Wednesday, November 02, 2011

அண்ணா நூற்றாண்டு நூலக மாற்றம்..!!

தமிழகத்தை ஆள்பவர்கள் அறிவுசார் சமூகத்தை அறவே விரும்பவில்லை என்பது மீண்டுமொரு முறை நிருபிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் காழ்ப்புணர்விற்கு அளவேதுமில்லையோ என்ற வேதனை தான் மிஞ்சுகிறது... மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதில் செலவிடும் நேரத்தை மக்களின் முன்னேற்றத்திற்காக சிறிதேனும் செலவிடக்கூடாதோ என்ற எண்ணமே எஞ்சுகிறது!!!

சென்னை கோட்டூர் புரத்திலுள்ள அறிவு சார் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படு என்ற அறிவிப்பு நமது நெஞ்சில் வந்து நெருப்பாய் மோதுகிறது...

முகப்புத்தகத்திலும் , தின்மலர் பின்னூட்டங்களில் சில அதிமுக அனுதாபிகள் பலர் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டதால் நூலகம் தேவையில்லை என்கிறார்கள்....

இதோ ஒரு உதாரண பின்னூட்டம்...

பணம் வீணாவது ஒரு புறம் இருக்கட்டும்! இன்றைய டிவி, செல்போன் கலாச்சாரத்தில், வாசிக்கும் பழக்கமே இன்றைய இளைய சமுதாயத்திடம் குறைந்து வருகிறதே! கன்னிமாரா போன்ற பெரும் நூலகங்களில் கூட முன்பு இருந்ததுபோல் சீரியசாகப் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது!பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் நூலகம், நூலகரே இல்லாதபோது , சென்னையில் இன்னொரு நூலகம் எதற்கு? வாசிப்புப்பழக்கத்திற்கு நினைவுச்சின்னமாகவா? வாசிக்கும் பழக்கத்தை பெரும் நூலகங்களால் தூண்ட முடியாது!!

என்ன ஒரு கொடூரமான கண்ணூட்டம்...


இந்த வாசகத்தை படிக்கும் போதே நரகலைத்தின்றதோர் உணர்வு வருகிறது...இவர்களின் அரசியல் ஜால்ராவிற்காக உலகளாவிய அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப் பட்ட உண்மையையே மாற்றத்தலைப்படுகிறார்கள் இவர்கள்....

அதே பக்கத்தில் வந்திருந்த அறிவுசார் பின்னூட்டமொன்றும் உங்கள் பார்வைக்கு.!!!

This is purely unethical and against education. This place is opt for library because Anna University and IIT are located near to Library. If the government is really interested to provide medical care means they can appoint doctors and worker in government hospitals instead of doing this type of conversions. This is purely actions against DMK party not for the benifit of peoples. All student communities and educationalist like this library. ADMK goverment may avoid this typed of actions in future. I too vote ADMK party for the last election but disappointed. Kindly think for the people not againt DMK.

யாழ்ப்பாணத்தில் ஆயிரமாரயிரம் புத்தகங்களை அழித்ததாலேயே விடுதலை உணர்வு பீறிட்டு எழுந்த தமிழர்களின் உணர்வு எங்கே போயிற்று..

என்ன கொடுமைகளையெல்லாம் இந்த தமிழ் மக்கள் இனியும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களோ அடியேன் நான் அறியேன்..

தமிழகம் , முட்டாள்களின் தேசமாக மாறிக்கொண்டே வருவதில் மெத்த வருத்தம்....தமிழினம் மெல்ல இனிச்சாகும்....அதை வேடிக்கை மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருப்போம்!!!

(பின்னூட்டங்களை அனுமதியில்லாமல் எடுத்தாண்டதற்கு உரியவர்கள் மன்னிக்க!!)

4 comments:

Unknown said...

பதிவின் கருத்துக்கள் 100% ஒத்துகொள்ள வேண்டிய ஒன்று.ஜெ.வின் காழ்ப்புணர்ச்சிக்கு எல்லை என்பது கிடையாது என புரிகிறது.

Anonymous said...

ஹிட்லர் நூலகத்தையும் புத்தகங்களையும் எரித்தான்.சிங்களக் காடையர்கள் யாழ் நூலகத்தை எரித்தனர்.தாலிபான்கள் புத்தர் சிலையை உடைத்தனர்.அமெரிக்க ராணுவம் ஈராக்கில் அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் சூறையாடியது.பாபர் மசூதியை சங்பரிவாரங்கள் நொறுக்கின.வரலாறு முடியவில்லை... ஜெயலலிதாவுக்குபகை கருணாநிதிமீதா? தமிழ் மீதும் தமிழ் பண்பாட்டின் மீதுமா ? பாடபுத்தகங்களில் செம்மொழி மீதெல்லாம் கருப்பு சாயம் பூசி அழித்தார்..’யாதும் ஊரே யாவரும் கேளிர் ’பாடலை மறைத்தார் அது வர்ணாஸ்ரத்திற்கு எதிரான குரல் என்பதால்.சமச்சீர் கல்விக்கு எதிராக கொக்கரித்தார்.செம்மொழி நூலகத்தை குப்பைத் தொட்டியில் வீசினார்.தலைமைச் செயலகத்தை அடாவடியாக மருத்துவமனையாக மாற்றுவேன் என்கிறார். இப்போது அண்ணா நூலகத்தை பிய்த்து எறிகிறார்.இதையெல்லாம் வரலாற்றில் பாசிசம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்?ஆனால் வரலாறு பாசிஸ்டுகளைக் குப்பைத்தொட்டியில்தான் வீசியெறிந்துள்ளது? கடைசியாக ஒரு தகவல்:குமரிமுனை திருவள்ளுவர் சிலை பாசிஸ்டுகள் கண்ணை உறுத்துகிறதாம்...தற்போது ஆயுதப்போலீஸ் காவல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாம்.ஒரு நாள் கடற்கரை கண்ணகி சிலைபோல் வள்ளுவரும் காணாமல் போக ஏற்பாடாம்.என்ன செய்யப் போகிறாய் தோழா

Anonymous said...

