Friday, April 16, 2010

தமிழனுக்கு இதைவிட அவமானம் இனியேது?

ஆம்.

இதைவிட அவமானம் இனியொன்றுமில்லை. இதற்குப்பின் பொறுத்திருப்பின் இனி தமிழன் மானங்கெட்டுச் சாவதிலும் தவறில்லை..!!!

தேசியத் தலைவரின் தாயார் என்ற முறையில் அல்ல , தமிழச்சி என்ற முறையில் அல்ல , பாரிச வாயுவால் பாதிக்கப்பட்டு நடைப்பிணமாய் திரிகிற ஒரு வயதான மூதாட்டியை சென்னையில் வைத்து திருப்பி அனுப்புகிறது இந்தியா.

தொடர்புபட்ட செய்திகள்....




இதற்கு மன்னிப்பே கிடையாது...மன்னிக்கவும் முடியாது....!!!! 

ஏன்?

இந்தியாவின் எதிரி நாட்டின் மட்டைப்பந்து விளையாட்டு வீரர் வாசிம் அகரமின் மனைவிக்கு வைத்தியம் பார்க்க விசா ஏதும் இல்லாமலே சென்னையில் இறங்க அனுமதித்த இந்திய அரசு , தகுந்த காரணம் எதுவுமின்றி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரை சென்னையில் வைத்து திருப்பி அனுப்புகிறது என்றால் என்ன அர்த்தம்..?

தமிழ்நாட்டுத் தமிழனே , நீ சொரணை கெட்டவன்..
பிரியாணிக்கும் , நூறு ரூபாய் பணத்துக்கும் விலை போனவன்.....
 உன்னால் ஒரு "மசுரும்" புடுங்க முடியாது என்று சொல்வதாகத்தானே கருதிக்கொள்ள வேண்டியிருக்கிறது????????????

செம்மொழி மாநாடு கூட்டும் நம்ம தாத்தா என்ன சொல்லப்போகிறார்.? மனிதாபிமானம் சிறிதுமற்ற இந்தச் செயலைக் கூட காங்கிரஸ் கூட்டணிக்காக கண்டிக்காமல் விடப்போகிறாரா?

அய்யா , அரசியல்வியாதிகளே...

கொஞ்சமேனும் மனசாட்சியுடன் இருப்பீர்களானால் கட்சி வேறுபாடின்றி இந்த ஈனச்செயலை , தமிழ்நாட்டுக்கு தீராத அவமானத்தையும் , பழியையும் ஏற்படுத்திய இந்த வேதனைச் செயலை கண்டித்தே ஆகவேண்டும்..!

இந்தியாவுக்குள் நுழைய விடமாட்டோம் என்றால் என்ன எழவுக்கய்யா , விசா தருகிறீர்கள்???

ஏனய்யா அவர்களைச் சென்னை வரை வரவிட்டு திருப்பி அனுப்புகிறீர்கள்???

மானங்கெட்ட , சொரணை கெட்ட தமிழர்களைச் சீண்டிப்பார்க்கவா???

ஊடகதர்மங்களைக் கடைப்பிடிக்கும் வணிக நோக்குள்ள பார்ப்பனீய ஊடகங்களின் நிலைமையும் என்ன?நான் சொல்லும் பார்ப்பனீய ஊடகங்களில் கருணாநிதியின் குடும்ப ஊடகங்களும் அடக்கமே...!!!

வழக்கம் போலவே , இருட்டடிப்பு செய்யப் போகின்றனவா????


கேள்விகள் நிறைய உண்டு......ஆனால் பதில் யாரிடம்?

18 comments:

raja said...

இப்பொழுது தமிழ்நாட்டில் வாழ்பவர்கள யாரும் தமிழர்கள் இல்லை.ஓட்டுக்கு காசு வாங்கும் சோற்றுப்பிண்ட கூட்டங்கள்.. சினிமாக்காரனின் அடிமைகள்.. நிதி மற்றும் மாறன் குடும்ப பெரியோர்கள் இதுபோன்று நொய்வாய்பட்டு நாற்றமடித்து.. மற்றவை .. என் அடங்காத, தணியாத மனது என்னனொவொ யோசிக்கிறது.. அவ்வளவே..

thilak said...

