Monday, May 16, 2011

திராவிட முன்னேற்றக் கழகம்.

கற்பனைக்குதிரைகளை தட்டிவிட்டு அகமகிழ்ந்து போகிறார்கள் அதிமுகவினரும் , தேமுதிகவினரும்...கொண்ட நோக்கம் நிறைவேறிய காரணத்தால் தினமணி தலையங்கம் தீட்டித்தீட்டி பெருமிதப்பட்டுக்கொள்கிறது..... இனி இனிப்பு ஆட்சி என்று தினமலர் செய்தி போட்டு தம் வாசகர் பரப்பை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறது....


ராஜபக்சேவை கூண்டிலேற்றுவோம்...ஆனால் அதே சமயம் மாநில ஆட்சியால் மட்டும் எதுவும் செய்ய முடியாது என்கிறார் ஜெ..வாழ்த்துக்கள் ஈழத்தமிழரிடத்தில் இருந்து குவிகிறது.


இராமநாராயணன் பதவி விலகுகிறார்.......புதிய தலைவராக எஸ்.ஏ. சந்திரசேகரன் நியமிக்கப்படுகிறார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு...நடிகர் விஜய் புரட்சித்தலைவியையும் , புரட்சிக்கலைஞரையும் வாழ்த்துக்களால் குளிப்பாட்டுகிறார்....

சில பதிவர்கள் திமுக தமிழகத்தில் மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டதாக சந்தோஷம் கொண்டு , இனி மூன்றாம் இடத்தையாவது திமுக தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று அக்கறை கொள்கிறார்கள்...

இனி கனிமொழிக்கு 'களி'தான் என்று மூத்த அரசியல்வாதிகள் சந்தோஷப்படுகிறார்கள். புதிய தலைமைச்செயலகம் வேக வேகமாகக் காலி செய்யப்படுகிறது...பழைய 'புனித ஜார்ஜ்' கோட்டை பட்டை தீட்டப்படுகிறது.....ஆட்சி மாறினால் அனைத்தும் மாறத்தான் வேண்டும் என்ற எழுதப்படாத ஜனநாயக விதி இங்கு நிறைவேறிக்கொண்டு இருக்கிறது.

சோனியாவும் , மன்மோகனும் , ப.சிதம்பரமும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச்சொல்ல க்யூ கட்டுகிறார்கள்...பெரிசுகள் அல்லது பெரிய பதிவர்கள் திமுகவின் நிலை கண்டு பரிதாபப்படுகிறார்கள்...

திமுக அழிந்து போனது என்று அழிக்கத்துடிப்பவர்கள் அகமகிழ்ந்து போகிறார்கள்....இவர்கள் மகிழ்ந்து போகும்படியா , பரிதாப்படும் படியா திமுக இருக்கிறது?


1991 தேர்தலில் 'ராஜிவ் காந்தியைக்கொன்றது திமுகதான் என்ற பொய்ப்பிரசாரத்திற்கு மயங்கிய மக்கள்  ஜெயலலிதாவிற்கு ஆதரவை அள்ளித்தந்தார்கள்.


இரண்டே இரண்டு எம்.எல்.ஏக்கள் கழகத்திற்கு...ஒருவர் கலைஞர் , பிரிதொருவர் பரிதி இளம்வழுதி....கலைஞர் பிற்பாடு தன் பதவியை இராஜினாமா செய்தார். பரிதி இளம்வழுதி தனி ஒருவராக சட்டமன்றத்தில் இருந்தார்... அப்போதும் கழகம் எதிர்க்கட்சி அல்ல......அதிமுகவின் தோழமைக் கட்சியான காங்கிரஸே எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்தது.


வரலாற்றை மறந்த சிலர் திமுக மூன்றாமிடத்திற்கு முதல் முறையாக தள்ளப்பட்டது என்ற போலித்தோற்றத்தை உருவாக்கி மகிழ்கிறார்கள்....வருங்காலத்தில் தேமுதிக தலைமையிலான அணியில் திமுக சேருமா என்ற விவாதத்தை சூடாகப் பேசி மகிழ்கிறார்கள்....


கழகத்திற்கு தோல்வி புதிதல்ல...ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து வெற்றியை விடத் தோல்வியையே அதிகம் சுவைத்திருக்கிறது....


