Tuesday, October 04, 2011

நாங்கள் வெல்வோம்!

பொய்களாலும் , புரட்டுக்களாலும் மக்களின் மனதில் அம்மா ( யாருக்கு? ) வைப் பற்றி எழுதிய வார்த்தைகள் பொய்யாய்ப் போயின...தினமலர் தினமணி போன்ற அவா பத்திரிக்கைகள் மின்வெட்டு பற்றியோ , சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு பற்றியோ பேச முடியாமல் எதையோ தின்ற எதுவோ போன்று பேச முடியாமல் தவிக்கின்றன. மக்களை முட்டாளாக்கி ஓட்டுக்களை வேட்டையாடிய புரட்டுக்கட்சிகள் இன்று நெல்லிக்காய் மூட்டை போல சிதறிப்போயின.

சமச்சீர்க் கல்விக்குச் சமாதி....தலைமைச்செயலகக் கட்டிடம் வீணடிப்பு...கலைஞர் காப்பீட்டுத்திட்டம் காவு.........குடிசை விட்டை கான்கிரிட் வீடாக மாற்றும் திட்டம் அம்பேல்.....இப்படி அரிய சாதனைகளால் ஐந்து மாதங்களிலேயே அதிமுக ஆட்சி மக்களுக்கு கசந்து போனது......

பொடிப்பொடியாக கலைகிறது ஸ்பெக்டரம் மேகம்....எப்படி எதை எங்கே நடக்கவே நடக்காத ஒரு ஊழலை நிருபிப்பது என்று சிபிஐ தவிக்கிறது....

வெளிமாநிலங்களிலிருந்தும் , தனியாரிடமிருந்தும் மினசாரத்தை கழக ஆட்சி வாங்கியபோது , வெடித்த ஜெயலலிதா இன்று அதே திசையில் செல்கிறார்..........இது என்ன அநியாயம்? 2012 ல் மின்சார தட்டுப்பாடு நீங்குமாம்....எப்படி? திமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் அப்போதுதான் பலனுக்கு வரும்...அதை அதிமுக அறுவடை செய்யும்...!!!

மக்கள் விழித்துக்கொள்வார்கள்... தன்னிகரற்ற தொண்டர் பலம் கொண்ட திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்......

நாங்கள் வெல்வோம்...........தேர்தல் பற்றியதல்ல இந்த அறிவிப்பு...மக்கள் மனங்களை கூடிய விரைவில் நாங்கள் வெல்வோம்!!!!

திமுக மீதான பொய்யான அவதூறுகள் நீங்கும் காலம் வரும்...

காத்திருப்போம்!!!!!!! கதைமுடிப்போம்!!!!


5 comments:

Anonymous said...

உங்கள் தளத்திற்கு முதன்முதலில் வருகிறேன் உடன்பிறப்பே! வாழ்த்துக்கள்!தகர்த்தெறிவோம் தவறான குற்றச்சாட்டுக்களை

காஞ்சி முரளி said...

உலகில் உள்ள
எல்லோரின் வாயிலும்
நுழையா எழுத்து "ழ"கரம்..!

அதைப்போலவே...!

"ழ"கரத்தின் இப்பதிவில்...
உண்மைகளை
ஊருக்கு
உரைத்துள்ளீர்கள்....!

இது செவிடன் காதில் ஊதிய சங்குதான்....!

இருப்பினும்...!

சங்கை முழங்குவது நம் கடமை...!
கேட்கும்போது கேட்கட்டும்...!
உண்மையில் செவிடர் காதுகல்ல...!
செவிடர்களாய் நடிப்பவர் காதுகளுக்கு...!

நடப்பது
"அவாள்" ஆட்சி...!

அவாளுக்கு...
அவாள் ஆட்சியின் அநியாங்கள்
அவாளின் கண்ணுக்கு தெரியாது....!
அவாளின் காது கேட்காது....!
அவாளின் வாய் பேசாது....!

தெரியாமல் போனாலும்....!
கேட்காமல் போனாலும்...!
பேசாமல் போனாலும்....!
ஊதுகிற சங்கை ஊதுவோம்....!
அது நம் கடமை....!

நன்றி...!
நண்பரே...!
நல்ல உண்மைகள் உரைக்கும் பதிவு....!

வாழ்த்துக்கள்...!

நட்புடன்...!
காஞ்சி முரளி...!

சேக்காளி said...

//எப்படி எதை எங்கே நடக்கவே நடக்காத ஒரு ஊழலை நிருபிப்பது என்று சிபிஐ தவிக்கிறது//
மனசாட்சியோடு தான் எழுதினீர்களா? இந்த வரிகளை!

மனச்சாட்சி மாணிக்கம் said...

////...சேக்காளி கூறியது...//எப்படி எதை எங்கே நடக்கவே நடக்காத ஒரு ஊழலை நிருபிப்பது என்று சிபிஐ தவிக்கிறது//
மனசாட்சியோடு தான் எழுதினீர்களா? இந்த வரிகளை!////

மனசாட்சியா...!
எங்கே இருக்கு என்று நான் கேட்க விரும்பவில்லை...!

ஆனால்...!
அதே மனசாட்சி "பெங்களூர்"ஐ மட்டும் கேட்கமாட்டேன்கிறதே...!

ஓ...!
அது "அவாள்" மனசாட்சியா...!

முனைவர் இரா.குணசீலன் said...

விலையேற்றத்திலும் சில நன்மை இருக்கத்தான் செய்கிறது அன்பரே..

http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_733.html

காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..