It is very very sad news , I don't know why India is doing like this.

Tamils be calm - out time will come.

But the incident to be condemned by all of us as it is not normal to send back an elderly person after granting the necessary visa...

எச்சரிக்கை !! said...

இதை எக்காரணம் கொண்டும் ஒத்துக்கொள்ள முடியாது.

எரிச்சலில் மனசு தாங்கலை. ஆனால் இது நிச்சயம் நல்லதுக்கில்லை என்பது மட்டும் தெரியுது.

எச்சரிக்கை இந்தியா........இதுவே உமது அட்டகாசத்தின் எல்லை.

அருள் said...

"இந்திய அரசு விசா அனுமதி அளித்திருந்தது. ஆனால் தமிழக அரசின் காவல்துறை திருப்பி அனுப்பியது."

வாழ்க வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. வாழ்க தி,மு.க அரசின் வீரம்.

"நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திரமுமின்றி
வஞ்சனை செய்வாரடி கிளியே அவர் வாய் சொல்லில் வீரரடி"

South-Side said...

. என் அடங்காத, தணியாத மனது என்னனொவொ யோசிக்கிறது.. அவ்வளவே../

அப்படி யோசிக்கும் அளவுக்குதான் அவர்களின் லட்சணம் இருக்கிறது. கோபத்தைக் கட்டுப்படுத்தாதீர்கள் ராஜா.

அதை இப்போதும் கட்டுப்படுத்திவிட்டால் பின்பு எப்போதுதான் காட்டுவது?

South-Side said...

But the incident to be condemned by all of us as it is not normal to send back an elderly person after granting the necessary visa.../

உண்மையே , இது மிகவும் துரதிஷ்டவசமான கண்டிக்கத்தக்க நிகழ்வே! அதில் சந்தேகம் ஏதும் இல்லை

South-Side said...

எச்சரிக்கை இந்தியா........இதுவே உமது அட்டகாசத்தின் எல்லை./

நமது பொறுமைக்கு எல்லையே இல்லை என்பதுவே இப்படி தொடர்ச்சியாக நம்மை கருணாநிதியும் , இந்திய அரசும் சீண்டிப்பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்

South-Side said...

"இந்திய அரசு விசா அனுமதி அளித்திருந்தது. ஆனால் தமிழக அரசின் காவல்துறை திருப்பி அனுப்பியது."
//

எம்மைப் பொறுத்தவரை இது ஒரு கூட்டு நிகழ்வே. குடியுரிமைத் துறை அதிகாரிகளை தமிழக அரசு கட்டுப்படுத்துவது இல்லை. அது மத்திய அரசு சார்ந்தது. சொக்கத்தங்கம் சோனியாகாந்தி உத்தரவிட , அவரது அடிப்பொடிகள் அதை செய்து முடித்திருக்கிறார்கள்.

வேதனை தரக்கூடிய இச்செய்திக்கான விளக்கத்தை அதிகார வர்க்கத்தினர் தந்தே ஆகவேண்டும்...

இல்லையேல் அதற்கான விலையை இப்போது இல்லையெனினும் காலம் கண்டிப்பாக பெற்றே தீரும்!!

3rdeye said...

