Monday, June 06, 2011

திமுகவினருக்கு புத்துணர்வூட்டிய திருவாரூர்!

திட்டுங்கள்....உங்கள் வசவுகளெல்லாம் வாழ்த்துக்களாக எங்களுக்கு மாறும் என்றார் கலைஞர் ஒருமுறை. கொஞ்சம் சோர்வாகத்தான் இருந்தது தேர்தல் முடிவிற்குப் பிறகு. வெற்றி தோல்வி என்பது அரசியலில் எப்போதும் இருப்பதுவே. இருந்தாலும் தமிழக மக்கள் இந்த முறை தந்த தோல்வி என்பது செயற்கையானது....

ஒட்டுமொத்த நடுநிலை அதிமுக ஆதரவுப் பத்திரிக்கைகள் அனைத்துமே கழகத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியத் தலைப்பட்டன. அவர்களின் பொய்ப்பிரச்சாரத்திற்கு மக்கள் மயங்கியிருக்கிறார்கள்.. நான்காவது தூண்களான பத்திரிக்கைகள் , ஒரு கட்சியை குறிவைத்து வீழ்த்த முயன்றதே இத்தேர்தல் சொல்லும் வரலாறு!

நேற்று திருவாருரில் நடந்த நன்றியறிவிப்புக் கூட்டம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது...ஒவ்வொரு முறையும் தோல்வி அடையும்போதுதான் திமுக தொண்டன் வீறுகொண்டு எழுகிறான் என்பதைக் காட்டியது திரண்டிருந்த மக்கட்படை.!! சற்றேறக்குறைய மாநாடு போல் திரண்டிருந்த கூட்டத்தில் , வின்ஸ்டன் சர்ச்சில் பற்றி உணர்ச்சி பொங்க , எல்.கணேசன் சொன்னபோது நிகழ்ந்த கைதட்டல் விண்ணைப் பிளந்தது.!

திமுக உயிர்ப்புள்ள இயக்கம்...தேர்தலுக்குத் தேர்தல் மட்டுமே மக்களைச் சந்திக்கும் கட்சியல்ல அது...இன்றல்ல , ஆரம்பகாலம் தொட்டே அதன் உயிர்நாடி அதன் தொண்டர்கள்...அதற்கு அழிவென்று நினைப்பவன் காண்பது பகற்கனவு.....

நகைச்சுவையுணர்வோடு பேசிய பொன்முடி அவர்கள் சமச்சீர் கல்வி பற்றி தெளிவாக விளக்கினார். ஏன் அது கொண்டு வரப்பட்டது , எத்தகைய ஆய்வுக்களுக்குப் பின்னர் அது கொண்டுவரப்பட்டது என்பது பற்றியும் அவர் விளக்கினார். அத்தோடு இன்னொரு கேள்வியையும் சவாலாக வைத்தார்..."ஜெயலலிதாவோடு ஒரே மேடையில் சமச்சீர் கல்வி பற்றி விவாதிக்கத் தயார்....அவரால் முடியுமா? "

சில சவால்களும் , கேள்விகளும் எப்போதுமே திமுக முகாமில் இருக்கின்றன. ஆனால் , எதிர்முகாமில் தான் அதற்கான பதில்கள் எப்போதும் வருவதில்லை.!!

எப்போதும் மக்களோடு மக்களாக பயணம் செய்பவர் கலைஞர் , அதைப் பாராட்டாத பத்திரிக்கைகள் ஏதேனும் ஒருநாள் மக்களோடு மக்களாக செயலலிதா சென்றதைப் பாராட்டியதை இடித்துரைக்க தவறியதைச் சுட்டினார் அவர்..

பதவியேற்று பதினைந்து தினங்களுக்குள்ளாகவே பல்வேறு மக்களின் சிந்தனையை மாற்றும் விதமாக , செயலலிதாவின் துக்ளக் தர்பார் இருப்பதைச் சுட்டினார் திருச்சி என் சிவா..
தலைமைச்செயலகப் புறக்கணிப்பு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்பதை சுவைப்படத்தெரிவித்தார் திரு.கே.என்.நேரு....

தேர்தலில் ஏற்பட்ட தோல்வி திமுகவிற்கு அல்ல , மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி , செம்மொழி நூலகத்திற்கு ஏற்பட்ட தோல்வி , புதிய தலைமைச்செயலகத்திற்கு ஏற்பட்ட தோல்வி , சமச்சீர் கல்விக்கு ஏற்பட்ட தோல்வி , வீடுகட்டும் திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி , கலைஞர் காப்பீட்டுத்திட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி என்றார் திரு.பரிதி இளம்வழுதி.