ஐந்தாண்டு காலமும் கொடநாட்டில் இருந்துகொண்டே அறிக்கையில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு அரசியல் தலைவருக்கு தமிழக மக்கள் அதீத பெரும்பான்மையைக் கொடுத்திருக்கிறார்கள் என்ற உண்மையை உடன்பிறப்புக்கள் உணர்கிறார்கள்....தவறை மக்கள் மீது போட்டுத் தப்பித்துக்கொள்ள உடன்பிறப்புகளொன்றும் 'குஷ்பு' அல்ல...


நலத்திட்டங்களின் மேல் அதீத நம்பிக்கை வைத்ததொரு குறைபாடு......ஈழத்தமிழர் நிலையின் பால் திரிசங்கு நிலை இன்னொரு குறைபாடு......தம் கையில் எதுவுமில்லை மின்வெட்டு ஒரு குறைபாடு......பலமேதுமில்லாத காங்கிரசுக்கு தொகுதிகளை அள்ளிக்கொடுத்ததொரு குறைபாடு...வெண்கலக் கடை பாத்திரங்களைப் போல ஒட்டாத தலைமை கொண்ட காங்கிரசுடன் கொண்ட கூட்டணி ஒரு குறைபாடு....


வட இந்திய , தென் இந்திய ஆரிய , பார்ப்பன பத்திரிக்கைகளின் அதீத திமுக எதிர்ப்பே அவர்களின் அதீத திமுக எதிர்ப்பு பிரச்சாரமே திமுகவின் மீதான மக்களின் கருத்து மாற்றத்திற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..எனினும் அவைகள் அப்படித்தான்...மாறப்போவதில்லை..மாற்றவும் இயலாது ....


மாற்றிக்கொள்ள வேண்டியது எம்மையே....எமது செய்லதிறன் மிக்க உடன்பிறப்புக்கள் இந்தத் தோல்வியைக் கண்டு துவண்டு போய்விடுவார்கள் என்று பத்திரிக்கைகளும் , எதிர்க்கட்சியினரும் நினைப்பார்களாயேனில் அவர்கள் ஏமாந்து போவர்...இன்றிலும் , திமுக அணிக்கு விழுந்த ஓட்டுக்களில் 90 சதம் கழகத்தினரின் ஓட்டே....அதன் வாக்குவங்கியை தகர்க்க எம்.ஜி.ஆரிலிருந்து ஜெயலலிதா வரை முயன்று கொண்டே இருக்கிறார்கள்.....ஆனால் ஒவ்வொரு முறையும் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்....

இது இன்னொரு முயற்சி...பல முனைத் தாக்குதல்கள் இருந்தாலும், ஊடகங்களின் மிதமீறிய அதிமுக ஆதரவுப் பிரச்சாரத்தின் இடையிலும் போட்டியிட்ட தொகுதிகளில் 25 சதவித வெற்றியை திமுக பெற்றிருக்கிறது.


அதனால் , திமுகவை நிலையைப் பார்த்து யாரும் ஒப்பாரி வைக்கவும் வேண்டியதில்லை..பிழைக்குமோ பிழைக்காதோ என்ற போலி கரிசனமும் தேவையில்லை. திமுக ஒன்றும் தேர்தலுக்கு தேர்தல் மக்களைப் பார்க்கும் கட்சியல்ல..எப்போதும் மக்களிடமே இருக்கும் கட்சி...இடையில் சிலபல நிகழ்வுகளால் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டிருக்கிறது. தவறுகளை எப்போதும் சரி செய்து கொள்வதால் தான் இன்னமும் 20 வயதொத்த பல இளைஞர்களை கட்சியில் கொண்டிருக்கிறது.ஆரம்பித்து அரை நூற்றாண்டானாலும் இன்னமும் தன் இளமையைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது...


மக்கள் அதிமுக என்னும் கட்சியை நம்பி வாக்களித்திருக்கிறார்கள்...நல்லது அவர்கள் தம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாய்ப்புக்கொடுப்பது சனநாயகத்தின் மூலக்கூறு...!!!