தமிழ் நாட்டுல உள்ள தமிழ் மக்கள் பற்றி நல்லாதான் எழுதியிருக்கீங்க..
இதை இன்றைக்கு நேற்றா பார்க்கிறோம்..காலம் காலமாக நடப்பது தானே. அப்படி நினைத்துத்தானோ என்னவோ ராஐPவ் காந்தியும் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆப்பு வைக்கப் போய் அவரே அவர்களார் ஆவ் ஆகி போனார். ஆனால் தமிழ் நாட்டில் அவர் ஆப்பு ஏதாவது வைத்திருந்தால் ஒன்றுமே நடந்திருக்காது. சொரணை இல்லாத மனிதர்கள் தானே. காவேரி பிரச்சனை ஏன் இவ்வளவு இழுபறியாக உள்ளது? வடிவேல் பாணியில் கூறுவதானால் வரும் ஆனால் வராது என்கின்ற நிலைமைதானே உள்ளது. இலங்கை மக்களுக்காக உங்களால் உண்ணாவிரதத்தை தவிர வேறு என்ன புடுங்க முடிந்தது. எல்லாவற்றுக்கும் முதலில் தற்புகழ்ச்சியை நிற்பாட்டுங்கையா... நா அப்புடி இப்புடி என்கிற விட்டுட்டு செயலில் காட்டு பார்க்கலாம். நேற்று ஒருத்தர் தமிழ்மணத்தில் இட்ட இடுகை என்ன தெரியுமா? விஜய் ஐ.பி.ல் ல் இருந்து முதலாம் வருடத்திலேயே விலகிட்டாராம். ஆனால் விஜய்கு பதிலாக அஜித் என்று செய்தி பரவுதாம். அது தவறாம். அது பிழையான செய்தியாம். நான் கேட்கிறேன் இது இப்ப ரொம்ப முக்கியமா..நம்ம சுத்தி என்னேன்னமோ நடக்குது இவனுக்கு இது பெரிய பிரச்சனை ஆயிட்டுது. கொஞ்சம் கண்ணை திறந்து பார். ஆட்ச்சியிலுள்ளவர்களுக்குதான் நாட்டில் என்ன நடக்குதென்று புரியாமல் சொத்துக்களும் பதவிகளும் வாங்கி குவிக்கின்றார்கள், உங்களுக்குமாய்யா..
இப்பவே முழிச்சுக்க, இல்லைன்னா வாறவன் போறவன் எல்லாம் கு.விட்டு குத்துவான் அப்பவும் நீ இழிச்சுக்கிட்டே தான் இருப்பாய். ஏதோ எழுத தோணிச்சு அவ்வளவுதான். தவறா எழுதி இருந்தால் மன்னிச்சிக்க. நல்லா இரு..

Anonymous said...

பிரபாகரன் தாயார் - என்ன கொடுமை இது ?

http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_16.html

என்ன சொல்வது கருணாநிதியை, .................. அடத்..தூ........... என்பதை தவிர.

Anonymous said...

இது தான் இந்தியாவின் காந்தியம். வாழ்க இந்தியா வாழ்க காந்தீயம். வெட்கம் கெட்ட தமிழனே! இனியும் நீ இந்தியன் என்று சொல்லிக் கொண்டு அம்மணமாய் வாழ வேண்டுமா? ஈழத்தமிழனே இனியும் உன் கோவணத்தை உருவிய இந்தியாவை நம்பிக் கொண்டிருக்கப் போகின்றாயா? மனிதாபிமானம் செத்த இந்தியாவை நாம் முள்ளிவாய்கால் கொலைக்களத்திலே கண்டு கொண்டு விட்டோம்.

யாழ்

Anonymous said...

வெட்கித் தலைகுனிவோம்.

கோபத்தை நெஞ்சில் புதைப்போம்.

அக்கினிக் குஞ்சுகளாய் அணையாது எரிவோம்.

எமக்கான காலம் வரும்.
எமது சூரியன் உதித்தெழும்.

அச்சூட்டில் நீங்கள் பொசுங்கிப்போவீர்கள்.

உண்மையை மறைப்பவன் உதவாக்கரை.
உண்மையை மறைத்தவன்
உயிரற்ற ஜடம்.

கிளிநொச்சிக்காற்றிற்கும் , முள்ளிவாய்க்கால் கடலுக்கும் ,
நந்திக்கடலுக்கும் தெரிந்த உண்மைகள் உலகெங்கும் தெரியவரும்.

அன்று வரை காத்திருப்பீர் கண்மணிகாள்.
கணக்குத் தீர்ப்போம் , சிங்களத்துச் செருக்குக்கு மட்டுமல்ல.....
சிறுமை மிகு கருணையில்லா நிதிக்கும் கூட

யாழிலிருந்து செல்வன்

Anonymous said...

//இதைவிட அவமானம் இனியொன்றுமில்லை. இதற்குப்பின் பொறுத்திருப்பின் இனி தமிழன் மானங்கெட்டுச் சாவதிலும் தவறில்லை..!!!//

இனி மேலும் பொறுக்கவேண்டாம். தயவு செய்து செத்து விடுங்கள்.
சாகும்போது இங்கே புலம்பிகொண்டிருக்கும் முட்டாள்களையும் அழைத்து செல்லுங்கள்.