கலைஞர் மிகவும் சோர்வுற்றிருந்தார் என்பது பேச்சில் தெரிந்தது.......இருந்தாலும் தனக்கே உரிய பாணியில் அரசைக் கண்டித்தார்.....கவர்னர் அறிக்கையைக் கூட சரியாக அச்சடிக்கத் தெரியாத இந்த அரசா 'தமிழ்' மொழியை வளர்க்கப்போகிறது என்றார். 'பேரறிஞர்' என்பதற்கு பதிலாக 'பேராறிஞர் என்று அச்சடித்திருப்பதை அவர் சுட்டியதும் எழுந்த சத்தம் அடங்க வெகுநேரமாயிற்று....

அதிமுக ஆட்சி பதவியேற்றதிலிருந்து நிகழ்ந்த குற்றச்செயல்களை பட்டியிலட்ட பிறகு அவர் சொன்ன கருத்துதான் அவரின் அரசியல் பெருந்தன்மையைக் காட்டியது!

இக்குற்றச்செயல்கள் அதிமுக ஆட்சிக்கு வந்ததால்தான் ஏற்பட்டது என்று நான் சொல்லவில்லை....எல்லா ஆட்சிகளிலும் இதுபோன்ற குற்றச்செயல்கள் இருக்கும் என்றுதான் சொல்கிறேன்.....அதை சரிசெய்யவே , காவல்துறையும் , நீதிமன்றமும் இருக்கின்றன....ஆனால் , என்னவோ திமுகதான் அதைச் செய்கிறது என்று பத்திரிக்கைகள் திசைதிருப்பின என்றார்.

என்மீது , என் குடும்பத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களால் திமுகவை அழிக்கலாம் என்று யாராவது நினைத்தால் அது நடக்காது என்று சொன்ன அவர் ."மாற்றம்" வேண்டும் என்ற குரல் மாறவே மாறாது...நாளை நம்மிடமே மாற்றம் வேண்டும் என்று மக்கள் வருவார்கள் என்றும் சொன்னார்.

திமுகவினர் மக்களிடம் இருந்து சொத்துக்களைச் சூறையாடியாதாகவும் அதை திரும்பப்பெறுவோம் என்று  கவர்னர் அறிக்கையில் சொல்லப்பட்டத்தை வரவேற்பதாகவும் , அதில் சிறுதாவூரையும் சேர்த்தால் மகிழ்வேன் என்றும் தனக்கேயுரிய பாணியில் அவர் சொன்னபோது கைதட்டல் விண்ணைப் பிளந்தது.

கலைஞர் மிகவும் வருந்திச் சொன்ன ஒரு விடயம் ' குடிசை வீடுகளை கான்க்ரிட் வீடுகளாக மாற்றும் திட்டத்தை கிடப்பில் போட்டதையொட்டித்தான். தேர்தலில் தோற்றபோது கொடுக்காத வேதனை இத்திட்டம் நிறுத்தப்பட்ட போது வந்ததென்று சொன்ன அவர் , இத்திட்டம் கூடகோபுரங்களில் வாழ்பவர்களுக்கு அல்ல , குடிசையில் வாழும் பாட்டாளிகளுக்கு...அதைக்கூட நிறுத்திவிட்டார்களே என்று வருந்திய போது கூட்டத்தில் மயான அமைதி...

மொத்தத்தில் டன் டன்னாக திமுக தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டிய ஒரு பொதுக்கூட்டமாகவே திருவாரூர் பொதுக்கூட்டம் முடிவுற்றது....தேர்தலில் தோற்றதும் கொடநாட்டில் போய் படுத்துக்கொள்ள திமுக ஒன்றும் அதிமுக அல்லவே...அது எப்போதும் போல மக்கள் இயக்கம்...மக்களோடு மக்களாக நிற்கின்ற இயக்கம்.......

4 comments:

Anonymous said...

அருமை தோழரே

நண்பன் said...

unmai tamilan ayya vazga

THOPPITHOPPI said...

அருமை

காஞ்சி முரளி said...

/////திட்டுங்கள்....உங்கள் வசவுகளெல்லாம் வாழ்த்துக்களாக எங்களுக்கு மாறும் என்றார் கலைஞர் ஒருமுறை. கொஞ்சம் சோர்வாகத்தான் இருந்தது தேர்தல் முடிவிற்குப் பிறகு. வெற்றி தோல்வி என்பது அரசியலில் எப்போதும் இருப்பதுவே. இருந்தாலும் தமிழக மக்கள் இந்த முறை தந்த தோல்வி என்பது செயற்கையானது....////

இது உண்மை...!