அதிமுக இதுவரை ஆண்ட 25 வருடங்களில் ஒட்டுமொத்தமாக எந்தவித சாதனையையும் நிகழ்த்தவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.........குறிப்பாக ஜெ.அ.தி.மு.க சாதித்தவைகள் என்று எதையுமே சொல்லமுடியாது என்பதை அக்கட்சிக்காரர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள்.... 

இதை முந்தைய ஒரு பதிவிலேயே சுட்டியிருந்தோம்!

இனிமேலாவது ஏதாவது செய்து மக்கள் நலப்பணிகளில் திமுகவின் சாதனைகளை முறியடிக்க முயல வேண்டும்.....திமுகவிற்கு மாற்றாக இருக்கும் கட்சிக்கான தகுதி அப்போதுதான் அதிமுகவிற்கு கிடைக்கும் என்பதே நமது ஆசை.


ஆனால் , ஜெ.அ.தி.முக.விடம் அதற்கான நோக்கம் கூட இல்லையென்பதையே புதிய தலைமைச்செயலக புறக்கணிப்பு காட்டுகிறது!!!!

வாழ்க தமிழர்கள்....வளர்க தமிழகம்!

37 comments:

வாளவாடி வண்ண நிலவன் said...

mutalkal munatra kalagam endu payar marti kolungal.dmk aachi sathanaiyam; mutala athu perum vethanai

'ழ'கரம் said...

நன்றி திரு.வாளவாடி வண்ணநிலவன்...

உங்கள் உடுமலை தொகுதியில் செல்வாக்கு மிக்க திரு.சண்முகவேலுவை பால்வளத் துறை அமைச்சராக நியமித்தார்கள் கடந்த ஜெ ஆட்சியில் ...நினைவிருக்கும் என்றே நினைக்கிறேன்..

ஆனால் நியமித்த ஒருவாரத்திலேயே நீக்கினார்கள்...எதனால்? எந்த காரணத்தால்?

அதுதான் அம்மாவின் நிர்வாகத் திறமை...சாதனை...அதுதான் உங்களுக்கு வேண்டுமானால் கழகம் அதற்கென்ன செய்யும்?

Anonymous said...

போடா முட்டாய்ப்பயலே.

'ழ'கரம் said...

வாங்க வாங்க அனானி.முழுப்பக்க கட்டுரையில் ஒருபத்தி அல்லது ஒரு வரி கூட மேதமை தாங்கிய உங்களின் பதிலுக்கு தகுதியற்றுப்போனது வேதனை.

Prakash said...

DMK need to correct itself in few areas.

vijayan said...

திமுகாவினர் தாங்கள் தோற்க்கும்போதேல்லாம் ஆரிய,பிராமண சதி என்று புலம்புவது வழக்கம்.1967 -இல் ராஜாஜி,1971 -இல் இந்திரா,பிறகு பிஜேபி என்று கூட்டு வைத்து அதன் லாபங்களை அனுபவித்துவிட்டு இப்போது குற்றம் கூறுவது என்ன நியாயம்.

'ழ'கரம் said...

Prakash கூறியது...

DMK need to correct itself in few areas./

உண்மையே

'ழ'கரம் said...

vijayan கூறியது...

திமுகாவினர் தாங்கள் தோற்க்கும்போதேல்லாம் ஆரிய,பிராமண சதி என்று புலம்புவது வழக்கம்.1967 -இல் ராஜாஜி,1971 -இல் இந்திரா,பிறகு பிஜேபி என்று கூட்டு வைத்து அதன் லாபங்களை அனுபவித்துவிட்டு இப்போது குற்றம் கூறுவது என்ன நியாயம்./

அதுவொரு காரணமாக குறிப்பிட்டிருக்கிறேனே ஒழிய அதுமட்டுமே காரணமென்று எங்கேயும் நான் சொல்லவில்லை

Anonymous said...

My wishes to you sir, this article shows the reality. As a DMK well-wisher & sympathizer, its time to correct ourselves. As you mentioned, there are abundant of youngsters those are having good knowledge on DMK's successful schemes as well as Spectrum scam awareness. This election results are not for JJ but ofcourse against DMK rule ( Family Dominance, Power failure and Spectrum). I go with your point on ARYANS media, anyway its our moment to rejuvenate our party. I'm proud to be an DMK cadre.

harishkumaar said...