தமிழ் திரட்டிகள், மலையாளி பிரபாகரனுக்காக புலம்பும் முட்டாள்களிடமிருந்து விடுதலை பெறட்டும்.
வர வர எழவு வீடு போல ஆகிவிட்டது தமிழ் இணையம்.
அத்தனை போரையும் சாகடித்து விட்டு தான் மட்டும் வெள்ளைக்கொடி பிடித்து தப்பிக்க நினைத்த குள்ள நரிக்கு இத்தனை மடையர்கள் அதரவு! கேவலம்.

எத்தனை பேர் சமாதானமாகப் போகச் சொல்லியும் கேட்காமல் திமிர் பிடித்து தான் சர்வாதிகார ஆட்சி நடத்துவதற்காக போரை நடத்தி ஏராளமான தமிழர்கள் இறப்பதற்கு காரணமான ஒரு சுய நலவாதிக்காக இதனை பேர் ஒப்பாரி வைக்கிறீர்களே, உங்களுக்கெல்லாம் வெக்கமாக இல்லை?

நாட்டில் எத்தனையோ மூதாட்டிகள் ஆதரவில்லாமல் தவிக்கும்போது அவர்களையெல்லாம் பற்றி கவலைப்படாமல் ஒரு கொலைகாரனின் பணக்கார தாய்க்காக இத்தனை பேர் மூக்கு சிந்துகிறீர்களே?

நான் எவ்வளவு சொன்னாலும் உங்கள் மண்டையில் ஏறப்போவதில்லை என்று எனக்குத் தெரியும். இதை படித்து விட்டு ரேபீஸ் வந்த நாய் போல குறைப்பீர்கள் என்றும் எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்கள் மூடத்தனத்தை நினைத்து மனம் பொறுக்கவில்லை.

South-Side said...

ஏதோ எழுத தோணிச்சு அவ்வளவுதான். தவறா எழுதி இருந்தால் மன்னிச்சிக்க. நல்லா இரு..//

இதில் மன்னிக்க என்ன இருக்கிறது.? உண்மையைத்தானே எழுதியிருக்கீங்க?

South-Side said...

.................. அடத்..தூ........... என்பதை தவிர.//

:(

South-Side said...

நன்றி யாழ் மற்றும் யாழிலிருந்து செல்வன்.

***


நான் எவ்வளவு சொன்னாலும் உங்கள் மண்டையில் ஏறப்போவதில்லை என்று எனக்குத் தெரியும். இதை படித்து விட்டு ரேபீஸ் வந்த நாய் போல குறைப்பீர்கள் என்றும் எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்கள் மூடத்தனத்தை நினைத்து மனம் பொறுக்கவில்லை.///

ஒன்று கவனீத்தீர்களா பெயரில்லா அன்பரே. ரேபிஸ் நாய் போல பிரபாகரன் மேல் குரைக்கும் நீங்களே எங்களைப் பார்த்து குரைக்காதே என்கிறீர்கள்..

நாங்கள் புலம்புகிறோம் , காரணம் எழவு வீடு எங்களது.

எங்களைக் புலம்ப வேண்டாம் என்று சொல்லும் நீங்கள் தான் எங்கள் எழவுக்கு காரணி.

நாங்கள் வேறு , நீங்கள் வேறு.

தமிழை எழுதுவதால் மட்டுமே நீங்கள் தமிழர்களாகிவிட மாட்டீர்.

Anonymous said...

//தமிழை எழுதுவதால் மட்டுமே நீங்கள் தமிழர்களாகிவிட மாட்டீர்.//

உண்மை.
ஈழ விஷயத்தில் அத்தனை பாப்பான்களும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதை உணர முடியும்

3rdeye said...

ஏதோ எழுத தோணிச்சு அவ்வளவுதான். தவறா எழுதி இருந்தால் மன்னிச்சிக்க. நல்லா இரு..//

இதில் மன்னிக்க என்ன இருக்கிறது.? உண்மையைத்தானே எழுதியிருக்கீங்க?
//

புரிஞ்சுக்கிட்டா சரி