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்
எழுதியது ச.தமிழ்ச்செல்வன் எழுதிய நேரம் Wednesday, November 02, 2011
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக் குழு அலுவலகம்

421,அண்ணா சாலை,சென்னை-600018

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும்

தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்


சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் புதிதாக சென்னை பள்ளிக் கல்வி இயக்கக (டிபிஐ) வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் இன்று (2.11.2011) அறிவித்துள்ளார். 1.1.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு, சமுதாய வளர்ச்சியில் நூலகங்களின் தலையாய பங்கு குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுததப்பட்ட இந்த நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒலி, ஒளி தொகுப்புகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.

முந்தைய அரசின் தவறுகள் காரணமாக தமிழக மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய போது புதிய அணுகுமுறைகள் பற்றிய எதிர்பார்ப்புகளுடனேயே இருந்தார்கள். ஆனால் அஇஅதிமுக அரசு அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு மாறாக, அரசியல் பகையுணர்வுடன் செயல்படுவதிலேயே முனைப்புக் காட்டுகிறது. தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அந்த அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது.

நூலகத்தை மாற்றுவதற்குச் சொல்லப்பட்டிருக்கிற காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை. அறிவு சார் பூங்கா அமையவிருக்கும் இடத்தில்தான் ஒரு பொதுநூலகமும் அமைய வேண்டும் என்பது மக்களை திசைதிருப்புவதற்கான மேலோட்டமான காரணமாகவே இருக்கிறது. டிபிஐ வளாகம் பள்ளிக் கல்வி சார்ந்த துறையினரும் மாணவர்களும் வந்துசெல்கிற இடம். அங்கு இப்படியொரு பொதுநூலகத்தை நிறுவுவது அந்த வளாகத்தின் செயல்பாட்டுக்கும் இடையூறாகவே அமையும். தனியொரு இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்திருப்பது அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. தற்போதைய அண்ணா நூலக வளாகத்தின் இடப்பரப்பைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி அதனை வலுப்படுத்த முடியும்.

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். தேவையான உள்கட்டுமானங்களோடு அந்த மருத்துவமனை வளாகத்தைத் திட்டமிட்டு உருவாக்க முடியும்.

அதைச் செய்ய மனமில்லாமல், முந்தைய அரசால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவும், அதற்கு முன் அஇஅதிமுக அரசு தலைமைச்செயலகத்தை அமைக்கத் தேர்வு செய்து பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் கைவிடப்பட்ட இடத்தில் இப்படியொரு கட்டடம் இருப்பதா என்ற தேவையற்ற ஆத்திரத்தாலும் தற்போதைய அண்ணா நூற்றாண்டு வளாகத்தை மாற்றுவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டவில்லை.

ஆகவே அரசின் இந்த முடிவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அரசு தனது முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறது. அரசு இதனை ஏற்க மறுக்குமானால் கல்வியாளர்கள், புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைத்திரட்டி மாநிலந் தழுவிய போராட்டத்தில் சங்கம் ஈடுபடும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

ச.தமிழ்ச்செல்வன் சு.வெங்கடேசன்

மாநிலத்தலைவர் மாநிலப்பொதுச்செயலாளர்

மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்,வலைத்தளத்தில்,தொலைக்காட்சியில் வெளியிடுமாறு வேண்டுகிறோம்.

சு.வெங்கடேசன்

பொதுச்செயலாளர்

காஞ்சி முரளி said...

நண்பரே ...!

பெத்த தாயையே முதியோர் இல்லத்தில் சேர்த்து தாய்ப்பாலுக்கும்...! தாய்ப்பாசத்திற்கும்...! விலை நிர்ணயிக்கும் ஊரரகிவிட்டது நம்ம ஊரு...! (தாங்கள் //முகப்புத்தகத்திலும் , தின்மலர் பின்னூட்டங்களில் சில அதிமுக அனுதாபிகள் பலர் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டதால் நூலகம் தேவையில்லை//ன்னு சொல்லும் அறிவுஜீவி போன்ற ஆளுங்களே சொல்றேன்.) இலக்கியம்னா.... புத்தகம்னா.... என்னன்னு அவனுங்ககிட்டபோய் கேட்கிறீர்களே...! கழுதகிட்டப் போய் கற்பூர வாசனைய எதிர்பார்க்கலாமா...!

சரி...!

தங்கள் இந்தப் பதிவுக்கு வருவோம்...!

நான் இந்த நூலகத்த கைவைக்கலையேன்னு...! எதிர்பார்த்ததுதான்...!

இது என்ன...!
இன்னும் நிறைய இருக்கு...!

நடிகர் அசோகன் சொல்லும் வசனம் இப்பத்து ஆட்சியாளர்கள் சொல்றாங்க...!
"நாங்க இதையும் செய்வோங்க...! இதுக்கு மேலயும் செய்வோங்க...!"