என் மனவோட்டத்தை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் தொழரே. எனக்கு முன்பு மறுமொழியிட்ட கழகத்தோழமையின் கருத்தோடும் ஒத்துப்போகிறேன். திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோனதே வரலாறு. அதை மீண்டும் மெய்ப்பிப்போம். இந்த காங்கிரஸ் சனியனை கைகழுவுவதே தொண்டர்களின் எழுச்சிக்கு அடிப்படைத் தேவை

Kartthik said...

Dmk also did nothing over 30 years. Other than their family wealth.

ரம்மி said...

other reasons:

1.family infighting!
2.projection of all children!treating party as partnership company!
3. dynastic rule! - major party and govt. posts,only enjoyed by family members of party functionaries!
4.too much dependence to freebies!
5.turning blind eye to all burning
problems - fishermen/eelam/power shortage/price rise...

most of all..

2G - THE GREAT EVER SCAM IN THE WORLD!

Anonymous said...

கார்த்திக்கு.திமுக எதுவும் செய்யலன்னு மனசாரத்தான் சொல்றியா?

ஜோதிஜி said...

இது போல தெளிவான கட்டுரைகளைத்தான் வலைபதிவுகளின் நான் எதிர்பார்க்கின்றேன். ஊடகத்தில் வரும் கட்டுரைகளைப் போலவே தெளிவான எழுத்தாற்றல். நன்றி.

வேலவன் said...

உண்மையை சொல்லி இருக்கின்றீர் .. பலரும் திமுக முதல் முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது போல சொல்ல்கிறார்கள்..
1991 ல் திமுகவும், 1996 ல் அதிமுக வும் மூன்றாம் இடம் தள்ளப்பட்டு முறையே காங்கிரஸ் , தா மா கா வும் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்தது வரலாறு

என் இன்றைய பதிவை படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Peppin said...

good article...

Anonymous said...

தேர்தலுக்கு தேர்தல் அழியும் கட்சி திமுக அல்ல என்று சொன்னது நச்

Anonymous said...

தமிழ்நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி கடன்; நிதி நிலைமை சரி இல்லை என்ற ஜெயாவே, இந்த இலவசங்களுக்கு எங்கிருந்து பணம் தரப்போகிறாய்? இது யார் அப்பன் வீட்டு பணம்? இலவசங்களை கருணாநிதி கொடுத்தால் குய்யோ முறையோ என்று கத்துவது, அதையே நீ செய்தால் அதை வரவேற்க வேண்டுமா? இலவசங்கள் யார் கொடுத்தாலும் அது தப்பு தான். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாழ்க்கை தரம் உயர உருப்படியான திட்டங்கள் தீட்டி அவர்களும் உழைத்து பிழைக்க உண்மையான வழியை கண்டறிந்து செயல்படுத்துவது தான் ஒரு மக்கள் நல அரசின் லட்சணம். கருணாநிதி கட்டியது என்ற ஒரே காரணத்துக்காக, புதிய சட்ட சபை வளாகத்தை தூக்கி வீசிய நீ, அதற்கான செலவை யோசித்திருந்தால் செய்திருப்பாயா? எத்தனை வயசானாலும் நீ திருந்த மாட்டாய். உன் ஆடம்பரமும், அலட்சியமும், நினைப்பதை நடத்துவதில் நீ காட்டும் வேகமும் சீக்கிரமே உன்னை தவறுகள் செய்ய வைத்து விடும். வேறு வழியில்லாவிட்டாலும், உன்னை தேர்ந்தெடுத்தது இமாலய தவறு என்பதை மக்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை. உனக்கு புத்தி சொல்வது குரங்கும், குருவிகளும் கதை போல தான். உனக்கு நல்லதே தெரியாது; நல்லவர்களையும் தெரியாது. உன் ஆணவம் மேன்மேலும் பெருகி கண்ணை மறைக்கட்டும். அப்போது தான் தவறுகள் செய்வாய்; திமுகவுக்கு நேர்ந்த கதி உன் கட்சிக்கும் நேரும்; அது தமிழ் நாட்டுக்கு நல்லது; அந்த காலம் சீக்கிரம் வரவேண்டும். உன் புது அடிமை விஜயராஜ் காத்துக்கொண்டிருப்பதும் அதற்குத்தான். நீ அறிவாளியாக இருந்தால் அந்தாளை வளர விட மாட்டாய், உன் அலட்சியம் உன்னை வருவது அறிய விடாது; தொடரட்டும் உன் கர்வம்; தமிழ்நாட்டின் தலையெழுத்து இதையெல்லாம் பார்க்க வேண்டுமென்பது. வேறு என்ன செய்வது? கடந்த ஆட்சியில் இலவசங்களை எதிர்த்து எழுதிய பத்ரிகைகள், இப்போது வாய் மூடி வேடிக்கை பார்ப்பதேன்? அவர்களுக்கு தெரியும், வாயைத் திறந்தால், பத்திரிகை நடத்த முடியாது என்பது. அவர்கள் பிழைக்க தெரிந்தவர்கள். நாமும் பிழைக்க தெரிந்தவர்களாக இருப்போம்; வேறு என்ன செய்வது. நம்மால் உருட்டுக்கட்டை அடியை தாங்க முடியாது. இனி அராஜகமும், அக்கிரமும் தலைவிரித்து ஆடும். நாமும் அதற்கு தலை வணங்கி தாழ்ந்து போக வேண்டியது தான். இனி தமிழ்நாடு மக்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