////ஒட்டுமொத்த நடுநிலை அதிமுக ஆதரவுப் பத்திரிக்கைகள் அனைத்துமே கழகத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியத் தலைப்பட்டன. அவர்களின் பொய்ப்பிரச்சாரத்திற்கு மக்கள் மயங்கியிருக்கிறார்கள்.. நான்காவது தூண்களான பத்திரிக்கைகள் , ஒரு கட்சியை குறிவைத்து வீழ்த்த முயன்றதே இத்தேர்தல் சொல்லும் வரலாறு!/////

உண்மையிலும் உண்மை...! அதோடு இது ஓர் திட்டமிட்ட சதி.... நண்பரே...! இத்திட்டம் ஓர் நீண்டகால திட்டமாய்... திட்டமிட்டு சதி செய்திருக்கிறார்கள்...! ஓர் எடுத்துக்காட்டினை சொல்வேன்...!

சரியாக எனக்கு நினவிருக்குமானால்..
டெல்லியில் சுகாதாரத் துறையில்... ஓர் பார்பனர் இனத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி ஊழல் செய்தார் என குற்றம் சாட்டப்பட்டார்...

அவர்... அந்த தனிமனிதர் மட்டும் ஊழல் செய்த தொகை மட்டும் 4500 கோடி... ஆனால் அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 1500 கிலோ தங்கம்...

இவரைப்பற்றியும்... சமுதாயத்தில் ஓர் அரசின் அதிகாரியாக பணிபுரிந்த ஓர் தனிமனிதர் செய்த இந்த மாபெரும் ஊழலை எந்த பார்பனிய மீடியாவும் குறிப்பாக டெல்லியில் இருந்து வெளிவரும் எந்த ஒரு மீடியாவும் 24 மணிநேரமும் ஒளிபரப்பியதா..?

இவர் இப்போது எங்கே இருக்கிறார்... இவர் திஹார் ஜெயிலில் இருந்தால் அவர் வந்துபோவதையோ... அவர் என்ன சாப்பிடுகிறார்... எப்படி தூங்குகிறார் என எந்த பார்பன மீடியாவும் ஒளிபரப்பவில்லையே...?
அது ஏன்...?

ஒரே காரணம்...
அவர் மனவாடு...!
அவா... அவாள்...!

இந்த ஓர் காரணம் மட்டுமே....! நெற்றியில் இருந்து பிறந்தவன் தவறே செய்யமாட்டான்....

அவன் செய்யும் தவறுகளை எங்கள் ஊருக்கு வாருங்கள் காட்டுகிறேன்... ஓர் உதாரணம்.... சில ஆண்டுகளுக்கு முன் காஞ்சிபுரத்தில் மாட்டிய கோயில் ஐயர் (கருவறையில் பெண்களுடன் சல்லாபித்த சாமியார்) ...!

வடிவேல் காமெடியில் வருமே ஒரு வசனம்...!
"செகப்பா இருக்கிறவ பொய் சொல்லாமாட்டான்"

அதைப்போல

பார்பான் என்னைக்கும் ஊழல் செய்யமாட்டான்... அப்படீன்னு சொல்கிறார்கள் இந்த மீடியாக்கள்...!

இதைப்போல... மிகமிக மிகைப்படுத்தி.... மிகைப்படுத்தி.... திட்டமிட்டு.... நீங்கள் சொல்வதைப்போல வீழ்த்தி இருக்கிறது... ///நான்காவது தூண்களான பத்திரிக்கைகள் , ஒரு கட்சியை குறிவைத்து வீழ்த்த முயன்றதே இத்தேர்தல் சொல்லும் வரலாறு!/////

இறுதியாய்...

///மொத்தத்தில் டன் டன்னாக ...அது எப்போதும் போல மக்கள் இயக்கம்...மக்களோடு மக்களாக நிற்கின்ற இயக்கம்....... ///

இது அப்பட்டமான உண்மை நண்பரே....!

இந்த மக்கள் இயக்கம்...! மக்களோடு மக்களாய் கலந்து.... மக்களுக்காக போராடும்....! இது உண்மை...!

இறுதியாய்...

"வீழ்வது என்பது
எழுச்சியுடன்
எழுவதற்கே...!" என்ற என் கவிதை வரியிலேயே சொல்கிறேன்...!

கழகம்...!
மீண்டும் எழும்...!
ராட்ஷச பலத்தோடு....!


நட்புடன்...
காஞ்சி முரளி....