய்திக்கு......
http://twitter.com/tamilmanam

ஒருசிலருக்கான கருத்து வேறுபாட்டினை பதிவுலகத்தின் ஒட்டுமொத்தப் பிரச்சினையாகத் திரிக்க முற்பட்ட பலருக்கும் இது தக்க பாடமாக இருக்கும்......

வயதிலும் , அனுபவத்திலும் மூத்த டீ.வி.ஆர் அய்யா போன்றவர்கள் இதுபோன்ற தேவையற்ற பிரச்சினைகளால் எமக்கு வழிகாட்டுவதை நிறுத்திவிட்டது வருத்தமே....அவரைப் போன்றவர்கள் மீண்டும் எழுதவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்....

Friday, June 04, 2010

கூலிக்கு மாரடிக்கிறார்களாம் தமிழர்கள்...!!!! கேட்டுக்குங்க...!!!

ஐ.ஐ.எப். ஏ விழா (IIFA 2010 ) கொழும்பு நகரில் நடப்பது தெரிந்ததே........

அதற்கு உணர்வால் ஒன்றுகூடிய மும்பைத் தமிழர்கள் அமிதாப் பச்சனின் வீட்டிற்கு முன்னே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்...ஆனால் அதைக் கூலிக்கு மாரடிப்பதாகக் கொச்சைப்படுத்துகிறார் விஸ்கிராப்ட் ( அந்நிகழ்விற்கான ஏற்பாட்டாளர்) நிறுவன மேலாளர் சபாஸ் ஜோசப்...

நம் செயல்படாத் தன்மையால் தான் உணர்வாளர்களுக்கு இந்த அவப்பெயர் வந்தது... நல்ல பெயர் தான் போங்கள். இதையாவது உணர்வோடு கண்டிப்போம்....!

இது பற்றிய மீனகம் செய்திக்கான இணைப்பிற்கு இங்கே சொடுக்கவும்.





Wednesday, June 02, 2010

பதிவுலகச் சண்டையும், குழாயடிச் சண்டையும்

பதிவுலகத்தில் சண்டை போடுபவர்கள் , குழாயடிச் சண்டையைப் பார்த்து முகம் திருப்பிப் போவார்கள்..

குழாயடிச் சண்டையில் வாயில் கேட்கக் கூசும் வார்த்தைகளைப் பேசுவது அனேகமாக பெண்கள்...இங்கே சில ஆண்கள்....

குழாயடிச் சண்டை சிலசமயம் அடிதடியில் முடிவதுண்டு....அனேகமாக அது முடியிழுப்பு போராட்டமாகவே இருக்கும்.......இங்கேயும் அடிதடிகள் அனேகம் உண்டு...

ஆனால் குழாயடிச் சண்டையில் சண்டை போடும் இருவரையும் பலர் விலக்குவார்கள் அல்லது விலக்கவாவது முயல்வார்கள்... ஆனால் பதிவுலகில் , சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாய் இருக்கும் போது பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் அவரவர் அவரவருக்கு தேவையான வாக்கில் ஆதரவும் , எதிர்ப்பும் தெரிவித்து அரசியல்வாதிகளாகி விடுவார்கள்.

சமயத்தில் பதிவுகள் எழுதி , ஆறிப்போயிருக்கும் ரணத்தை ( இதோ இந்தப் பதிவு போலவேதான்...) கிளறிக் காயப்படுத்துவார்கள்......

ரோட்டில் , நாட்டில் , திருமணத்தில் , வீட்டில் , அலுவலகத்தில் , கோவிலில் , அரசியற் கட்சிகளில் மற்றுமெல்லா இடங்களிலும் நடக்கும் நிகழ்வுகளிலான ஆணாதிக்கம் பற்றி கருத்தேதும் எழுதாத எல்லாப் பதிவர்களும் ஆணாதிக்கத்தை வேரறுக்க வந்த தேவதூதர்களாக தம்மைக் காட்டிக் கொள்ள நல்லதொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது....விடுவானேன்....???  எழுதிக்கிளப்புங்கள்..உங்கள் வார்த்தைகளின் வீச்சில் பதிவுலக ஆணாதிக்கம் பட்டுப் போய்விடும்...அட்லீஸ்ட் பதிவுலக ஆணாதிக்கமாவது......

புஷ்பா தங்கதுரை தெரியுமா உங்களுக்கு? சற்றேறக்குறைய "சரோஜா" தேவி புத்தகங்களையொற்றிய கதைகளை எழுதிக்குவித்தவர் அவர்.....அதையும் மீறி  குருவையும் மிஞ்சின சிஷ்யனாகிவிட்ட ஒருவருக்கு ஆதரவு கொடுக்கவும் ஆளிருக்கிறது என்றால் "நித்யானாந்தாவையும் " , பிரேமானந்தாவையும் மட்டுமே நித்தம் நித்தம் வைது இங்கே பதிவுகள் இடுவதன் அர்த்தம் தான் என்ன? 

உங்களுக்குப் பொழுது போகவில்லையென்றால் வாசகர்களின் நேரத்தைக் கொலவதற்கான சுதந்திரத்தை உங்களுக்கு யார் கொடுத்தார்கள்??

பெரியாரியத்தையொட்டிய , கம்யூனிசத்தையொட்டிய , பெண்ணுரிமையொட்டிய , சாதிப்பூசலையொட்டிய இன்னும் சமுதாயத்திற்கான அடிப்படைப் பிரச்சினைகளையொட்டிய விவாதங்கள் இங்கே இதுபோன்ற பலப்பல பதிவுகளாய் எழுந்திருக்குமானால் அது ஆரோக்கியம்......ஆனால் , இது வீண் விவாதம்...வெட்டிப்பேச்சு விழலுக்கிரைத்த நீர்.......

உங்க டைம் வேஸ்ட்டு , எங்க டைம் வேஸ்ட்டு

அந்தப் பதிவை ஆணாதிக்க வாதி ஒருவரே எழுதியிருக்கட்டும்....அவரே மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் என்று சொன்ன பிறகும் அதைக் குத்திக்கிளறுவது என்ன தான் நியாயம்??


இதையெல்லாம் படிக்கும் போது ஒரு வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது..

"யோவ்....போய் புள்ளை குட்டிங்களைப் படிக்க வையுங்கய்யா..."

ஆனால் , உண்மையைச் சொல்லப்போனால் பெரியவர்களான நாம் தான் வாழ்வில் படிக்க வேண்டியவை ஏராளம் இருக்கிறது....

நன்றி.......திருந்துவோம்....இல்லாவிட்டால்
நாம்         வருந்துவோம்.... இப்போதில்லாவிட்டாலும் எப்போதாவது...