'ழ'கரம் said...

பெயரில்லா பெயரில்லா கூறியது...

My wishes to you sir, this article shows the reality. As a DMK well-wisher & sympathizer, its time to correct ourselves. As you mentioned, there are abundant of youngsters those are having good knowledge on DMK's successful schemes as well as Spectrum scam awareness. This election results are not for JJ but ofcourse against DMK rule ( Family Dominance, Power failure and Spectrum). I go with your point on ARYANS media, anyway its our moment to rejuvenate our party. I'm proud to be an DMK cadre.//

நன்றி நண்பரே.

'ழ'கரம் said...

harishkumaar கூறியது...

என் மனவோட்டத்தை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் தொழரே. எனக்கு முன்பு மறுமொழியிட்ட கழகத்தோழமையின் கருத்தோடும் ஒத்துப்போகிறேன். திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோனதே வரலாறு. அதை மீண்டும் மெய்ப்பிப்போம். இந்த காங்கிரஸ் சனியனை கைகழுவுவதே தொண்டர்களின் எழுச்சிக்கு அடிப்படைத் தேவை

/

நன்றி ஹரீஷ்குமார்.

'ழ'கரம் said...

நீக்கு
பெயரில்லா Kartthik கூறியது...

Dmk also did nothing over 30 years. Other than their family wealth.//

மேலிட்ட பதிவிலிருக்கும் சுட்டியைப் படித்து மனசாட்சியுடன் பதில் சொல்லவும் திரு.கார்த்திக்.

'ழ'கரம் said...

Dmk also did nothing over 30 years. Other than their family wealth.

16 மே, 2011 3:39 am
நீக்கு
பிளாகர் ரம்மி கூறியது...

other reasons:

1.family infighting!
2.projection of all children!treating party as partnership company!
3. dynastic rule! - major party and govt. posts,only enjoyed by family members of party functionaries!
4.too much dependence to freebies!
5.turning blind eye to all burning
problems - fishermen/eelam/power shortage/price rise...

most of all..

2G - THE GREAT EVER SCAM IN THE WORLD!//

நன்றி திரு.ரம்மி.

'ழ'கரம் said...

ஜோதிஜி கூறியது...

இது போல தெளிவான கட்டுரைகளைத்தான் வலைபதிவுகளின் நான் எதிர்பார்க்கின்றேன். ஊடகத்தில் வரும் கட்டுரைகளைப் போலவே தெளிவான எழுத்தாற்றல். நன்றி.//

நன்றி திரு.ஜோதிஜி....என்ன நாம் எழுவதையெல்லாம் வெகுஜனபத்திரிக்கைகள் திரும்பிக்கூட பார்க்காது

'ழ'கரம் said...

வேலவன் கூறியது...

உண்மையை சொல்லி இருக்கின்றீர் .. பலரும் திமுக முதல் முறையாக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது போல சொல்ல்கிறார்கள்..
1991 ல் திமுகவும், 1996 ல் அதிமுக வும் மூன்றாம் இடம் தள்ளப்பட்டு முறையே காங்கிரஸ் , தா மா கா வும் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்தது வரலாறு

என் இன்றைய பதிவை படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் //


நன்றி திரு.வேலவன்...படித்து எம் கருத்தையும் சொல்லியிருக்கிறேன்

'ழ'கரம் said...

பிளாகர் Peppin கூறியது...

good article...

16 மே, 2011 11:37 am//


நன்றி திரு.பெப்பின்

'ழ'கரம் said...

பெயரில்லா கூறியது...

தமிழ்நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி கடன்; நிதி நிலைமை சரி இல்லை என்ற /

பொங்கியிருக்கிறீர்கள் அனானி...நன்றி

Dominic RajaSeelan said...

மிகவும் நல்ல கருத்துகள். மக்களுக்கு கலைஞர் மட்டும் தான் தவறு செய்கிறார் உலகத்தில் மற்றவர்கள் எல்லோரும் நேர்மையானவர்கள் என்று ஒரு மாய தோற்றம் உள்ளது. போக போக மக்களுக்கு புரியும்

Anonymous said...

"குடும்பத்தில் எல்லோரையும் அரசியலில் நுழைத்தது தவறு; மையத்தில் உள்ள அமைச்சர்கள் மட்டும் அல்ல, தமிழ்நாட்டிலும் பெரும்பாலான அமைச்சர்களும், அவர் அடிப்பொடிகளும் தினம் தோறும் ஊழல்கள் செய்து ஒவ்வொரு ஊரிலும், தொகுதியிலும் கழகத்தின் பெயரை நாற அடித்து விட்டார்கள்; ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் பணம் பலருக்கு போனது போல கலைஞர் தொலைக் காட்சிக்கும் வந்தது; கையொப்பம் இட்டது தயாளு அம்மாளுவும், கனிமொழியும்; தவிர திரை உலகில் குடும்பத்தின் நடவடிக்கைகள் பலரை நஷ்டம் அடைய வைத்தன " என்றும்
"இனிமேல், ஸ்டாலின் மாத்திரமே அரசியலில் இருப்பார், அவர் கழகத்தை தலைமை தாங்கி வழி நடத்துவார், அதற்கு, கழகத்தில் ஒரு மனதாக இதற்கு ஒப்புதல் இல்லை என்றால் குடும்பத்துக்கு வெளியிலிருந்து தலைவர் வருவார்; குடும்பத்தை விட கழகமே பெரியது; (வைகோ மீண்டும் வந்தால் தலைமை தாங்கி நடத்தட்டும்) " என்றும் தலைவரும், மற்ற கழக தொண்டர்களும் பேசினால் சரியாக இருக்கும்.

ஜெயலலிதாவிற்கு எவரும் வாக்கு அளிக்கவில்லை. இரண்டு கொள்ளிகளில், ஒன்று அதிகம் காந்துகிறது என்று தூர எறிந்து விட்டார்கள். அவர் அமைச்சரை எப்படி அவமானப்படுத்தினார் என்றெல்லாம் எழுத வேண்டாம். திசை மாறிப் போகிறோம். நம் சட்டைப்பையில் சாணத்தை வைத்துக்கொண்டு ஜெயின் புடவை ஓட்டையைப் பற்றி எழுதினால், நம் சீர்திருத்தப் பணி துவங்காது. கழகம் மு,கவின் கடந்த பதினைந்து வருட காலத்தில் சீர் அழிந்து விட்டது. அதை நேர் செய்வோம். இல்லையெனில், நிச்சயமாகச் சொல்கிறேன், இன்னும் ஐந்து ஆண்டு கழித்து அம்மாவைத் தூக்கி எறிய தமிழகம் நினைக்கும் போது கழகம் நல்ல கொள்ளி என்று காணப்பட வேண்டாமா?

Anonymous said...

கலைஞர் செய்த துரோகம் தமிழ் நாட்டிற்கு அதிகமா அல்லது ஈழத்துக்கு அதிகமா என்று பட்டி மண்டபமே நடத்தலாம். ஈழத் தமிழர்கள் கொல்லப்படும் போது உண்ணாவிரதம் நாடகம் கேவலமானது; மைய அரசுடன் உருப்படியாக ஒன்றும் செய்ய வில்லை தான் என்று மனம் உருகி கலைஞர் அழ வேண்டும். போரின் உச்சத்தில், தில்லி சென்று தம் மகனுக்கும், மகளுக்கும், அவர் நண்பருக்கும், பேரனுக்கும் மந்திரி பதவி, எந்த துறை என்று பேரம் பேசியது, அது போல் வந்த துறைகளிலே அண்டத்தை விட பெரிய ஊழல் செய்து கின்னஸ் வரலாற்று ஊழல் செய்யுங்கால் (அந்த ஊழலை முதலில் வெளி வந்த போது அதை சண் தொலைகாட்சி தான் மீண்டும் மீண்டும் ஒளி பரப்பி நாற அடித்தது என்பதை மறந்து) ஆரிய திராவிட சதி என்று பிலாக்கணம் வைத்தது, என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
ழகரம் தயவு செய்து இதற்கு பதில் எழுத வேண்டும். கலைஞருக்கு வக்காலத்து வாங்குபவர் கழகத்தின் எதிரிகள்; கழகத்தை நேசிப்பவர்கள் இன்னும் இருக்கிறோம் (அனானியாக வருவதற்கு வருந்துகிறேன்.)

Anonymous said...

இந்த பதிவைப் பார்க்கவும்: " தி மு கவில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் "
http://senthilvayal.wordpress.com/2011/05/17/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/

"தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தோல்விக்கு விலைவாசி உயர்வு, மின் வெட்டு மட்டுமே முக்கிய காரணம் என்று கூறினாலும், அதற்கு மேல் முக்கிய காரணமாக இருப்பது, கட்சியின் முக்கிய தலைவர்கள், அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்கள் செய்த சட்ட விரோத செயல்பாடுகளே, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தி.மு.க.,வுக்கு கடும் எதிர்ப்பை பெற்று தந்தது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத, கட்சி நலம் விரும்பும் தொண்டர்கள் கூறியதாவது: தி.மு.க., தோல்விக்கு விலைவாசி உயர்வு, மின் வெட்டு தான் காரணம் என்று கூறுவது தவறு. இப்பிரச்னைகள் உள்ள சில மாநிலங்களில் நடந்த தேர்தலில், ஆளும்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. உதாரணத்துக்கு, அஸ்ஸாமில் நடந்த தேர்தலில் ஆளும்கட்சியாக உள்ள காங்கிரஸ், தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. பல இலவசங்களை அள்ளி வழங்கிய தமிழகத்தில் மட்டும் தி.மு.க., ஏன் தோற்க வேண்டும். அதற்கு முக்கிய காரணம், அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதிகளில் குறு நில மன்னர்களாக செயல்பட்டனர். அவர்கள் மன்னர்களாக இருந்து மக்களுக்கு நல்லது செய்திருந்தால் எல்லோரும் வரவேற்றிருப்பர். ஆனால், அவர்கள், உண்மையான கட்சி தொண்டரை அவமதித்தனர். தங்கள் உறவினர்களையும், தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு புகலிடம் தேடி, நெருங்கி வந்தவர்களையும் வளர்த்து விட்டனர்.

சில குறிப்பிட்ட அமைச்சர்கள், தங்கள் மாவட்டத்தில் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வாங்குபவர்களிடம், “குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் மட்டுமே, பத்திரப்பதிவு செய்ய முடியும்’ என்று மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் உள்ள மதிப்புமிக்க சொத்துக்களையும், குறைந்த விலையில் தங்களுக்கு விற்க கோரி, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களை மிரட்டினர். இதெல்லாம், தி.மு.க.,வின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. "

கட்சியை சீர் படுத்தினால் ஆட்சி தானே கைக்கு வரும். வேறு ஏதோதோ காரணங்கள் கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்.

'ழ'கரம் said...

Dominic RajaSeelan கூறியது...

மிகவும் நல்ல கருத்துகள். மக்களுக்கு கலைஞர் மட்டும் தான் தவறு செய்கிறார் உலகத்தில் மற்றவர்கள் எல்லோரும் நேர்மையானவர்கள் என்று ஒரு மாய தோற்றம் உள்ளது. போக போக மக்களுக்கு புரியும்//

நன்றி திரு.டொமினிக்...அப்படியானதொரு தோற்றத்தை பத்திரிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன!

'ழ'கரம் said...

"இனிமேல், ஸ்டாலின் மாத்திரமே அரசியலில் இருப்பார், அவர் கழகத்தை தலைமை தாங்கி வழி நடத்துவார், அதற்கு, கழகத்தில் ஒரு மனதாக இதற்கு ஒப்புதல் இல்லை என்றால் குடும்பத்துக்கு வெளியிலிருந்து தலைவர் வருவார்; குடும்பத்தை விட கழகமே பெரியது; (வைகோ மீண்டும் வந்தால் தலைமை தாங்கி நடத்தட்டும்) " என்றும் தலைவரும், மற்ற கழக தொண்டர்களும் பேசினால் சரியாக இருக்கும்.//

வைகோவை எந்த திமுக தொண்டனும் மனசார தலைமையேற்க ஒத்துழைக்க மாட்டான். துன்பத்தில் கழகம் இருந்தபோது துரோகம் செய்துவிட்டுப்போனவர்தான் வைகோ?

'ழ'கரம் said...

ழகரம் தயவு செய்து இதற்கு பதில் எழுத வேண்டும். கலைஞருக்கு வக்காலத்து வாங்குபவர் கழகத்தின் எதிரிகள்; கழகத்தை நேசிப்பவர்கள் இன்னும் இருக்கிறோம் (அனானியாக வருவதற்கு வருந்துகிறேன்.)//

திமுக விலிருந்து கலைஞரை மைனஸ் செய்தால் எஞ்சப்போவது ஒன்றுமேயில்லை..இன்னொரு திராவிடர் கழகமாக அழிந்து ஒழிந்து போயிருக்கும்.

'ழ'கரம் said...

கட்சியை சீர் படுத்தினால் ஆட்சி தானே கைக்கு வரும். வேறு ஏதோதோ காரணங்கள் கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்.//

பல இடங்களில் உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன்!

காஞ்சி முரளி said...

உள்ளதை...
உள்ளபடி.....
ஊருக்கு
உரைத்திட்ட....
உமக்கு...
நன்றிகள்... பலபல...!

தங்கள் இப்பதிவினை
நீங்களே எதிர்பார்க்காதவர்
படித்தனர்... நண்பரே....!

இப்பதிவு என்னக்கோர் ஆறுதல்....!

பதிவுலகிலும்
பண்பாளர் உண்டு என்பதை இப்போது காண்கிறேன்...


நன்றி...

நட்புடன்....
காஞ்சி முரளி....!

Anonymous said...

//திமுக விலிருந்து கலைஞரை மைனஸ் செய்தால் எஞ்சப்போவது ஒன்றுமேயில்லை..இன்னொரு திராவிடர் கழகமாக அழிந்து ஒழிந்து போயிருக்கும்.//
சரியாக சொன்னீர்கள். கலைஞர் இல்லையென்றால் திமுக இல்லை. இதனால் தான் நாங்கள் சொல்கிறோம் 1977-87 மற்றும் 1991 ஐ விட 2011 வேறுபட்டது. கருணாநிதி விதை போல் இருந்ததால் தோல்வி அடைந்தாலும் காலம் கனிந்தவுடன் ஆல மரம் போல் எழ முடிந்தது. எப்படியும் அவர் 2012 தாண்ட மாட்டார். விதை நசுங்கியவுடன் மரம் எங்கிருந்து வரும்? திமுக இப்போது இருப்பது மரணக் கட்டிலில். விரைவில் மண்ணோடு மண்ணாகும்.

மலர் said...

தி.மு.க கவுன்சிலர்களின் நிலையே மக்களின் மனமாற்றத்தில் பெரும் பங்கு வகித்தது.சைக்கிளில் சுற்றியவர்களின் சொத்து மதிப்பு கோடிகளில்.
அடாவடி கவுன்சிலர்களின் நடவடிக்கையும் முக்கிய காரணம்.
பொது மக்களுக்கு வேறு வழியில்லை.
ஒருவர் மாற்றி ஒருவர் என்றே தேர்ந்தெடுக்கும் கட்டாயம்...